search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெத்வதேவ்"

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 1 வீரர் சின்னர் 3-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் உடன் மோதினார்.

    இதில் சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் 4-வது சுற்று ஆட்டத்தில் சின்னர், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோத உள்ளார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலி வீரர் கபோலியை 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முனனேறினார். நாளை நடைபெறும் 4-வது சுற்றில் மெத்வதேவ் போர்த்துக்கீசிய வீரர் நுனோ போர்ஜசை சந்திக்கிறார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
    • முதல் அரையிறுதி போட்டியில் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதி சுற்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 7-6 (7-1) என முதல் செட்டை வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த 3 செட்களை 6-3, 6-4, 6-4 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் மெத்வதேவ் விம்பிள்டன் தொடரில் இருந்து வெளியேறினார். நாளை மறுதினம் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
    • காலிறுதி சுற்று போட்டிகளில் மெத்வதேவ், அல்காரஸ் வென்றனர்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 6-7 (7-9), 6-4, 7-6 (7-4), 2-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதினார். இதில் அல்காரஸ் 5-7, 6-4, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதியில் அல்காரஸ், மெத்வதேவுடன் மோதுகிறார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
    • மூன்றாவது சுற்று போட்டிகள் நாளை நடைபெற உள்ளன.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், பிரான்ஸ் வீரர் அலெக்சாண்டர் முல்லருடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 6-7 (3-7), 7-6 (7-4), 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், சக நாட்டு வீரரான மேட்டியோ பிரெட்டினியுடன் மோதினார். இதில் சின்னர் 7-6 (7-3), 7-6 (7-4), 2-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ரஷியாவின் மெத்வதேவ் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. இரு சுற்றுகள் முடிந்து 3-வது சுற்றுப் போட்டிகள் இன்று நடந்தன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், செக் வீரர் தாமஸ் மசாக்குடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் முதல் இரு செட்டை 7-6 (7-4), 7-5 என கைப்பற்றினார். தாமஸ் மசாக் 3வது செட்டை 6-1 என கைப்பற்றினார்.

    நான்காவது செட்டை மெத்வதேவ் 6-4 என வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. முதல் சுற்று முடிந்து 2வது சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ராபர்டோவுடன் மோதினார். இதில் 6-4, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், செர்பியாவின் மியோமிருடன் மோதினார். இதில் மெத்வதேவ் முதல் செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றினார். 2-வது செட்டில் 5-0 என முன்னிலை பெற்ற நிலையில், மியோமிர் காயத்தால் விலகினார்

    இதனால் மெத்வதேவ் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. தகுதிச்சுற்று முடிந்து முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், பிரான்ஸ் வீரர் ஹெர்பர்ட்டுடன்

    மோதினார். இதில் 6-4, 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் டொமினிக் கோபருடன் மோதினார். இதில் மெத்வதேவ் முதல் இரு செட்டை 6-3, 6-4 என எளிதில் கைப்பற்றினார். 3வது செட்டை டொமினிக் 7-5 என வென்றார். இதனால் சுதாரித்துக்கொண்ட மெத்வதேவ் 4வது செட்டை 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • இதில் முன்னணி வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் டாமி பாலுடன் மோதினார்.

    இதில் டாமி பால் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னணி வீரரான மெத்வதேவ் வெளியேறினார். ஏற்கனவே ஜோகோவிச், ரூப்லெவ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
    • நேற்று நடந்த 2வது அரையிறுதியில் ரஷியாவின் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட்டுடன் மோதினார்.

    ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய ஹம்பர்ட் 7-5, 6-3 என நேற் செட்களில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் யூகோ ஹம்ர்பட், அலெக்சாண்டர் பப்ளிக்குடன் மோதுகிறார்.

    • ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் முன்னணி வீரர் மெத்வதேவை வீழ்த்தி சின்னர் அசத்தல்.
    • முதல் 2 செட்களை இழந்தாலும் கடைசி 3 செட்களை வென்று சின்னர் அதகளப்படுத்தினார்.

    மெல்போர்னில் நடைபெற்று வந்த ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இன்றுடன் முடிவடைகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தரவரிசையில் 3-ம் நிலை வீரரான டேனியல் மெத்வதேவ் (ரஷியா), தர வரிசையில் 4-ம் நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) உடன் மோதினார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இரண்டு செட்களை 6-3, 6-3 என்ற கணக்கில் மெத்வதேவ் கைப்பற்றினார். இதையடுத்து சின்னர் 6-4, 6-4, 6-3 என்ற கணக்கில் அடுத்த மூன்று செட்களையும் கைப்பற்றினார்.

    இந்த நிலையில் ஜானிக் சின்னர் 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.

    முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தன்வசப்படுத்தினார் சின்னர்.

    • அமெரிக்க ஓபன் தொடரில் 3-வது முறையாக மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
    • இறுதிப்போட்டியில் மெத்வதேவ் - ஜோகோவிச் மோத உள்ளனர்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதி போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்க இளம் வீரர் பென் ஷெல்டன் ஆகியோர் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-3, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

    இந்நிலையில் 2-வது அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் கார்லஸ் அல்காரஸ் - மெத்வதேவ் ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 7-6 (7-3) என போராடி கைப்பற்றிய மெத்வதேவ் அடுத்த செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து 3-வது செட்டை 6-3 என அல்காரஸ் கைப்பற்றினார். இதையடுத்து 4-வது செட்டில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் 6-3 என அல்காரஸை வீழ்த்தினார்.

    இறுதியில் 7-6 (7-3) , 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் அல்காரஸை வீழ்த்தி மெத்வதேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் அமெரிக்க ஓபன் தொடரில் 3-வது முறையாக இவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    இறுதிப்போட்டியில் மெத்வதேவ் - ஜோகோவிச் மோத உள்ளனர்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது
    • இதில் ரஷியாவின் மெத்வதேவ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    ரஷியாவின் டேனில் மெத்வதேவ், சக வீரர் ஆன்ட்ரூ ரூப்லெவுடன் மோதினார். இதில் மெத்வதேவ் 6-4, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    இதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    இதில் பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் குயின்வென் செங் உடன் மோதினார். இதில் சபலென்கா 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    ×