என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாரீஸ் ஒலிம்பிக்"
- இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
- டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று இருந்தார்.
ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை எட்டியது. இதில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இதில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அவரை தொடர்ந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இது ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற ஐந்தாவது பதக்கம் ஆகும். முன்னதாக இந்தியா நான்கு வெண்கல பதக்கங்களை வென்று இருந்தது. ஈட்டி எறிதலை பொருத்தவரை பாகிஸ்தான், இந்தியாவை தொடர்ந்து கிரெனெடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54 தூரத்திற்கு வீசி 3-வது இடத்தைப் பிடித்தார்.
முன்னதாக நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் 87.58 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றிருந்தார். தற்போது அவர் தனது சாதனையை முறியடித்த நிலையிலும், தங்க பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டுள்ளார்.
- உலகில் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்பதை வெளிப்படுத்தி வருகிறோம்.
- இந்தியா இறுதிப்போட்டிக்கு வராததற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
பாரீஸ்:
ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கியில் இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடைபெற்றது. இதில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி வெண்கலம் வென்று அசத்தியது.
இந்நிலையில், வெற்றி பெற்ற பிறகு இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரித் சிங் கூறியதாவது:
இதில் பெரிய விஷயம் என்னவென்றால் நாங்கள் மீண்டும் வென்றுள்ளோம். இந்திய ஹாக்கி அணி வளர்ந்துள்ளது. எந்தப் பெரிய அணியையும் வீழ்த்த முடியும் என்பதை வெளிப்படுத்தி வருகிறோம். இது முழு நாட்டிற்கும் பெரிய விஷயம், எங்களுக்கும் பெரிய விஷயம் என நினைக்கிறேன்.
நிறைய காத்திருக்க வேண்டிய நிலை இது. நீங்கள் பல கட்டங்களைச் சந்திக்க வேண்டும். ஒரு ஹாக்கி வீரராக, இது எளிதானது அல்ல.
நாங்கள் ஒரு அணியாக விளையாடியதில் பெருமிதம் கொள்கிறோம். நாங்கள் ஒருவரை ஒருவர் நம்பினோம். பயிற்சியாளர்களுக்கு நன்றி.
இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வராததற்கு ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டார்.
பதக்கத்தின் நிறத்தை மேம்படுத்த அணி முயற்சி செய்யும். இங்கு தங்கப்பதக்கம் வெல்வதே எங்கள் கனவாக இருந்தது. அனைவரும் எங்களை நம்பினர்.
எப்பொழுது மைதானத்திற்கு வந்தாலும் வெற்றி பெறத்தான் வருவோம் என்பதே நமது மனநிலை. சில நேரங்களில் முடிவுகள் நமக்கு சாதகமாக இருக்காது. இது எங்கள் விதி என்று நான் நினைக்கிறேன்.
இந்தியாவில் ஹாக்கியின் வரலாறு மிகப் பெரியது. அதை முன்னோக்கிக் கொண்டு செல்லவும், நாட்டிற்காக அதிக பதக்கங்களை வெல்லவும் நாங்கள் முயற்சிக்கிறோம்.
ஹாக்கிக்கு அன்பைக் கொடுங்கள், எங்களுக்கு ஆதரவளிக்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த முறை இதை விட சிறப்பாகச் செய்து நாட்டிற்கு பதக்கங்களை வெல்வோம் என தெரிவித்துள்ளார்.
நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் ஹர்மன்பிரித் சிங் மொத்தம் 10 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தனர்.
- உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
சண்டிகர்:
ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும், ஸ்பெயினும் இன்று மோதின.
இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.
ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், உள்துறை மந்திரி அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் முதல் மந்திரியான பகவந்த்சிங் மான் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்துள்ள பஞ்சாப் வீரர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார்.
ஹாக்கி அணி கேப்டன் ஹர்மன்பிரித் சிங், துணை கேப்டன் ஹர்திக் சிங் உள்பட 10 வீரர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியது.
- இதன்மூலம் இந்திய அணி ஒலிம்பிக்கில் 4 வெண்கலம் வென்றுள்ளது.
புதுடெல்லி:
ஒலிம்பிக்கில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும், ஸ்பெயினும் இன்று மோதின.
கடந்த முறை வெண்கலம் வென்ற இந்தியா அந்த பதக்கத்தை தக்கவைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கியது.
தொடக்கம் முதலே இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் முதல் பாதியில் 1-1 என சமனிலை வகித்தது. 18-வது நிமிடத்தில் ஸ்பெயின் ஒரு கோலும், 30-வது நிமிடத்தில் இந்தியா ஒரு கோலையும் பதிவு செய்தது. ஆட்டததின் 33-வது நிமிடத்தில் இந்திய அணி மேலும் ஒரு கோல் அடித்து 2-1 என முன்னிலை பெற்றது.
இறுதியில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியது.
இந்நிலையில், ஒலிம்பிக்கில் ஹாக்கியில் இந்தியா வெண்கலம் வென்றதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய ஹாக்கி அணியின் நிலைத்தன்மை, திறமை, ஒற்றுமை இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஹாக்கியில் ஆடவர் அணி பிரகாசமாய் ஒளிர்கிறது. உங்களின் வெற்றியை எதிர்வரும் தலைமுறைகள் கொண்டாடும். ஹாக்கியுடன் இந்தியர்கள் அனைவருக்கும் உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வீரர்களின் ஆற்றல் மிகுந்த செயல்திறன் விளையாட்டின்மீது புது ஆர்வத்தைத் தூண்டும் என தெரிவித்தார்.
- இந்திய வீரர் அமன் ஷெராவத் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.
- மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் இன்று இரவு அரையிறுதி போட்டி நடைபெறுகிறது.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அமன் ஷெராவத், முன்னாள் உலக சாம்பியன் ரெய் ஹிகுச்சியை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் அமன் ஷெராவத் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.
இறுதியில், அமன் ஷெராவத் 12-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இன்று இரவு 9.45 மணிக்கு அரையிறுதி போட்டி நடைபெறுகிறது.
- நீச்சல் வீராங்கனையை ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியேறும்படி தெரிவித்தது.
- பராகுவே வீராங்கனை அலோன்சோ நீச்சலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்தில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் பராகுவே நாட்டைச் சேர்ந்த லுவானா அலோன்சோ என்ற நீச்சல் போட்டியில் பங்கேற்றார். இவர் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார்.
இந்நிலையில், நீச்சல் வீராங்கனை அலோன்சோ ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேறி நாடு திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.
அவர் தொடர்ந்து ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருப்பது வெளிநாட்டு வீரர்கள் மத்தியில் பாதிப்பையும், கவனச் சிதறலையும் ஏற்படுத்துவதாகவும், சக வீரர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.
ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் ஒலிம்பிக் தொடரின் கடைசிநாள் விழா வரை வீரர்கள் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவது வழக்கமாகும்.
நாடு திரும்பிய நிலையில், பராகுவே வீராங்கனை அலோன்சா நீச்சலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒலிம்பிக் கிராமத்தில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இந்திய வீரர் அமன் ஷெராவத் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.
- இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் 57 கிலோ எடைப்பிரிவில் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அமன் ஷெராவத், மாசிடோனியாவின் விளாடிமிர் எகோரோவை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் அமன் ஷெராவத் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.
இறுதியில், அமன் ஷெராவத் 10-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மற்றொரு போட்டியில், இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் 57 கிலோ எடைப்பிரிவில் அமெரிக்க வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.
- வினேஷ் போகத்திற்கு நடந்ததை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்.
- அவள் ஒரு அற்புதமான மல்யுத்த வீரர் என்று நான் நினைக்கிறேன்.
பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.
இந்நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி திடீரென அறிவித்தது.
வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அரையிறுதியில் அவரிடம் 5 - 0 என்ற கணக்கில் மோசமாக தோல்வியடைந்த கியூப வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதி பெற்றுள்ளார்.
இதனையடுத்து, நடந்த இறுதிப்போட்டியில் கியூப வீராங்கனையை வீழ்த்தி அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டெப்ரண்ட் தங்கம் வென்றார்.
இந்நிலையில் வினேஷ் போகத் குறித்து தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டெப்ரண்ட் மனம்திறந்து பேசியுள்ளார்.
"வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்ற செய்தியை கேட்டதும் எனக்கு தங்கம் கிடைத்து விட்டது என்று நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. நான் இறுதிப்போட்டியில் கியூப வீராங்கனை குஸ்மான் உடன் மொத வேண்டும் என்ற அறிவிப்பு வந்தது. அப்போது நான் தங்கம் வெல்லவில்லை என்று நினைக்கும் போது எனக்கே விநோதமாக இருந்தது.
உடல் எடையை குறைப்பதில் நானே கைதேர்ந்தவள் தான். அதே சமயம் வினேஷ் போகத்திற்கு நடந்ததை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். அந்த நாள் அவளுக்கு ஒரு அற்புதமான நாளாக இருந்தது. அந்த நாளில் அவள் ஒரு பைத்தியக்காரத்தனமான சாதனையை செய்திருந்தாள்.
ஆனால் அவளின் ஒலிம்பிக் பயணம் இப்படி முடியும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். நான் அவளை நினைத்து அனுதாபப்படுகிறேன். நிச்சயமாக, அவள் ஒரு அற்புதமான போட்டியாளர், ஒரு அற்புதமான மல்யுத்த வீரர் மற்றும் நபர் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.
- ஜிம்னாஸ்டிக் போட்டியில் சீன வீராங்கனை சோ யாக் வெள்ளி வென்றார்.
- இத்தாலி வீராங்கனைகள் பதக்கங்களை கடிப்பது போல் போஸ் கொடுத்தனர்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை சோ யாக்கின் அப்பாவித்தனமான க்யூட் ரியாக்சன் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆகஸ்ட் 6 அன்று நடந்த ஜிம்னாஸ்டிக் போட்டியில் இத்தாலி வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெண்கலம் வென்றனர். சீன வீராங்கனை சோ யாக் வெள்ளி வென்றார்.
வெற்றிக்கு பின்பு வீராங்கனைகளுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. அப்போது தங்கம், வெண்கலம் வென்ற இத்தாலி வீராங்கனைகள் தங்களது பதக்கங்களை கடிப்பது போல் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
அதனைப் பார்த்த சீன வீராங்கனை அதேபோல் க்யூட்டாக பதக்கங்களை கடிப்பது போல் போஸ் கொடுத்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கம் பெற தகுதியானவள்.
- வினேஷ் போகத்-இடம் நாங்கள் இன்னும் பேசவில்லை.
ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில், மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.
எனினும், வினேஷ் போகத் உடல் எடை 100 கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டார். இதையடுத்து சர்வதேச மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வினேஷ் போகத் விவகாரம் குறித்து பேசிய அவரின் மாமனார் ராஜ்பால் ரதி, "அவள் தனது 100 சதவீதத்தை கொடுத்துவிட்டாள். இந்த விஷயத்தில் ஏதேனும் சதி இருக்கலாம். ஒலிம்பிக் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்க பிரமதரை கேட்டுக் கொள்கிறோம். இது நம் உரிமை, அவள் நம் தேசத்தின் மகள்."
"வெள்ளிப் பதக்கம் அவளின் உரிமை. நாங்கள் இன்னும் அவளிடம் பேசவில்லை. அவள் இங்கு திரும்பி வந்ததும், ஓய்வு முடிவை மாற்றிக் கொண்டு நாட்டிற்கு தங்கம் வெல்ல தயாராகுமாறு பேசுவோம்," என்று தெரிவித்தார்.
- தீக்ஷா தாகர், அதிதி அசோக் (பெண்கள் பிரிவு 2-வது சுற்று), பகல் 12.30 மணி.
- இந்தியா- ஸ்பெயின் (ஆண்கள் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டி), மாலை 5.30 மணி.
ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் இந்திய நேரப்படி வருமாறு:-
கோல்ப்:-
தீக்ஷா தாகர், அதிதி அசோக் (பெண்கள் பிரிவு 2-வது சுற்று), பகல் 12.30 மணி.
தடகளம்:-
ஜோதி யர்ராஜி (பெண்கள் 100 மீட்டர் தடை ஓட்டம் ரிபிசாஜ் சுற்று), பிற்பகல் 2.05 மணி. நீரஜ் சோப்ரா (ஆண்கள் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி), இரவு 11.55 மணி.
மல்யுத்தம்:-
அமன் ஷெராவத் (இந்தியா)- விளாடிமிர் எகோரோவ் (மாசிடோனியா) (ஆண்களுக்கான 57 கிலோ பிரீஸ்டைல் தொடக்க சுற்று), பிற்பகல் 2.30 மணி. அன்ஷூ மாலிக் (இந்தியா)- ஹெலன் மரூலிஸ் (அமெரிக்கா) (பெண்களுக்கான 57 கிலோ பிரீஸ்டைல் தொடக்க சுற்று), பிற்பகல் 2.30 மணி.
ஹாக்கி:-
இந்தியா- ஸ்பெயின் (ஆண்கள் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டி), மாலை 5.30 மணி.
- உடல் எடை கூடி இருந்ததாக வினேஷ் போகத் தகுதி நீக்கம்.
- தகுதிநீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார்.
ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில், நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். பின்னர், வினேஷ் போகத் உடல் எடை 100 கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டார்.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதைதொடர்ந்து, மகளிர் தேசிய பயிற்சியாளர் வீரேந்தர் தஹியா மற்றும் மஞ்சீத் ராணி ஆகியோர் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை சந்தித்தனர். தகுதிநீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். இவரது மேல்முறையீட்டை ஒலிம்பிக் கமிட்டி ரத்து செய்தது.
இதையடுத்து சர்வதேச மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்து இருக்கிறார். "அம்மா, மல்யுத்தம் எனக்கு எதிராக வெற்றி பெற்றுவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் கனவு எனது நம்பிக்கை அனைத்தும் உடைந்துவிட்டது. இனியும் என்னிடம் வலிமை இல்லை. குட்பை ரெஸ்ட்லிங் 2001-2024. உங்கள் அனைவருக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். மன்னித்து விடுங்கள்," என்று வினேஷ் போகத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்