என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மகாசிவராத்திரி"
- பரம்பரையாளர்கள் தலையில் முதல் தேங்காய் உடைத்து பின்னர் வேண்டி வரம் கேட்பவர்களுக்கு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் விழா நடந்தது.
- பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து குலவழக்கப்படி சிறப்பு பூஜை அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வலையபட்டி மகாலட்சுமி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இடையகோட்டை வலையபட்டியில் ராயர்குல வம்சம் குரும்பாகவுண்டர் இனமக்களின் குலதெய்வமான மகாலட்சுமி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகாசிவராத்திரி விழா 4 நாட்கள் கொண்டாடப்படும்.
அதன்படி குலவிளக்கு ஏற்றி விழா தொடங்கியது. 2ம் நாள் அன்று பரம்பரையாளர்கள் தலையில் முதல் தேங்காய் உடைத்து பின்னர் வேண்டி வரம் கேட்பவர்களுக்கு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் விழா நடந்தது. பூசாரி பூச்சப்பன் இதனை செய்தார். 52க்கும் மேற்பட்டோர்களுக்கு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
3ம் நாளான இன்று பரிவார தெய்வங்களுக்கு பொங்கல் வைத்து குலவழக்கப்படி சிறப்பு பூஜை அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- மகாசிவராத்திரியை முன்னிட்டு திருச்சி சிவன் கோவில்களில் நான்கு சாமங்களிலும் சிறப்பு பூஜைகள்-வழிபாடு நடைபெற்றது
- திரளான பக்தர்கள் விடிய, விடிய தரிசனம்
திருச்சி:
மகாசிவராத்திரியை முன் னிட்டு சிவாலயங்களில் நேற்று நான்கு சாமங்களிலும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடை–பெற்றது. ஆண்டு–தோறும் மாசி மாதம் தேய்பிறை திரயோதசி மற்றும் சதுர்தசி சந்திக்கும் நாள் இரவு மகா சிவாராத்திரி விழா கொண்டாடப்பட்டு வரு–கிறது. சிவபெருமானுடைய வழி–பாடுகளிலேயே மிக உயர்ந்ததும், பூலோக வாழ்க் கைக்கு தேவையான––வற்றை மற்றும் அனைத்திற்கும் மேலான சிவகதி–யையும் அளிப்பது சிவ–ராத்திரி விரதமாகும். மகா–சிவராத்திரி அன்று சிவன் கோவில்களில் நான்கு சாமங்க–ளி–லும் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை–கள் நடைபெறும். அன்றி–ரவு முழுவதும் பக்தர்கள் கண்விழித்து சிவபூஜை நடத் துவர். சிவராத்திரியையொட்டி நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜெம்பு–கேஸ்வரர் அகிலாண்டேஸ் வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு 11 மணிக்கு நடைபெற்ற முதற்கால பூஜையின் போது 108 கலசா–பிஷேகம், பஞ்சகவ்யம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சோடசோபசார தீபங்கள் காட்டி பூஜைகள் நடத்தது. இன்று அதிகாலை 1 மணிக்கு நடந்த இரண்டாம் கால பூஜையின் போது 81 கலசங்கள், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபி–ஷேகம் மற்றும் 7 அடுக்கு தீபம் காட்டி பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு நடந்த மூன்றாம் கால பூஜையின் போது 41 கலசங்கள், பழச்சாறு ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு 5 அடுக்கு தீபம் காட்டி பூஜைகள் நடைபெற்றது. மூன்றாம் கால பூஜையின் நிறைவில் பஞ்ச மூர்த்திகள் புறப்பட்டு கோவில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்தனர். நிறைவாக காலை 5 மணிக்கு நான்காவது கால பூஜையின் போது 25 கலசங்கள், சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பஞ்சோபசார தீபங் கள் காட்டி பூஜைகள் நடை–பெற்றது. கோவில் கொடிமர மண்டபம் மற்றும் கண்ணுக்குட்டி மண்டபத்தில் நூற்றுக்க–ணக்கான சிவனடியார்கள் நான்கு சாமங்களிலும் சிவபூஜை நடத்தினர். இதில் விரும்புவோருக்கு சிவ தீட்சையளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள நவராத்திரி கலை விழா மண்டபத்தில் இரவு முழுவதும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
- மகாசிவராத்திரியை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கையில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
- கோவில்களில் விடிய, விடிய பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்திரகோச மங்கை மங்களநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீபரதகலா அகாடமி இணைந்து 5-வது ஆண்டு கலை விழா நாட்டியாஞ்சலி நடந்தது.
சிவராத்திரி நாட்டி யாஞ்சலி கலை நிகழ்ச்சி களை ராமநாதபுரம் சமஸ் தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் ஆா்.பி.கே.ராஜேஸ்வரி நாச்சியாா் தொடங்கி வைத்தார். இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை நாட்டியாஞ்சலி நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கலைஞா்கள் பரதநாட்டியம், நாதசங்கமம், குச்சுப்புடி நடனம், சிவபூஜை உள்ளிட்ட பொருள்களில் பரதநாட்டியம் ஆடினா். பக்தர்கள் விடிய,விடிய விழித்திருந்து கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர். சிவராத்திரியை முன்னிட்டு சுவாமிக்கு விடிய விடிய பால், பன்னீா், தயிா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு வாசனைப் பொருள்களைக் கொண்டு மூலவருக்கு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் செய்திருந்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கோவில்களில் விடிய, விடிய மகா சிவராத்திரி விழா பூஜைகள் நடந்தது. மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, வாகனங்களில் குலதெய்வ வழிபாட்டுக்காக ராமநாதபுரம் கிராமப் பகுதிகளுக்கு பக்தர்கள் வந்தனர். இதனால் கிராம பகுதிகளில் சிவராத்திரி விழா களைகட்டியது.
- மகாசிவராத்திரி திருவண்ணாமலை மற்றும் ஆந்திராவில் உள்ள காளகஸ்தி மொகிலி ஆகிய இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- சிவராத்திரியையொட்டி ஆந்திரா மாநிலத்துக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
மகாசிவராத்திரி 18-ந்தேதி (சனிக்கிழமை) வருவதால் இந்துக்கள் தங்கள் குல தெய்வத்தை வழிபடும் சிறப்பு தினமாக கருதி அன்று இரவு முழுவதும் விழித்திருப்பது வழக்கம். தமிழகத்தில் உள்ள முக்கிய சிவன் கோவில்களில் அன்று மக்கள் கூடி இரவு முழுவதும் வழிபாடு செய்வார்கள்.
மகாசிவராத்திரி திருவண்ணாமலை மற்றும் ஆந்திராவில் உள்ள காளகஸ்தி மொகிலி ஆகிய இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இக்கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். அதனால் சனிக்கிழமை காலையில் இருந்து கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் செல்லக்கூடும் என்பதால் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாதவரம் பஸ் முனையத்தில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தில் இருந்து 50 பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், சிவராத்திரியையொட்டி ஆந்திரா மாநிலத்துக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்களின் தேவையை கருதி பஸ் வசதி அதிகரிக்கப்படும். இதேபோல கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றார்.
- ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மகாசிவராத்திரி விழா கொடியேற்றப்பட்டது.
- புனித தீர்த்தமான அக்னி தீர்த்தக் கடலுக்கு சென்று தீர்த்த வாரி உற்சவம் நடைபெறும்.
ராமேசுவரம்
ராமேசுவரம் ராமநாத சாமி கோவிலில் ஆண்டு தோறும் மாசி மகாசிவராத்திரி விழா விமரிசை யாக நடைபெறும்.இந்த ஆண்டுக்கான விழா நாளை (11-ந்தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி நாளை அதிகாலையில் 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அதிகாலை 5 மணி முதல் 6 மணிவரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். அதன் பின்னர் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் அபிஷேகங்கள் ராமநாதசாமிக்கு நடை பெறும். பின்னர் காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் ராமநாதசாமி சன்னதிக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் கொடி யேற்றப்படும்.
12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மாசி மகா சிவராத்திரியில் தினசரி ராமநாதசாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதணை வழிபாடுகள் நடைபெறும்.
மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு வருகிற 13-ந்தேதி ராமநாதசாமி-பர்வதவர்த்தினி அம்மன் உள்பட பஞ்சமூர்த்திகள் கோவிலின் உபகோவிலான கெந்தமாதன பர்வத வர்த்தினி அமைந்துள்ள மண்டகப் படியில் எழுந்த ருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
மகாசிவராத்திரியன்று (18-ந்தேதி) இரவு வெள்ளி ரதம் புறப்பாடும், 19-ந் தேதி தேரோட்டமும் நடை பெறும்.
20-ந் தேதி அமாவாசை யை முன்னிட்டு ராமநாத சாமி-பர்வத வர்த்தினி அம்மன் உள்பட பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து புறப்படாகி காசிக்கு நிகராக கருதப்படும் புனித தீர்த்தமான அக்னி தீர்த்தக் கடலுக்கு சென்று தீர்த்த வாரி உற்சவம் நடைபெறும்.
- அன்னதானம் செய்வதற்கு எந்தவித சமய அடையாளங்களும் தேவையில்லை. மனிதத்தின் அடிப்படையில் யாரும் யாருக்கும் அன்னதானம் செய்யலாம்.
- ஒவ்வொரு வருடமும் கோவை ஈஷா யோக மையத்தில் நிகழும் மகா சிவராத்திரி விழாவில் பங்கு கொள்ளும் லட்சக்கணக்கான மக்களுக்கு அன்றைய தினம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பது பழமொழி. உபநிடதங்களில் கூட "அன்னம் பரப்பிரம்ம ஸ்வரூபம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. உணவை தானம் செய்வதென்பது ஒருவருக்கு வாழ்க்கையை, உயிரை தானம் செய்வதற்கு ஒப்பானது. உணவு என்பது ஒருவரின் வாழ்வை நீடித்து கொள்ளும் சக்தியை வழங்குகிறது. அதனால்தான் அன்னதானத்தை நம் மரபில் 'பிராண தானம்' என்றும் அழைக்கிறோம். இதை விளக்கும் விதமாக 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்ற மற்றொரு பழமொழியும் புழக்கத்தில் உள்ளது.
அன்னதானம் செய்வதற்கு எந்தவித சமய அடையாளங்களும் தேவையில்லை. மனிதத்தின் அடிப்படையில் யாரும் யாருக்கும் அன்னதானம் செய்யலாம். ஒரு மனிதன் உயிர் வாழ அடிப்படையான மூன்று விஷயங்களில் முதன்மையானது உணவு. உடை, இருப்பிடம் ஆகிய மற்ற இரு அம்சங்கள் இல்லாவிட்டால், வாழ்வின் தரம் தான் பாதிக்கப்படும். யாரொருவருக்கு உணவு இல்லையோ அவருக்கு வாழ்வாதாரமே, வாழ்க்கையே பாதிக்கப்படும்.
அந்த காரணத்தினாலே பாரதியின் புகழ் பெற்ற பல வரிகளில், லட்சக்கணக்கானோர் நெஞ்சில் நிலைத்திருக்கும் வரியாக "தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" எனும் வரி போற்றப்படுகிறது. எனவே கல்வி தானம், பொருள் தானம் உள்ளிட்ட ஏராளமான தானங்களில் வரிசையில் அன்னதானம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
குறிப்பாக ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் குறித்து சத்குரு அவர்கள் கூறும்போது "நமது பாரம்பரியத்தில், துறவிகள் மற்றும் ஆன்மீக சாதகர்களுக்கு சேவை செய்வதென்பது மிகவும் முக்கியமாக இருந்து வந்துள்ளது. இதுவே ஒரு தனி ஆன்மீகப் பாதையாகவும் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இதில் மிகவும் அற்புத அம்சமாக இருப்பது, பிறருக்கு உணவை அர்ப்பணிக்கும் அன்னதானம்." என்கிறார்.
மேலும் ஈஷாவில் அன்னதான திட்டம் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் மையத்திலுள்ள ஆசிரமவாசிகள், ஈஷாவின் பல்வேறு ஆன்மீக மற்றும் சமூக நலத்திட்டங்களில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து செயலாற்ற முடிகிறது. ஆயிரக்கணக்கான சாதகர்கள், தன்னார்வலர்களுக்கு தினசரி இரு வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி ஒவ்வொரு வருடமும் கோவை ஈஷா யோக மையத்தில் நிகழும் மகா சிவராத்திரி விழாவில் பங்கு கொள்ளும் லட்சக்கணக்கான மக்களுக்கு அன்றைய தினம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ஆதியோகி முன்பு நிகழும் மகாசிவராத்திரியை முன்னிட்டு, ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத மக்களுக்கு அருள் தரிசனம் வழங்கும் வகையில் கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதங்கள் தமிழகம் முழுவதும் வலம் வந்த வண்ணம் உள்ளன. தன்னை நாடி வந்தவர்களுக்கு அருள் தரிசனம் நல்கிய ஆதியோகி, ஆதியோகி ரதம் வழியாக தன் பக்தர்களை தேடி சென்று அருள் பாலித்து வருகிறார். கிட்டத்தட்ட 25,000 கி.மீ தூரம் வலம் வரும் இந்த ரத யாத்திரையில் பல நூறு தன்னார்வலர்கள், சிவாங்கா சாதகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்