search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருகர்"

    • ஸ்ரீ அண்ணாசாமியார் பழனியில் இருந்து கொண்டுவந்த திருவுருவப் படம் இப்போதும் இக்கோவிலின் உட்பிரகாரத்தில் மண்டபத்தில் இருக்கின்றது.
    • இப்போதுள்ள கோவிலின் தென்கிழக்குப் பக்கத்தில் பழைய குறிமேடை இருந்த இடம் இன்னும் இருக்கின்றது.

    இந்நிலையில் 1931&ம் ஆண்டு புரட்டாசி மாதம் தசமி திதி கூடிய பூச நட்சத்திரத்தன்று ஸ்ரீ பாக்கியலிங்கத் தம்பிரான் பழனி ஆண்டவர் திருவடியைப் பாங்குற அடைந்தார்.

    அவருக்கு உரிய முறையில் பூஜை முதலிய சிறப்புக்களுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    இம்மூவருடைய சமாதிப் பூசையும் வழிபாடும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    இம்மூவரின் சமாதிகளும் வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு மிக அருகில் இருக்கின்றன.

    ஸ்ரீ பாக்கியலிங்கத் தம்பிரானுக்குப் பின்னர் அவர்கள் முறையைப் பின்பற்றிக் குறி சொல்லத்தக்கவர் ஒருவரும் அமையவில்லை.

    இப்போதுள்ள கோவிலின் தென்கிழக்குப் பக்கத்தில் பழைய குறிமேடை இருந்த இடம் இன்னும் இருக்கின்றது.

    ஸ்ரீ அண்ணாசாமியார் பழனியில் இருந்து கொண்டுவந்த திருவுருவப் படம் இப்போதும் இக்கோவிலின் உட்பிரகாரத்தில் மண்டபத்தில் இருக்கின்றது.

    • இவர் தம் குறி சொல்லும் ஆற்றலால், அன்பர்கள் பெருந்திரளாகக் கூடி வந்தனர்.
    • கோவிலின் வளர்ச்சியும் புகழும் நாளடைவில் பெருகின.

    தம் குருநாதரின் மறைவுக்குப் பின்னர் பாக்கியலிங்கத் தம்பிரான், கோவில் பணிகளை மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து அரும்பாடுபட்டுக் கவனித்து வந்தார்.

    இப்போதுள்ள வடபழனித் திருக்கோவிலின் கருப்பக்கிரகமும், முதல் உட்பிரகாரத்திருச்சுற்றும், கருங்கல் திருப்பணியாகச் செய்வித்தவர் ஸ்ரீ பாக்கியலிங்கத் தம்பிரான் ஆவர்.

    வடபழனிக் கோவிலுக்கு இவர் பாவாடம் தரித்துக் கொண்ட நாள் முதல், ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் பணிபுரிந்திருக்கின்றார்.

    இவருடைய காலத்தில்தான், இவர்தம் சிறந்த அருட்பெரும் முயற்சிகளின் பயனாகவே, ஸ்ரீ வடபழனி ஆண்டவர் கோவில் மிகவும் பெரும் புகழ் பெறுவதாயிற்று.

    சொல்லியது சொல்லியபடியே தவறாது பலித்து வந்தது.

    இவர் தம் குறி சொல்லும் ஆற்றலால், அன்பர்கள் பெருந்திரளாகக் கூடி வந்தனர்.

    கோவிலின் வளர்ச்சியும் புகழும் நாளடைவில் பெருகின.

    • நாளடைவில் வடபழனிக் கோவிலின் புகழ் சென்னை நகர் முழுவதும் விரைந்து பரவுவதாயிற்று.
    • ரத்தினசாமித் தம்பிரான் சுமார் இருபது ஆண்டுகள் கோவிலைச் சிறப்புறப் போற்றி நடத்தி வந்தார்.

    கும்பாபிஷேகத்திற்குப் பிறகு கோடம்பாக்கம் குறி மேடையை, வடபழநி ஆண்டவர் கோவில் என்று வழங்கும்படி ரத்தினசாமித் தம்பிரான் அனைவரிடமும் கூறி வந்தார்.

    நாளடைவில் வடபழனிக் கோவிலின் புகழ் சென்னை நகர் முழுவதும் விரைந்து பரவுவதாயிற்று.

    ரத்தினசாமித் தம்பிரான் சுமார் இருபது ஆண்டுகள் கோவிலைச் சிறப்புறப் போற்றி நடத்தி வந்தார்.

    அவருக்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்தவரும், செங்குந்தர் குலத்தில் தோன்றியவரும் ஆகிய பாக்கியலிங்கத் தம்பிரான் என்பவர், ரத்தினசாமித் தம்பிரானின் அன்பிற்குரிய சீடராக அமைந்தார்.

    அவரும் தம் குருவின் திருவுள்ளக் குறிப்பிற்கேற்ப முறைப்படி நோன்பிருந்து துறவு பூண்டு காவி உடை புனைந்து வழிபாடுகள் நிகழ்த்தித் தம் நாக்கை அரிந்து இறைவன் திருமுன் படைத்து பாவாடம் தரித்துக் கொண்டார்.

    தம் குடும்பத்தில் தமக்குரிய சொத்தின் பங்கைக் கேட்டுப் பெற்று, பழநி ஆண்டவர் கோவிற் பணிகளுக்கே பயன்படுத்தினார்.

    தம் குருவின் திருவுள்ளம் மகிழும்படி கோவில் பூஜைகளையும் முறையாக நடத்திவந்தார். இவருக்கும் இறைவன் அருளால் குறி சொல்லும் ஆற்றல் உண்டாயிற்று.

    குருவும் சீடருமாக மனமொத்துப் பழனியாண்டவருக்கு ஒரு சில ஆண்டுகள் பணிபுரிந்து வந்தனர்.

    1886-&ம் ஆண்டு அளவில், மார்கழி மாதம் சஷ்டி நாளில் சதய நட்சத்திரத்தன்று ஸ்ரீ ரத்தினசாமித் தம்பிரான் இறைவன் திருவடி நிழலை அடைந்தார்.

    • மக்கள் அவரைத் தம்பிரான் என்று அன்புடன் அழைக்கலாயினர்.
    • அடுத்த கிருத்திகை முதல் ரத்தினச்சாமித் தம்பிரானும் ஆவேசமுற்றுக் குறிசொல்லும் ஆற்றல் பெற்றார்.

    ஒரு நாள் அவர்தம் கனவில் ஸ்ரீ அண்ணாசாமித் தம்பிரான் தோன்றி, அவரையும் தம்மைப் போலவே பாவாடம் தரித்துக் கொள்ளுமாறு பணித்தார்.

    அவ்வாறே ஓர் ஆடிக் கிருத்திகையன்று முறையாக நோன்பிருந்து வழிபாடுகள் செய்து நாக்கை அறுத்து இறைவன் திருமுன் வைத்து வழிபட்டார்.

    அன்றே அவர் காவி உடையும் புணைந்து கொண்டு துறவியானார்.

    மக்கள் அவரைத் தம்பிரான் என்று அன்புடன் அழைக்கலாயினர்.

    அடுத்த கிருத்திகை முதல் ரத்தினச்சாமித் தம்பிரானும் ஆவேசமுற்றுக் குறிசொல்லும் ஆற்றல் பெற்றார்.

    பின் சில நாட்களில் அண்ணாசாமித்தம்பிரான் விரும்பியபடியே தொடங்கப் பெற்ற கோவில் திருப்பணி சிறப்புற நிறைவேறியது.

    பழனியாண்டவர் சிலையும் பிரதிஷ்டை செய்யப் பெற்றுக் கும்பாபிஷேகமும் நன்கு நிறைவேறியது.

    வழக்கம் போல் குறி கேட்க வரும் அன்பர்கள் கொடுக்கும் காணிக்கைப் பொருளைக் கொண்டே ரத்தினசாமித் தம்பிரான் திருக்கோவில் பூஜை முதலிய செலவுகளை நல்லமுறையில் நடத்திக் கொண்டு வந்தார்.

    • பெரியவரை அணுகவும் அவருக்கு இயலவில்லை, பேசவும் அவரால் முடியவில்லை.
    • பேசாமல் பின் தொடர்ந்தார். காவி உடை அணிந்தவர் குறி மேடைவரை வந்து அங்கிருந்த கோவிலுக்குள் நுழைந்தார்.

    மறுநாள் ஒன்றும் புரியாத நிலையில், ஆண்டவர் சன்னிதியை விட்டுப் பிரியவும் மனமின்றி, வீட்டுக்குச் செல்லவும் விருப்பமின்றி, அன்று மாலையில் கடைக்குச் சென்றார்.

    மூடியிருந்த கடையைத் திறந்தபோது காவி உடை தரித்த யாரோ ஒரு பெரியவர் அங்கிருந்து வெளிப்பட்டுச் செல்வது போலத் தோன்றக் கண்டார்.

    கடையை அப்படியே விட்டு விட்டு அவர்தம் அடிச்சுவட்டைப் பின்பற்றி உடன் சென்றார்.

    பெரியவரை அணுகவும் அவருக்கு இயலவில்லை, பேசவும் அவரால் முடியவில்லை.

    பேசாமல் பின் தொடர்ந்தார். காவி உடை அணிந்தவர் குறி மேடைவரை வந்து அங்கிருந்த கோவிலுக்குள் நுழைந்தார்.

    பின் வந்த செட்டியார் உள்ளே புகுந்த போது பெரியவரைக் காணவில்லை.

    அதனால் திகைப்பும் வியப்பும் அடைந்தார், செட்டியார். அருகிருந்தவர்களும் நிகழ்ந்ததை அறிந்து வியப்பு மேலிட்டனர்.

    இத்தகைய சில நிகழ்ச்சிகளால் செட்டியார், குடும்பப் பற்றுத் தவிர்த்து துறவு நெறி உணர்வு பெருகி, ஆண்டவர் சன்னிதியிலேயே இருந்து கொண்டு வழிபாடு செய்யத் தொடங்கினார்.

    • அன்று முதல் செட்டியாருக்கு அடிக்கடி தாம் காவி உடை உடுத்தி இருப்பது போன்ற உணர்வு அவ்வப்போது வரலாயிற்று.
    • அன்பர்கள் பலர் செய்த பொருளுதவியினால் திருப்பணி விரைவில் நிறைவேறியது.

    மறுநாளே, செட்டியார் வண்ணையம்பதிக்குச் சென்று தமக்குத் தெரிந்த ஒரு ஸ்தபதியாரிடம் பழனி ஆண்டவர் சிலையொன்று செய்யும்படி ஏற்பாடு செய்தார்.

    அன்று முதல் செட்டியாருக்கு அடிக்கடி தாம் காவி உடை உடுத்தி இருப்பது போன்ற உணர்வு அவ்வப்போது வரலாயிற்று.

    பின்னர் சில நாட்களில் ஒரு நல்ல நாள் பார்த்துச் செட்டியாரே அண்ணாசாமித் தம்பிரானின் திருவுள்ளக்குறிப்பின்படி, கோவில்

    திருப்பணியை முன்நின்று தொடங்கினார்.

    குறிமேடை அருகில், இப்போது வடபழனி ஆண்டவர் திருக்கோவிலின் கருவறைப் பகுதி உள்ள இடத்தில் செங்கல் சுண்ணாம்புக் கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டது.

    அன்பர்கள் பலர் செய்த பொருளுதவியினால் திருப்பணி விரைவில் நிறைவேறியது.

    இது சுமார் கி.பி.1865-ம் ஆண்டாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    இந்நிலையில் திடீரென்று ஒரு நாள் ஆவணிமாதம் அமாவாசைத் திதி மகநட்சத்திரத்தன்று அண்ணாசாமித் தம்பிரான் ஆண்டவர் திருவடியை அடைந்து விட்டார். அன்பர்கள் பெரிதும் வருந்தினர்.

    அப்போது தான் ரத்தினசாமிச் செட்டியாருக்குத் தம்பிரான், ஏன் தம்மை இங்கேயே இருந்து கொண்டு, தொண்டு செய்து வரும்படி விரும்பிப் பணித்தார் எனும் குறிப்பும் நுட்பமும் தெரிந்தன.

    தம்பிரானின் திருமேனியை உரிய முறையில் பூசித்துக் குறிமேடை அருகில் சிறப்பாக அடக்கம் செய்தார், ரத்தினசாமிச் செட்டியார்.

    • தாங்களே வாய்திறந்து பணித்த பின்னர் அதனை நிறைவேற்றுவதில் என்ன தடை ?
    • இன்றைக்கே கோவில் திருப்பணிக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யலாம்.

    செட்டியாரின் அன்பையும் ஆர்வத்தையும் அறிந்த தம்பிரான் சில காலம் கழித்து நமக்குப்பின் இவ்வழிபாட்டைத் தொடர்ந்து செய்யக் கூடியவர் இவரே ஆவார் என தெரிந்து ரத்தினசாமிச் செட்டியாரை அன்புடன் அருகில் அழைத்து நீர் இங்கேயே இருந்து ஆண்டவருக்குத் தொண்டு செய்தல் இயலுமா' என்று வினவினார்.

    ரத்தின சாமியார் எதிர்பாராத நிலையில் வினா எழவே மிகவும் தயங்கி அடியேன் குடும்பத்தவன் ஆயிற்றே!

    என்னால் எங்ஙனம் இயலும் ஏதேனும் இயன்ற தொண்டுகளை மட்டும் நான் செய்து வருகிறேன் என்று பணிவுடன் தெரிவித்தார்.

    அதை கேட்ட தம்பிரான், இக் கீற்றுக் கொட்டகையை மாற்றி இங்குப் பழனி ஆண்டவருக்கு ஒரு சிறிய கோவில் கட்ட வேண்டுமென்று என் உள்ளம் விரும்புகின்றது.

    தாங்கள் இதற்கு ஏதேனும் உதவி செய்தல் இயலுமா?' என்றார்.

    உடனே செட்டியார், அப்படியே செய்யலாம். தங்கள் விருப்பம் போலவே அன்பர்களுக்கும் இக்கருத்து உள்ளது.

    தாங்களே வாய்திறந்து பணித்த பின்னர் அதனை நிறைவேற்றுவதில் என்ன தடை ?

    இன்றைக்கே கோவில் திருப்பணிக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யலாம்.

    தாங்கள் இசைவு தெரிவித்தால், பழனி ஆண்டவர் சிலை ஒன்றையும் அழகுற அமைத்து கோவில் நிறுவி கும்பாபிஷேகமும் விரைவில் செய்து விடலாம்" என்று மிகவும் பேரார்வத்துடன் தெரிவித்தார்.

    அண்ணாசாமித்தம்பிரான், ஆண்டவன் பணிக்கு எம்முடைய இசைவு எதற்கு தங்கள் உள்ளத்தில் தோன்றுகிறபடியே திருப்பணிக்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று சொல்லிச் செட்டியாருக்குத் திருநீறு கொடுத்து அனுப்பிவிட்டார்.

    • அன்று நிகழ்ந்த வழிபாட்டில் உள்ளத்தைப் பறி கொடுத்தார்.
    • அன்று முதல் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தோறும் வழிபாட்டுக்கு வந்து கலந்து கொண்டார்.

    அண்ணாசாமித் தம்பிரானின் அரிய பக்தியையும், குறி சொல்லும் சிறப்பையும் கேள்வியுற்று அவரை நாடிய அன்பர்கள் பற்பலர்.

    அவர்களுள் தேனாம்பேட்டையில் வாழ்ந்து வந்த ரத்தினசாமிச்செட்டியார் என்பவரும் ஒருவர்.

    அவர் ஆயிரம் விளக்குப்பகுதியில் ஒரு மளிகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தார்.

    1953-ம் ஆண்டு வெள்ளிக்கிழமை அன்று முதன் முதலில் செட்டியார் அண்ணசாமி தம்பிரானை கண்டார்.

    அன்று நிகழ்ந்த வழிபாட்டில் உள்ளத்தைப் பறி கொடுத்தார்.

    அன்று முதல் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தோறும் வழிபாட்டுக்கு வந்து கலந்து கொண்டார்.

    தம்முடைய செலவில் பழனி ஆண்டவருக்குப் பூ, பழம், ஊது வத்தி, கற்பூரம் ஆகிய வழிபாட்டுப் பொருள்களை வாங்கி வந்து கொடுப்பது அவருக்கு வழக்கமாயிற்று.

    • பல கோடி பிறவிகளில் செய்த புண்ணியங்கள் திரண்டு ஒன்றுபட்டால் தான் முருக பக்தி உண்டாகும்.
    • முருகப் பெருமான் குன்றுகள் இருக்குமிடம் தோறும் வீற்றிருக்கிறான்.

    சித்தர்கள் பரம்பரையை துவக்கி வைத்த பெருமை முருகனுக்கு உண்டு.

    முருகப் பெருமான் குன்றுகள் இருக்குமிடம் தோறும் வீற்றிருக்கிறான்.

    முருகனை மந்திரவடிவிலும், யந்திர வடிவிலும், யாக நெருப்பிலும், பற்பல சிற்ப வடிவிலும், ஓவிய வடிவிலும்,

    தமிழ் மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்.

    முருகப்பெருமானைப் பற்றி நாம் மேலும் அறிய வேண்டு மானால் கச்சியப்பரின் கந்தபுராணம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை,

    அருணகிரியாரின் திருப்புகழ், குமரகுருபரரின் கந்தர்கலிவெண்பா முதலான படைப்புகளை சலிப்பே இல்லாமல் படித்து,

    அதை நுணுக்கமாக ஆராய வேண்டும்.

    அப்போது தான் முருகன் யார் என்பது மிகத்தெளிவாக தெரியவரும்.

    பல கோடி பிறவிகளில் செய்த புண்ணியங்கள் திரண்டு ஒன்றுபட்டால் தான் முருக பக்தி உண்டாகும்.

    முருகன் அருள் பெற அறுபடை வீடுகளுடன் தொண்டை மண்டலத்தின் வைரக்கிரீடமாகத் திகழும் வடபழனி தலமும் உள்ளது.

    • அகத்திய முனிவருக்கே தமிழ் இலக்கணம் போதித்த முதல் ஆசிரியன்.
    • அவ்வைப் பிராட்டிக்கு தத்துவ ஞானத்தை நாவல்பழம் மூலம் போதித்தவன்.

    முருகப் பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது.

    தெய்வ யானை கிரியா சக்தியாகவும் வள்ளி இச்சா சக்தியாகவும் வேல் ஞான சக்தியாகவும் மயில் ஆணவம் என்றும் சேவல் சிவஞானம் என்றும் கூறுவார்கள்.

    சிவபெருமானின் நெற்றிக்கண் தீப்பொறியில் இருந்து அவதரித்த சிவக்குமரன், சக்தி பார்வதிதேவி சேர்த்தெடுத்து ஞானப்பாலூட்டி வளர்த்த சக்திமைந்தன் தான் முருகன்.

    இவர் விநாயகப்பெருமானின் இளைய சகோதரன், ஐயப்ப சுவாமியின் அண்ணன்.

    திருமாலின் மருமகன், இந்திரனின் மாப்பிள்ளை, தேவயானை எனும் தேவியின் கணவன்.

    வள்ளிக்குற மகளின் காதலன், வீரபாகு முதலான நவ வீர வாகுத் தேவர்கள் 9 பேரின் தோழன், தேவர்களுக்கு இன்னல்கள் விளைத்த தாரகா சூரன் சிங்கமுகன் சூரபதுமன் முதலான அசுரர்களை அழித்தவன்.

    அகத்திய முனிவருக்கே தமிழ் இலக்கணம் போதித்த முதல் ஆசிரியன்,

    அவ்வைப் பிராட்டிக்கு தத்துவ ஞானத்தை நாவல்பழம் மூலம் போதித்தவன்.

    நக்கீரர், அருணகிரியார், குமரகுருபரர், கச்சியப்பசிவ சாரியார் போன்ற ஞானிகளுக்கே தமிழ் நூல்கள் எழுத போதித்த சற்குரு.

    அப்பனுக்கே ஞானம் சொன்ன சுப்பன். தமிழகத்திற்கும் தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் உண்மையான தமிழ்த் தலைவன்,

    வடக்கே பிறந்து தெற்கே வந்தாலும் முற்றிலும் செந்தமிழ் நாட்டிற்கே உரியவன்.

    • இந்நாளில் சூரிய பகவான் விரதமிருந்து முருகப்பெருமானின் ப்ரீதியைப் பெற்றார் என்கிறது புராணம்.
    • விசாக விரதம் இருப்போர்க்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.

    முருகப்பெருமான் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று திரு அவதாரம் செய்தவர்.

    இந்நாளில் சூரிய பகவான் விரதமிருந்து முருகப்பெருமானின் ப்ரீதியைப் பெற்றார் என்கிறது புராணம்.

    விசாக விரதம் இருப்போர்க்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.

    இந்த விரதத்தை வைகாசி மாதம் விசாகத்தன்று தொடங்கி, தொடர்ந்து செய்து வந்தால் குடும்பத்தில்

    சகல சவுபாக்கியங்களும் பொங்கிப் பெருகும்.

    • தந்தைக்கு “ஓம்” என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.
    • ஓம் என்பது அ, உ, ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.

    தந்தைக்கு "ஓம்" என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.

    ஓம் என்பது அ, உ, ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.

    அ- படைத்தல் உ- காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும்.

    அ, உ, ம என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துகளுக்கும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது.

    முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ, உ, ம மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவாக உள்ளான்.

    குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கூறுவார்கள்.

    முருகனுக்குப் படை வீடு ஆறு. அவை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர் சோலை, திருத்தணி ஆகும்.

    ×