search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ வீரர் கைது"

    • கடந்த வாரம் மீண்டும் ஊருக்கு வந்த ஜெகதீஷ் மனைவியை விஜயநகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீஷை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், பங்காரம்மா பேட்டையை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது30). ராணுவ வீரர். இவரது மனைவி அனுஷா (30). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    ஜெகதீசுக்கு விருப்பம் இல்லாமல் அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் திருமணம் முடிந்தவுடன் ஜெகதீஷ் ராணுவத்தில் வேலைக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் மீண்டும் ஊருக்கு வந்த ஜெகதீஷ் மனைவியை விஜயநகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.

    பின்னர் மனைவியை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு விஜயவாடாவுக்கு சென்றார். தனக்கு பிடிக்காத பெண்ணை திருமணம் செய்து வைத்ததால் மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார்.

    கொலை செய்யும்போது எந்த தடையும் போலீசிடம் சிக்காமல் தப்பிப்பது எப்படி என யூடியூபில் பார்த்து தெரிந்து கொண்டார்.

    அன்று இரவு 11 மணிக்கு வீட்டிற்கு வந்த ஜெகதீஷ் மனைவியை வீட்டிலிருந்து வெளியே அருகில் உள்ள மாட்டுத் தொழுவத்திற்கு அழைத்துச் சென்றார். மனைவியிடம் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறி தகராறு செய்தார்.

    பின்னர் தான் தயாராக வைத்திருந்த நைலான் கயிற்றை எடுத்து அனுஷாவை கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

    பின்னர் மனைவியின் செல்போனில் இருந்து தனக்கும், அவரது பெற்றோர் மற்றும் சகோதரருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். அதில் அதே ஊரை சேர்ந்த பிரசாத் என்பவர் தன்னை துன்புறுத்துவதாகவும் அதனால் தற்கொலை செய்வதாக கூறப்பட்டு இருந்தது.

    இதனைக் கண்ட அனுஷாவின் பெற்றோர், உறவினர்கள் பிரசாத்தின் வீட்டை தாக்க வந்தனர். இதுகுறித்து பிரசாத் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனுஷாவின் உறவினர்களை சமாதானப்படுத்தினர்.

    பிரசாத்தை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அனுஷாவுக்கும், பிரசாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிந்தது.

    ஜெகதீஷ் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அனுஷாவை தனக்கு பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் மனைவியை நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்ததாகவும், கொலை செய்யும்போது தடயம் இல்லாமல் தப்பிப்பது எப்படி என யூடியூப் பார்த்து தெரிந்து கொண்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதனைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீஷை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயதுடைய சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்த சிறுமி சம்பவத்தன்று தனியாக இருந்தார். அப்போது எதிர்வீட்டில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் ஆசைபாண்டி(வயது68) என்பவர் சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி மறைவான இடத்திற்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.

    பின்னர் அந்த சிறுமிக்கு ஆசைபாண்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை அவரது பாட்டியிடம் அழுதுக் கொண்டே கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாட்டி இதுகுறித்து அம்மாபட்டி போலீசில் புகார் செய்தார்.

    ோலீசார் விசாரணை நடத்தியதில் ஆசைபாண்டி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆசைபாண்டியை கைது செய்தனர்.

    • சத்தம் கேட்டு குடும்பத்தினர் கண்விழித்துப் பார்த்தனர்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    வேலூர் மாவட்டம் சோழவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் வயது(40).

    இவர் இந்திய ராணுவத்தில் லடாக் பகுதியில் சிக்னல் ெரஜ்மெண்டில் பணியாற்றி வந்தார். கடந்த மே மாதம் 20-ந் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

    நேற்று அதிகாலை 4 மணி அளவில் குடிபோதையில் ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள சின்ன மேட்டு குடிசை கிராமத்துக்கு பைக்கில் சென்றார்.

    அப்போது மேட்டு குடிசை பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. இதை பயன்படுத்தி பன்னீர்செல்வம் மேட்டு குடிசை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (42) என்பவரது வீட்டில் புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி 20 கிராம் வெள்ளி பொருட்களை திருடிக் கொண்டிருந்தார்.

    அப்போது சத்தம் கேட்டு வெளியே தூங்கிக் கொண்டிருந்த கார்த்திகேயன் குடும்பத்தினர் கண்விழித்துப் பார்த்தனர்.

    வீடு புகுந்து நகை திருடிய பன்னீர்செல்வத்தை பிடித்து திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குபதிவு செய்து ராணுவ வீரர் பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கமலேஷ், யோகேஷ் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மற்ற 2 பேர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
    • பதிண்டா ராணுவ முகாமில் 4 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    பதிண்டா ராணுவ முகாமில் கடந்த 12-ந் தேதி அதிகாலை 4.35 மணியளவில் 4 வீரர்கள் காயங்களுடன் இறந்து கிடந்தனர். பீரங்கி படையை சேர்ந்தவர்கள்.

    அடையாளம் தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சாகர் பன்னே (25), கமலேஷ் (24), யோகேஷ் குமார் (24), சந்தோஷ் (24) ஆகிய 4 வீரர்களும் குண்டு பாய்ந்து பலியானார்கள்.

    இதில் கமலேஷ், யோகேஷ் தமிழகத்தை சேர்ந்தவர்கள். மற்ற 2 பேர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் போலீசும் ராணுவமும் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் பதிண்டா ராணுவ முகாமில் 4 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ராணுவ வீரரின் பெயர் தேசாய் மோகன் ஆவார். இதை பதிண்டா மாவட்ட மூத்த போலீஸ் சூப்பிரண்டு குல்னீத் சிங் குரானா தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, இதன் நோக்கம் தனிப்பட்டது. அவர்களுடன் அவருக்கு தனிப்பட்ட பகை இருந்து உள்ளது. அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு உள்ளார் என்றார்.

    • சொத்து தகராறில் முன்விரோதம்
    • ஜெயிலில் அடைப்பு

    ஆரணி:

    ஆரணி அடுத்த சீனிவாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரத்தினம்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. அவ ரது சகோதரர் கோவிந்தராஜ். இவரது மகன் ஜெயசூர்யா (வயது 24), ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலை யில் நிலம் தொடர்பாக அண்ணன்-தம்பிக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்த ஜெயசூர்யா பிரச்சினைக்குரிய இடத்துக்கு சென்று அங்கு இருந்த காணிக்கல்லை பிடுங்கியுள்ளார்.

    தகவல் அறிந்து சக்கரவர்த்தி அங்கு சென்று ஜெயசூர்யாவிடம் ஏன் கல்லை பிடுங்கி போட்டாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஜெயசூர்யா, சித்தப்பா சக்கரவர்த்தியை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயசூர்யாவை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • இவர், 7 வருடங்களுக்கு முன் சஸ்பெண்ட் ஆகியுள்ளதும் தெரிய வந்தது.
    • ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மாவட்டம் வீரபாண்டிப்பிரிவு, ஜோதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராதாமணி. இவர் அவரது மகனுடன் தனியார் மருத்துவமனைக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார்.

    மேட்டுப்பாளையம் சாலையில் வந்த போது பின்னால் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் ராதாமணியில் கழுத்தில் அணிந்திருந்த சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 8 சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பி செல்ல முயன்றனர். இருப்பினும் ராதாமணியின் மகன் அவர்களை வாகனத்திலேயே துரத்தி மடக்கி அருகில் இருந்த பொதுமக்கள் உதவியுடன் பிடித்தார். அதில் ஒரு நபர் பறித்த தாலி செயினுடன் தப்பி செல்லவே பிடிப்பட்ட மற்றொரு நபரை துடியலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீஸ் விசாரணையில் பிடிபட்ட நபர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பழனிநாதன் (43) என்பதும் முன்னாள் ராணுவ வீரர் என்பதும், 7 வருடங்களுக்கு முன் சஸ்பெண்ட் ஆகியுள்ளதும் தெரிய வந்தது.

    வழக்கு பதிவு செய்த போலீசார் பழனிநாதனை கைது செய்தனர். தப்பிச்சென்ற மற்றொரு நபரான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தன் என்பவரை தேடி வருகின்றனர்.

    முன்னாள் ராணுவ வீரரே இது போன்று செயின் பறிப்பில் ஈடுபட்டது அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×