search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேச்சுப் போட்டிகள்"

    • ஊட்டி, சி.எஸ்.ஐ., சி.எம்.எம். மேல்நிலைப்பள்ளியில் 28, 29-ந்தேதிகளில் நடக்கிறது
    • 24-ந்தேதிக்குள் விண்ணப்பங்களை மின்னஞ்சலில் அனுப்ப வேண்டுகோள்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க 2023-2024-ஆம் ஆண்டில் நீலகிரி மாவட்டத்தில் 28.11.2023 அன்று அண்ணல் காந்தியடிகள் மற்றும் 29.11.2023 அன்று ஜவகர்லால் நேரு ஆகியோர்களின் பிறந்த நாளையொட்டி மாவட்ட த்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் ஊட்டி, சி.எஸ்.ஐ., சி.எம்.எம். மேல்நிலைப்பள்ளியில் பகல் 10 மணிக்கு நடத்தபெற உள்ளன.

    இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பெற உள்ளன.

    அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்த பெறும் பேச்சு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களில் சிறப்புடன் திறமையை வெளிப்படுத்தும் அரசு பள்ளி மாணவர்கள் இருவரை மட்டும் தெரிவு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்க பெற உள்ளன.

    காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சு போட்டிக்கான தலைப்புகள் 1. காந்தியடி களின் வாழ்க்கை வரலாறு 2. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் 3. வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள், ஜவகர் லால் நேரு பிறந்த நாள் பேச்சு போட்டிக்கான தலைப்புகள்: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் 1. ஆசிய ஜோதி 2. மனிதருள் மாணிக்கம் போட்டி களுக்கான தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை போட்டி நடைபெறும் நேரத்தில் மாணவர்கள் குலுக்கல் சீட்டு முறையில் தெரிவு செய்து அந்த தலைப்பில் மட்டுமே பேசுவதற்கு அனு மதிக்க பெறுவர்.

    எனவே தரப்பட்டுள்ள அனைத்து தலைப்புகளிலும் பேசுவதற்கு உரிய தயாரிப்புடன் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.

    மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் உரிய பங்கேற்பு படிவத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் ஒப்பமும் பெற்று 24.11.2023-க்குள் ootytamilvalarchi@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்புதல் வேண்டும். பேச்சு போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகின்ற 6-ந் தேதி நடைபெறுகின்றது.
    • மாணவர்கள் போட்டி நாளன்று காலை 9 மணிக்குள் வருகையைப் பதிவு செய்யவேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் எடு -த்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே தமிழில் பேச்சாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகின்ற 6-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் கடலூர் கடற்கரைச் சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள சி.கே.பள்ளியில் நடைபெறவுள்ளன. கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு மூன்று பிரிவுகளில் தனித்தனியே முதல் பரிசு ரூ.10,000 , 2-ம் பரிசு ரூ.7,000, 3-ம் பரிசு ரூ.5,000 என வழங்கபெறவுள்ளன. இவ்வாறு கூறப்பட்டு ள்ளது. கடலூர் மாவ ட்டத்தில் உள்ள மேனிலைப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலக்கூடிய மாணவர்களுள் ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் மூன்று மாணவர்களை மட்டும் தேர்வு செய்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் அனுப்பவேண்டும். மாணவர்கள் போட்டி நாளன்று காலை 9 மணிக்குள் வருகையைப் பதிவு செய்யவேண்டும். போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டி நடைபெறும் அரங்கில் அளிக்கப்படும். கடலூர் மாவட்டத்திலுள்ள அரசு, மற்றும் அரசு உதவி பெறும் தனியார்மே னிலைப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். தமிழார்வமுள்ள மாண வர்கள் மேற்கூறியுள்ள போட்டிகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவித்துள்ளார்.

    • போட்டி நாளன்று மாணவர்கள் தங்கள் வருகையை பதிவு செய்து, போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
    • கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரி டமும் பரிந்துரைப்பெற்று போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் வருகிற 28-ந் தேதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11, 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளிடையே தமிழில் படைப்பாற்றலலயும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி, முதல், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் ஒவ்வொரு போட்டிக்கும் வழங்குவதோடு, பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப் பெற்று வருகிறது.

    இந்த போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் அரசு செலவில் செல்லும் வாய்ப்பையும் பெறுவர்.

    2022-23-ம் ஆண்டுக்கான 11, 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற 28-ந் தேதியன்று கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

    போட்டி நாளன்று மாணவர்கள் தங்கள் வருகையை பதிவு செய்து, போட்டிகளில் கலந்து கொள்ளலாம். விண்ணப்பப்படிவம் மற்றும் விதிமுறைகள் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கல்லூரி கல்வி இணை இயக்குநர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த போட்டிகளில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 11, 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளி தலைமையாசிரியரிடமும், கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரி டமும் பரிந்துரைப்பெற்று போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த போட்டிகள் தொடக்க விழாவுக்கு கல்லூரி தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான எம்.ஜி. சேகர் தலைமை தாங்கினார்.
    • பேச்சுப் போட்டியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    தருமபுரி,

    தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் தர்மபுரி மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் தருமபுரி அடுத்த பெரியாம்பட்டி சப்தகிரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தலை நிமிரும் தமிழகம் என்ற லட்சியத்தை தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவ-மாணவிகளிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.

    இந்த போட்டிகள் தொடக்க விழாவுக்கு கல்லூரி தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான எம்.ஜி. சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி நிர்வாக இயக்குனர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் வரவேற்று பேசினார்.

    இந்த விழாவில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடந்த பேச்சுப் போட்டியில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    இந்த விழாவில் தருமபுரி நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர். மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.மனோகரன், அரசு சட்டக் கல்லூரி முதல்வர் சிவதாஸ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

    ×