search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 314647"

    • பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது.
    • 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய இரண்டாவது போட்டி பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது.

    டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் 9 ரன்னில் அவுட்டானார்.

    கேப்டன் ஷிகர் தவான் 30 ரன்னும், மேத்யூ ஷார்ட் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா ஜோடி மும்பை பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்து சிக்சர், பவுண்டரிகளை விளாசியது. லிவிங்ஸ்டோன் அரை சதம் கடந்தார்.

    இறுதியில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை குவித்தது. லிவிங்ஸ்டோன் 42 பந்தில் 82 ரன்னும், ஜிதேஷ் சர்மா 27 பந்தில் 49 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 41 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து அசத்தினார். தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் 66 ரன்களும், கேரமரன் கிரீன் 23 ரன்களும் எடுத்தனர்.

    திம் டேவிட் 19 ரன்களுடன், திலக் வர்மா 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடினர்.

    இந்நிலையில், ஆட்டத்தின் முடிவில் 18.5 ஓவரில் 216 ரன்கள் எடுத்து மும்பை அணி ஆட்டத்தை கைப்பற்றியது.

    • லக்னோ அணி 7 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று உள்ளது.
    • பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்க லக்னோ முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மொகாலியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    லக்னோ அணி 7 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று உள்ளது. அந்த அணி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பஞ்சாப் அணியும் அதே நிலையில்தான் உள்ளது.

    ஏற்கனவே இந்த இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்க லக்னோ முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஐபிஎல் போட்டியில் இதுவரை குஜராத் டைட்டன்ஸ் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.
    • மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 3 வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் சந்தித்து 6 புள்ளிகளுடன் உள்ளன.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    அதன்படி, இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் களமிறங்குகின்றன.

    இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்ன்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றியும், இரண்டு போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. இதனால் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.

    இதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 3 வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் சந்தித்து 6 புள்ளிகளுடன் உள்ளன.

    இந்நிலையில், இன்றைய 7வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே பலப்பரீட்சை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெற 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் நடைபெற லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதியது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர் பில் சால்ட் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் மற்றொரு துவக்க வீரர் வார்னர் 21 ரன்னிலும், அதிரடியாக ஆடிய மார்ஷ் 25 ரன்னும் சேர்த்தனர். சர்பராஸ் கான் 10, அமன் ஹகிம் கான் 4 என விரைவில் விக்கெட்டை இழந்தனர்.

    62 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன. அதன்பின் மணீஷ் பாண்டே, அக்சர் பட்டேல் ஜோடி நிலைத்து நின்று ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் தலா 34 ரன்கள் சேர்த்தனர். ரிபால் பட்டேல் 5 ரன், அன்ரிச் நோர்ட்ஜே 2 ரன்களில் ரன் அவுட் ஆக, டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது.

    ஐதராபாத் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட் கைப்பற்றினார். புவனேஸ்வர் குமார் 2 விக்கெட், நடராஜன் ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக மயாங்க் அகர்வால் 49 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, ஹெயின்ரிச் க்ளாசன் 31 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 24 ரன்களும், ராகுல் திரிபாதி 15 ரன்களும், ஹாரி ப்ரூக் 7 ரன்களும், அபிஷேக் சர்மா 5 ரன்களும், எய்டன் மர்க்ரம் 3 ரன்களும், மார்கோ ஜான்சன் 2 ரன்களும் எடுத்தனர்.

    இந்த ஆட்டத்தின் முடிவில் ஐதராபாத் அணி 20 ஓவருக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

    இதன்மூலம், டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது.
    • முதல் 5 ஆட்டங்களில் வரிசையாக தோல்வி அடைந்த டெல்லி கேப்பிட்டல் அணி கடந்த ஆட்டத்தில் முதலாவது வெற்றியை பதிவு செய்தது.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் கடைசி இரு இடங்களில் உள்ள ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.

    முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது.

    இதேபோல், முதல் 5 ஆட்டங்களில் வரிசையாக தோல்வி அடைந்த டெல்லி கேப்பிட்டல் அணி கடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து முதலாவது வெற்றியை பதிவு செய்தது.

    இந்நிலையில், தனது சொந்த மண்ணில் விளையாடும் ஐதராபாத் அணிக்கு வெற்றி கிடைக்குமா அல்லது டெல்லி கேப்பிட்டல்ஸ் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்யுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது.
    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் வெறும் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 33வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, சி.எஸ்.கே. அணி முதலில் களமிறங்கியது.

    சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.

    போட்டியின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் வெறும் 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

    இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலாக வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. 6 போட்டிகளின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருந்தது.

    இன்றைய 7வது ஆட்டத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    • ஐதராபாத்தை துவம்சம் செய்த உத்வேகத்துடன் சென்னை அணி இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது.
    • இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மோதும் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா.

    16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இதுவரை சென்னை அணி 4 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் அணிகளுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான் அணிகளிடம்) 8 புள்ளிகள் பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை துவம்சம் செய்த உத்வேகத்துடன் சென்னை அணி இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது.

    கொல்கத்தா அணி 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (பெங்களூரு, குஜராத் அணிகளுக்கு எதிராக), 4 தோல்வி (பஞ்சாப், ஐதராபாத், மும்பை. டெல்லி அணிகளிடம்) கண்டுள்ளது. அந்த அணி தனது முந்தைய 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது.

    இந்நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஆதிக்கத்தை தொடர சென்னை அணியும், சரிவில் இருந்து மீண்டு வர கொல்கத்தா அணியும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்தது.
    • மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் 11 ரன்னிலும், பிரப்சிம்ரன் சிங் 26 ரன்னிலும் லிவிங்ஸ்டோன் 10 ரன்னிலும் அவுட்டாகினர்.

    அதர்வா டெய்ட் 29 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஹர்ப்ரீத் சிங் பாட்டியா, சாம் கர்ரன் ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தது.

    5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 50 பந்தில் 92 ரன்களை குவித்தது. பாட்டியா 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    சாம் கர்ரன் 29 பந்தில் 4 சிக்சர், 5 பவுண்டரியுடன் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ஜிதேஷ் சர்மா 7 பந்தில் 4 சிக்சர் உள்பட 25 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்தது.

    மும்பை அணி சார்பில் பியூஷ் சாவ்லா, கேமரூன் கிரீன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக கேமரன் கிரீன் அரை சதம் எடுத்து 67 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 57 ரன்களும், ரோகித் சர்மா 44 ரன்களும், டிம் டேவிட் 25 ரன்களும், திலக் வர்மா 3 ரன்களும், இஷான் கிஷன் ஒரு ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

    இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.

    • லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறையும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா 2 முறையும் மோதும். இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த போட்டி தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 29-வது லீக் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சை எதிர்கொள்கிறது.

    சென்னை அணி 5 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி (லக்னோ, மும்பை, பெங்களூருவுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (குஜராத், ராஜஸ்தான் அணிகளிடம்) 6 புள்ளிகள் பெற்றுள்ளது. பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், டிவான் கான்வே, ரஹானே, ஷிவம் துபேவும், பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, தீக்ஷனா, பதிரானாவும் சென்னை அணிக்கு வலுசேர்க்கிறார்கள். மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது.

    ஐதராபாத் அணி மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி தனது முதல் 2 ஆட்டங்களில் ராஜஸ்தான், லக்னோவிடம் பணிந்தது. அடுத்த 2 ஆட்டங்களில் பஞ்சாப், கொல்கத்தா அணிகளை அதட்டியது. கடந்த லீக் ஆட்டத்தில் 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்தது.

    மொத்தத்தில் 4-வது வெற்றியை பெற சென்னை அணியும், வெற்றிப்பாதைக்கு திரும்ப ஐதராபாத் அணியும் வரிந்து கட்டும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 13-ல் சென்னையும், 5-ல் ஐதராபாத்தும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    • கொல்கத்தா அணி 20 ஓவரில் வெறும் 127 ரன்களே எடுத்தது.
    • 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

    தலைநகர் டெல்லியில் இன்று இரவு நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் நிதானமாக ஆடினார். அவர் 43 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர். யாரும் நிலைத்து நிற்கவில்லை.

    கடைசி கட்டத்தில் ஆண்ட்ரு ரசல் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் வெறும் 127 ரன்களே எடுத்தது.

    இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக டேவிட் வார்னர் 57 ரன்களும், மனிஷ் பாண்டே 21 ரன்களும், ப்ரித்வி ஷா 13 ரன்களும், பிலிப் சால்ட் 5 ரன்களும், மிட்செல் மார்ஷ் 2 ரன்களும் எடுத்தனர்.

    அசார் படேல் 17 ரன்கள் மற்றும் லலித் யாதவ் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இறுதியில், 19.2 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் ஐபிஎல் டி20 தொடரில் தனது முதல் வெற்றியை பதித்தது.

    • ஆப்பிள் நிறுவனம் தனது முதல் நேரடி விற்பனை நிலையத்தை மும்பையில் நேற்று முன்தினம் தொடங்கியது.
    • ஆப்பிள் நிறுவனத்தின் 2-வது நேரடி விற்பனை நிலையத்தை, டெல்லியில் இன்று டிம் குக் தொடங்கி வைத்தார்.

    உலக புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் தனது முதல் நேரடி விற்பனை நிலையத்தை மும்பையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் திறப்பு விழாவில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி(சி.இ.ஓ) டிம் குக் பங்கேற்றார்.

    இதனைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் 2-வது நேரடி விற்பனை நிலையத்தை, டெல்லியில் இன்று டிம் குக் தொடங்கி வைத்தார்.

    இதனிடையே இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிவரும் ஐபிஎல் ஆட்டத்தை காண குக், டெல்லி மைதானத்திற்கு வந்தார். பின்னர் அவர் ரசிகர்களுடன் கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு களித்தார்.

    • 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.
    • ஐதராபாத் தரப்பில் மார்கோ ஜான்சென் 2 விக்கெட் எடுத்தார். புவனேஸ்வர் குமார், நடராஜன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

    டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 28 ரன்கள், இஷான் கிஷன் 38 ரன்கள் சேர்த்தனர்.

    அதன்பின் களமிறங்கிய கேமரான் கிரீன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தார். மறுமுனையில் சூரியகுமார் யாதவ் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    அவரைத் தொடர்ந்து கேமரான் கிரீனுடன் இணைந்த திலக் வர்மா, ஐதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 17 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 37 ரன்கள் விளாசிய நிலையில் அவர் ஆட்டமிழந்தார். டிம் டேவிட் 16 ரன்களில் அவுட் ஆனார்.

    மறுமுனையில் அரை சதம் கடந்து நம்பிக்கை அளித்த கேமரான் கிரீன் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் சேர்க்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் சேர்த்தது.

    ஐதராபாத் தரப்பில் மார்கோ ஜான்சென் 2 விக்கெட் எடுத்தார். புவனேஸ்வர் குமார், நடராஜன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக மாயங்க் அகர்வால் 48 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஹெயின்ரிச் கிளாசன் 36 ரன்களும், எய்டன் மார்க்ரம் 22 ரன்களும், மார்கோ ஜான்சென் 13 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களும், ராகுல் திரிபாதி 7 ரன்களுடம், அபிஷேக் சர்மா ஒரு ரன்னும் எடுத்தனர்.

    இறுதியாக அப்துல் சமாத் 9 ரன் எடுத்து ரன் அவுட் ஆனார். இவருக்கு அடுத்ததாக மயங்க் மார்கண்டே 2 ரன்களும், புவனேஸ்வர் குமுார் 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    ஆட்டத்தின் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

    இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றியடைந்துள்ளது.

    ×