search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரத்"

    • இந்தியா இனிமேல் பாரத் என பெயர் மாற்றம் அடையலாம் என தகவல்
    • துக்ளக் தர்பார் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்?- அல்போன்ஸ்

    இந்தியா பெயரை பாரத் என மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆளுங்கட்சி சார்பிலும், எதிர்க்கட்சி சார்பிலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்தியா கூட்டணி மீதான பயத்தால் மோடி நாட்டின் பெயரை பாரத் என மாற்றுகிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ''அடுத்து Reserve Bank of India என்று அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களெல்லாம் செல்லாது என ஒன்றிய அரசு அறிவிக்குமா?

    "துக்ளக் தர்பார்" என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்லமுடியும்?'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • நாம் பாரதியர்கள் என சேவாக் கூறியுள்ளார்.
    • சேவாக்கின் இந்த பதிவிற்கு தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளார்.

    இந்திய பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் இம்மாதம் 18 தொடங்கி 22 வரை நடக்க இருக்கிறது. நமது நாட்டின் பெயரை "இந்தியா" என்பதற்கு பதிலாக "பாரத்" என மாற்றுவது குறித்து மசோதா தாக்கல் செய்யப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த முடிவுக்கு பல தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பாரத் என மாற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் டுவிட் செய்திருந்தார். அதில், ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நாம் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது என கூறியிருந்தார்.

    சேவாக்கின் இந்த பதிவிற்கு தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்துள்ளார். அதில் ஏன் இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை சேர்க்கவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    விஷ்ணு விஷால் கிரிக்கெட் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர். அவர் ஜீவா என்ற படத்தில் கிரிக்கெட்டராக நடித்திருந்தார். இந்த படம் தமிழக அளவில் வெற்றி கண்டது. ஏன் தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு படமாக இருந்தது என்றே கூறலாம்.

    • இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர்.
    • எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது.

    குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, சிறப்பு பாராளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி வருகிறது.

    இந்நிலையில் இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவக் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஒரு பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என எப்போதும் நம்புகிறவன் நான். நாம் பாரதியர்கள். இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் வழங்கிய பெயர். எங்களது உண்மையான பெயரான பாரத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகிவிட்டது.

    பிசிசிஐ மற்றும் ஜெய்ஷாவை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இந்த உலகக் கோப்பையில் நமது வீரர்கள் பாரதத்தை நெஞ்சில் ஏந்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். டீம் இந்தியா அல்ல. டீம் பாரத். தனது கருத்து அரசியல் சார்பு சார்ந்தது அல்ல. சமீபத்திய தேர்தல்களில் இரண்டு அரசியல் கட்சிகளின் சலுகைகளை நான் நிராகரித்தேன்.


    ஆங்கிலேயர்கள் வைத்த பெயரை பர்மா மீண்டும் மியான்மர் என மாற்றியது. மேலும் பலர் தங்கள் அசல் பெயருக்கு திரும்பிவிட்டனர்.

    என அவர் கூறினார்.

    • பாரத் என்ற வார்த்தை பரவலாக பல இடங்களில், கலாசார தொடர்பான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது
    • இது மொழி சம்பந்தப்பட்ட விசயம். பெயர்கள் மிகப்பெரிய வித்தியாசத்தை உருவாக்கும் என நான் நினைக்கவில்லை

    "இந்தியா" என்பது "பாரத்" என மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் வெளியாக ஜனாதிபதி மாளிகை சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது முக்கிய காரணம். வருகின்ற பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீக்சித் கூறுகையில் "நீங்கள் நமது அரசியலமைப்பை படித்தீர்கள் என்றால், அதில் இந்தியா பாரத் எனவும் உள்ளது. பாரத் என்ற வார்த்தை பரவலாக பல இடங்களில், கலாசார தொடர்பான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இது மொழி சம்பந்தப்பட்ட விசயம். பெயர்கள் மிகப்பெரிய வித்தியாசத்தை உருவாக்கும் என நான் நினைக்கவில்லை. பா.ஜனதா வளர்ச்சி, பணவீக்கம், வேலைவாய்ப்பு, ஊழல் போன்ற விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.

    • வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியால் இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது
    • அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது

    "இந்தியா" பெயர் "பாரத்" என மாற இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு #INDIA என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது.

    இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது.

    அரண்டவர் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை மிரட்டுகிறது. தேர்தலில் இந்தியா என்ற சொல்லே பா.ஜ.க.வை விரட்டும்! #IndiaStaysIndia 

    இவ்வாறு டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    • குடியரசு தலைவர் மாளிகை அழைப்பிதழில் பாரத் என அச்சிடல்
    • சிறப்பு பாராளுமன்ற கூட்டத் தொடரில் மசோதா கொண்டு வர வாய்ப்பு எனத் தகவல்

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. 2024 தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சிகள் தங்களுடைய கூட்டமைப்புக்கு இந்தியா (I.N.D.I.A.) எனப் பெயரிட்டுள்ளது.

    இது இந்திய நாட்டை குறிப்பது போன்று உள்ளதால், பா.ஜனதாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மோடி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில்தான் குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது.

    ஏற்கனவே, சிறப்பு பாராளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகி வருகிறது.

    இந்த நிலையில், இந்தியா- பாரத் சர்ச்சை குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா கூறுகையில் "நமது தேசிய அடையாளம் பா.ஜ.க.-வின் தனிப்பட்ட சொத்து அல்ல" எனத் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்து கருத்து தெரிவித்த நிலையில், தற்போது ஆம் ஆத்மி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

    • பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக என்பது தற்போது வரை தெரியவில்லை.
    • பாரத் என்ற வார்த்தை அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது.

    குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி20 உச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு? செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான மசோதா வருகிற 18-ந்தேதி கூட உள்ள பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, பெரும்பான்மை இருப்பதால் பா.ஜ.க எதையும் செய்ய நினைக்கிறது. பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக என்பது தற்போது வரை தெரியவில்லை என்றார்.

    மேலும், பாரத் என்ற வார்த்தை அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு என்று கூற முடியாது. அதே நேரம் இந்தியா என்ற பெயரை உச்சரிக்க பா.ஜ.க. பயப்படுகிறது என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

    • வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முதல் சேவையை பிரதமர் மோடி சென்னையில் நேற்று மாலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • இதையொட்டி சேலம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முதல் சேவையை பிரதமர் மோடி சென்னையில் நேற்று மாலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    சென்னை, கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முதல் சேவையை பிரதமர் மோடி சென்னையில் நேற்று மாலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் காணொளி காட்சி மூலம் நிகழ்ச்சியை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிகழ்ச்சியில் சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் கோபிநாத், மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு, பொதுச் செயலாளர் ஐ. சரவணன், மாவட்ட துணை தலைவர்கள் ரமேஷ், ராஜேந்திரன், இளைஞர் அணி மாவட்டத் தலைவர் கௌதம், இளைஞர் அணி பொதுச் செயலாளர்கள் காளிமுத்து என்ற கவுதம், கலைச் செல்வன், பொருளாளர் ராசி எஸ்.கிரிதரன் உள் பட பலர் பங்கேற்று பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    நேற்று இரவு 8.37 மணிக்கு சென்னை கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் ஜங்ஷன் முதலாவது நடை மேடைக்கு வந்தது.

    அப்போது ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.

    தொடர்ந்து சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருள் ரயிலுக்கு பச்சைக்கொடி காண்பித்து கோவைக்கு உற்சாகமாக வழி அனுப்பி வைத்தார்.

    முன்னதாக சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் கட்சியினர் மேள தாளங்கள் முழங்க மலர் தூவி ரயிலை வரவேற்றனர்.5 நிமிடம் சேலத்தில் நின்ற நிலையில் இரவு 8. 43 மணிக்கு கோவைக்கு புறப்பட்டு சென்றது.

    சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காண்பதற்காக 100 க்கு மேற்பட்ட பொதுமக்கள் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.இதையொட்டி கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில்

    வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு

    ×