search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மும்பை போலீஸ்"

    • வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீரர்கள் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
    • கிரிக்கெட் வீரர்களைக் காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பை தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ம் தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    டி20 உலகக் கோப்பையை 17 ஆண்டுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.

    இதற்கிடையே, வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களைக் காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது. வெற்றி பேரணி மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் மும்பை கடற்கரையில் 7 முக்கிய சாலைகள் மூடப்பட்டன. 10 இடங்களில் வாகன நிறுத்தத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    இரவு 7. 30 மணிக்கு வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கோப்பையுடன் பேரணியாக சென்றனர். பின் வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது.

    இந்நிலையில், இந்த அணிவகுப்பு பேரணியை வெற்றிகரமாக நடத்த உதவி புரிந்த மும்பை போலீசுக்கு விராட் கோலி நன்றி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, கோலி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மும்பை போலீசின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஆழ்ந்த மரியாதை மற்றும் மனமார்ந்த நன்றி. இந்தியாவின் வெற்றி அணிவகுப்பின் போது ஒரு அற்புதமான வேலை செய்ததற்காக மும்பை கமிஷனருக்கும் நன்றிகள். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் சேவை மிகவும் பாராட்டப்படுகிறது. ஜெய் ஹிந்த் என பதிவிட்டுள்ளார்.

    • கப்பலில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது.
    • கைது செய்யப்பட்டவர்கள் ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சுபத்ரா போர் கப்பல்களில் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

    செங்கடல் பகுதியில் பயணிக்கும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், மற்றொருபுறம் சோமாலியா கடல் பகுதியில் செல்லும் சரக்கு மற்றும் மீன்பிடி கப்பல்களை அந்த நாட்டின் கடற்கொள்ளையர்கள் கடத்தி செல்வது தொடர்கதையாகி உள்ளது. இப்படி தாக்குதலுக்கு மற்றும் கடத்தலுக்கு உள்ளாகும் கப்பல்களை மீட்க இந்திய கடற்படை பெரிதும் உதவி வருகிறது.

    இந்நிலையில் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்தப்பட்ட வங்காளதேச நாட்டுக்கு சொந்தமான 'எம்.வி.ருயென்' என்ற சரக்கு கப்பல் கடந்த 14-ந் தேதி சோமாலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் பயணித்துக்கொண்டிருப்பது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அந்த கப்பலின் நடவடிக்கைகளை இந்திய போர்க்கப்பல் கண்காணித்தது. இதில் அந்த கப்பலில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் பிற கப்பல்களை கடத்துவதற்கு கொள்ளையர்கள் அந்த கப்பலை பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது.

    இதனையடுத்து, 15-ந் தேதி 'எம்.வி.ருயென்' சரக்கு கப்பல் இந்திய போர்க்கப்பலால் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் அதில் இருந்த கொள்ளையர்களை சரணடையுமாறு இந்திய கடற்படையினர் எச்சரித்தனர். அவர்கள் கேட்காமல் சரக்கு கப்பலில் இருந்து இந்திய போர்க்கப்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

    அதைத்தொடர்ந்து, சர்வதேச சட்டத்தின்படி தற்காப்புக்காகவும், கடற்கொள்ளையர்களை எதிர்ப்பதற்கும் இந்திய கடற்படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இந்திய விமானப்படையினரும் தாக்குதலில் கடற்படையினருக்கு உதவி செய்தனர். சுமாா் 40 மணி நேர சண்டைக்கு பிறகு சரக்கு கப்பலில் இருந்த 35 கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். கப்பலில் பிணைய கைதிகளாக பிடிக்கப்பட்டு இருந்த 17 சிப்பந்திகளும் மீட்கப்பட்டனர்.

    இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சுபத்ரா போர் கப்பல்களில் இந்தியா அழைத்து வரப்பட்டனர். கடற்கொள்ளையர்கள் மும்பை அழைத்து வரப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இதுகுறித்து கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஐ.என்.எஸ். கொல்கத்தா போர் கப்பல், 35 கடற்கொள்ளையர்களுடன் மார்ச் 23-ந் தேதி (நேற்று) மும்பை வந்தது. அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் உள்ளூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவின் மிக நீண்ட பாலம் மற்றும் மிக நீண்ட கடல் பாலம் என்ற பெருமையை அடல் சேது பெற்றது.
    • இந்தப் பாலத்தில் செல்லும் மக்கள் வாகனங்களை நிறுத்தி புகைப்படம், வீடியோ எடுத்தவண்ணம் உள்ளனர்.

    மும்பை:

    மும்பை-நவி மும்பை இடையே அமைக்கப்பட்டுள்ள அடல் சேது பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தை பிரதமர் மோடி திறந்துவைத்த சில நாட்களில் அப்பகுதி மக்களுக்கு சுற்றுலா பகுதியாக மாறியுள்ளது.

    இந்தப் பாலம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அந்தப் பாலத்தில் பொதுமக்கள் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுப்பதற்காக தங்கள் வாகனங்களை நிறுத்துவதை போலீசார் கவனித்தனர். இதுதொடர்பாக பல புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. பொதுமக்களின் பிக்னிக் ஸ்பாட் ஆக மாறத்தொடங்கியதால் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உருவானது.

    இந்நிலையில், பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மும்பை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அடல் சேது பாலம் நிச்சயமாக பார்த்து ரசிக்கும் அளவிற்கு மதிப்புமிக்கது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் வாகனங்களை பாலத்தில் நிறுத்துவதும், புகைப்படங்கள் எடுப்பதும் சட்டவிரோதமானது. பாலத்தில் வாகனங்களை நிறுத்தும் பயணிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படும் என தனது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளது. மேலும், 21.8 கி.மீ. நீளமுள்ள அடல் சேது பாலம் பிக்னிக் ஸ்பாட் அல்ல என்றும் அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளது.

    இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், டிராக்டர்கள், மெதுவாக நகரும் வாகனங்கள் ஆகியவை இந்தப் பாலத்தில் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேம்பாலம் ஒன்றின் அருகில் சென்று கொண்டிருந்த பேருந்து பிரேக்-டவுன் ஆகி நின்றுவிட்டது.
    • சம்பவ காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    சமூக வலைதளங்களில் காவல் துறை சார்பில் வெளியிடப்படும் பதிவுகள் மக்களுக்கு உதவியாகவும், எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், முக்கிய தகவல்களை வழங்குபவையாகவும் இருந்து வருகின்றன. சமயங்களில் காவல் துறை சார்பில் பகிரப்படும் பதிவுகள் பலரின் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், மும்பை போலீஸ் சார்பில் பகிரப்பட்டு இருக்கும் வீடியோ பேசுபொருளாகி இருக்கிறது.

    மும்பை போலீஸ் சார்பில் டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள வீடியோவில், மாநகர பேருந்தை பொது மக்கள் ஒன்றிணைந்து தள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேம்பாலம் ஒன்றின் அருகில் சென்று கொண்டிருந்த போது மும்பை மாநகர பேருந்து பிரேக்-டவுன் ஆகி நடுவழியில் நின்றுவிட்டது. பின் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பேருந்தை தள்ளினர். இந்த சம்பவ காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இந்த வீடியோவினை பயனர் ஒருவர் தனது டுவிட்டர் அக்கவுண்டில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இதனை ரிடுவிட் செய்த மும்பை போலீஸ், "மும்பை கண நேர சம்பவங்கள் - Ctrl+S! மும்பையின் பலம் ஒவ்வொரு மும்பைவாசியின் கைகளில் உள்ளது. காக்கியில் உள்ள எங்களது நண்பர் இதனை பார்த்துள்ளார்," என்று பதிவிட்டுள்ளார்.

    ×