search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபான விற்பனை"

    • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மது கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மதுவிற்பனை ஜோராக நடந்தது.
    • பணம் செலுத்த முடியவில்லை என்றால் ஜி-பே மூலம் பணம் செலுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுதான் ஆச்சரியமான விஷயம்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காமுபிள்ளைசத்திரம், புதுகோடாங்கிபட்டி, கோழிபண்ணை, வீரக்கல், கோடிக்காமன்வாடி உள்ளிட்ட பகுதியில் 5 டாஸ்மாக் மது கடைகள் உள்ளது.

    இக்கடையில் மதுபான பார்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் இங்கு 24 மணி நேரமும், ஒரு பாட்டிலுக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை கூடுதல் விலை வைத்து மது விற்பனை இரவு பகலாக படுஜோராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மது கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தப்பகுதிகளில் உள்ள அரசு டாஸ்மாக் மது கடை அருகிலே தனிநபர் சிலர் மதுபானங்களை விற்பனை செய்தனர்.

    முதல் நாளே டாஸ்மாக் மது கடையில் விற்பனையாளர்கள் துணையுடன் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டு நேற்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். மேலும் வழக்கம் போல் ஒவ்வொரு நாளும் மதுக்கடைகள் மூடிய பிறகும் மதுக்கடை திறப்பதற்கு முன்பும் இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகிலே கூடுதல் விலைக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது.

    பணம் செலுத்த முடியவில்லை என்றால் ஜி-பே மூலம் பணம் செலுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுதான் ஆச்சரியமான விஷயம்.

    இதுகுறித்து இப்பதி பொதுமக்கள் பலமுறை போலீசாருக்கு புகார் செய்தும் பெயரளவில் மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு டாஸ்மார்க் மது கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசு உத்தரவை மதிக்காமல் இந்தப் பகுதியில் மது விற்பனை படு ஜோராக நடைபெற்றது. குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது.

    புதுகோடாங்கிபட்டி அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில் திறந்த வெளியில் சாலை ஓரம் மது விற்பனை நடைபெற்றது. காமுபிள்ளைசத்திரம் டாஸ்மாக் மதுக்கடைஅருகே செம்பட்டி - நிலக்கோட்டை சாலையில் சாலை ஓரம் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்தனர். விடுமுறை நாட்களில் மது விற்பனை நடைபெற்று வருவதால் பெண்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவர்கள், முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் இந்த வழியில் செல்லும்போது பெரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

    எனவே இதுபோன்ற மதுவிற்பனையை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டது.
    • அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    76-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டது. இந்நிலையில் பண்ருட்டி பகுதிகளில் மதுபானம் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து பண்ருட்டி தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது புதுப்பேட்டை அடுத்த சிறுவத்தூர் பகுதியில் வா லிபர் ஒருவர் மதுபானங்களை விற்பனை செய்து வந்தார். அவரை மடக்கி பிடித்த போலீசார், அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன் சக்திவேல் (வயது 32) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த தனிப்படை போலீசார் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஓப்படைத்தனர்.

    • விற்பனைக்காக வைத்திருந்த சாராய பாக்கெட்டுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன.
    • டாஸ்மாக் கடை நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். 38-க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி, புதுவை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து மரக்காணம் சுற்று வட்டார பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த சாராய பாக்கெட்டுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன.

    குறிப்பாக கிராமங்களில் சாராய பாக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட வர்களில் பெரும்பாலா னோர். தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு வெளியூருக்கு சென்று விட்டனர். இதனால் மரக்காணம் பகுதியில் சாராய விற்பனை அறவே ஒழிந்தது என்றே கூறலாம். இந்நிலையில் மதுப்பிரி யர்கள் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சென்று மது அருந்து கின்றனர். டாஸ்மாக் கடை நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்த கடை திறந்தது முதல் மூடும் வரையில் மது பிரி யர்கள் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர். வழக்கத்தை விட 3 மடங்கு கூடுதலாக மதுபாட்டில்கள் விற்பனை யாவதாக டாஸ்மாக் ஊழி யர்கள் கூறினார்கள்.

    • தொழிற்சாலைகளில் இருந்து அரசு குடோனுக்கு செல்லாமல் நேரடியாக கடைகளுக்கு மதுபானங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
    • மொத்த விற்பனையில் 40 சதவீதம் வரை கணக்கில் காட்டப்படவில்லை.

    ராய்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மாநில வாணிப கழகம் வாயிலாக மதுபான கொள்முதல், விற்பனை நடைபெறுகிறது.

    இதன் கட்டுப்பாட்டில் 800 கடைகள் உள்ளன. இங்கு மதுபான விற்பனையில் பெரும் மோசடி நடைபெற்று உள்ளதாக வருமானவரித்துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் நடைபெற்ற பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

    இந்த வழக்கில் மாநில தொழில் மற்றும் வர்த்தகதுறை செயலாளராக உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அனில் துதேஜா உள்ளிட்ட சிலர் மீது புகார் கூறப்பட்டது.

    இந்நிலையில் மதுபான தொழில் அதிபர் அன்வர் தேபார் என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவரை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வழக்கு விசாரணையின் போது அமலாக்க துறை சார்பில் கூறப்பட்டுள்ள தாவது:-

    கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022 வரையிலான கால கட்டத்தில் மாநிலத்தில் மொத்த மது விற்பனையில் 30 முதல் 40 சதவீதம் வரை சட்ட விரோதமாக நடத்தப்பட்டுள்ளது.

    மது பானங்களை விற்பதற்காக குறிப்பிடத்தக்க கமிஷன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனையில் 40 சதவீதம் வரை கணக்கில் காட்டப்படவில்லை. அதாவது தொழிற்சாலை களில் இருந்து அரசு குடோனுக்கு செல்லாமல் நேரடியாக கடைகளுக்கு மதுபானங்கள் அனுப்பப்பட்டுள்ளது.

    இதற்கு வருமான வரி, கலால் வரி போன்றவை செலுத்த வேண்டியது இல்லை. அந்த வகையில் 2 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி நடைபெற்று உள்ளது. இதற்கு மூளையாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அனில் துதேஜா செயல்பட்டுள்ளார்.

    தொழில் அதிபர் அன்வர் தேபார் இந்த மோசடி திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.

    இவர் காங்கிரசை சேர்ந்த ராய்பூர் மேயர் அய்ஜாஸ் தேபாரின் சகோதரர் ஆவார். மோசடியில் கிடைத்த பணத்தை அன்வர் தேபார், அனில் துதேஜா ஆகியோர் மற்ற அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளுக்கு பிரித்து கொடுத்துள்ளனர். இந்த பணம் தேர்தலுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறுஅதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமலாக்கத்துறையின் விசாரணையில் வெளியாகி உள்ள இந்த தகவல்கள் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×