என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உலக கோப்பை 2023"
- ஒடிசாவை சேர்ந்த சுதா்சன் பட்நாயக் பிரபல மணல் சிற்ப கலைஞா்.
- இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். சிறந்த மணல் சிற்ப கலைஞரான இவர், உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. பல்வேறு பிரபலங்கள் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தொிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டி, மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தொிவித்துள்ளாா். மணல் சிற்பத்தை செய்துமுடிக்க சுமார் 6 மணி நேரம் ஆனது. இதற்காக 500 கிண்ணங்களையும், 300 கிரிக்கெட் பந்துகளையும் பயன்படுத்தியுள்ளார்.
- இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின் போது ரசிகர் ஒருவர் ஸ்விக்கியில் 240 ஊதுபத்திகளை ஆர்டர் செய்தது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
- டி.வி.முன்பு ஒரு தட்டில் உருளைக்கிழங்கில் ஊதுபத்திகளை கொலுத்தி வைத்துள்ள காட்சி பயனர்களை கவர்ந்தது.
இந்திய கிரிக்கெட் அணி 3-வது முறையாக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என நாடு முழுவதும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய ஆட்டத்தின் போது ரசிகர் ஒருவர் ஸ்விக்கியில் 240 ஊதுபத்திகளை ஆர்டர் செய்தது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
தானேயை சேர்ந்த அந்த ரசிகர் ஸ்விக்கியில் 240 ஊதுபத்திகளை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டரை வழங்கிய நபர் இதுதொடர்பாக ஒரு படத்தை ஸ்விக்கி தளத்தில் பதிவிட்டார். அதில் இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் போட்டியின் போது டி.வி.முன்பு ஒரு தட்டில் உருளைக்கிழங்கில் ஊதுபத்திகளை கொலுத்தி வைத்துள்ள காட்சி பயனர்களை கவர்ந்தது.
அதனுடான பதிவில், நாங்கள் உங்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
- டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் சதமடித்து அசத்தினார்.
கொல்கத்தா:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 2-வது அரையிறுதி போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் மில்லர் சதமடித்து அசத்தினார். அவர் 101 ரன்னில் அவுட்டானார். கிளாசன் 47 ரன்னில் அவுட்டானார்.
ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டும், ஹேசில்வுட், ஹெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 62 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 30 ரன்னும், வார்னர் 29 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
கடைசியில் போராடிய இங்கிலிஸ் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இறுதியில், ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
வரும் ஞாயிறன்று நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இந்திய அணியை எதிர்கொள்கிறது.
- ஒடிசாவை சேர்ந்த சுதா்சன் பட்நாயக் பிரபல மணல் சிற்ப கலைஞா்.
- அரையிறுதியில் இந்தியா வெற்றிபெற மணல் சிற்பம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். சிறந்த மணல் சிற்ப கலைஞரான இவர், உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பல்வேறு பிரபலங்கள் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தொிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா வெற்றிபெற வேண்டி, மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தொிவித்துள்ளாா்.
- உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி வருகிறார்.
- மொத்தம் 565 ரன்கள் எடுத்துள்ள அவர் உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்களில் ஒருவராக உள்ளார்.
இந்தியாவில் நடந்து வரும் உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி வருகிறார். லீக் போட்டிகளின் முடிவில் 565 ரன்கள் எடுத்துள்ள அவர், இந்த உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்களில் ஒருவராக உள்ளார்.
23 வயதிலேயே ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையும் அவர் முறியடித்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திராவின் குடும்பம் பெங்களூருவில் இருந்து நியூசிலாந்து சென்றதால், அந்நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட துவங்கி தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட துவங்கியுள்ளார்.
இந்திய வீரர்களான ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பெயர்களைக் கலந்து ரச்சின் ரவீந்திரா என அவரது பெற்றோர் பெயர் சூட்டியதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோர் பெயரை கலந்து தமது மகனுக்கு பெயர் சூட்டவில்லை என ரச்சின் ரவீந்திரா தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ரவ் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
ரச்சின் பிறந்தபோது என்னுடைய மனைவி தான் இந்தப் பெயரை பரிந்துரைத்தார். அதைப்பற்றி மேற்கொண்டு விவாதிப்பதற்கு நாங்கள் நிறைய நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. அந்தப் பெயர் நன்றாக, எளிதாக, சிறியதாக இருந்ததால் நாங்கள் அதை வைக்கலாம் என்று முடிவெடுத்தோம். சில வருடங்கள் கழித்துதான் அது ராகுல் மற்றும் சச்சின் ஆகியோரின் பெயரைக் கொண்ட கலவையாக இருப்பதை நாங்களே உணர்ந்தோம்.
ரச்சின் கிரிக்கெட்டராக வரவேண்டும் என்பது போன்ற எண்ணத்துடன் நாங்கள் அவருக்கு இந்தப் பெயரை சூட்டவில்லை என தெரிவித்தார்.
- மும்பையில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
- கொல்கத்தாவில் நாளை மறுநாள் நடைபெறும் 2-வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன.
மும்பை:
இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்திய அணியும், 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.
கொல்கத்தாவில் நாளை மறுநாள் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா மோதுகின்றன.
இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள அரையிறுதி போட்டிகள் மற்றும் நவம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டி ஆகியவை மழையின் காரணமாக தடைபெற நேரிட்டால், ரிசர்வ் டே முறையில் அடுத்த நாட்களில் போட்டிகள் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
உலக கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 33 கோடி பரிசாக வழங்கப்படும். இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 16.5 கோடி பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- உலக கோப்பை முதல் அரையிறுதி போட்டி மும்பையில் நாளை நடைபெறுகிறது.
- வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
மும்பை:
உலக கோப்பை முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதற்கிடையே, அரையிறுதிப் போட்டியில் பங்கேற்க இன்று மதியம் இந்திய அணி மும்பை வந்தடைந்தது.
இந்நிலையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா மும்பையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியா முதல் உலக கோப்பையை (1983) வென்றபோது பாதி பேர் பிறக்கவில்லை. அதன்பின், இரண்டாவது உலக கோப்பையை வென்றபோது (2011) பாதி பேர் கிரிக்கெட் விளையாடவில்லை.
எங்களைப் பொறுத்தவரை தற்போதைய வீரர்களின் மனநிலை, இன்று என்ன நடக்கக்கூடும் என்பதில் மிகவும் அதிகமாக உள்ளது.
கடந்த உலக கோப்பை அல்லது முதல் உலக கோப்பையை நாங்கள் எப்படி வென்றோம் என்பதைப் பற்றி அவர்கள் பேசுவதை நான் பார்க்கவில்லை.
தற்போது எவ்வாறு சிறந்து விளங்கலாம், தாங்கள் மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் என்ன என்பதில் அவர்களின் கவனம் செலுத்தப்படுகிறது. எங்கள் கவனம் எப்போதும் நிகழ்காலத்தில் இருக்கும். முதல் ஆட்டத்தில் இருந்து, இன்று வெற்றி பெறுவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். கடந்த காலத்தில் நடந்தது கடந்த காலம். இன்றும் நாளையும் நீங்கள் என்ன செய்யலாம் என்பதைப் பற்றிதான் நாங்கள் பேசுகிறோம். 10 ஆண்டுக்கு முன் நடந்தது பற்றியோ அல்லது கடந்த உலக கோப்பை பற்றியோ அதிக விவாதமோ, பேச்சோ இல்லை என்று நினைக்கிறேன்.
எப்படி விளையாட விரும்புகிறார்கள் என்பதன் அடிப்படையில் நியூசிலாந்து மிகவும் ஒழுக்கமான அணியாக இருக்கலாம். அவர்கள் கிரிக்கெட்டை மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடுகிறார்கள்.
கடந்த 6-7 ஆண்டுகளில், 2015 முதல் அனைத்து ஐசிசி போட்டிகளிலும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் அவர்கள் பல ஆண்டுகளாக மிகவும் சீராக விளையாடி வருகின்றனர். அவர்கள் எப்படி கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
அனைத்து அணிகளின் பலம் எங்கே இருக்கிறது, பலவீனம் எங்கே இருக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அதன் அடிப்படையில் அங்கு சென்று விளையாட நாங்கள் முயற்சிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
- உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்துவருகிறது.
- பெங்களூருவில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
பெங்களூரு:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் உலக கோப்பை தொடரின் 45-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.
- கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
- டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்து, முதலில் களமிறங்குகிறது.
கொல்கத்தா:
உலக கோப்பை தொடரின் 44-வது லீக் ஆட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணி முதலில் களமிறங்குகிறது.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதிபெறுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- புனேவில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
- டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
புனே:
உலக கோப்பை தொடரின் 43வது லீக் ஆட்டம் புனேவில் இன்று நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, வங்காளதேசம் முதலில் களமிறங்குகிறது.
ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 244 ரன்களை எடுத்தது.
அகமதாபாத்:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 42வது லீக் ஆட்டம் குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
ரஹ்மத் ஷா மற்றும் நூர் தலா 26 ரன்னும், குர்பாஸ் 25 ரன்னும் எடுத்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஓமர்சாய் பொறுப்புடன் ஆடி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய இலங்கை 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய நியூசிலாந்து 172 ரன்களை எடுத்து வென்றது.
பெங்களூரு:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இலங்கை அணி 46.4 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் குசால் பெராரா அதிரடியாக ஆடி 25 பந்தில் 2 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 51 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் போராடிய தீக்ஷனா 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து அணி சார்பில் போல்ட் 3 விக்கெட்டும், பெர்குசன், சான்ட்னர், ரவீந்திரா ஆகியோர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா இருவரும் அதிரடியாக ஆடினர்.
முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்த நிலையில் கான்வே 45 ரன்னில் அவுட்டானார். சிறிது நேரத்தில் ரவீந்திரா 42 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சனுடன், டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். 3வது விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்த நிலையில் வில்லியம்சன் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். டேரில் மிட்செல் 43 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், நியூசிலாந்து அணி 23.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்