search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வராகி அம்மன்"

    • அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவது வழக்கம்.
    • வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மூங்கில்பட்டி கிராமத்தில் சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவில் உள்பிரகாரத்தில் வனவாராஹி அம்மன் சன்னதி உள்ளது. இங்கு தினமும் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவது வழக்கம்.

    குறிப்பாக பஞ்சமி திதியில் அம்மனுக்கு அதிகாலை முதல் நடக்கும் சிறப்பு பூஜையில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதன்படி நேற்று நாகபஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    அப்போது பக்தர்கள் கொடுத்த பிரசாத பாலை நைவேதியம் செய்வதற்காக கரண்டியில் பாலை எடுத்துச் சென்றபோது அம்மன் அதனை குடித்தது. இதனை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    தொடர்ந்து கரண்டியில் பாலை எடுத்து அம்மன் வாய் அருகே எடுத்துச் சென்றபோது அது முற்றிலும் காலியானது. இதனை பக்தர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர். தொடர்ந்து ஒவ்வொரு பக்தராக தாங்கள் கொண்டு வந்த பாலை அம்மனுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். இதனால் அவர்கள் பக்தி பரவசத்தால் உற்சாகம் அடைந்தனர்.

    • பஞ்சமி தினத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கடலூர்:

    திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வராகி அம்மனுக்கு பஞ்சமி தினத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். தேய்பிறை பஞ்சமி தினமான நேற்று பஞ்சமி தின சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதனை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை விசேஷ பூஜை சிறப்பு அலங்காரம் ஆகியவை செய்யப் பட்டு மகா தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உற்சவ தாரர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்தனர்.

    • வராகி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி தொடங்கியது.
    • தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் திவான் பழனிவேல் பாண்டியன் செய்து வருகிறார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோச மங்கையில் மிகப் பழமையான சிவன்கோலிலான மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோவில் உள்ளது. இதன் வடக்கு பகுதியில் வராஹி அம்மனுக்கு தனி கோவில் உள்ளது.

    இதிலுள்ள அம்மன் சுயம்புவாக உருவாகியதால் ஒற்றைக்கல்லில் வடிவ மைக்கப் பட்டுள்ளது.நாடு முழுவதும் ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் வரக்கூடிய முதல் வளர்பிறையில் வராஹி அம்மன் கோவில்களில் ஆஷாட நவராத்திரி தொடங்கி 9 நாட்கள் கொண்டா டப்படுவது வழக்கம்.

    அதன்படி திருஉத்தர கோசமங்கையில் நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு அதிகாலை, நண்பகல், இரவு என 3 முறை பால், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட 18 வகை பொருட்களால் அபிஷே கமும், புதிய அலங்காரமும் செய்யப்பட்டது.

    இதுபோன்று இனிப்பு அலங்காரம், மஞ்சள் அலங்காரம், குங்குமம் அலங்காரம், தேங்காய்பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், காய்கனி உள்ளிட்ட அலங்காரங்கள் என ஒவ்வொரு நாட்களாக 8 நாட்களும், 9வது நாளான 26ம் தேதி வளையல், வடை மற்றும் மலர் அலங்காரமும் செய்யப்படும்.

    இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் திவான் பழனிவேல் பாண்டியன் செய்து வருகிறார்.

    ×