என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆய்வாளர்கள்"
- கடந்த 12 மாதங்களில் உலகில் உள்ள குழந்தைகளில் எட்டில் ஒருவர் ஆன்லைன் மூலம் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.
- விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ள இந்த பிரச்சனை உலகளாவிய தொற்றுநோயாகப் பரவி வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
உலக அளவில் ஒரு வருட காலத்தில் 300 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ஆன்லைனில் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றனர் என்று அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது. ஸ்காட்லாந்தின் எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கடந்த 12 மாதங்களில் உலகில் உள்ள குழந்தைகளில் எட்டில் ஒருவர் ஆன்லைன் மூலம் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.
குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி ஆபாசப் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்தல்,செக்ஸ்டிங் (ஆபாச உரையாடல்) செய்தல், பாலியல் ரீதியான செயல்களை செய்ய வற்புறுத்துதல், டீப்பேக் வீடியோக்கள் மற்றும் படங்களை AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி பிளாக்மெயில் செய்து தங்களின் பேச்சுக்கு இணங்க வைத்தல் என எண்ணிலடங்கா குற்றங்கள் சிறுவர் சிறுமிகளுக்கு எதிராக அதிகம் அரங்கேறத் தொடங்கியுள்ளன.
மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் தங்களை இளைஞர்கள் போல் காட்டிக்கொண்டு சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர், சிறுமிகளை ஏமாற்றுகிறார். உலகம் முழுவதும் இந்த வகை குற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் முக்கியமாக உலகின் ராட்சத பொருளாதாரத்தைக் கொண்ட நாடான அமெரிக்காவில் அதிகமாக இந்த குற்றங்கள் நடந்துவருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ள இந்த பிரச்சனை உலகளாவிய தொற்றுநோயாகப் பரவி வருவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
- தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கால்நடை ஆய்வாளர் பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்துராஜா தலைமை தாங்கினார்.
கோட்ட செயலாளர்கள் ஜெகதீஷ், டோனிபிரிட்மேன், சந்துரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இணை செயலாளர் சாமி. கோவிந்தராஜ் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் தமிழ்வாணன், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கோதண்ட பாணி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கால்நடை ஆய்வாளர் பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி6-வது ஊதியக்குழுவில் வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முடிவில் மாவட்ட மகளிரணி செயலாளர் அந்தோணிஜெயந்தி நன்றி கூறினார்.
- திருச்செங்கோடு - நாமக்கல் பிரதான சாலையில் மாணிக்கம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் திருச்செங்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர்.
- அப்போது மாணிக்கம்பாளை யத்தில் பஸ்களை நிறுத்தி பயணி களை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்கள் மற்றும் விபத்து நடைபெற வாய்ப்புள்ள இடங்களை ஆய்வு செய்து விபத்துக்களை தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஆய்வு
இதையடுத்து, திருச்செங்கோடு - நாமக்கல் பிரதான சாலையில் மாணிக்கம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் திருச்செங்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர்.
இங்கு விபத்துகளை தடுக்கும் பொருட்டு சாலையின் இரு மார்க்கத்திலும் சிக்னல் விளக்குகள், சாலையின் இரு மார்க்கத்திலும் உரிய இடங்களில் ரம்பிள் கீற்றுக்கள், கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பரிந்துரை செய்தனர். இதனிடையே, மாணிக்கம்பாளை யம் பஸ் நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று செல்வதில்லை என்ற புகாரை தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் பாமபிரியா, வேலகவுண்டம்பட்டி போலீசார், நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகி செந்தில்குமார் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
எச்சரிக்கை
அப்போது மாணிக்கம்பாளை யத்தில் பஸ்களை நிறுத்தி பயணி களை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். அவ்வாறு ஏற்றி இறக்கி செல்லாத பஸ் ஓட்டுநர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
- கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக வாழ்விடப்பகுதிகளை கண்டறிய திருக்கோளூரில் அகழாய்வு பணிகள் தொடங்கியது.
- சுடுமண் சிலைகள், கண்ணாடி வளையல் துண்டுகள், சீன பானை ஓடுகள் என 324 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செய்துங்கநல்லூர்:
கடந்த 2020-ம் ஆண்டு நடந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.
இதையடுத்து ஆதிச்சநல்லூரில் முதல்கட்டமாக அகழாய்வு பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து அருங்காட்சியக பணிகளும் நடந்து வருகிறது.
இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய ஆதிச்சநல்லூரை சுற்றியுள்ள திருக்கோளூர், அகரம், கொங்கராயகுறிச்சி, ஆதிச்சநல்லூர், கருங்குளம் ஆகிய 5 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தனர்.
இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக வாழ்விடப்பகுதிகளை கண்டறிய திருக்கோளூரில் அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்த அகழாய்வு பணியில் தற்போது வரை 324 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகழாய்வு பணியில் இடைக்கால நாணயங்கள், வெண்கல வளையல், வெண்கல மோதிரம், கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், சுடுமண் சிலைகள், கண்ணாடி வளையல் துண்டுகள், சீன பானை ஓடுகள் என 324 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வல்லநாடு அருகே உள்ள அகரம் கிராமத்தில் வாழ்விடப் பகுதிகளை கண்டறியும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்