search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமை பயிற்சியாளர்"

    • ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.
    • ரிக்கி பாண்டிங் அல்லது பிளமிங் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இதனால் ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியாளர் பதவி ஜூன் மாதத்திற்குப் பிறகு நீட்டிக்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது.

    ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பம் செய்ய விரும்பவில்லை. சில முன்னாள் வீரர்கள் அவரை வலியுறுத்திய போதிலும் மறுத்து விட்டார்.

    விவிஎஸ் லட்சுமண் இந்திய அணியில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இல்லாதபோது பயிற்சியாளராக செயல்பட்டார். மேலும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ளார். இதனால் விவிஎஸ் லட்சுமண் விண்ணப்பம் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் விவிஎஸ் லட்சுமணும் விண்ணப்பிக்க விரும்பவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரில் ஒருவர் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பிளமிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும், ரிக்கி பாண்டிங் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராகவும் உள்ளார்.

    • தலைமை பயிற்சியாளர் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
    • விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை வரும் 27-ம் தேதி வரை அனுப்பலாம் என பிசிசிஐ தெரிவித்தது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. ஆனாலும் ஜூன் 1-ம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

    டிராவிட்டின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பி.சி.சி.ஐ. தற்போது தொடங்கியது.

    இதற்கிடையே, தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை வரும் 27-ம் தேதி வரை அனுப்பலாம் என பி.சி.சி.ஐ. நேற்று தெரிவித்தது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 60 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், குறைந்தபட்சம் 30 டெஸ்ட் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கவேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளது.

    புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுபவர் ஜூலை 1 முதல் பொறுப்பேற்பார் என்றும், அவரது பதவிக்காலம் டிசம்பர் 31, 2027 அன்று முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அல்லது நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரில் ஒருவருக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

    • தலைமை பயிற்சியாளர் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
    • விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பி.சி.சி.ஐ.க்கு வரும் 27-ம் தேதி வரை அனுப்பலாம்.

    மும்பை:

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. ஆனாலும் ஜூன் 1-ம் தேதி தொடங்கும் டி20 உலகக் கோப்பை போட்டியை கருத்தில் கொண்டு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

    இதற்கிடையே, டிராவிட் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடியவடைய உள்ள நிலையில் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பி.சி.சி.ஐ. தற்போது தொடங்கி உள்ளது.

    இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பி.சி.சி.ஐ.க்கு வரும் 27-ம் தேதி வரை அனுப்பலாம் என தெரிவித்துள்ளது.

    மேலும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 60 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், குறைந்தபட்சம் 30 டெஸ்ட் அல்லது 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கவேண்டும் என்ற நிபந்தனையும் விதித்துள்ளது.

    புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுபவர் ஜூலை 1 முதல் பொறுப்பேற்பார் என்றும், அவரது பதவிக்காலம் டிசம்பர் 31, 2027 அன்று முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்திய அணியுடன் கடந்த இரண்டு வருடங்கள் மறக்க முடியாதவை.
    • எனது குடும்பத்தின் தியாகங்களையும் ஆதரவையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்.

    இந்திய அணியின் பயிற்சியாளராக 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். 2 ஆண்டுகளுக்கு அவரை பி.சி.சி.ஐ ஒப்பந்தம் செய்தது. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியோடு ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவி காலம் முடிவடைந்தது.

    இதனையடுத்து அவரது பதவி காலத்தை நீட்டிக்க பிசிசிஐ விருப்பம் தெரிவித்திருந்தது. ராகுல் டிராவிட்டில் முடிவுக்காக பிசிசிஐ காத்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் நியமத்துக்கு ராகுல் டிராவிட் தற்போது சரி என தெரிவித்துள்ளார். மேலும் விக்ரம் ரத்தோர், டி திலீப் மற்றும் பராஸ் மாம்ப்ரே ஆகியோர் இந்திய அணியில் தொடருவார்கள்.

    இது குறித்து ராகுல் டிராவிட் கூறியதாவது:- 

    இந்திய அணியுடன் கடந்த இரண்டு வருடங்கள் மறக்க முடியாதவை. நாங்கள் தோல்வியையும் வெற்றியையும் கண்டிருக்கிறோம். இந்த பயணம் முழுவதும், குழுவிற்குள் இருந்த ஆதரவும் தோழமையும் தனித்துவமானது. டிரஸ்ஸிங் ரூமில் நாங்கள் அமைத்துள்ள கலாச்சாரத்தைப் பற்றி நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.

    இந்த காலகட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்ததற்காகவும், எனது பார்வையை ஆதரித்ததற்காகவும், ஆதரவை வழங்கியதற்காகவும் பிசிசிஐ மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எனது குடும்பத்தின் தியாகங்களையும் ஆதரவையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். உலகக் கோப்பைக்குப் பிறகு நாங்கள் புதிய சவால்களை சந்திக்கும் போது, சிறந்ததைத் தொடர நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆர்சிபி பயிற்சியாளர் மைக் ஹெசன் நீக்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்தது.
    • இவரின் ஒப்பந்தம் இந்த மாத இறுதியுடன் முடிவடைவதால், அதன்பின் புதிய பயிற்சியாளரை நியமிக்க ஆர்சிபி நிர்வாகம் பரிசீலித்து வந்தது.

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாத அணிகளுள் பெங்களூரு அணியும் ஒன்று. இந்த அணியின் பயிற்சியாளராக கடந்த 2019-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தவர் மைக் ஹெசன். இவரது தலைமையின் கீழ் ஆர்சிபி அணி தொடர்ச்சியாக 3 முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியால் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. கடந்த முறை அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாததால் அந்த அணி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 16 ஆண்டுகளாக ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாதது, அந்த அணி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


    இதனை தொடர்ந்து ஆர்சிபி பயிற்சியாளர் மைக் ஹெசன் நீக்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்தது. இவரின் ஒப்பந்தம் இந்த மாத இறுதியுடன் முடிவடைவதால், அதன்பின் புதிய பயிற்சியாளரை நியமிக்க ஆர்சிபி நிர்வாகம் பரிசீலித்து வந்தது.

    இந்த நிலையில் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ப்ளவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆர்சிபி அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது. இவருடன் மூன்று ஆண்டுகள் வரை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    • அவர் ஏற்கனவே 2019-20-ம் ஆண்டு சீசனில் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
    • 2021-22-ம் ஆண்டில் இவரது பயிற்சியின் கீழ் ஜாம்ஷெட்பூர் எப்.சி. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

    சென்னை:

    10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி செப்டம்பர் மாதம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்குகிறது. இந்த போட்டிகளில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி.யின் புதிய தலைமை பயிற்சியாளராக ஓவென் கோயல் (ஸ்காட்லாந்து) ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் நேற்று மீண்டும் நியமிக்கப்பட்டார்.

    அவர் ஏற்கனவே 2019-20-ம் ஆண்டு சீசனில் சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார். 2021-22-ம் ஆண்டில் இவரது பயிற்சியின் கீழ் ஜாம்ஷெட்பூர் எப்.சி. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இங்கிலாந்தில் பிரபலமான பிரிமீயர் லீக் கால்பந்தில் பர்ன்லி, போல்டன் ஆகிய கிளப் அணிகளுக்கும் பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார்.

    57 வயதான ஓவென் கோயல் கூறுகையில், 'சென்னை அணிக்கு மீண்டும் திரும்புவது உண்மையிலேயே உற்சாகம் தருகிறது. கடைசியாக சென்னை அணியுடன் இணைந்து பணியாற்றியது அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்த கிளப் ஏற்கனவே இரு முறை பட்டம் வென்றுள்ளது. அதே போன்று மீண்டும் சாதிக்க முயற்சிப்போம். புதிய சீசனை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்' என்றார்.

    ×