search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசியக்கோப்பை 2023"

    • பாகிஸ்தானின் 3-வது மிக மோசமான குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும்
    • பாகிஸ்தானின் 2-வது மிகப்பெரிய ரன் வித்தியாச தோல்வியாகும்

    இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் இந்தியா 356 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் 128 ரன்னில் சுருண்டது. இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் பல்வேறு மோசமான சாதனைகளில் இடம் பிடித்துள்ளது.

    1. இது இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிகளில் நான்காவது ஆகும். 2023-ல் இலங்கைக்கு எதிராக 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2007-ல் பெர்முடாவிற்கு எதிராக 257 ரன்கள் வித்தியாசத்திலும், 2008-ல் ஹாங்காங் அணிக்கெதிராக 256 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது.

    2. பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தோல்வியை ஏற்படுத்திய 2-வது அணி இந்தியா ஆகும். 2009-ல் இலங்கை 234 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியிருந்தது. 2002-ல் ஆஸ்திரேலியா 224 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. 1992ல் இங்கிலாந்து 198 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

    3. ஆசிய கோப்பையில் மிகப்பெரிய வித்தியாசத்தில் இது நான்காவது வெற்றியாகும். 2009-ல் இந்தியா ஹாங்காங் அணிக்கெதிராக 256 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2023-ல் நேபாளத்திற்கு எதிராக பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2000-ல் வங்காள தேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் 233 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

    4. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் 3-வது குறைந்த பட்சம் இதுவாகும். 1985-ல் 87 ரன்னில் சுருண்டு உள்ளது. 1997-ல் 116 ரன்னில் சுருண்டுள்ளது. தற்போது 128 ரன்னில் சுருண்டுள்ளது. 1984-ல் சார்ஜாவில் 134 ரன்னில் சுருண்டுள்ளது.

    5. பாகிஸ்தானுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இதற்கு முன் 2008-ல் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. 2017-ல் 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

    6. பாகிஸ்தானுக்கு எதிராக சிறந்த சுழற்பந்து வீச்சு. 1988-ல் அர்சத் ஆயுப் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்துள்ளார். 2005-ல் சச்சின் டெண்டுல்கர் 50 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் சாய்த்துள்ளார். தற்போது குல்தீப் யாதவ் 25 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் எடுத்துள்ளார். 1996-ல் அனில் கும்ப்ளே 12 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் எடுத்துள்ளார்.

    7. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்- தற்போது விராட் கோலி- ராகுல் 233 ரன்கள் எடுத்துள்ளனர். அதன்பின் 1996-ல் சித்து-டெண்டுல்கர் 231 ரன்கள் எடுத்துள்ளனர். 2018-ல் தவான்- ரோகித் சர்மா ஜோடி 210 ரன்கள் எடுத்துள்ளது. 2005-ல் ராகுல் டிராவிட்- சேவாக் ஜோடி 201 ரன்கள் எடுத்துள்ளது.

    8. ஆசிய கோப்பையில் இதுதான் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும். 

    • காயத்தில் இருந்து மீண்டு வந்த நிலையில், முதல் போட்டியிலேயே சதம் விளாசினார் ராகுல்
    • விராட் கோலியுடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தார்

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கு மழை அச்சுறுத்தலாக இருந்த போதிலும் நேற்று முன்தினம், நேற்று என இரண்டு நாட்களில் போட்டி நடைபெற்று முடிந்தது. இதில் இந்தியா இமாலய வெற்றியை ருசித்தது. இந்தியா 356 ரன்கள் குவித்த போதிலும், பாகிஸ்தான் 128 ரன்னிலேயே சுருண்டது.

    228 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    மழை குறுக்கிட்ட நிலையில் சிறப்பாக விளையாடி முடித்ததற்கு, மைதான ஊழியர்கள் (groundsmen) முக்கிய காரணமாகும். தார்ப்பாய்களால் மைதானத்தை மூடுவது, பின்னர் நீக்குவது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். ஒட்டுமொத்த அணியுமான நாங்கள் அவருக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டம்.

    நாங்கள் போட்டியை தொடங்கியபோது, இது சிறந்த விக்கெட் என்பது எங்களுக்கு தெரிந்தது. மழைக்கு ஏற்றபடி எங்களை மாற்றிக் கொண்டோம். கே.எல். ராகுல், விராட் கோலி ஆகிய இருவரும் அனுபவ வீரர்கள். அவர்கள் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு, அதன்பின் ஆட்டத்தை கொண்டு செல்வார்கள் என்பது நாங்கள் அறிந்ததே.

    பும்ரா சிறப்பாக பந்து வீசினார். இரண்டு வழிகளிலும் பந்தை ஸ்விங் செய்தார். கடந்த 8 முதல் 10 மாதங்கள் கடினமாக உழைத்துள்ளார். கே.எல். ராகுல் ஆடும் லெவனில் இடம்பெறுவது டாஸ் போடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் முடிவானது. காயத்திற்குப் பிறகு நீண்ட நாட்கள் கழித்து, களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது வீரரின் மனநிலை என்பதை காட்டிவிட்டார்.

    இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.

    பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தோல்வி குறித்து கூறுகையில் "காலநிலை (Weather) நமது கையில் இல்லை. இருந்த போதிலும் எங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தோம். பந்து வீச்சு, பேட்டிங் ஆகிய இரண்டிலும் எங்களது சிறந்ததை கொடுக்க முடியவில்லை.

    எங்களது பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய தொடக்க வீரர்கள் சிறப்பாக திட்டம் தீட்டி, ஆட்டத்தை தொடங்கினர். விராட் கோலி, கே.எல். ராகுல் தொடர்ந்து அதை எடுத்துச் சென்றனர். முதல் 10 ஓவர்களில் சிராஜ் அற்புதமாக பந்து வீசினார். இருந்த போதிலும் எங்களது பேட்டிங் சரியாக அமையவில்லை'' என்றார்.

    • சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்சில் 13 ஆயிரம் ரன்களை கடந்தார்
    • விராட் கோலி 267 இன்னிங்சில் கடந்து சாதனை

    இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டம் கொழும்பில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    94 பந்தில் 122 ரன்கள் விளாசிய விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த போட்டியில் சதம் அடித்து 122 ரன்கள் குவித்ததன் மூலம் விராட் கோலி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

    அவர் 98 ரன்களை தொட்டபோது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 13 ஆயிரம் ரன்களை பதிவு செய்தார். இதன்மூலம் குறைந்த இன்னிங்சில் விரைவாக 13 ஆயிரம் ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தியருந்தார். தற்போது விராட் கோலி 267 இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

    ரிக்கி பாண்டிங் 341 இன்னிங்சிலும், குமார் சங்கக்காரா 363 இன்னிங்சிலும், சனத் ஜெயசூர்யா 416 இன்னிங்சிலும் 13 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.

    மேலும், 8 ஆயிரம், 9 ஆயிரம், 10 ஆயிரம், 11 ஆயிரம், 12 ஆயிரம் ரன்களை குறைந்த இன்னிங்சில் எட்டியவர் என்ற சாதனையும் இவரது கைவசமே உள்ளது.

    மேலும், 47 சதங்கள் விளாசி சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். சச்சின் தெண்டுல்கர் 49 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    • இந்திய அணி 50 ஓவர் முடிவிங் வெறும் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்களை குவித்தனர்.
    • பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.
    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது.

    சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று பலப்பரீட்சையில் நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களா விளையாடிய ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் முறையே 56 மற்றும் 58 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.

    இவர்களை அடுத்து விராட் கோலியும், கே.எல்.ராகுலும் சதம் அடித்து விளாசினர். இதன்மூலம் இந்திய அணி 50ஓவர் முடிவிங் வெறும் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்களை குவித்தனர்.

    இதையடுத்து, 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாட தொடங்கியது.

    பாகிஸ்தான் அணியில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டால், பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.

    ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்திய நிலையில் பிசிசிஐ பாராட்டியுள்ளது.

    இதுகுறித்து பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், " இன்று (நேற்று) விராட் கோலியும், கே.எல் ராகுலும் 2 விக்கெட்டுக்கு 356 ரன்கள் குவித்து அசத்தினர். இந்தியா அபாரமாக ஸ்கோர் செய்தது மக்களின் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. அவர்கள் வெளிப்படுத்திய விதம்... இது மிகப்பெரிய சாதனை. இது எங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி. இந்திய அணிக்கு பல வாழ்த்துக்கள்" என்றார்.

    • இந்திய அணியின் சார்பில் விராட் கோலி, கே.எல்.ராகுல் இருவரும் சதம் அடித்த அசத்தினர்.
    • 32 ஓவர்களின் 128 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது.

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது.

    சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று பலப்பரீட்சையில் நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இந்த ஜோடி முறையே 56 மற்றும் 58 ரன்களை குவித்து அசத்தினர்.

    அடுத்து வந்த விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. இடையில் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு, பிறகு இன்று மதியம் துவங்கியது.

    இன்றைய ஆட்டத்திலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஜோடி சதம் அடித்து அசத்தியது. இதன் காரணமாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 356 ரன்களை குவித்தது.

    இந்திய சார்பில் விராட் கோலி 122 ரன்களையும், கே.எல். ராகுல் 111 ரன்களையும் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் அஃப்ரிடி மற்றும் ஷதாப் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாட தொடங்கியது.

    இதில், பக்கார் ஜமான் 27 ரன்கள், அகா சல்மான் மற்றும் இஃப்திகார் அகமது ஆகியோர் தலா 23 ரன்களும், பாபர் அசாம் 10 ரன்களும், இமாம் உல் ஹாக் 9 ரன்களும், ஷாஹீன் ஷாஹ் அஃப்ரிதி 7 ரன்களும், ஷாதாப் கான் 6 ரன்களும், ஃபஹீம் அஷ்ரப் 4 ரன்களும், முகமது ரிஸ்வான் 2 ரன்களும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் அணியில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டால், பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.

    ×