search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலகக் கோப்பை 2024"

    • பணத்துக்காக ஐபிஎல் தொடரில் விளையாடினால் இப்படிதான் நடக்கும் என பாகிஸ்தான் பத்திரைக்கையாளர் கூறியிருந்தார்.
    • இந்த பதிவுக்கு நியூசிலாந்து முன்னாள் வீரர் மெக்லெனகன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

    டிரினிடாட்:

    20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 29-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியது. ஏற்கனவே இந்த பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருந்தது.

    இதன் மூலம் குரூப் சி-யில் இருந்து ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. இந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளான உகாண்டா, பப்புவா நியூ கினியா, நியூசிலாந்து அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

    இந்நிலையில் நியூசிலாந்து அணி வெளியேறியதையடுத்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். அதில், ஏப்ரலில் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் உலகக் கோப்பை 2024-க்கு தங்களைத் தயார்படுத்துவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு நியூசிலாந்து அணிக்கு கிடைத்தது. ஆனால் அந்த தொடரில் விளையாடாமல் நியூசிலாந்து சீனியர் வீரர்கள் ஐபிஎல் விளையாட சென்றனர். தேசிய அணிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பணத்துக்காக விளையாடினால் இப்படிதான் நடக்கும் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    இதற்கு முன்னாள் நியூசிலாந்து வீரரான மிட்செல் மெக்லெனகன் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதில், எங்களது சி பக்கமான அயர்லாந்து மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்ததை என பதிலடி கொடுத்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • டி20 கிரிக்கெட்டில் இருந்து ஷகிப் அல் ஹசன் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று சேவாக் கூறியிருந்தார்.
    • அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சேவாக் யார் என்று ஷகிப் கேள்வி எழுப்பினார்.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறிய போது, அனுபவ வீரர் ஷகிப் அல் ஹசன் 46 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

    முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய ஜாம்பவான் சேவாக் ஷகிப் அல் ஹசன் அதிக அனுபவங்களை கொண்ட வீரர். வங்கதேச அணியின் கேப்டனாக நீண்ட காலம் செயல்பட்டுள்ளார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஷகிப்பின் செயல்பாடுகள் மோசமான இருந்துள்ளன. இதனை நினைத்து அவர் வெக்கப்பட வேண்டும். டி20 கிரிக்கெட்டில் இருந்து ஷகிப் அல் ஹசன் ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று காட்டமாக பேசியிருந்தார்.

    இந்த நிலையில் ஷகிப் அல் ஹசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் சேவாக்கின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஷகிப் அல் ஹசன், எந்த வீரரும் யாருக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு வீரரின் பணி என்னவென்றால், அணியின் வெற்றிக்கு உதவுவது தான்.

    பேட்ஸ்மேனாக, பவுலராக, ஃபீல்டராக சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிபெற வைக்க வேண்டும். மற்றபடி யாருக்கும் பதிலளிக்க தேவையில்லை. அதேபோல் ஒரு வீரரால் அணியின்வெற்றிக்கு பங்களிக்க முடியவில்லை என்றால், நிச்சயம் சில விவாதங்கள் வரும். அதில் எந்த தவறும் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் எனது ஆட்டம் குறித்து நான் எப்போதும் கவலைக் கொண்டதில்லை.

    என் கிரிக்கெட் வாழ்க்கை முழுக்கவே அப்படி தான் இருந்திருக்கிறேன். கிரிக்கெட்டில் ஒருநாள் உங்களுக்கான நாளாக இருக்கும். மற்றொரு நாள் இன்னொரு வீரருக்கான நாளாக இருக்கும். நன்றாக பவுலிங் செய்வதே எனது பணி. விக்கெட் வீழ்த்துவதற்கு கொஞ்சம் அதிர்ஷடமும் தேவை என்று நினைப்பதாக என்று தெரிவித்துள்ளார்.

    • அதிரடியாக விளையாடிய ஷகிப் அல் ஹசன் அரை சதம் அடித்தார்.
    • நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத், பால் வான் மீகெரென் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி தொடக்க வீரர்களாக தன்ஸித் ஹசன் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ களமிறங்கினர். இதில் நஜ்முல் சாண்டோ ஒரு ரன்னிலும் அடுத்து வந்த லிட்டன் தாஸ்சும் ஒரு ரன்னுடம் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    இதனையடுத்து தன்சித் ஹசன் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை உயர்த்தினர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி பவுண்டரியும், சிக்சர்களையும் பறக்கவிட்டனர். இதன்மூலம் வங்கதேச அணி 8 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்களைக் குவித்தது.

    சிறப்பாக விளையாடிய தன்சித் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டவ்ஹித் ஹ்ரிடோய் 9 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ஷாகிப் அல் ஹசன் மற்றும் மஹ்முதுல்லாஹ் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய மஹ்முதுல்லாஹ் 25 ரன்னில் வெளியேறினார்.

    ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய ஷகிப் அல் ஹசன் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷகிப் 64 ரன்கள் எடுத்தார். இதனால் வங்காளதேசம் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத், பால் வான் மீகெரென் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • இங்கே விளையாடுவது ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதைப் போன்ற உணர்வை எனக்கு கொடுக்கிறது.
    • சிஎஸ்கே மற்றும் இந்தியாவில் சிக்சர் அடிப்பதை நான் தற்போது மிஸ் செய்கிறேன்.

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் இந்தியா முதல் 3 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இருந்தாலும் இந்திய அணியின் பேட்டிங் பெரிதாக சொல்லும் அளவில் இல்லை என்றே சொல்லலாம்.

    குறிப்பாக ஷிவம் துபே தடுமாறுவது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் அதிரடியாக விளையாடிய நிலையில் உலகக் கோப்பையில் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிக்சர் அடிக்க மிகவும் தடுமாறி வருகிறார்.

    இந்நிலையில் இங்குள்ள சூழ்நிலைகளுக்கு வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படுகிறது என தடுமாற்றம் குறித்து ஷிவம் துபே வெளிப்படையாக கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    என்னுடைய ஃபார்மில் தடுமாறும் நான் செயல் முறையில் கவனம் செலுத்துகிறேன். ஆனால் இங்கே அழுத்தமில்லை. ஏனெனில் இங்கே அடிப்பது கடினம் என்றாலும் உன்னிடம் சிக்சர் அடிக்கும் திறமை இருப்பதால் அதை பயன்படுத்து என்று பயிற்சியாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சிஎஸ்கே அணியில் நான் செய்ததை இந்த சூழ்நிலையில் செய்ய முடியாது என்று நினைக்கிறேன்.

    இங்குள்ள சூழ்நிலைகளுக்கு வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படுகிறது. இங்கே விளையாடுவது ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதைப் போன்ற உணர்வை எனக்கு கொடுக்கிறது. இங்கே முதல் பந்திலிருந்தே உங்களால் அடிக்க முடியவில்லை. நீங்கள் இங்கே நேரமெடுத்து விளையாட வேண்டியுள்ளது. எனவே கண்டிப்பாக சிஎஸ்கே மற்றும் இந்தியாவில் சிக்சர் அடிப்பதை நான் தற்போது மிஸ் செய்கிறேன். ஏனெனில் இங்கே வலைப்பயிற்சியில் கூட அதிரடியாக விளையாட முடியவில்லை. பந்து வீசுவது நன்றாக இருந்தாலும் சிக்சர் அடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இவ்வாறு துபே கூறினார்.

    • டி பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
    • இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

    டி20 உலகக் கோப்பை 2024 வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய ஆட்டத்தில் வங்காளதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    டி பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதனால் இப்போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த பிரிவில் தென் ஆப்பிரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

    • 3 போட்டிகளில் குறைந்த ரன்கள் எடுத்தார் என்பதற்காக அவர் சுமாராக பேட்டிங் செய்கிறார் என்று அர்த்தமல்ல.
    • நாம் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். விரைவில் அவர் மீண்டு வருவார் என்று நம்புவோம்.

    இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பையில் தங்களுடைய முதல் 3 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. அதனால் குரூப் ஏ பிரிவிலிருந்து சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது.

    இருப்பினும் இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி இதுவரை 10 ரன்கள் கூட தாண்டாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அவர் 1, 4, 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்துள்ளார்.

    இதனால் ரசிகர்கள் உள்பட பல முன்னாள் வீரர்கள் விராட் கோலீயை 3-வது இடத்தில் களமிறங்க வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் விராட் கோலி தடுமாறுவதற்காக யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் அவர் மீண்டு வருவார் எனவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாட்டுக்காக விளையாடும் எந்த வீரருக்கும் வெற்றி பெற வேண்டும் என்பதே மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும். அதை நீண்ட காலமாக செய்து வரும் விராட் கோலி பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். இந்தத் தொடரில் நாம் ஆரம்பத்தில் மட்டுமே இருக்கிறோம். இன்னும் சூப்பர் 8, அரையிறுதி, இறுதி போட்டி வரவுள்ளன. எனவே விராட் கோலி தற்போதைக்கு அமைதியாக இருந்து தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

    3 போட்டிகளில் குறைந்த ரன்கள் எடுத்தார் என்பதற்காக அவர் சுமாராக பேட்டிங் செய்கிறார் என்று அர்த்தமல்ல. சில நேரங்களில் நீங்கள் நல்ல பந்துகளை சந்திப்பீர்கள். எனவே எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் அவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். விரைவில் அவர் மீண்டு வருவார் என்று நம்புவோம்.

    இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறினார்.

    • அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
    • இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அமெரிக்காவுக்கு பெனால்டி ரன்கள் விதிக்கப்பட்டது.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியின் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - அமெரிக்கா மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய அமெரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் இப்போட்டியின் போது அமெரிக்க அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக கள நடுவர்கள் அறிவித்தனர். ஆனால் இதற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர். ஆனால் சமீபத்தில் சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஸ்டாப் கிளாக் முறையை ஐசிசி அறிமுகம் செய்தது. இந்த விதியின் படி ஓவர்கள் வீசப்படும் நேரம், ஆட்ட நேரங்களைத் துல்லியமாகக் கணக்கிட முடியும். இந்த ஸ்டாப் கிளாக் முறையை ஐசிசி கட்டாயமாக்கியுள்ளது.

    இந்தப் புதிய விதிமுறைப்படி ஒரு ஓவருக்கும் இன்னொரு ஓவருக்கும் இடையேயான இடைவெளி 60 நொடிகளுக்கு மிகக் கூடாது, அதாவது ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை 60 நொடிகளுக்குள் பந்துவீச்சாளர் ஓவரை வீசத் தொடங்கி விட வேண்டும். இதனை தெளிவுப்படுத்தும் விதமாக மைதானத்தில் உள்ள பெரிய திரையில் 60 முதல் பூஜ்ஜியம் வரை எண்ணும் கடிகாரம் ஸ்கீரினில் காட்டப்படும். இந்த நேரக்கட்டுப்பாட்டை 2 முறைக்கு மேல் மீறினால் பந்துவீச்சு அணிக்கு 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்படும்.

    அதாவது பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் போனஸாக கொடுக்கப்படும். இந்த விதியின் படிதான் தற்போது அமெரிக்கா அணிக்கு 5 ரன்களை பெனால்டியாக கொடுத்துள்ளது. முன்னதாக போட்டியின் போது கள நடுவர்கள் அமெரிக்க கேப்டன் ஆரோன் ஜோன்ஸை இரண்டு முறை எச்சரித்தும் இத்தவறை அமெரிக்க அணி மீண்டு செய்துள்ளது. அதன் பிறகே அமெரிக்காவுக்கு பெனால்டி ரன்களை விதித்தனர். இதன்மூலம் டி20-யில் முதல் அணியாக பெனால்டி ரன்கள் விதித்த அணியாக அமெரிக்கா மோசமான சாதனையை படைத்துள்ளது.

    • விராட் முதல் போட்டியில் 1 ரன்னிலும் 2-வது மற்றும் 3-வது போட்டிகள் முறையே 4 மற்றும் 0 ரன்னில் ஆட்டமிழந்துள்ளார்.
    • ரசிகர்கள் உள்பட பல முன்னாள் வீரர்களும் அவரை 3-வது இடத்தில் விளையாடுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற லீக் போட்டிகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்டீஸ் அணிகள் அடுத்து சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளது.

    இந்திய அணி சூப்பர் சுற்றுக்கு முன்னேறினாலும் தொடக்க வீரரான விராட் கோலியின் ஆட்டம் சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் தொடரில் மற்றும் தொடக்க வீரராக களமிறங்கிய வரும் அவர் இந்திய அணிக்காக முதல் முறையாக தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறார்.

    முதல் போட்டியில் 1 ரன்னிலும் 2-வது மற்றும் 3-வது போட்டிகள் முறையே 4 மற்றும் 0 ரன்னில் ஆட்டமிழந்துள்ளார். இதனால் ரசிகர்கள் உள்பட பல முன்னாள் வீரர்களும் அவரை 3-வது இடத்தில் விளையாடுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கோலி தொடக்க வீரராக விளையாடுவதை விட 3-வது விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கைப் கூறியுள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐபிஎல் போல ஃபிளாட்டான பிட்ச்கள் இல்லையெனில் அங்கே நீங்கள் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். ஐபிஎல் தொடரில் அங்கே விராட் கோலி ஆக்ரோஷமாக விளையாடினார். ஆனால் இங்கே அவர் ஆக்ரோஷமாக விளையாடாமல் தன்னுடைய விக்கெட்டை பாதுகாத்து விளையாட வேண்டும். எனவே விராட் கோலி மூன்றாவது இடத்தில் தனது இயல்பான ஆட்டத்தை ஆட வேண்டும். கடந்த உலகக் கோப்பைகளில் அவருடைய புள்ளிவிவரங்கள் அற்புதமாக இருக்கிறது.

    மேலும் 5-வது இடத்திலிருந்து ரிஷப் பண்ட் 3-வது இடத்தில் விளையாட முடியுமானால் அவரால் ஓப்பனிங்கிலும் களமிறங்க முடியும்.

    இவ்வாறு பண்ட் கூறினார்.

    • பொறுப்புடன் ஆடிய சூர்யகுமார் அரைசதம் விளாசினார்.
    • அமெரிக்கா தரப்பில் சௌரப் நேத்ரவல்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் போட்டி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, அமெரிக்கா அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் பந்திலும், கடைசி பந்திலும் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் 10 ஓவரில் அமெரிக்கா 42 ரன்களை எடுத்தது.

    12-வது ஓவரில் 11 ரன்னும், 13-வது ஓவரில் 12 ரன்னும் எடுத்தது. நிதிஷ் குமார் 27 ரன்னிலும், ஸ்டீவன் டெய்லர் 24 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், அமெரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்களை எடுத்தது.

    இந்தியா சார்பில் 4 ஓவர் வீசிய அர்ஷ்தீப் சிங் 9 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 111 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, விராட் கோலி களமிறங்கினர். விராட் கோலி 0 ரன்னிலும் ரோகித் 3 ரன்னிலும் வெளியேறினர். அடுத்து வந்த ரிஷப் 18 ரன்னில் அவுட் ஆனார்.

    இதனால் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறியது. இதனையடுத்து துபே - சூர்யகுமார் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பொறுப்புடன் ஆடிய சூர்யகுமார் யாதவ் அரை சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் இந்திய அணி 18.2 ஓவரில் 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 50 ரன்னிலும் துபே 31 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். அமெரிக்கா தரப்பில் சௌரப் நேத்ரவல்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    • கனடா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்தது.
    • பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர், ஹரிஸ் ராஃப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, கனடாவை சந்திக்கிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கனடா அணியின் தொடக்க வீரர்களாக ஜான்சன் - நவ்நீத் தலிவால் களமிறங்கினர். நவ்நீத் தலிவால் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பர்கத் சிங் 2 , நிக்கோலஸ் கிர்டன் 1, ஷ்ரேயாஸ் மொவ்வா 2, ரவீந்தர்பால் சிங் 0, சாத் பின் ஜாபர் 10 என அடுத்தடுத்து வெளியேறினர்.

    ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் ஒரு முனையில் சிறப்பாக ஆடி வந்த ஜான்சன் அரை சதம் விளாசினார். அவர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனால் இறுதியில் கனடா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர், ஹரிஸ் ராஃப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் ஷாத் அகமத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • ரசிகரை சுட்டுக் கொன்ற பாதுகாவலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இந்த நிலையில் இந்தப் போட்டியை காண வந்த பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் ஷாத் அகமத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து நியூயார்க் கடை வீதிகளில் ஷாத் அகமது வீடியோ எடுத்து வந்துள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாவலரிடம் ஒருவரிடம் போட்டி குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு அந்த பாதுகாவலரோ பதில் அளிக்க மறுத்திருக்கிறார்.

    திரும்ப திரும்ப கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பாதுகாவலர் ஷாக் அகமதுவை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து, அங்கிருந்த நண்பர்கள் அகமதுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    எனினும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். ரசிகரை சுட்டுக் கொன்ற பாதுகாவலரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பாகிஸ்தான் அடுத்து வரும் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும்.
    • அமெரிக்க அணி எஞ்சிய 2 போட்டியிலும் தோல்வியடையந்தால் மட்டுமே பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றில் இடம் பெறும்.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, கனடாவை சந்திக்கிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் தோற்றது. இந்தியாவுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் 120 ரன் இலக்கை கூட எடுக்க முடியாமல் தோல்வியடைந்தது.

    இதனால் பாகிஸ்தான் அடுத்து வரும் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். அதுமட்டுமல்லாமல் அமெரிக்க அணி எஞ்சிய 2 போட்டியிலும் தோல்வியடைய வேண்டும். மேலும் ரன்ரேட் அதிகமாக இருக்க வேண்டும். இது நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றில் இடம் பெறும். 

    ×