search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைவ வைணவம்"

    1. மதுராந்தகம்

    2. திருஅத்தியூர்

    3. திருவரங்கம்

    4. திருக்கோட்டீயூர்

    5. திருக்கரம்பனூர்

    6. திருவெள்ளறை

    7. திருக்கோவலூர்

    8. திருக்கடிகை

    9. திருவேங்கடம்

    10. திருப்புட்குழி

    11. திருவெக்கா

    12. திருவாலி திருநகரி

    13. திருமுட்டம்

    14. திருஇந்தளூர்

    15. திருவழுந்தூர்

    16. திருவிண்ணகரம்

    17. திருநறையூர்

    18. திருக்குடந்தை

    19. திருப்போர்நகர்

    20. திருமாலிருஞ்சோலை

    21. திருமெய்யம்

    22. திருமோகூர்

    23. திருக்கூடல்

    24. திருப்புல்லாணி

    25. திருத்தண்கால்

    26. திருவில்லிபுத்தூர்

    27. திருவைகுந்தம்

    28. திருவரகுணமங்கை

    29. திருப்புளிங்குடி

    30. திருத்தொலைவில்லி மங்கலம்

    31. திருக்குளந்தை

    32. திருத்தென்திருப்பேரை

    33. திருக்குருகூர்

    34. திருக்கோளூர்

    35. திருக்குறுங்குடி

    36. திருவண்பரிசாரம்

    37. திருவட்டாறு

    38. திருவனந்தபுரம்

    39. திருப்புலியூர்

    40. திருவாறன்விளை

    41. திருச்செங்குன்றூர்

    42. திருவண்வண்டூர்

    43. திருவல்லவாழ்

    44. திருக்கடித்தானம்

    45. திருமூழிக்களம்

    46. திருக்காட்கரை

    47. திருவித்துவக்கோடு

    48. திருவஞ்சிக்களம்

    49. திருநாவாய்

    50. திருத்துவாரகை

    51. திருப்புட்கரம்

    52. திருவாய்ப்பாடி

    53. திருவிருந்தாவனம்

    54. திருவடமதுரை

    55. கோவர்த்தனகிரி

    56. குருட்சேத்திரம்

    57. திருவரித்துவார்

    58. திருக்கண்டமெனுங்கடிநகர்

    59. திருப்பிரிதி

    60. திருவதரிகாச்ரமம்

    61. திருவயோத்தி

    62. திருநைமிசாரண்யம்

    63. காசி

    64. கயை

    65. திருச்சாளக்கிராமம்

    66. காஷ்மீர்&ஸ்ரீநகர்

    67. பூரிசெகந்நாதம்

    68. திருக்கூர்மம்

    69. திருக்காகுளம்

    70. வாராங்கல்

    71. சிம்மாசலம்

    72. திருச்சிங்கவேள்குன்றம்

    73. திருவல்லிக்கேணி

    74. திருமயிலை

    75. திருநீர்மலை

    76. திருநின்றவூர்

    77. திருஎவ்வுள்

    78. திருநீரகம்

    79. திருவூரகம்

    80. திருக்காரகம்

    81. திருக்கார்வானம்

    82. திருபெரும்புதூர்

    83. திருக்கடல்மல்லை

    84. திருவிடவெந்தை

    85. திருவயிந்திபுரம்

    86. வீரநாராயணபுரம்

    87. திருச்சித்திரக்கூடம்

    88. திருக்காழீச்சீராமவிண்ணகரம்

    89. திருக்காவளம்பாடி

    90. திருஅரிமேயவிண்ணகரம்

    91. திருவண்புருடோத்தமம்

    92. திருச்செம்பொன்செய்கோவில்

    93. திருமணிமாடக்கோவில்

    94. திருவைகுந்தவிண்ணகரம்

    95. திருத்தேவனார்தொகை

    96. திருத்தெற்றியம்பலம்

    97. திருமணிக்கூடம்

    98. திருவெள்ளக்குளம்

    99. திருப்பார்த்தன்பள்ளி

    100. திருத்தலைச்சங்கநாண்மதியம்

    101. திருச்சிறுபுலியூர்

    102. திருக்கண்ணபுரம்

    103. திருச்சேறை

    104. திருக்கண்ணமங்கை

    105. திருக்கண்ணங்குடி

    106. திருநாகை

    107. தொண்டனூர்

    108. திருநாராயணபுரம்

    1. ஸ்ரீபாஷ்யம்

    2. ஸ்ரீமத் கீதாபாஷ்யம்

    3. வேதாந்த தீபம்

    4. வேதாந்த ஸாரம்

    5. வேதார்த்த ஸங்க்ரஹம்

    6. சரணாகதி கத்யம்

    7. ஸ்ரீரங்க கத்யம்

    8. ஸ்ரீவைகுண்ட கத்யம்

    9. நித்யம்

    அடைந்தோர் சரணாகதியும் அனைத்துயிர் உய்வதற்கே

    அடைந்தநம் இராமானுசனை அடைந்தவர் உய்ந்தோம் இங்கே

    கடைந்தநல் வேதசாரம் கலியுகந் தன்னில் நாமும்

    அடைந்தநம் இராமனுசனே! அவனடி வாழி! வாழி!!

    • ஒன்றும் புரியாமல் அர்ச்சகர்களை இதென்ன ராமானுஜர் விநோதம் செய்கிறார் என்று எண்ணியவராய்
    • அந்த சீட்டை ஸ்ரீவேங்கடாசலபதி முன் வைக்கப்போனபோது பெருமாள் அதனை கை நீட்டி பெற்றுக்கொண்டார்.

    திருமலை திருப்பதியில் ஸ்ரீராமானுஜர் மற்றும் சீடர்குழாம் தங்கியிருந்தபோது ஒரு இடைச்சி தயிர் கொண்டுவந்தாள்.

    அவளிடம் இவர்கள் தயிரை வாங்கிக்குடித்தனர். தயிர் என்ன விலை என்று கேட்டனர்.

    அவர்கள் குடிக்க குடிக்க கொடுத்துக்கொண்டே இருந்தாள். அவருக்கு அந்த வைஷ்ணவர்களைப் பார்த்து பரவசம் உண்டாயிற்று.

    பக்தி ஞானப்பற்றுதல் உண்டாயிற்று.

    "எனக்கு பணம் எதுவும் வேண்டாம். எனக்கு சம்சாரபந்தம் விட்டு நல்ல மோட்ச மார்க்கம் கிடைக்க வழிசெய்யுங்கள்" என்று அவள் அவர்களைக் கேட்டுக் கொண்டாள்.

    "உன்னால் மோச கதி அடைய முடியும், நாங்கள் மோட்சம் கொடுக்கும் தகுதியற்றவர்கள் அதனைக்கொடுப்பவர் திருமலையின் மீது அமர்ந்திருக்கிறார். அவரிடம் போய் கேள்" என்றார் யதிராஜர் என்ற ஸ்ரீராமானுஜர்.

    உங்களைப்பார்த்ததும் உங்களால் எனக்கு மோட்சம் கொடுக்க முடியும் என்று முதலில் கருதிவிட்டேன்.

    ஆனால் திருமலை மீது இருப்பவர் பேசமாட்டாரே. தாங்கள் ஒரு சீட்டெழுதி சிபாரிசு செய்து மோசமளிக்கும்படி செய்யுங்கள். என்றாள் அவள்.

    ஸ்ரீயதிராஜரும் அவ்வாறே இசைந்து ஸ்ரீவேங்கடாசலபதிக்கு ஒரு சீட்டு எழுதிக்கொடுத்தார்.

    யதிராஜர் எனும் ராமானுஜரை சுற்றி நின்று கொண்டிருந்த அனைவரும் இது என்ன வேடிக்கையும் விநோதமுமான செயலாய் இருக்கிறது என்று எண்ணினார்கள்.

    ஆனால் கொண்டி எனும் அந்த இடைச்சியோ அந்த சீட்டோலையை சந்தோஷமாக ராமாஜரிடமிருந்து பெற்றுக்கொண்டு ஸ்வாமி புஷ்கரணியில் சநானம் செய்துவிட்டு பிரதட்ஷண்யமாக வந்து ஸ்ரீவேங்கடாசலபதியைத் தொழுதாள் ஸ்ரீராமானுஜர் கொடுத்த சீட்டோலையை பெருமான் சன்னதியில் சமர்ப்பித்தாள்.

    "இது என்ன சீட்டு" என்று அர்ச்சகர்கள் கேட்டனர்.

    ஸ்ரீயதிராஜ சாமி பெருமாளுக்கு கொடுக்கச் சொன்ன சீட்டுதான் இது" என்றாள் கொண்டி.

    ஒன்றும் புரியாமல் அர்ச்சகர்களை இதென்ன ராமானுஜர் விநோதம் செய்கிறார் என்று எண்ணியவராய் அந்த சீட்டை ஸ்ரீவேங்கடாசலபதி முன் வைக்கப்போனபோது பெருமாள் அதனை கை நீட்டி பெற்றுக்கொண்டார்.

    ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்த ஸ்ரீஉடையவராகிய ராமானுஜரின் சீட்டு என்று அறிந்த மாத்திரத்தில் கொண்டியைப் பார்த்து "உனக்கு மோட்சம் கொடுத்தேன்" என்றருளினார்.

    அப்போது பிரகாசமான ஒளியுடன் ஒரு விமானம் வந்தது இடைச்சி கொண்டி அதில் ஏறி அமர, அது பறந்து பரமபதம் சேர்ந்தது.

    தயிர் விற்ற பெண்ணுக்கு மோட்சமா? ஆம் ஸ்ரீயதிராஜர் எழுதிக் கொடுத்த சீட்டுக்கு அத்தகைய மகத்துவம் இருந்தது.

    • ராமானுஜர் அதை நினைவில் கொண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்ற போது அக்காரவடிசில் நைவேத்யம் செய்தார்.
    • அப்போது ஆண்டாள் சந்நிதியில் ஓர் அற்புதம்நடந்தது.

    ஆளவந்தாரின் அனைத்து எண்ணங்களையும் பூர்த்தி செய்து விட்டு திருப்பதியில் ராமானுஜர் வைணவ பிரசாரம் செய்வதற்காக யாத்திரை மேற்கொண்டார்.

    எழுபத்தி நான்கு சீடர்களும் பிற வைணவ அடியவர்களும் பின்தொடர ராமானுஜர் திவ்விய தேசங்கள் என அழைக்கப்படும் திருப்பதிகளுக்கும் இதர தலங்களுக்கும் யாத்திரை கிளம்பினார்.

    முதலில் சோழ நாட்டுப்பகுதிகளில் அவர் யாத்திரை செய்தார்.

    திருமங்கை ஆழ்வார் அவதரித்த ஊரில் அவர்கள் விஜயம் செய்த போது பாதையில் அவர்களுக்கு எதிரே தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி வந்தாள்.

    அவளைப்பார்த்த ராமானுஜரின் சீடர்களில் ஒருவர், "பெண்ணே, ஒதுங்கி நில்" என்ற ஜாதிய வெரியுடன் உத்தரவிட்டார்.

    உடனே அப்பெண், "நான் எந்தப்பக்கம் ஒதுங்க வேண்டும்? திருக்கண்ணபுரம் கோயிலை நோக்கியா? வலதுபுறத்தில் தெரியும், திருமால் தரிசனம் தந்த, திருமணங்ககொல்லையை நோக்கியா? இடதுபுறத்தில் உள்ள திருவாலிப்பெருமானை நோக்கியா? ஓங்கி உலகளந்த பரமானந்தன் எங்கும் நீக்கமற எல்லா திசைகளிலும் நிறைந்திருக்கும் போது நான் எந்தத்திசையைப்பார்த்து எந்தப்பக்கம் ஒதுங்கட்டும்? நீங்களே சொல்லுங்கள்" என்று திருத்தமாய் பேசியதும் ராமானுஜர் உள்ளிட்ட அங்கிருந்த அனைவருக்கும் பகீரென்று இருந்தது.

    ஒருவராலும் பதில் பேச முடியவில்லை.

    ராமானுஜர் தம் சீடர் சார்பாக அப்பெண்மணியிடம் மன்னிப்புக்கேட்டார்.

    " எங்கள் சரீரத்தில் இடம் பெற்றுள்ள இந்த வைணவ சின்னங்கள் அனைத்தும் உனக்கே உரித்தவை, உனக்கே தகுதியானவை" என்ற அப்பெண்ணிடம் ராமானுஜர் உருக்கத்தோடு கூறினார்.

    அப்பெண்மணி ராமானுஜரிடம் வணங்கி ஆசி பெற்றார்.

    ராமானுஜர் அவரை வைணவ பிரசாரத்துக்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஸ்ரீரங்கம் மடத்திலேயே இருக்குமாறு கேட்டக்கொள்ள, அவளும் அப்படியே செய்தாள்.

    அதன் பிறகு ராமானுஜர் கும்பகோணம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.

    தொடர்ந்து பாண்டிய நாட்டு பாடல் பெற்ற தலங்கள், தென்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் ஆகிய பகுதிகளுக்கு எல்லாம் ராமானுஜர் சென்றார். அவர் சென்ற இடம் எல்லாம் வைணவம் வளர்ந்தது. நாராயணன் புகழ்பரவியது.

    ராமானுஜர், ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் பதினாறு ஆண்டுகள் தவம் இருந்த புனித மரத்தடியை தரிசித்தார். திருவாய்மொழி உருவான இடம் அது தான் என்றும் நம்பப்படுகிறது.

    இப்படியாகத் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமிகள் ஆலயம் வரை ராமானுஜரின் தீர்த்த யாத்திரை தொடர்ந்து . அதன்பிறகு துவாரகை, காஷ்மீரம், ஹரித்வார், பத்ரிநாத் ஆகிய வடநாட்டு தலங்களுக்கும்அவர் சென்றார்.

    ராமானுஜர் பாண்டிய நாட்டுக்கு யாத்திரை சென்ற போது ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிப்புத்தூருக்கும் சென்றார்.

    ஆண்டாள் திருமாலுடன் இணைவதற்கு முன்பாக தன் திருக்கல்யாணத்துக்கு நூறு அண்டாக்கள் அக்காரவடிசில் (சர்க்கரைப்பொங்கல்) சீர்வேண்டும் எனக்கேட்டிருந்தார்.

    ராமானுஜர் அதை நினைவில் கொண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்ற போது அக்காரவடிசில் நைவேத்யம் செய்தார்.

    அப்போது ஆண்டாள் சந்நிதியில் ஓர் அற்புதம்நடந்தது. சிலைவடிவாக இருந்த ஆண்டாள், திடீரென உருவமாக அசைந்து அசைந்து வெளியே வந்து ராமானுஜரைப்பார்த்து "அண்ணா"என்று அழைத்திருக்கிறார்.

    1. திருக்குருகைப்பிரான் பிள்ளான்

    2. கூரத்தாழ்வான்

    3. நடாதூராழ்வான்

    4. எங்களாழ்வான்

    5. தெற்காழ்வான்

    6. இளையாழ்வான்

    7. கோமடத்தாழ்வான்

    8. சேட்டலூராழ்வான்

    9. வேதாந்தியாழ்வான்

    10. அனந்தாழ்வான்

    11. நடுவிலாழ்வான்

    12. மிளகாழ்வான்

    13. நெய்யுண்டாழ்வான்

    14. உக்கலாழ்வான்

    15. திருக்கோவிலூராழ்வான்

    16. திருமோகூராழ்வான்

    17. கோயிலாழ்வான்

    18. அருணபுத்தாழ்வான்

    19. கணியனூர் சிறியாழ்வான்

    20. திருமலை நல்லான்

    21. கிடாம்பியாச்சான்

    22. வங்கிபுரத்தாச்சான்

    23. ஈச்சம்பாடியாச்சான்

    24. கொங்கிலாச்சான்

    25. திருக்கண்ணபுரத்தாச்சான்

    26. எம்பார்

    27. சிறிய கோவிந்தப்பெருமாள்

    28. கிடாம்பிப்பெருமாள்

    29. அம்மங்கிப்பெருமாள்

    30. ஆசூரிப்பெருமாள்

    31. பிள்ளையப்பன்

    32. பிள்ளை திருமலை நம்பி

    33. வங்கிபுரத்து நம்பி

    34. சொட்டை நம்பி

    35. முடும்பை நம்பி

    36. பராங்குச நம்பி

    37. திருக்குறுங்குடி நம்பி

    38. தொண்டனூர் நம்பி

    39. அருணபுரத்து நம்பி

    40. மருதூர் நம்பி

    41. மழையூர் நம்பி

    42. வடுச நம்பி

    43. குரவை நம்பி

    44. புண்டரீகாட்சர்

    45. முதலியாண்டான்

    46. கந்தாடையாண்டான்

    47. மாருதியாண்டான்

    48. மதுரையாண்டான்

    49. ஈயுண்ணியாண்டான்

    50. சோமாசியாண்டான்

    51. சீயராண்டான்

    52. ஈச்சாண்டான்

    53. பெரியாண்டான்

    54. சிறியாண்டான்

    55. அம்மங்கியாண்டான்

    56. ஆளவந்தாராண்டான்

    57. சுந்தரத்தோளுடையான்

    58. உக்கலம்மாள்

    59. பருத்திக்கொல்லையம்மாள்

    60. சொட்டையம்மாள்

    61. முடும்பையம்மாள்

    62. வைத்தமாநிதியார்

    63. பராசரபட்டர்

    64. சீராமப்பிள்ளை பட்டார்

    65. சிறுபள்ளி தேவராச பட்டர்

    66. பிள்ளையுறந்தையுடையார்

    67. பிள்ளை திருவாய்மொழியரையர்

    68. பிள்ளை திருநறையூரரையர்

    69. பிள்ளை ராசமகேந்திரப் பெருமாளரையர்

    70. அதிகாரிப்பிள்ளை

    71. திருநகரிப்பிள்ளை

    72. கோமண்டூர்ப்பிள்ளை

    73. அநந்த சோமயாசியார்

    74. காஞ்சி சோமயாசியார்

    • ஸ்ரீராமானுஜர் ஒருமுறை மதுரகவி ஆழ்வாரின் ஊராகிய திருக்கோளூருக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு பெண் எதிரே வந்தாள்.
    • அந்த சாமான்யப் பெண் சொல்ல சொல்ல ராமானுஜருக்கு கண்களில் கண்ணீர் தாரைதாரையாய் வழிந்தது.

    ஸ்ரீராமானுஜர் ஒருமுறை மதுரகவி ஆழ்வாரின் ஊராகிய திருக்கோளூருக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு பெண் எதிரே வந்தாள்.

    அவள் ஸ்ரீ ராமானுஜரைக் கண்டதும் தண்டனிட்டு நின்றாள்.

    "அம்மா, ஆழ்வார் பாசுரத்தில் கூறப்படும் திருக்கோளூர் எங்கே இருக்கிறது? நீ அங்கிருந்துதான் வருகிறாயா?"

    "முயல் புழுக்கை வயலிலே கிடந்தென்ன, வரப்பிலே கிடந்தென்ன? ஞானமில்லாத நான் கோளூரில் இருந்தாலென்ன வெளியே இருந்தால் என்ன" என்று கூறிய அவள், ராமானுஜரைப் பார்த்து மிகவும் உணர்ச்சி மயமாகிப் போனவள் போல் பேசினாள்.

    "அகம் ஒழித்துவிட்டேனோ விதுரைப்போலே

    தாய்க்கோலம் செய்தேனோ அனுசூயைப்போலே

    பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப்போலே

    அந்தரங்கம் சொன்னேனோ திரிசடையைப் போலே

    தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியாள் போலே

    ஆயனை வளர்த்தேனோ யசோதையாள் போலே

    அவல் பொரியை ஈந்தேனோ அகஸ்தியரைப்போலே

    ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப்போலே

    இடைகழியில் கண்டேனோ முதலாழ்வார் போலே

    வழி அடிமை செய்தேனோ இளையாழ்வார் போலே

    அக்கரையில் விட்டேனோ குகப்பெருமாள் போலே

    கண்டுவந்தேன் என்றேனோ திருவடியைப்போலே...

    அந்த சாமான்யப் பெண் சொல்ல சொல்ல ராமானுஜருக்கு கண்களில் கண்ணீர் தாரைதாரையாய் வழிந்தது.

    • பெரிய திருமலை நம்பிகளிடம் ஸ்ரீமத் ராமாயண ஸ்லோகங்களின் ஆழ்பொருள்களைப் பெற்றார்.
    • இதனால் பகவத் ராமானுசர் 'பஞ்சாச்சார்ய பதாச்ரயர்' என்ற திருநாமமும் பெற்றார்.

    1. பெரிய நம்பிகளிடம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்றார்.

    2. திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ரகஸ்யத்திரய ஆழ்பொருள்களைப்பெற்றார்.

    3. திருமாலையாண்டானிடம் திருவாய்மொழியின் ஆழ்பொருள்களைப் பெற்றார்.

    4. திருவரங்கப்பெருமாளரையரிடம் ஆசார்ய நிஷ்டை எனும் சரமோபாய நிஷ்டையின் ஆழ்பொருள்களையும், தர்ம ரகஸ்யங்களையும் பெற்றார்.

    5. பெரிய திருமலை நம்பிகளிடம் ஸ்ரீமத் ராமாயண ஸ்லோகங்களின் ஆழ்பொருள்களைப் பெற்றார்.

    இதனால் பகவத் ராமானுசர் 'பஞ்சாச்சார்ய பதாச்ரயர்' என்ற திருநாமமும் பெற்றார்.

    எம்பெருமானார், எம்பார், முதலியாண்டான், கூரத்தாழ்வான் ஆகியோர் ஆதிசேஷன், கருடன், சங்கு, சக்ராதிகளின் அவதாரங்கள் என்பதை அனைவரும் உணரலானார்கள்.

    • அவர் சென்ற இடங்களிலெல்லாம் தமது கொள்கைகளைப்பரப்பினார், பல்வேறு கொள்கையினருடன் வாதாடி வெற்றி பெற்றார்.
    • ஸ்ரீ வைணக்கோட்பாடுகள் மேன் மேலும் புதிய இடங்களுக்கு உயிரூட்டம் அளித்தன.

    காஷ்மீரத்திற்கும் விஜயம் செய்தார். பின்னர் ஹரித்துவாரம் வழியாக, பத்ரி நாராயணனைச் சேவிப்பதற்கென பத்ரிகாசிரமத்தை யாத்திரை கோஷ்டி அடைந்தது.

    பிறகு, குருச்சேத்திரம், பிருந்தாவனம் , வடமதுரை, காசி, பிரயாகை முதலிய இடங்களுக்கும் விஜயம் செய்தார்.

    பின்பு, கயா, அயோத்தி மூலம் வங்க நாட்டிற்குச் சென்று, திரும்பும் வழியில் பூரி ஜகன்னாதம் வந்தார்.

    திருவனந்தபுரத்தில் நடந்தது போன்றே ஜகன்னாதத்திலும் ராமானுஜருடைய சீர்திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

    பின்னர் இவர் விஜயம் செய்த ஸ்ரீ கூர்மம் என்ற தலத்தில் இவருடைய சீர் திருத்தங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    அதன் பின், ராமானுஜர் வாரங்கல், ஸ்ரீகாகுளம் முதலான இடங்களுக்கு விஜயம் செய்துவிட்டு, அகோபிலம் வழியாகத் திருப்பதி வந்தார்.

    இது இராமானுஜருக்கு இரண்டாவது திருப்பதி விஜயம்.

    இவ்வாறு மிக நீண்ட தீர்த்த யாத்திரையை ராமானுஜர் மேற்கொண்டார்.

    அவர் சென்ற இடங்களிலெல்லாம் தமது கொள்கைகளைப்பரப்பினார், பல்வேறு கொள்கையினருடன் வாதாடி வெற்றி பெற்றார்.

    ஸ்ரீ வைணக்கோட்பாடுகள் மேன் மேலும் புதிய இடங்களுக்கு உயிரூட்டம் அளித்தன.

    இணையற்ற இத்தகு கைங்கரியம்செய்து, ஸ்ரீ வைணவக்கோட்பாடுகளுக்கு ஒப்பிலா புகழும் பெருமையும் சேர்ந்தமைக்காக, திருமலையில் ராமானுஜருக்குக்கோவில் அமைக்கப்பட்டது.

    நம்மாழ்வார் உட்பட வேறு எந்த ஆழ்வாருக்குமோ, நாதமுனி உள்பட வேறு எந்த வைணவ ஆசாரியருக்குமோ, திருமலையில் கோவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • எல்லா வைணவக் கோவில்களிலும், வடமொழியுடன் சேர்ந்து தமிழ் மணமும் கமழத் தொடங்கியது.
    • ஆனால் , திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பொறுப்பை ஏற்றிருந்த நம்பூதிரிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

    திருநகரியை அடைந்த பின்னர் அவர் மதுரகவி ஆழ்வார் அவதரித்த திருக்கோளூர், திருக்குறுங்குடி, இப்போது திருப்பதிசாரம் என்று அழைக்கப்படும் திருவண்பரிசாரம் முதலிய தலங்களுக்குத் தீர்த்த யாத்திரை செய்தார்.

    பிறகு, திருவட்டாறு சென்று, அங்கிருந்து திருவனந்தபுரம் அடைந்தார்.

    ராமானுஜர் விஜயம் செய்த எல்லா வைணவக் கோவில்களிலும், திருவரங்கத்தில் செய்ததைப் போன்றே, வழிபாட்டு முறைகளிலும், கோவில் நிர்வாகத்துறைகளிலும் சீர்திருத்தங்களைப்புகுத்தினார்.

    எல்லாக் கோவில்களிலும் சமஸ்கிருத மந்திரங்களைக் கோஷிப்பது போன்றே ஆழ்வார்களின் பாடல்களையும் கர்ப்பக்கிரகத்தில் ஓத வேண்டும் என்றும் வரையறை செய்தார்.

    எல்லா வைணவக் கோவில்களிலும், வடமொழியுடன் சேர்ந்து தமிழ் மணமும் கமழத் தொடங்கியது.

    ஆனால் , திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பொறுப்பை ஏற்றிருந்த நம்பூதிரிகள் ராமானுஜர் அறிவித்த சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள்.

    பின்னர், மேற்குக்கடற்கரை வழியாக வடநாடு சென்ற, துவாரகை முதலிய தலங்களைத் தரிசித்தார்.

    • ஆழ்வார் திருநகரியைத் திருக்குருகூர் என்றும் குருகை என்றும் அழைப்பதுண்டு.
    • இந்த ஊரிலுள்ள புளிய மரத்தையும் ராமானுஜர் தரிசித்தார்.

    ராமானுஜர் சோழ நாட்டிலிருந்த திருப்பதிகளைத் தரிசித்து விட்டுப் பாண்டிய நாடு சேர்ந்தார்.

    இங்கே பாடல்பெற்ற ஸ்தங்கள் பதினெட்டு உள்ளன.

    திருமாலிருஞ்சோலை, திருப்புல்லணி, ஸ்ரீ வில்லிப்புத்தூர் போன்ற திவ்விய தேசங்களைத் தரிசித்துவிட்டு, தென்பாண்டி நாட்டிலுள்ள நவ திருப்பதிகளில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானைச் சேவிக்கச் சென்றார்.

    'பொருநல்' என்று சொல்லப்படும் தாம்பிரபருணி ஆற்றங்கரையை நோக்கி ராமானுஜர் கோஷ்டி புறப்பட்டுப்போயிற்று.

    இவர்கள் சென்ற இடமெல்லாம் வைணவப்பிரசாரம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

    எளிய மக்கள், குறிப்பாகக் கீழ்த்தட்ட மக்கள் ஆயிரக்கணக்கில் வைணவத்தைத் தழுவினார்கள்.

    இவர்கள் நடந்த இடமெல்லாம் நாரணன் புகழ் படர்ந்த இடமாக மாறியது.

    நிலவளமும் நீர் வளமும் செழித்திருந்த நவதிருப்பதிப் பிரதேசத்தை யாத்திரை கோஷ்டி அடைந்தது.

    பக்தி மணம் கமழும் ஆழ்வார் திருநகரி கண்களுக்குத் தெரிந்தது. அதை பார்த்துப் பார்த்துப் பரவசமானார் ராமானுஜர்.

    அவருடைய உணர்ச்சிப்பெருக்கு ஒரு பாட்டாகப் பரிணமித்தது.

    இதுவோ திருநகரி, ஈதோ பொருநல், இதுவோ பரமபதத்து எல்லை! இதுவோதான்

    வேதம் தமிழ் செய்து மெய்ப்பொருட்கு முப்பொருளால் ஓதும் சடகோபன் ஊர்?

    ஆழ்வார் திருநகரியைத் திருக்குருகூர் என்றும் குருகை என்றும் அழைப்பதுண்டு.

    இந்த ஊரிலுள்ள புளிய மரத்தையும் ராமானுஜர் தரிசித்தார்.

    இந்தப்புளிய மரத்தின் அடியில் தான் நம்மாழ்வார் பதினாறு ஆண்டுகள் யோகத்தில் மூழ்கியிருந்ததாகவும், திருவாய் மொழி அரும்பியது இங்குதானென்றும் நம்பப்படுகிறது.

    • சைவ வழிபாடுகளிலும் ,வைணவ வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது .
    • பெருமாளுக்கும் , தாயாருக்கும் ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நன்னாளில் தான்.

    பழனியில் காவடி உற்சவம் , மயிலாப்பூரில் அறுபத்துமூவர் உற்சவம் ,சுவாமி மலையிலும் ,திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம்,

    திருப்பரங்குன்றத்தில் தெய்வானை கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம் , மதுரையில் மீனாட்சி திருமணம்

    என பங்குனி உத்திர நாளில் விழாக்களின் சங்கமம் மிக மிக அதிகம்.

    சைவ வழிபாடுகளிலும் ,வைணவ வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது .

    இந்த இரு சமய வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் போல வேறு எந்த மாதத்திலும் இவ்வளவு சிறப்பான விழா வருவது இல்லை .

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடக்கும் விழாக்களில் மிக முக்கியமான பெருவிழா பங்குனிஉத்திர திருவிழாதான்.

    பெருமாளுக்கும் , தாயாருக்கும் ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நன்னாளில் தான்.

    எனவே , பெருமாளும் , தாயாரும் அருகருகே கல்யாண கோலமாக எழுந்தருளி சேர்த்தி சேவை சாதிப்பர் .

    இது ஆலய 5-வது திருச்சுற்றில் , பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும்.

    பங்குனி உத்திரப் பெருவிழா தினத்தன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தை கண் குளிர தரிசித்தால் ,திருமணப் பேறு உண்டாகும் , பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பது ஐதீகம் .

    இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதிகள் மேலும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு கருத்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை .

    ×