என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சட்டமன்றம்"
- அசாம் சட்டமன்றம் உருவாக்கப்பட்டது முதல் இருந்த இந்த இடைவேளை ரத்து செய்யப்பட்டுள்ளது
- அசாம் முதல்வர் இதைக் கீழ்த்தரமான புகழுக்காகச் செய்திருக்கிறார். இஸ்லாமியர்களை பாஜக எளிமையான இலக்காக மாற்றியுள்ளது என்று சாடியுள்ளார்.
அசாம் சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை தோறும் இஸ்லாமிய எம்.எல்.ஏக்கள் தொழுகை செய்ய உணவு நேரத்துக்குப் பின் வழங்கப்பட்டு வந்த 2 மணி நேர இடைவேளை ரத்து செய்யப்பட்டுள்ளது. அசாமில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் இன்று தொழுகை இடைவேளை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியுள்ளது. அசாம் சட்டமன்றம் உருவாக்கப்பட்டது முதல் இருந்த இந்த இடைவேளையை பாஜக அரசு ரத்து செய்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உத்தரவு தொடர்பாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில், 2 மணிநேர ஜும்ஆ இசைவேலையை ரத்து செய்யப்பட்டதன் மூலம் [சட்டமன்றத்தின்] செயல்திறனுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு, மற்றொரு [ஆங்கிலேய] காலனிய கால சடங்கு தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை 1937 ஆம் ஆண்டில் முஸ்லீம் லீக்கை சேர்ந்த சையத் சாதுல்லாவால் கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
By doing away with the 2 hour Jumma break, @AssamAssembly has prioritised productivity and shed another vestige of colonial baggage.This practice was introduced by Muslim League's Syed Saadulla in 1937.My gratitude to Hon'ble Speaker Shri @BiswajitDaimar5 dangoriya and our…
— Himanta Biswa Sarma (@himantabiswa) August 30, 2024
இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அசாம் முதல்வர் இதைக் கீழ்த்தரமான புகழுக்காகச் செய்திருக்கிறார். இஸ்லாமியர்களை பாஜக எளிமையான இலக்காக மாற்றியுள்ளது என்று சாடியுள்ளார். இதற்கிடையில் முஸ்லிம் திருமணம், விவாகரத்தை கட்டாய பதிவு செய்யும் மசோதா நேற்று அசாம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் மதக் கலவரம் உருவாக்கும் விதத்தில் ஹிமந்த பிஸ்வா பேசி வருவதாக அசாமில் உள்ள 18 எதிர்க்கட்சிகள் இணைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததது குறிப்பிடத்தக்கது.
- இந்துக்களுக்கு ஆபத்து, எனவே மேற்கு வங்காள பகுதிகளைப் பிரித்து யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்ற குரல் எழுந்தது
- 'நாங்கள் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். மாநிலத்தைப் பிரிக்கும் எந்த ஒரு முயற்சியையும் நாங்கள் எதிர்க்கிறோம்'
வங்காள தேச அகதிகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதால் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களைப் பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று பா.ஜ.க பக்கம் இருந்து அழுத்தம் வரத் தொடங்கியுள்ளது.
கடந்தவாரம் நடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின்போது பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே வங்காளதேச இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் நுழைவதால் இந்துக்களுக்கு ஆபத்து என்றும் எனவே அவர்கள் நுழையும் வழிகளாக உள்ள மேற்கு வங்காள பகுதிகளைப் பிரித்து யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில்தான், நேற்று மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, மாநிலத்தைப் பிரிக்கும் முயற்சிகளுக்கு [attempt to divide the state] எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
நேற்று இந்த தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் முன்மொழிந்து பேசிய மம்தா, 'நாங்கள் கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம். மாநிலத்தைப் பிரிக்கும் எந்த ஒரு முயற்சியையும் நாங்கள் எதிர்க்கிறோம்' என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் தற்போது மேற்கு வங்காளத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் ஊடுருவல் அதிகம் நடக்க வாய்ப்புள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் சாவும் நேற்று பேசியிருந்தார். மேலும் மேற்கு வங்காள பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, வங்காள தேசத்திலிருந்து 1 கோடி இந்துக்கள் மேற்கு வங்காளத்துக்குள் நுழைவார்கள் என்று பேசி சர்ச்சையைக் கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது.
- ஆந்திர சட்டமன்றத்தில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
- ஆளும் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்களில் 80 சதவீதம் பேர் கும்பலாக எழுந்து நின்றனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிடம் ஆட்சியிலிருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், அதனுடன் கூட்டணியில் உள்ள நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி 21 இடங்களிலும் வென்றது. ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 11 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. மீதம் உள்ள 8 இடங்களில் பாஜக வென்றது.
இதற்கிடையில் நாடாளுமன்றத் தேர்தலிலும் தெலுங்கு தேசம் ஜன சேனா கட்சிகள் கணிசமான இடங்களில் வென்ற நிலையில் அவை இடம்பெற்றுள்ள பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கவும் முக்கிய காரணியாகச் செயல்பட்டது.
மேலும் சட்டமன்றத் தேர்தலின் வெற்றியைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். துணை முதல்வராகப் பவன் கல்யாண் பதவி ஏற்றார். இந்நிலையில் சந்திரபாபு நாயுடு தங்களின் ஓ.எஸ்.ஆர் கட்சியைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருவதாக ஜெகன் மோகன் ரெட்டி குற்றம் சாட்டி வருகிறார். இந்த நிலையில் தான் நேற்று முன் தினம் நடந்த ஆந்திர சட்டமன்றத்தில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்களை நோக்கி பேசிய சந்திரபாபு நாயுடு, யார் மீதெல்லாம் ஜெகன் மோகன் ஆட்சியில் பொய் வழக்குகள் பதியப்பட்டதோ அவர்கள் கொஞ்சம் எழுந்து நில்லுங்கள் என்று சொல்லவே ஆளும் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்களில் 80 சதவீதம் பேர் [160 எம்எல்ஏக்கள்] கும்பலாக எழுந்து நின்றனர். இதில் துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் பல்வேறு அமைச்சர்களும் அடங்குவர்.
எம்.எல்.ஏக்கள் கூண்டோடு எழுந்துநின்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பின்னர் சபாநாயகரைப் பார்த்துப் பேசிய சந்திரபாபு நாயுடு, பார்த்தீர்களா, இத்தனை போரையும் ஜெகன் சிறைக்கு அனுப்ப முயன்றார் ஆனால் இவர்கள் அனைவரையும் மக்கள் நேராகச் சட்டமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர் என்று தெரிவித்தார். போலீசை வைத்து ஜனநாயகத்தின் வேர்களையே ஒய்.எஸ்.ஆர் தாக்கியுள்ளது. மாநிலத்தையே கஜானாவையே ஜெகன்மோகன் திவாலாகியுள்ளார் என்று சாடினார்.
முன்னதாக கடந்த வருடம் சந்திரபாபு நாயுடுவும் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது இவ்வாறிருக்க ஜெகன் மோகன் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு குறித்த வெள்ளை அறிக்கையை சந்திரபாபு நாயுடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
- இன்று அரசுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவைத் தடுக்க சிறப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
- நிதிஷ் குமாரின் இந்த கருதினால் அவையில் அமளி எழுந்தது
பீகார் மாநில சட்டமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் இன்று அரசுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவைத் தடுக்க சிறப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நடந்த சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் நடந்தது.
அப்போது லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ ரேகா தேவி, ஆளும் ஜனதா தள அரசின் பெண்கள் தொடர்பான கொள்கைகள் குறித்து விமர்சித்துப் பேசிக்கொண்டிருந்தார். திடீரென கோபமடைந்த முதல்வர் நிதிஷ் குமார், நீங்கள் ஏன் பேசுகிறீர்கள், நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு என்ன தெரியும், அமைதியாக உட்கார்ந்து கவனிங்க என்று கோபமாக கூறினார்.
நிதிஷ் குமாரின் இந்த கருதினால் அவையில் அமளி எழுந்த நிலையில், தொடர்ந்து பேசிய நிதிஷ் குமார், 'நீங்கள் தேவையில்லாத விஷயங்களை பேசிக்கொண்டிருக்கிறீர்கள், நீங்கள்[ஆர்ஜேடி] பெண்களுக்காக என்ன செய்தீர்கள், 2005 க்கு பிறகு நாங்கள் தான் பெண்களை உயர்த்தினோம்.அதனால் தான் நான் சொல்கிறேன். அதனை அமைதியாக கவனியுங்கள், கவனிக்காவிட்டால் அது உங்களின் தவறுதான்' என்று தெரிவித்துள்ளார்.
- ஹாசன் பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால்
- பாதிக்கப்பட்ட பெண் பேசாமல் இருக்க அவரை கடத்திய குற்றத்திற்காக எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் இந்தியப் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை உருவாக்கியவருமான தேவகௌடாவின் மகன் எச்.டி.ரேவண்ணா கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். இவரது மனைவி பவானி ரேவண்ணா. இவர்களது மகன்கள் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் சூரஜ் ரேவண்ணா.
ஹாசன் பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் இடையிலேயே பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிக்கியதால் ஜெர்மனிக்கு தப்பியோடினார். பிரஜ்வல் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிறகே இவை வெளிச்சத்துக்கு வந்தன. சமீபத்தில் பிரஜ்வல் நாடு திரும்பிய நிலையில் சிறப்பு புலனாய்வு குழு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று கூடிய கர்நாடக சட்டமன்றக் கூட்டத்தில் எச்.டி.ரேவண்ணா இந்த விவகாரம் குறித்து காரசாரமாக பேசியுள்ளார். அங்கு அவர் பேசியதாவது,எனது மகன் தவறு செய்திருந்தால் அவனை தூக்கில் போடுங்கள், நான் அதற்கு மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
'கர்நாடக காவல்துறை தலைமை இயக்குனர் அலோக் மோகன் மீதும் ரேவண்ணா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தனக்கு எதிராக சில பெண்களை இயக்குநகரகத்துக்கு அழைத்து வந்து வாக்குமூலம் அளிக்க வைத்து அலோக் மோகன் புகார் அளிக்க வைத்துள்ளார்.அவர் தலைமை இயக்குனராக இருப்பதற்கு தகுதியற்றவர்' என்று சட்டமன்றத்தில் ரேவண்ணா தெரிவித்துள்ளார். ரேவண்ணாவின் பேச்சுக்கு துணை முதலவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட பலர் கடனைகளை தெரிவித்தனர். முன்னதாக பாதிக்கப்பட்ட பெண்கள் ஒருவர் பின் ஒருவராக முன்வந்து புகார் அளித்து வருகின்றனர். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண் பேசாமல் இருக்க அவரை கடத்திய குற்றத்திற்காக எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்