search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டொனல்டு டிரம்ப்"

    • வீடியோ WOKE கலாச்சாரத்தை ஊக்குவிப்பதால் மஸ்க் கொதிப்படைந்துள்ளார்.
    • உங்கள் மார்க்கெட்டிங் டீமை வேலையில் இருந்து முதலில் தூக்குங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது ஏகபோக ஆதரவை பெற்ற டொனல்டு டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்தே எலான் மஸ்க் பயங்கர குஷியில் உள்ளார். அவருக்கு டிரம்ப் அமைச்சரவையில் Department of Government Efficiency or DOGE துறை பொறுப்பு விவேக் ராமசாமியுடன் பகிர்தளிக்கப்பட்டுள்ளது.

    தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்தில் படு ஆக்டிவாக போஸ்டர்களை போட்டு வரும் எலான் மஸ்க் தற்போது ஜாகுவார் கார் நிறுவனத்தை வம்புக்கு இழுத்துள்ளார். சுமார் 101 ஆண்டுகளாக கார் தயாரிப்பு தொழிலில் இருக்கும் ஜாகுவார் நிறுவனம் தனக்கென ஒரு பிராண்ட் வேல்யூவை உருவாக்கி வைத்துள்ளது. இந்நிலையில் தனது நிறுவன லோகவை புதுப்பிக்க ஜாகுவார் முடிவெடுத்துள்ளது.

    ஜாகுவார் பாய்வது போன்ற வடிவமைப்பை கொண்ட அந்நிறுவனத்தின் லோகோ பிரசித்தமாக இருந்துவரும் நிலையில் அதை புதுப்பிதுள்ளதாக வீடியோ வெளியிட்டு அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த வீடியோ பன்மைத்துவம் மற்றும் பாலின சமத்துவம், சமூக முன்முடிவுகளை உடைக்கும் தனிநபர் சுதந்திரம் ஆகியவற்றை அடியொற்றி அமெரிக்காவில் உருவான WOKE culture கலாச்சார தோரணையில் உள்ளது பழமைவாதியான எலான் மஸ்க்கை கொதிப்படைய செய்து இது குறித்து பேச வைத்திருக்கிறது.

    ஜாகுவாரின் முடிவு குறித்து பேசியுள்ள அவர், நீங்கள் கார்களை தான் தயாரிக்கிறீர்களா, நீங்கள் உண்மையில் விற்பது கார்களை தானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவர்கள் கார்களை தயாரிக்க வில்லை, தவறுகளை தயாரிக்கிறார்கள் என்றும், உங்கள் மார்க்கெட்டிங் டீமை வேலையில் இருந்து முதலில் தூக்குங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    பழமைவாதியான எலான் மஸ்க் தன்னை ஒத்த பழமைவாத சிந்தனை உடையதாலேயே டிரம்புக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி வருகிறார் என்பது ஜனநாயகவாதிகளின் வாதம். அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சியில் மக்கள் மீதான அரசின் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கும் என்பதே லிபரல்களின் அச்சமாக உள்ளது.

    முன்னதாக எலான் மஸ்க்கின் மகள் விவியன் வில்சன் மூன்றாம் பாலினத்தைச் சேர்த்தவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இதனால் உயிரோடிருக்கும் தனது மகன் சேவியர் இறந்துவிட்டாள் என்று மஸ்க் போட்டுவெளியில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. 

     

    • எல்லைக்குள் புகுந்தவர்களை நாடு கடத்துவேன் என்று டிரம்ப் தெரிவித்தார்
    • டிரம்பின் நாடு கடத்தல் நேரடியாக 2 கோடி குடும்பங்களைப் பாதிக்கும்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

    இவர் கடந்த 2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அதிபராக இருந்தவர் ஆவார். தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவில் அதிகரித்து வரும் சட்டவிரோதமான குடியேறிகள் மீது கடுமையான போக்கை டிரம்ப் கையாண்டார்.

    தொடர்ந்து அமைந்த ஜோ பைடன் ஆட்சியில் சற்று தளர்வான சூழல் நிலவிய நிலையில் தற்போது டிரம்ப் மீண்டும் பதவியேற்றுள்ளது விஷயத்தை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது. டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போதே சட்டவிரோத குடியேற்றம் குறித்து அதிகம் பேசினார்.

     

    சட்டவிரோதமாக அமெரிக்க எல்லைக்குள் புகுந்தவர்களை நாடு கடத்தி, மெக்சிகோவுடனான எல்லையை உறுதி செய்து நாட்டை பாதுகாப்பேன் என்று டிரம்ப் தெரிவித்தார்.

    இந்நிலையில் டிரம்ப் தலைமையிலான ஆட்சியில் தேசிய அவசரநிலை கொண்டு வரப்பட்டு, ராணுவத்தை பயன்படுத்தி புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்தவுள்ளார் என்று ட்ரூத் என்ற சமூக ஊடகத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள டிரம்ப், 'அது உண்மைதான்' என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

     

    அமெரிக்காவில் சுமார் 1.1 கோடி மக்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. டிரம்பின் நாடு கடத்தல் நேரடியாக 2 கோடி குடும்பங்களைப் பாதிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது

    • டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வாஷிங்டனில் பதவியேற்க இருக்கிறார்.
    • அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புக்கு தற்போதைய அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் 47-வது அதிபராக, குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உலகத் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபரான கமலா ஹாரிஸ் ஆகியோர் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தனர். டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வாஷிங்டனில் பதவியேற்க இருக்கிறார்.

    அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, வெள்ளை மாளிகையில் வந்து சந்திக்குமாறு அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பும் இன்று சந்தித்தனர். இந்தச் சந்திப்பு வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் நடந்தது. அதிபர் ஜோ பைடன், டிரம்புக்கு விருந்து அளித்து கவுரவித்தார்.

    அப்போது அதிகார மாற்றம் சுமூகமாகவும் அமைதியான முறையிலும் நடப்பது உறுதி செய்யப்படும். அது குறித்து அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

    அதற்கு பதிலளித்த டிரம்ப் அது எவ்வளவு சீராக முடியுமோ அவ்வளவு சீராக இருக்கும் என்றார்.

    4 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வெள்ளை மாளிகைக்கு டிரம்ப் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டொனால்டு டிரம்ப் 277 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளார்.
    • கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.

    உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270-க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தற்போது 277 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    டொனால்ட் டிரம்ப் உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள். அமெரிக்க அதிபராக நீங்கள் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்.

    எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றிப்பெற கமலா ஹாரிஸ்க்கும் வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றெடுத்தார்
    • உஷா சிலுக்குரியின் குடும்பம் ஆந்திர மாநிலம் வட்லூருவை பூர்வீகமாக கொண்டது.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு  இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும்.

    அந்த வகையில் 277 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் பதவியை குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் வென்றெடுத்தார். ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 224 எல்க்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். வெற்றி உறுதியான பின்னர் புளோரிடா மாகாணத்தில் டிரம்ப் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டு வெற்றியுரை ஆற்றினார்.

    அப்போது மேடையில் நின்றிருந்த ஜேடி வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா சிலுக்குரி வான்ஸ் ஆகியோரை நோக்கி கைகாட்டி இனி நான் உங்களை துணை அதிபர் என்று அழைக்கலாம் என்று பெருமிதமாக கூறினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வான்ஸ் முன்னர் அறிவிக்கப்பட்டபோது அவரது இந்திய வம்சாவளியை சேர்ந்த மனைவி உஷா கவனம் பெற்றார். கமலா ஹாரிஸ்க்கு எதிரான குடியரசுக் கட்சியின் நகர்வாக இது பார்க்கப்பட்டது.

    உஷா சிலுக்குரியின் குடும்பம் ஆந்திர மாநிலம் வட்லூருவை பூர்வீகமாக கொண்டது. 1970களில் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்டியாகோவுக்கு உஷாவின் குடும்பம் குடிபெயர்ந்தது. சான் டியகோவிலேயே பிறந்து வளர்ந்த உஷா, யேல் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவப் பட்டமும் பெற்றுள்ளார்.

    உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கீழ் சட்ட வல்லுநராக பணியாற்றினார். கடந்த 2014 ஆம் ஆண்டில் ஜன்நாயக கட்சியில் இணைந்த உஷா ஒரு விவாத நிகழ்ச்சியின்போது ஜே.டி.வான்ஸ்- ஐ சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையில் காதல் ஏற்படவே அதே ஆண்டில் இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைகளின்படி திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு தற்போது மூன்று குழந்தைகள் உள்ளனர்.

    தற்போது ஜேடி வான்ஸ் துணை அதிபர் ஆகியுள்ள நிலையில் உஷா அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக பணியாற்ற உள்ளார். இந்திய வம்சாவளியை சேர்நத ஒருவர் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாவது இதுவே முதல் முறை ஆகும் 

    • வெற்றி உறுதியான நிலையில் புளோரிடாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேசியுள்ளார்.
    • அமெரிக்காவின் எல்லைப் பிரச்சினைகள் சரிசெய்யப்படும்.

    உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் வெற்றிக்கு 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.

    இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தற்போது 277 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்

    வெற்றி உறுதியான நிலையில் புளோரிடாவில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேசியுள்ளார். மேடைக்கு தனது மகன், மகள், மருமகன், மருமகள் ஆகியோருடன் வந்த டிரம்ப்க்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது, அமெரிக்க வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி இதுவாகும். புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் வெற்றி பெற்றுள்ளோம். எனது ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக இருக்கும். அமெரிக்கா இனி குணமாகும்.

    அமெரிக்காவின் எல்லைப் பிரச்சினைகள் சரிசெய்யப்படும். என்னை தேர்வு செய்த அமெரிக்க மக்களுக்கு பெருமை சேர்ப்பேன். அமெரிக்கர்கள் ஒவ்வொருவரின் கனவும் மெய்ப்படும். எனது அழகான மனைவி மெலானியாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர் எனது வெற்றிக்காக கடுமையாக உழைத்தார் என்று பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் எலான் மஸ்க்கும் கலந்துகொண்டார்.எலான் மஸ்க்கை குறிப்பிட்டு,  ஒரு நட்சத்திரம் உதயமாகிவிட்டதாக டிரம்ப் தனது உரையின்போது நெகிழ்ந்தார்.

    • அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
    • குடியரசு கட்சியினர் கொண்டாட்டங்களில் இறங்கியுள்ளனர்.

    உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் வெற்றிக்கு 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள். 

    இந்நிலையில் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தற்போது 277 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அதிபர் தேர்தலில் டிரம்ப்பின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    அதன்படி அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார். எலக்ட்ரல் வாக்குகளை தாண்டி மக்களின் மொத்த வாக்கு அடிப்படையில் கடந்த 20 வருடங்களில் குடியரசு கட்சி முதல்முறை ஜனநாயக கட்சியை விட அதிக வாக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளது.

    கடந்த 2016 தேர்தலில் வெற்றி பெற்று அதிபரான டிரம்ப் அதற்கு அடுத்த 2020 தேர்தலில் தோல்வியை தழுவினார். இந்நிலையில் மூன்றாம் முறை மீண்டும் வென்று டிரம்ப் புதிய சாதனை படைத்துள்ளார். இதனால் வெள்ளை மாளிகை மீண்டும் டிரம்ப் வசம் வருவதால் குடியரசு கட்சியினர் கொண்டாட்டங்களில் இறங்கியுள்ளனர். 

    • அமெரிக்காவில் மொத்தம் 100 செனட் இடங்கள் உள்ளன
    • தேர்தலில் வெல்லும் முன்பே செனட் சபையில் டிரம்ப் ஆதிக்கத்தை உறுதி செய்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 214 எலக்டோரல் வாக்குகளையும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனல்டு டிரம்ப் 247 எலக்டோரல் வாக்குகளையும் பெற்றுள்ளனர். மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். 50 மாகாணங்களில் மொத்தம் 51.2% வாக்குகளுடன் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். 47.4% வாக்குகளுடன் கமலா பின்தங்கியுள்ளார்.

    இந்நிலையில் அமெரிக்க செனட் சபையில் [மேலவை] டிரம்ப்பின் குடியரசுக் கட்சி ஆதிக்கத்தை நிறுவியுள்ளது. செனட் [மேலவை] மற்றும் பிரதிநிதிகள் சபை [ஹவுஸ்] ஆகிய இரண்டிலும் அதிக இடங்களைக் குடியரசுக் கட்சி பெற்றுள்ளது. அமெரிக்காவில் மொத்தம் 100 செனட் இடங்கள் உள்ளன. இதில் 51 இடங்களில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி வென்றுள்ளது. கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சி 42 இடங்களில் உள்ளது.

    இதன்மூலம் செனட் சபையில் பெரும்பான்மை பெற்ற டிரம்ப்பின் குடியரசு கட்சி, நீதிபதிகளை நியமித்தல் உள்ளிட்ட மேலவை செயல்பாடுகளில் ஆதிக்கம் செலுத்தும். அதாவது, டிரம்ப் வெற்றி பெற்றால் எந்த தடங்கலும் இன்றி மேலவையில் உள்ள பெரும்பான்மையை வைத்து சுதந்திரமாக முடிவுகளை செயல்படுத்த முடியும். அதே நேரம் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றாலும், மேலவையில் டிரம்ப் கட்சியின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுவது கடினம். எனவே தேர்தலில் வெல்லும் முன்பே செனட் சபையில் டிரம்ப் தனது ஆதிக்கத்தை உறுதி செய்துள்ளார்.

    அதேபோல் 50 மாகாணங்கள் கொண்ட அமெரிக்காவில் 435 பிரதிநிதிகள் சபை [ஹவுஸ்] இடங்கள் உள்ளன. இதில் தற்போது 184 இடங்களில் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியும், 155 இடங்களில் கமலாவின் ஜனநாயக கட்சியும் வென்றுள்ளது. இதில் 218 இடங்களைக் கைப்பற்றும் கட்சியே பிரதிநிதிகள் சபையில் [ஹவுஸ்] பெரும்பான்மையைப் பெறும்

    • 51.1% வாக்குகளுடன் அவர் முன்னிலையில் உள்ளார்
    • 16 எலக்ட்ரல் வாக்குகளையும் பெற்று டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

    அடுத்த அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. அதன்படி மாகாணங்கள் வாரியாக வெற்றி தோல்விகள் அறிவிக்கப்பட்டு வருகிறன. மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 எலக்ட்ரல் பிரதிநிதிகளின் வாக்காகள் உள்ளன. இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவரே வெற்றி பெறுவார்.

    குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் 230 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றுள்ளார்.  51.1% வாக்குகளுடன் அவர் முன்னிலையில் உள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 209  எலக்ட்ரல் வாக்குகளை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் தற்போது 47.5% வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார்.

    ஆனால் உண்மையில் வெற்றியை தீர்மானிக்கப்போகும் ஸ்விங் மாகாணங்களில் கடும் இழுபறி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஸ்விங் மாகாணமாக வட கரோலினாவில் மொத்தம் உள்ள 16 எலக்ட்ரல் வாக்குகளையும் பெற்று டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

    இதைதவிர்த்து மீதமுள்ள பென்சில்வேனியா, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, விஸ்கான்சின் 6 ஸ்விங் மாகாணங்களில் கடும் இழுபறி நிலவி வருகிறது. அரிசோனாவில் 11, நெவேடாவில் 6, விஸ்கான்சின் 10, மிச்சிகனில் 11, பென்சில்வேனியாவில் 19, ஜார்ஜியாவில் 16 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன.

    ஜார்ஜியா:  டிரம்ப் - 50.8%, கமலா - 48.5%

    அரிசோனா: டிரம்ப் - 49.8%, கமலா - 49.3%

    நெவேடா: டிரம்ப் -  52.2%, கமலா - 46.1%

    விஸ்கான்சின்: டிரம்ப் - 51.2%, கமலா - 47.3%

    பென்சில்வேனியா:  டிரம்ப் - 50.9%, கமலா - 48.1% வாக்குகள் இடைவெளியில் உள்ளனர்.

    • 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவரே வெற்றி பெறுவார்.
    • தலைநகர் வாஷிங்க்டன் டிசி மாகாணத்தில் மொத்தம் உள்ள 12 எலக்ட்ரல் வாக்குகளையும் கமலா ஹாரிஸ் பெற்றார்

    அடுத்த அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின.

    அதன்படி மாகாணங்கள் வாரியாக வெற்றி தோல்விகள் அறிவிக்கப்பட்டு வருகிறன. மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 எலக்ட்டோரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 பேரின் ஆதரவை யார் பெறுகிறார்களோ அவரே வெற்றி பெறுவார்.

    அந்த வகையில் பிரதானமான கலிபோர்னியா மாகாணத்தில் மொத்தம் உள்ள 54 எலக்ட்ரல் வாக்குகளையும் பெற்று ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.

    அதேபோல் தலைநகர் வாஷிங்க்டன் டிசி மாகாணத்தில் மொத்தம் உள்ள 12 எலக்ட்ரல் வாக்குகளையும் கமலா ஹாரிஸ் பெற்று வெற்றி அடைந்துள்ளார். இரண்டு மாகாணங்களிலும் மொத்தமாக 66 எலக்ட்ரல் வாக்குகளைக் கமலா ஹாரிஸ் தன்வசப்படுத்தியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது
    • சமீபத்திய கருத்துக்கணிப்பில் டிரம்புக்கு 44 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளை [நவம்பர் 5] நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் [60 வயது] மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் [78 வயது] வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

    இந்திய - ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸின் தாய் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் துலசேந்திரபுரத்தை சேர்த்தவர். கமலா அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதே அவர் வெற்றி பெற வேண்டி இங்கு பூஜைகள் நடத்தப்பட்டது.

    இந்நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் கடவுளின் அனுக்கிரகத்தை டிரம்ப் பக்கம் திருப்ப டெல்லியைச் சேர்ந்த சாமியார் ஒருவர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

     

    மஹாமண்டலேஸ்வர் சுவாமி வேத் முதினானந்த சரஸ்வதி என்ற சாமியார் அமரிக்க அதிபர் தேர்தலில் கமலாவை தோற்கடித்து டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக டெல்லியில் ஹாவன் எனப்படும் பூஜையை நடத்தியுள்ளார். அந்த பூஜையில் மோடியின் நண்பர் டிரம்ப் என்ற வாசகங்களுடன் அவர்களின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    அமெரிக்க தேர்தலை பொறுத்தவரை சமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ்க்கு அவருக்கு 47 சதவீத ஆதரவும், டிரம்புக்கு 44 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பின்படி கமலா சற்று பின்தங்கியுள்ளார்.
    • தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

    உலக வல்லரசான அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்த்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. உக்ரைன் போர், பாலஸ்தீன போர்களுக்கு வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ள வாக்குப்பதிவு உலக அரசியலுக்கே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

    ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இரு தரப்புக்கும் பிரபலங்கள் தங்களின் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். டிரம்ப் பக்கம் தொழிலதிபர் எலான் மஸ்க் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கமலா ஹாரிஸுக்கு பாடகி டெய்லர் ஷிப்ட் ஆகியோர் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். ஆனாலும் சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பின்படி கமலா சற்று பின்தங்கியுள்ளார்.

     

    இந்நிலையில் ஆஸ்கார் விருது வென்ற டைட்டானிக் பட நாயகன், ஹாலிவுட் முன்னணி நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ கமலா ஹாரிஸுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அவர், இந்த மாத தொடக்கத்தில் ப்ளோரிடா, ஜார்ஜியா, வட கரோலினா பகுதிகளில் ஹெலன் மற்றும் மில்டன் சூறாவளியால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    அதி சக்தி வாய்ந்த இந்த அட்லாடிக் சூறாவளியால் மக்கள் தங்களின் வீடுகளையும் உறவுகளையும் இழந்துள்ளனர். 100 பில்லியன் டாலர் வரை சேதங்களை ஏற்படுத்திய இந்த அசாதாரணமான சூறாவளி காலநிலை மாற்றத்தின் விளைவே. ஆனால் டிரம்ப் காலநிலை மாற்றை தொடர்ந்து மறுக்கிறார்.

    அறிவியலையே அவர் மறுக்கிறார். பாரிஸ் காலநிலை தீர்மானத்திலிருந்து அமெரிக்காவை அவர் பின்வாங்கச் செய்தார். காலநிலை மாற்றம் நமது பூமியையும் பொருளாதாரத்தையும் அழித்துக்கொண்டிருக்கிறது. நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள நாம் செயலாற்றியாக வேண்டும். அதனால்தான் நான் கமலா ஹாரிஸ் -லி வாக்களிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    ×