search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வான் தாக்குதல்"

    • உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது.
    • தலைநகர் கீவில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுகிறது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது. ரஷியாவை எதிர்த்து போரிடும் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.

    ரஷியாவுடன் இணைந்து வடகொரிய படைகள் தாக்க உள்ளதால், தொலைதூரத்தில் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளைப் பயன்படுத்த அமெரிக்க அரசு உக்ரைனுக்கு அனுமதி அளித்தது.

    இதனால் அதிபர் புதின், ரஷிய படைகள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதி கொடுத்துள்ளதால் போர் தீவிரமடைந்துள்ளது.

    எந்நேரமும் உக்ரைனில் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், உக்ரைன் வாழ் அமெரிக்கர்களும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • வடக்கு காசாவின் பெய்ட் லாஹியாவில் உள்ள குடியிருப்பு கட்டடம் தாக்கப்பட்டுள்ளது.
    • இந்த தாக்குதலில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது

    லெபனான் தலைநகர் பெய்ரூட் புறநகர்ப் பகுதிகளில் இன்று(நவ. 17) இஸ்ரேல் தொடர் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. குடியிருப்பு கட்டடங்களில் தாக்குதல் நடந்து வருவதால் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

    இந்நிலையில் பாலஸ்தீனத்தில் வடக்கு காசாவின் பெய்ட் லாஹியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக காசா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக வடக்கு இஸ்ரேலில் செசாரியா [Caesarea] பகுதியில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் இல்லத்தின் மீது நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் வீட்டின் தோட்டத் பகுதி தீப்பிடித்து எரியும் காட்சிகள் வெளியானது.

    முன்னதாக கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி நேதன்யாகுவின் வீட்டைக் குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது 2 வது தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா குடியிருப்பு கட்டடம் மீது தற்போது தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் இதுவரை 3,452 பேரும், காசாவில் இதுவரை 43,846 பேர் உயிரிழந்துள்ளனர்.

    • ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நீடிப்பு.
    • சிரியா, ஈராக், ஈரான் ஆகிய மூன்று நாடுகள் உடனடியாக விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.

    ஈரான் மண்ணில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலுக்கு சரியான பாடம் புகட்டுவோம் என ஈரான் தெரிவித்திருந்தது. ஆனால் உடனடியாக தாக்குதல் ஏதும் நடத்தவில்லை. கடந்த 1-ந்தேதி திடீரென சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் அனைத்து ஏவுகணைகளையும் வான்பாதுகாப்பு சிஸ்டத்தால் தடுத்து முறியடித்தது.

    அதில் இருந்து ஈரான் மீது இஸ்ரேல் எப்போது வேண்டுமென்றாலும் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. சுமார் 25 நாட்கள் கழித்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே ஈரானின் ராணுவ தளங்களை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதனால் ஈரான் எப்போது வேண்டுமென்றாலும் பதிலடி தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் சூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஈரான், ஈரான் மற்றும் சிரியா ஆகிய மூன்று நாடுகள் உடனடியாக தங்களது வான் எல்லைகளை மூடியுள்ளது. விமான சேவையை ரத்து செய்துள்ளது.

    ஆனால் ஈரான் விரைவில் விமான சேவையை தொடங்குவோம் எனத் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளதை ஈரான் ஒத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் ஈரான் வான் எல்லையில் சுதந்திரமாக பறக்கும் வகையில் வான் எல்லைகள் திறக்கப்படடுள்ளன இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    ஆக்கிரமிக்கப்பட்ட குளோபன் ஹைட்ஸ் பகுதியில் இருந்தும், லெபனானில் இருந்து தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது வான் பாதுகாப்பை ஏற்படுத்தும் தேவையை அதிரிக்க வைத்துள்ளது என சிரியா தெரிவித்துள்ளது.

    சிரியாவில் உள்ள ஷியா மற்றும் அரசியல் குழுக்கள் ஈரான் ஆதரவுடன் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. 

    ×