search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94389"

    விழாவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    வெள்ளகோவில்:
     
    வெள்ளகோவில் அருகே உள்ள இலக்கமநாயகன்பட்டி ஊராட்சி  ஆண்டிபாளையத்தில் உள்ள மகாகணபதி, பகவதிஅம்மன், மாகாளியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு அதன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

    விழாவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    கோவில் நிர்வாகத்தின் சார்பில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கும்பாபிஷேகத்திற்கு பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. 
    விபத்து குறித்து வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கே.ராசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள உத்தண்டகுமாரவலசு பகுதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 70). சம்பவத்தன்று இரவு கோவை- திருச்சி மெயின் ரோட்டில் வெள்ளகோவில் அருகே உள்ள ஒத்தக்கடை பகுதியில் ரோட்டில் நடந்து சென்றார். 

    அப்போது  பின்னால் வந்த பைக் மோதியது. இதில் பொன்னுசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால்  சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி இறந்தார்.  

    இதுகுறித்து வெள்ளகோவில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கே.ராசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  
    மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிப்பு செய்ய தொடர்ச்சியாக வரும் 3 ஆண்டுகளுக்கு மரக்கன்று ஒன்றுக்கு ரூ.7- வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.
    வெள்ளகோவில்:

    விவசாயிகளுக்கு மானிய விலையில் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து வெள்ளகோவில் வேளாண் துறை உதவி இயக்குனர் ஆர்.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வனத்துறையும் இணைந்து வேளாண் விளை நிலங்களில் உற்பத்தியினை பாதிக்காத வகையில் பலன் தரும் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிப்பு மானியம் வழங்கும் திட்டத்தில் வெள்ளகோவில் வட்டாரத்திற்கு தேக்கு மற்றும் செம்மரம் கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு வழங்கும் மரக்கன்றுகளை பண்ணையை சுற்றிலும் வயல், வரப்புகள், பண்ணைக்குட்டைகள் அல்லது குறைந்த அளவு முறையில் விளை நிலங்களில் நடவு செய்யலாம். 

    இதற்காக மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது, இவ்வாறு வழங்கப்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிப்பு செய்ய தொடர்ச்சியாக வரும் 3 ஆண்டுகளுக்கு மரக்கன்று ஒன்றுக்கு ரூ. 7- வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. 

    இதன் மூலம் பண்ணை பகுதியை ஆண்டு முழுவதும் பசுமையாக மாற்றுவதுடன், எதிர்காலத்தில் மரக்கன்றுகள் மூலமாக நல்ல லாபம் ஈட்ட வழிவகை உள்ளது.

    ஆகவே வெள்ளகோவில் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் பகுதிக்கு வரும் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது வெள்ளகோவில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு விபரங்களைக் கேட்டு பயன்பெறலாம். 

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
    44வது மைலில் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் நிறுத்தப்பட்டு மீண்டும் செப்டம்பர் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே வள்ளியரச்சல், குழலிபாளையம், நடுப்பாளையம், மாந்தபுரம், மங்கலப்பட்டி ஆகிய பகுதி கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு கடைமடை வரை தண்ணீர் செல்கிறது.

    கீழ்பவானி வாய்க்காலில் கடந்த ஆகஸ்டு 15-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கடைமடை வரை வருவதற்கு 10 நாட்களுக்கு மேல் ஆனது. மேலும் 44வது மைலில் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் நிறுத்தப்பட்டு மீண்டும் செப்டம்பர் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    தற்போது கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் ததும்பி செல்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வள்ளியரச்சல் பகுதியில் விவசாயிகள் நாற்றங்கால் தயார் செய்தும், ஒரு சிலர் நெல் நடவும் செய்துள்ளனர்.
    வெள்ளகோவில் காவல் நிலையத்தில் காங்கேயம் வட்ட சட்ட பணி குழுவின் சார்பில் சட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் காவல் நிலையத்தில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் அக்டோபர் 2-ந் தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை வெள்ளி விழாவாக கொண்டாடப்படுகிறது. 

    இந்த வெள்ளி விழாவை முன்னிட்டு பொதுமக்கள் கூடுமிடம், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை ஆகிய அனைத்து பகுதிகளிலும் சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சட்ட விழிப்புணர்வு வாகனமும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. 

    இந்நிலையில் வெள்ளகோவில் காவல் நிலையத்தில் காங்கேயம் வட்ட சட்ட பணி குழுவின் சார்பில் சட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. 

    இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், வாசுதேவன், ஷாஜகான் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், ராஜ், ராஜமூர்த்தி மற்றும் தலைமை காவலர்கள், ஆண், பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.  
    தமிழ்நாட்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து 2022 ஜனவரி 21 - ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்.
    வெள்ளகோவில்:

    தமிழக அரசு கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி வெள்ளக்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் கள்ளுக்கான தடை அரசியலமைப்புச் சட்டத்துக்கும், உலகளாவிய நடைமுறைக்கும் எதிரானதாகும். உலக அளவில் தமிழ்நாட்டைத் தவிர எந்த ஒரு நாட்டிலும் கள் இறக்கவும், பருகவும் தடை இல்லை. 

    கள் விடுதலை வேண்டி 16 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு கள் இயக்கம் போராடி வருகிறது. கள் தடையை நீக்க இதுவரை ஆண்ட மாநில அரசுகள் முன்வரவில்லை. இதற்கு அடிப்படைக் காரணம் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் பெரும் வருமானமே ஆகும்.

    தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இதில் மாற்றமில்லை. இதர மதுபானங்களைவிட கள் கேடுவிளைவிக்கும் தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருள் என நிரூபித்தால் ரூ. 10 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது பயனற்றுப் போய்விட்டது.

    தமிழ்நாட்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து 2022 ஜனவரி 21-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். கள் இயக்கம் கொண்டிருக்கும் கோரிக்கைகளின் நியாயத்தை உணர்ந்தவர்களையும், கள் விடுதலையை ஏற்கும் கட்சிகளையும் ஒருங்கிணைத்து இந்த அறப்போராட்டம் நடத்தப்படும். 

    ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம் வெற்றியில் முடிந்ததைப் போல, இந்தப் போராட்டமும் வெற்றியடையும். மக்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தற்போதைய தமிழக அரசு 2021-ம் ஆண்டு இறுதிக்குள் கள்ளுக்கான தடையை நீக்கி அறிவிக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது என்றார். 

    கடந்த வாரம் 341 குவிண்டால் வரத்து இருந்த நிலையில் குவிண்டால் ரூ. 7, 450க்கு விற்பனையானது.
    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு திருச்சி, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 105 விவசாயிகள் தங்களுடைய 588 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர்.

    மொத்த வரத்து 195 குவிண்டால். திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 9 வணிகர்கள் வந்திருந்தனர். விலை குவிண்டால் ரூ. 6,250 முதல் ரூ.8,699 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,300. 

    ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ. 14 லட்சத்து 13 ஆயிரத்து 984. 
    கடந்த வாரம் 341 குவிண்டால் வரத்து இருந்த நிலையில் குவிண்டால் ரூ. 7,450க்கு விற்பனையானது. ஏல ஏற்பாடுகளை திருப்பூர் விற்பனைக் குழு முதுநிலைச் செயலாளர் பாலசந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
    98 விவசாயிகள் கலந்து கொண்டு 39 ஆயிரத்து 879 கிலோ தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். 

    இதில் 98 விவசாயிகள் கலந்து கொண்டு 39ஆயிரத்து 879 கிலோ தேங்காய் பருப்பை  விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், கொடுமுடி, ஈரோடு பகுதியைச் சேர்ந்த 10 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பை அதிகபட்சமாக ரூ.101.70-க்கும், குறைந்தபட்சம் ரூ.67.20க்கும் கொள்முதல் செய்தனர். 

    மொத்தம் ரூ.35லட்சத்து 70 ஆயிரத்து 689-க்கு வணிகம் நடைபெற்றது.
    இன்று காலை 2 பேரும் காரில் வெள்ளகோவில் கடைவீதி பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
    வெள்ளகோவில்:

    கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள பெரிய திருமங்கலத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52). நிதி நிறுவன அதிபர். இவரது மனைவி கோகிலாம்பாள் (41). இவர்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்றிரவு திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலுக்கு வந்தனர்.

    இன்று காலை 2 பேரும் காரில் வெள்ளகோவில் கடைவீதி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார், சக்திவேல் ஓட்டி சென்ற கார் மீது மோதியது. இதில் கோகிலாம்பாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். சக்திவேலுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்றனர். பின்னர் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
     
    கோகிலாம்பாள் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    தாசவநாயக்கன்பட்டி டாஸ்மாக் மதுபான கடை அருகே வெள்ளகோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டி டாஸ்மாக் மதுபான கடை  வெள்ளகோவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போதுஅங்கு சந்தேகப்படும்படி நின்ற ஒருவரை பிடித்துவிசாரித்தனர்.

    விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம், திருநகர் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் என்பதும் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 
    வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் ஆற்று வெள்ளத்தில் தரணிஷ் அடித்து செல்லப்பட்டார்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் எல்.கே.சி நகர் பகுதியை சேர்ந் தவர் தரணிஷ் (வயது19). இவர் தாராபுரத்தில் ஐ.டி.ஐ. படித்து வருகிறார். தரணிஷ் இவரது நண்பர்கள் வெங்கடேஷ், சுரேந்தர், ஆபிரகாம் ஆகிய 4 பேரும் வெள்ளகோவில் அருகே உள்ள புதுப்பை அணைக்கட்டு பகுதியில் உள்ள அமராவதி ஆற்றிற்கு குளிக்கச் சென்றனர்.

    அப்போது வெள்ள ப்பெருக்கு அதிகமாக இருந்ததால் ஆற்று வெள்ளத்தில் தரணிஷ் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து நண்பர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் நேற்று இரவு வரை தேடி கண்டுபிடிக்க முடியாததால் மீண்டும் இன்று காலை முதல் தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.
    பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் உள்ள சோழீஸ்வரர் ஆலயம், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் ஆலயம், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோவில், மாந்தபுரம் மாந்தீஸ்வரர் கோவில், உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில் மற்றும் வெள்ளகோவில் எல்.கே.சி. நகர் புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

    மேலும் சிவபெருமானுக்கும், நந்திக்கும் தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம், மலர் மற்றும் பன்னீரால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.   
    ×