search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • 10 நாட்களுக்கு மேலாக திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
    • ரூ.300 கட்டண டிக்கெட் மூலம் தரிசனம் செய்வதற்கு 4 மணி நேரம் ஆனது.

    கோடை விடுமுறையால் 10 நாட்களுக்கு மேலாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

    தேதி, நேரம் குறிப்பி டப்பட்ட தரிசன டோக்கன் இல்லாமல் நேரடியாக இலவச செய்து செல்லும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பி 5 கிலோமீட்டர் தூரத்திற்கு தரிசன வரிசையில் காத்திருந்தனர்.

    இன்று நேரடி இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆனது. ரூ.300 கட்டண டிக்கெட் மூலம் தரிசனம் செய்வதற்கு 4 மணி நேரம் ஆனது.

    நேற்று அதிகாலை 3 மணியிலிருந்து இரவு 7 மணி வரை 79,486 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 40,250 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.72 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • 3 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.
    • வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸில் அனைத்து அறைகளும் நிரம்பியது.

    திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    கோடை விடுமுறையால் 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    நேரடி இலவச தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸில் அனைத்து அறைகளும் நிரம்பியது.

    3 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கின்றனர். நேரடி இலவச தரிசனத்தில் 36 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதி மலையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

    மாலை 4 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை சுமார் 5 மணி அளவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

    சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகளில் விழுந்தன. அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தினர்.

    கிழ் திருப்பதியில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. பலத்த மழையின் காரணமாக தரிசனத்திற்கு வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கடும் குளிரிலும் நடுங்கியபடி வரிசையில் நின்றிருந்தனர்.

    திருப்பதியில் நேற்று 74,583 பேர் தரிசனம் செய்தனர். 40,343 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.57 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • அனைத்து ஆர்ஜித சேவைகளும் வழக்கம் போல் நடத்தப்படுகிறது.
    • தங்க வாசலில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 28-ந்தேதி உற்சவா் போக சீனிவாச மூர்த்திக்கு சிறப்பு சஹஸ்ர கலசாபிஷேகம் நடக்கிறது. கோவிலில் உள்ள தங்க வாசலில் அன்று காலை 6 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் வழக்கம் போல் நடத்தப்படுகிறது.

    போக சீனினிவாசமூர்த்தியின் 18 அங்குல வெள்ளி சிலையை 'பல்லவ ராணி' சாமவாய்பெருந்தேவியார் கி.மு. 614-ம் ஆண்டு ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார். அதை நினைவு கூறும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் கடந்த ஒன்றரை தசாப்தங்களாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு சஹஸ்ர கலசாபிஷேகத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 18 குடோன் நிரம்பியது.
    • ரூ.4.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    ஏழுமலையான் கோவிலில் நேற்று 78,349 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 39 ஆயிரத்து 634 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 18 குடோன் நிரம்பியது.

    நேரடி இலவச தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படாததால் இலவச தரிசனத்திற்கு நீண்ட நேரமாகிறது.

    • வியாழக்கிழமை திருப்பாவாடை சேவை தனிப்பட்ட முறையில் நடத்தப்படுகிறது.
    • நேரில் வரும் வி.ஐ.பி.களுக்கு மட்டுமே இடைவேளை தரிசனம் வழங்கப்படும்.

    கொரோனா தொற்று அச்சுறுத்தல் நீங்கியதாலும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருப்பதாலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வழிபட 30 மணியில் இருந்து 40 மணி நேரம் வரை காத்திருக்கின்றனர். இதனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் காத்திருக்கும் நேரம் இன்னும் அதிகமாகிறது.

    இந்தநிலையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி ெவளியிட்டுள்ள ெசய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பக்தர்களின் வசதிக்காக ஜூன் மாதம் 30-ந்தேதி வரை சாமி தரிசனம் மற்றும் வி.ஐ.பி. தரிசன சேவைகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுக்கிழமை காலை சேவைக்கான விருப்ப ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது, 20 நிமிட நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

    வியாழக்கிழமை திருப்பாவாடை சேவை தனிப்பட்ட முறையில் நடத்தப்படுகிறது. இது, 30 நிமிட நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

    வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. தரிசனங்களுக்கு பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நேரில் வரும் வி.ஐ.பி.களுக்கு மட்டுமே இடைவேளை தரிசனம் வழங்கப்படும். இதனால் தினமும் 3 மணி நேரம் மிச்சமாகும்.

    இந்த முடிவுகள் பல மணி நேரம் கிலோ மீட்டர் கணக்கில் தரிசன வரிசையில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான சாதாரணப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழி வகுக்கும். இதைக் கவனத்தில் கொண்டு பக்தர்கள் மற்றும் வி.ஐ.பி.கள் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • ரூபாய் 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    கோடைகால விடுமுறை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 29 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர்.

    இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ரூபாய் 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதி ஏழுமலையானை ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தரிசிக்க, அந்த மாதங்களுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் 24-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.

    பக்தர்கள் இதைக் கவனித்து, திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளமான https://tirupatibalaji.ap.gov.in -ல் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் நேற்று 85,297 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    37,392 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். கோவில் உண்டியலில் செலுத்திய காணிக்கை இரவு எண்ணப்பட்டது இதில் ரூ.3.71 கோடி காணிக்கையாக கிடைத்தது.

    • தீபக் குமார் பாண்டே உடன் வந்த அவரது மகள் ஆதியா திடீரென காணாமல் போனார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலை மற்றும் திருப்பதி முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    திருப்பதி:

    பீகார் மாநிலம், ராஜ்பூரை சேர்ந்தவர் தீபக் குமார் பாண்டே. இவரது மகள் ஆதியா (வயது4) இவர்கள் உறவினர்களுடன் நேற்று திருப்பதிக்கு தரிசனத்திகாக சென்றனர்.

    பின்னர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பஸ்சில் வந்த தீபக் குமார் பாண்டேயுடன் வந்தவர்கள் ஜி.என் சி பஸ் நிறுத்தத்தில் இறங்கினர்.

    நேற்று திருப்பதி மலையில் தரிசனத்திற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் எங்கு பார்த்தாலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தீபக் குமார் பாண்டே உடன் வந்த அவரது மகள் ஆதியா திடீரென காணாமல் போனார்.

    தன்னுடன் வந்தவர்களின் குழந்தையுடன் ஆதியா சென்று இருக்கலாம் என திருமலை முழுவதும் தேடிப் பார்த்தனர். இரவு வரை தேடியும் சிறுமியை காணவில்லை. இது குறித்து திருமலை போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து திருமலை மற்றும் திருப்பதி முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் சிறுமி மாயமானாரா? அல்லது யாராவது கடத்தி சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமியை எங்காவது பார்த்தால் உடனடியாக தேவஸ்தான அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.
    • இலவச தரிசனத்தில் 36 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் 18 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

    இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகள் பக்தர்கள் நிரம்பி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை தரிசனத்திற்காக காத்துக் கிடக்கின்றனர்.

    பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்தவதற்காக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. சிபாரிசு கடித தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

    வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் தரிசன நேரம் பாதியாக குறைந்துள்ளது. இலவச தரிசனத்தில் 36 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் 18 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் குவிந்து இருந்தாலும் குறைந்த நேரத்தில் தரிசனம் செய்து வருவதால் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இன்று ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 3 மணி நேரத்திலும், இலவச நேர ஒதுக்கீடு டிக்கெட் உள்ள பக்தர்கள் 5 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் நேற்று 81,833 பேர் தரிசனம் செய்தனர். 33,860 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.31 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • 4 கிலோ மீட்டர் தூரம் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
    • நேரடி இலவச தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கோடை விடுமுறை காரணாமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

    இதனால் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வழிகின்றன. இன்று காலை வைகுந்தம் காம்ளக்சில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

    ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் சுமார் 5 மணி நேரமும், நேரம் ஒதுக்கிடு முறையில் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 8 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    நேரடி இலவச தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மோர் உள்ளிட்டவைகளை தன்னார்வலர்கள் கொண்டு வழங்கி வருகிறது.

    மேலும் தரிசன நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் வருகிற ஜூன் மாதம் 15-ந் தேதி வரை முக்கிய பிரமுகர்கள் சிபாரிசு கடிதத்தின் அடிப்படையில் வழங்கும் விஐபி தரிசனம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் செயல்அதிகாரி தர்மா அறிவித்துள்ளார்.

    திருப்பதியில் நேற்று 66,820 பேர் தரிசனம் செய்தனர். 36,905 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.29 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வழிகின்றன.
    • ரூ 300 தரிசன டிக்கெட் வரும் 24-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணாமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

    இதனால் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வழிகின்றன. இன்று காலை வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ்சில் இருந்து கெங்கையம்மன் கோவில் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

    தற்போது திருப்பதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மோர் உள்ளிட்டவைகளை தன்னார்வலர்கள் கொண்டு வழங்கி வருகிறது.

    ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் சுமார் 5 மணி நேரமும், நேரம் ஒதுக்கிடு முறையில் இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 10 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    நேரடி இலவச தரிசனத்தில் 36 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஏழுமலையின் கோவிலில் இன்று முதல் 20-ந் தேதி வரை சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாரதனை, ஆகிய சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

    கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவைகள் தொடர்பான டிக்கெட்டுகள் 21-ந் தேதி வெளியிடப்படும். ஸ்ரீவாணி, அங்க பிரதட்சணம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் 23-ந் தேதி வெளியிடப்படுகிறது.

    இதேபோல் ரூ 300 தரிசன டிக்கெட் வரும் 24-ந் தேதியும், திருப்பதியில் அறை ஒதுக்கீடு 25-ந் தேதியும், திருமலையில் அறை ஒதுக்கீடு 26-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.

    இந்த சேவைகளை பக்தர்கள் பயன்படுத்திக்கொண்டு பயனடைமாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதியில் நேற்று 79,207 பேர் தரிசனம் செய்தனர். 41,427 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோடை விடுமுறையையொட்டி பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
    • இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைகள் மற்றும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வெவ்வேறு தேதிகளில் வெளியிடப்படுகிறது.

    முன்கூட்டியே இது குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டிய நிலை உள்ளது. இதனால் பக்தர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

    ஆனாலும் சிறப்பு தரிசன டிக்கெட் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் முன்பதிவு செய்து விடுகின்றனர்.

    இந்த நிலையில் மாதந்தோறும் குறிப்பிட்ட தேதிகளில் ஆர்ஜித சேவை மற்றும் ரூ.300 கட்டண டிக்கெட்டுகளை வெளியிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    ஒவ்வொரு மாதமும் 18 முதல் 20-ந் தேதிக்குள் சுப்ரபாதம் தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். பொது ஆர்ஜித சேவைக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் 21-ந் தேதி வெளியிடப்படும்.

    மாதந்தோறும் 24-ந் தேதி ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு இலவச தரிசனம் டிக்கெட் வழங்கப்படுகிறது. நடைபாதையாக செல்லும் பக்தர்களுக்கு 1240-வது படிக்கட்டில் சாமி தரிசனம் செய்ய இலவச டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 70,366 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 38,653 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.32 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.

    இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • அன்னதானத்தில் தரமான அரிசியை பயன்படுத்தி வருகிறோம்.
    • உணவின் தரம் தொடர்ந்து பரிசோதிக்கப்படுகிறது.

    திருமலையில் உள்ள அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பக்தர்கள் தெரிவித்த புகார்கள், குறைகள், ஆலோசனைகளுக்கு பதில் அளித்துப் பேசினார்.

    பக்தர்கள் தெரிவித்த குறைகளும், அதற்கு அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி அளித்த பதில்களும் வருமாறு:-

    கோபிச்சாரி, குண்டூர்: திருப்பதி தேவஸ்தான இணையதளம் மற்றும் மொபைல் ஆப் பயன்பாடு நன்றாக உள்ளது. ஸ்ரீவாரி சேவைக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது ப்ரொபைல் பைலாக வருகிறது. அதை சரி செய்ய வேண்டும்.

    அதிகாரி: நாங்கள் போன் செய்து விவரம் தெரிவிப்போம்.

    அபர்ணா, அனந்தபுரம்: அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 2 மட்டும் ஆன்லைனில் பதிவாகி வருகிறது. அதை 4 ஆக அதிகரிக்க வேண்டும்.

    அதிகாரி: ஒரு பக்தர் ஆன்லைனில் 2 அங்கப்பிரதட்சண டோக்கன்களை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இந்த டோக்கன் பெற முடியாத பக்தர்கள் வேறு வழிகளில் தரிசனம் செய்யலாம். நீங்கள் ஒவ்வொரு மாதமும் 18 முதல் 20 வரை ஆர்ஜித சேவைகளின் லக்கி டிப்புக்கு பதிவு செய்யலாம். 20-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை டிப் டிக்கெட் பெற்றவர்கள் பணத்தைச் செலுத்தி டிக்கெட் வாங்க வேண்டும். பிற ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 21-ந்தேதி வெளியாகிறது. ஸ்ரீவாணி, அங்கப்பிரதட்சண, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் 23-ந்தேதி வெளியிடப்படுகிறது. அதேபோல் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் 24-ந்தேதி, அறைகள் ஒதுக்கீடு 25-ந்தேதி வெளியிடப்படும். இதைக் கருத்தில் கொண்டு பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    சீனிவாஸ், சிலக்கலூரிபேட்டை: கல்யாண உற்சவத்தில் குழந்தைகள் பங்கேற்க அனுமதிப்பார்களா?

    அதிகாரி: கல்யாண மண்டபத்தில் இடம் குறைவாக உள்ளதால் கோவிலில் அதிக மக்களை அனுமதிக்க வாய்ப்பில்லை. மைனர்கள் பெற்றோருடன் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    ஜெயஸ்ரீ, ஐதராபாத்: மே மாதம் திருமலைக்கு வந்தோம். வெயிலின் வெப்பத்தால் சாலையில் நடந்தது சிரமமாக இருந்தது. தரை விரிப்புகள் போடுங்கள்.

    அதிகாரி: கோடையில் கோவில் தெருக்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பகுதிகளில் குளிர்ச்சியாக இருக்க நாங்கள் கூல் பெயிண்ட் மற்றும் மேட்களை போடுகிறோம். அடிக்கடி தண்ணீர் தெளித்து வருகிறோம். ஏதேனும் பிழைகள் இருந்தால் சரி செய்யப்படும்.

    அசோக், சென்னை: மகா அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் நீராட புஷ்கரணிக்கு சென்றால், அங்கு இரவில் புஷ்கரணியை மூடி வைத்துள்ளனர். மேலும் திருமலை நம்பி கோவில் வாசலில் கேட் அமைத்துள்ளனர்.

    அதிகாரி: மகா அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இரவில் புஷ்கரணி திறந்து வைக்கப்படும். திருமலைநம்பி கோவில் வாசலில் உள்ள கேட் அகற்றப்பட்டு காவலர்கள் நிறுத்தப்படுவார்கள்.

    வெங்கட், காக்கிபாரா: லட்டு தரம் சரியில்லை. அன்னதானத்தில் அரிசியின் தரம் சரியில்லை.

    அதிகாரி: லட்டு தயாரிக்கும் தரமான மூலப்பொருட்களை டெண்டர் மூலம் வாங்கி வருகிறோம். சிறந்த தரத்துக்கான பரிந்துரைகளை போட்டு ஊழியர்களுக்கு வழங்குவோம். அன்னதானத்தில் தரமான அரிசியை பயன்படுத்தி வருகிறோம். உணவின் தரம் தொடர்ந்து பரிசோதிக்கப்படுகிறது.

    மேற்கண்டவாறு பக்தர்கள் தெரிவித்த குறைகளுக்கு அதிகாரி பதில் அளித்தார்.

    ×