search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94452"

    • இணையதளத்தில் ஒதுக்கீடு அடிப்படையில் டோக்கன்கள் வெளியிடப்படுகிறது.
    • அங்கப்பிரதட்சண டோக்கன்கள் வழங்குவது பிப்ரவரி 22-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஒதுக்கீடு அடிப்படையில் டோக்கன்கள் வெளியிடப்படுகிறது.

    எனினும், கோவிலில் பாலாலயம் நடக்க இருப்பதால் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் வழங்குவது பிப்ரவரி மாதம் 22-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் டோக்கன்களை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆகாக கங்கை தீர்த்தத்தில் இருந்து ஒரு சிறிய வெள்ளிக்குடத்தில் புனிதநீர் எடுத்துவரப்பட்டது.
    • தீர்த்தத்தால் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 25 நாட்கள் ஆத்யாயன உற்சவம் நடந்து வந்தது. அதாவது, கோவிலில் நடந்த வைகுண்ட ஏகாதசியையொட்டி 11 நாட்கள் முன்பே ஆத்யாயன உற்சவம் தொடங்கியது. அதில் முதல் 11 நாட்கள் 'பகல் பத்து' என்றும், அடுத்த 10 நாட்கள் 'இரவு பத்து' என்றும் கூறுவர்.

    அதைத்தொடர்ந்து 22-வது நாள் 'கண்ணுநுண் சிறுத்தாம்பு' பாசுரம் பாடப்பட்டது. 23-வது நாள் ராமானுஜர் நூற்றுந்தாதி பாடப்பட்டது. 24-வது நாள் வராகசாமி சாத்துமுறை உற்சவம் நடந்தது. 25-வது நாளான நேற்று முன்தினம் ஆத்யாயன உற்சவம் நிறைவையொட்டி தண்ணீர் அமுது உற்சவம் நடந்தது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தண்ணீர் அமுது உற்சவம் நடப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ராமானுஜரின் தாய் மாமனான பெரிய திருமலைநம்பி. இவர், ஏழுமலையான் கோவிலுக்கு வந்து தங்கி பல்வேறு கைங்கர்யம் செய்து வந்தார்.

    திருமலையில் உள்ள பாபவிநாசனம் தீர்த்தத்துக்கு தினமும் அதிகாலை நேரத்தில் சென்று மண்பானையில் தண்ணீர் எடுத்து வந்து, மூலவர் ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்து வந்தார். ஒருமுறை பாபவிநாசனத்துக்கு தண்ணீர் எடுத்து வர சென்றபோது, முதியவர் வேடத்தில் வந்த ஏழுமலையான் சிரமப்பட்டு இவ்வளவு தூரத்தில் உள்ள பாபவிநாசனம் தீர்த்தத்துக்கு தண்ணீர் எடுக்க செல்ல வேண்டாம், அருகில் உள்ள ஆகாச கங்கை தீர்த்தத்துக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய், எனக்கூறி விட்டு மாயமானார்.

    அன்று முதல் பெரிய திருமலைநம்பி ஆகாச கங்கை தீர்த்தத்துக்கு தினமும் அதிகாலை நேரத்தில் சென்று தண்ணீர் எடுத்து வந்து மூலவர் ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்து வந்தார். அந்த நிகழ்வை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏழுமலையான் கோவிலில் ஆத்யாயன உற்சவத்தின் நிறைவு நாள் அன்று "தண்ணீர் அமுது" உற்சவம் நடக்கும்.

    அதன்படி நேற்று முன்தினம் மாலை தண்ணீர் அமுது உற்சவம் நடந்தது. அதற்காக ஆகாக கங்கை தீர்த்தத்தில் இருந்து ஒரு சிறிய வெள்ளிக்குடத்தில் புனிதநீர் எடுத்துவரப்பட்டது. அந்தத் தீர்த்தத்தை உற்சவர் மலையப்பசாமிக்கு முன்னால் கோவிலின் நான்கு மாடவீதிகளில் மேள தாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கோவிலுக்குள் எடுத்துச்சென்று அந்தத் தீர்த்தத்தால் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    அந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஊழியர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • டிசம்பர் மாதம் 16-ந் தேதி மாலை மார்கழி மாதம் தொடங்கியது.
    • ஒரு மாதமாக சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் திருப்பாவை பாசுர பாராயணம் நடந்தது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தை தவிர மற்ற மாதங்களில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் சுப்ரபாத சேவைக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 16-ந் தேதி மாலை மார்கழி மாதம் தொடங்கியது. மார்கழி மாதம் தொடங்கியதையொட்டி 17-ந் தேதி அதிகாலை முதல் நேற்று முன் தினம் அதிகாலை வரை கடந்த ஒரு மாதமாக சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் திருப்பாவை பாசுர பாராயணம் நடந்தது.

    நேற்று முன்தினம் மார்கழி மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று அதிகாலை சாமிக்கு மீண்டும் சுப்ரபாத சேவை நடந்தது.

    திருப்பதியில் நேற்று 76,307 பேர் தரிசனம் செய்தனர். 29,573 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.14 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • துளசி பூஜை, கோபம்மா பூஜை ஆகியவை நடக்கிறது.
    • பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதியில் உள்ள தேவஸ்தான கோசாலையில் 16-ந்தேதி கோபூஜை மஹோற்சவம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு வேணுகான இசையுடன் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கி, வேத பாராயணம், வேணுகோபாலசாமி பூஜை, துளசி பூஜை, கோபம்மா பூஜை ஆகியவை நடக்கிறது.

    பின்னர் மாடுகள், குதிரைகள், யானைகளுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு வெல்லம், பழம், பச்சரிசி, தீவன புல், கரும்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. அதேபோல் பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • திருமலையில் ரத சப்தமி விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது.
    • நாளை முதல் சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்குகிறது.

    திருமலை :

    திருமலையில் உள்ள அன்னமய பவனில் பக்தர்களிடம் இருந்து குறைகள் கேட்கும் நிகழ்ச்சி (டயல் யுவர் இ.ஓ) நடந்தது. நிகழ்ச்சிக்கு முன் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பேசியதாவது:-

    இந்துக்களுக்கு முக்கியமான பண்டிகைகளில் ஒன்று சங்கராந்தி. இந்தத் திருநாளில் அனைத்துப் பக்தர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    திருமலையில் ரத சப்தமி விழா வருகிற 28-ந்தேதி நடக்கிறது. விழாவை பிரமாண்டமாக நடத்த விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். கோவிலின் நான்கு மாட வீதிகளில் உள்ள கேலரிகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தொடர்ந்து உணவு, குடிநீர், காபி, டீ, பால் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்குகிறது.

    கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் ஏழுமலையான் கோவிலில் 20 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். உண்டியல் வருமானமாக ரூ.129.37 கோடி கிடைத்தது. 1 கோடியே 8 லட்சம் லட்டுகள் விற்பனையாகின. 38 லட்சத்து 78 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர். 8 லட்சத்து 45 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

    2022-ம் ஆண்டில் ஏழுமலையான் கோவிலில் 2 கோடியே 37 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். உண்டியல் வருமானமாக ரூ.1450.41 கோடி கிடைத்துள்ளது. 11 கோடியே 54 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 4 கோடியே 77 லட்சம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றுள்ளனர். 1 கோடியே 9 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 6 லட்சத்து 9 ஆயிரத்து 219 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    • ரூ.39.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2-ந் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    தொடர்ந்து 10 நாட்கள் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.

    வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனம் நேற்று இரவு நிறைவடைந்தது. இதையடுத்து அர்ச்சகர்கள் சாஸ்திரப்படி வைகுண்ட வாசலை அடைத்தனர்.

    வைகுண்ட ஏகாதசி நாட்களான 2-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ரூ 300 ஆன்லைன் டிக்கெட்டில் 25 ஆயிரம் பேரும், இலவச தரிசனத்தில் 50 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

    வைகுண்ட ஏகாதசி முதல் நாள் அன்று முன்னாள் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள் உட்பட ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதனால் அன்று ஒரே நாளில் ரூ.7.68 கோடி உண்டியல் வருவாய் கிடைத்தது.

    இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களில் 2.50 லட்சம் பேர் தரிசனத்திற்கு வரவில்லை. இதனால் வைகுண்ட ஏகாதசி நாட்களில் தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.

    வைகுண்ட ஏகாதசி 10 நாட்களில் 6 லட்சத்து 9 ஆயிரத்து 219 பக்தர்கள் தரிசனம் செய்தனர். ரூ.39.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    திருப்பதியில் நேற்று 68,855 பேர் தரிசனம் செய்தனர். 21,280 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.61 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • திருப்பாவாடை ஆர்ஜித சேவை மீண்டும் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.
    • விமானத்தில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே நேரடி முன்பதிவு டிக் கெட்டுகள் வழங்கப்படும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்வதைக் கருத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை ஆயிரமாக குறைத்துள்ளது.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் ஸ்ரீவாணி அறக்கட்டளையை ஏற்படுத்தியது. இந்த அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்குபவர்களுக்கு விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கியது.

    அதன்படி, பக்தர்கள் நன் கொடை அளித்து ஏழுமலையானை தரிசித்து வந்தனர். இதுவரை பக்தர்களின் தேவைக்கு ஏற்றபடி வழங்கப்பட்டு வந்த ஸ்ரீவாணி அறக்கட்டளை விஐபி பிரேக் டிக்கெட்டுகளின் எண்ணிக் கையை, தேவஸ்தானம் ஒரு நாளைக்கு 1,000 டிக்கெட்டுகளாக குறைத்துள்ளது.

    அதில், 750 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமும், மீதமுள்ள 250 டிக்கெட்டுகள் ரேணிகுண்டா விமான நிலையத்தில் உள்ள தற்போதைய முன்பதிவு மையத்தில் பக்தர்களுக்கு நேரிடையாக வழங்கப்படுகிறது.

    தேவஸ்தானம் ஏற்கனவே 500 ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. மேலும், 250 டிக்கெட்டுகள் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது.

    இதுவரை திருப்பதி பஸ் நிலையம் எதிரில் உள்ள மாதவம் ஓய்வு இல்லத்தில் வழங்கப்பட்டு வந்த ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் வழங்கும் மையத்தை தேவஸ்தானம் மூடியது.

    இனிமேல் விமானம் மூலம் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு மட்டுமே ஸ்ரீ வாணி அறக்கட்டளையின் விஐபி பிரேக் தரிசனத்தின் நேரடி முன்பதிவு டிக் கெட்டுகள் வழங்கப்படும். கொரோனா காலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த திருப்பாவாடை ஆர்ஜித சேவை மீண்டும் நாளை முதல் தொடங்கப்பட உள்ளது.

    இதற்காக பக்தர்கள் திருமலையில் உள்ள சிஆர்ஓ கவுன்ட்டரில் தங்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மின்னணு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து தினமும் 25 பக்தர்களுக்கு வழங்கப்படும்.

    குழுக்களில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் தங்கள் டிக்கெட்டுகளை பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதியில் நேற்று 58,184 பேர் தரிசனம் செய்தனர்.16,122 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.20 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • சூரியன் அவதாரத்தினத்தை ரத சப்தமியாகக் கொண்டாடுகிறார்கள்.
    • இதை சூரிய ஜெயந்தி என்றும் அழைப்பார்கள்.

    சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் ரத சப்தமி முக்கியமானது. சூரியன் அவதாரத்தினத்தை ரத சப்தமியாகக் கொண்டாடுகிறார்கள். சூரிய ஜெயந்தி என்றும் அழைப்பார்கள். அதன்படி வருகிற 28-ந்தேதி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட உள்ளூர் வைணவ கோவில்களில் ரத சப்தமி விழா நடக்கிறது.

    கோவில்களில் ரத சப்தமிக்கான விரிவான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மம் திருப்பதியில் இருந்தபடியே அனைத்துக் கோவில் அதிகாரிகளை காணொலி காட்சி மூலம் தொடர்பு கொண்டு கலந்துரையாடி ஆலோசனை நடத்தினாா்.

    அப்போது இணை அதிகாரி வீரபிரம்மன் பேசியதாவது:-

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில், நாராயணவனம், நாகலாபுரம், கடப்பா ஆகிய கோவில்களில் ரதசப்தமியை முன்னிட்டு வாகனச் சேவையுடன் மூல மூர்த்தியை முறைப்படி தரிசனம் செய்ய அனைத்து முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். வாகனச் சேவைக்கு பயன்படுத்தக்கூடிய வாகனங்களை முன்கூட்டியே பரிசோதிக்க வேண்டும்.

    கடப்பாவில் உள்ள லட்சுமி வெங்கடேஸ்வரா் கோவிலில் தேரோட்டத்துக்காக தேர் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. அந்தந்தக் கோவில்களில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் ஏற்பாடு செய்து, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    அதேபோல் ஜம்மு, சென்னை, ராமச்சோடவரம், சீ்தம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் மகா கும்பாபிஷேகம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அந்தந்தக் கோவில்களுக்கு தேவையான நகைகள், கற்சிலைகள், பஞ்சலோக சிலைகள், அர்ச்சகர், ஊழியர்கள், இதர பிரதிநிதிகள், பணியாளர்கள், சுகாதார ஏற்பாடுகள் போன்றவை விவாதிக்கப்பட்டது.

    கோவில்கள் தொடர்பான பணிகள் முன்னேற்றம் குறித்து பொறியியல் துறை அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வழங்குதல், மின் விளக்கு அலங்காரம், மலர் அலங்காரம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கோவில் அதிகாரிகள், பிற துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • 2-ந்தேதியிலிருந்து 11-ந்தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் நடக்கிறது.
    • பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை பெற்று சாமி தரிசனம் செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் பணி நிறைவு பெற்றது.

    அதேபோல் திருப்பதியில் சீனிவாசம், அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாசம் ஆகிய 3 இடங்களில் ஏற்கனவே வழங்கப்பட்ட தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் 12-ந்தேதி முதல் வழக்கம்போல் வினியோகம் செய்யப்படும். பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை பெற்று சாமி தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை உணவிற்கு ரூ.7.70 லட்சமும், மதியம் ரூ.12.65 லட்சம், இரவு உணவிற்கு ரூ.12.65 லட்சம் செலவாகிறது.
    • காலை, மதியம், இரவு என தனித்தனியாகவும் அன்னதான நன்கொடை வழங்கலாம்.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளை சார்பில் தினமும் காலை, மதியம், இரவு என நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் வைகுண்ட க்யூ காம்ப்ளக்ஸ் அறைகளில் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுப்பப்படுகின்றனர்.

    தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு அன்னதானம் வழங்க ரூ.33 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    அன்னதானத்திற்காக நாளொன்றுக்கு சுமார் 14 முதல் 16.5 டன் அரிசியும், 6.5 டன் முதல் 7.5 டன் வரை காய்கறிகளும் பயன்படுத்துவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. காலை உணவிற்கு ரூ.7.70 லட்சமும், மதியம் ரூ.12.65 லட்சம், இரவு உணவிற்கு ரூ.12.65 லட்சம் செலவாகிறது.

    எனவே அன்னதானம் வழங்க விருப்பமுள்ள பக்தர்கள் ஒரு நாளைக்கு தேவையான அன்னதானம் வழங்க ரூ.33 லட்சம் செலுத்தலாம்.

    மேலும் காலை, மதியம், இரவு என தனித்தனியாகவும் அன்னதான நன்கொடை வழங்கலாம் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அன்னதான செலவுத் தொகையை வழங்கும் பக்தர்கள் அன்னதானம் செய்யும் நாள் அன்று அவர்களே முன் நின்று அன்னதானம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 2-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 20 நாட்களுக்கான 5 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.
    • பிப்ரவரி மாதத்திற்கு 7 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.

    திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.

    தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் வரும் 12-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 20 நாட்களுக்கான 5 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.

    பிப்ரவரி மாதத்திற்கு 28 நாட்களுக்கான 7 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் என மொத்தம் 12 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.

    நாளை காலை பிப்ரவரி 28-ந்தேதி வரைக்கான தங்கும் அறை வாடகை முன்பதிவு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    பக்தர்கள் அறை வாடகையை முன்பதிவு செய்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருப்பதியில் நேற்று 67,169 பேர் தரிசனம் செய்தனர். 21,222 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.86 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    • பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட்டுகள் முன்பதிவு திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 12-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரையிலும், பிப்ரவரி மாதத்திலும் திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க ரூ.300 டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    எனவே பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×