என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94468"
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிக அளவு தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம்.
தற்போது பெய்து வரும் பலத்தமழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து பாதியாக குறைந்து.
இதனால் தக்காளி விலை திடீரென அதிகரித்தது. மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரையிலும், வெளி மார்க்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.150 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
பின்னர் கனமழை இல்லாததால் கடந்த 3 நாட்களாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது . இதனால் தக்காளி விலை ரூ.50 ஆக குறைந்தது. இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்து இருந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்யத்தொடங்கி இருப்பதால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து இன்று குறைந்தது. 51 லாரிகளில் மட்டும் தக்காளி விற்பனைக்கு வந்தது. சாதாரண நாட்களில் 60 முதல் 70 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வருவது வழக்கம்.
தக்காளி வரத்து குறைந்ததால் மீண்டும் விலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.60-க்கும், சில்லரை கடைகளில் கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் மீண்டும் கவலை அடைந்து உள்ளனர். மழை முடியும் வரை தக்காளி விலையில் ஏற்றம், இறக்கம் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது:-
தமிழகத்தில் தக்காளி உற்பத்தி நடைபெற்று வரும் பழனி, ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட வியாபாரிகள் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக தக்காளி தேவை அதிகரித்து உள்ளது. மேலும் இந்த பகுதிகளில் மீண்டும் 2 நாட்களாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகவும், வரத்து குறைவு காரணமாகவும் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக கோவையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தக்காளி ரூ.100-ஐ தாண்டி விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து பசுமை பண்ணை கடைகளில் கிலோ ரூ.75-க்கு தக்காளி விற்பனை செய்ய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கோவை மார்க்கெட்டுகளுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இதனால் தக்காளியின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.100 முதல் ரூ.120-க்கு விற்பனையான தக்காளி நேற்று கிலோ ரூ.60க்கு விற்பனையானது. இன்று காலை கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் நாட்டு தக்காளி ரூ.50க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.50க்கும் விற்பனையாகி வருகிறது. 2 நாட்களாக விலை உயர்ந்து காணப்பட்ட தக்காளியின் விலை இன்று குறைந்ததால் மக்களும் நிம்மதி அடைந்தனர். அவர்கள் மார்க்கெட்டுகளில் வழக்கம் போல் தக்காளி மற்ற காய்கறிகளை வாங்கி சென்றனர்.
இதேபோல் கோவை உழவர்சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.58க்கு விற்பனையாகி வருகிறது. ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் தக்காளி சீசன் தொடங்கியுள்ளதால் வருகிற நாட்களில் தக்காளி விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வேலூர்:
வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இதுதவிர வேலூர் மற்றும் அண்டை மாவட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளும் கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் மழையின் காரணமாக காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தக்காளி ஒரு கிலோ ரூ.100-யை தாண்டி விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து காட்பாடி காங்கேயநல்லூர் ரோட்டில் உள்ள பசுமை பண்ணை அங்காடியில் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று பசுமை பண்ணை அங்காடியில் ஒரு கிலோ தக்காளி ரூ. 69-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை ஆர்வமுடன் பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
வேலூர் மார்க்கெட்டிற்கு இன்று தக்காளி வரத்து அதிகமானதால் விலை ஓரளவு குறைந்தது. கிலோ ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.60 வரை விற்பனையானது.
நேதாஜி மார்க்கெட்டில் (ஒருகிலோவிற்கு) கத்தரி ரூ.100, வெண்டைக்காய் ரூ.100, கேரட் ரூ.60, பீன்ஸ் ரூ.70 என விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் 140 வரை விற்கப்பட்டது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில் திருவள்ளூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் தக்காளி கிலோ ரூ.79-க்கு விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது.
திருவள்ளூர் ஜெ.என். சாலையில் உள்ள மொத்த விற்பனை கூட்டுறவு பண்டக சாலையில் தக்காளி விற்பனையை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
மேலும் திருவள்ளூர் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து பகுதிகளுக்கும் நடமாடும் வாகனம் மூலம் தக்காளியை விற்பனையையும், கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தக்காளியை வாங்கிச் சென்றனர்.
திருவள்ளூரில் வெளி சந்தையில் தக்காளி கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். தற்போது கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.79-க்கு விற்பனை செய்வதால் தக்காளி வாங்க கூட்டம் அலை மோதுகிறது. ஒருவருக்கு ஒரு கிலோ மட்டும் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குனர் வேல்முருகன், துணைப்பதிவாளர் காத்தவராயன் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் மொத்த காய்கறி மார்க்கெட், அண்ணா மார்க்கெட், டி.கே. மார்க்கெட் மற்றும் ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், சாய்பாபா காலனி உள்பட பல இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டுகள் மற்றும் சந்தைகளுக்கு தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, நாச்சிபாளையம், காரமடை, பெரியநாயக்கன் பாளையம், அன்னூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தக்காளிகள் அதிகளவில் விற்பனைக்கு வரும். இதுதவிர கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்தும் தக்காளிகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.
கடந்த சில வாரங்களாக கோவையில் கொட்டி தீர்த்த வடகிழக்கு பருவமழையால் தக்காளி செடிகள் அனைத்தும் செடியிலேயே கருகி அழுகி விட்டன. இதனால் மார்க்கெட்டுகளுக்கு வரும் தக்காளி வரத்து வெகுவாக குறைந்தது. வரத்து குறைவு காரணமாக சிலநாட்களாக தக்காளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து ரூ.100 முதல் ரூ.120-யையும் தாண்டி விற்பனையானது.
இதனால் தக்காளி வாங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். சில ஓட்டல்களிலும் குறைவான அளவிலேயே தக்காளிகள் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டது.
தொடர்ந்து தக்காளி விலை ஏறுமுகமாக இருந்ததால் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு, கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளிலும் தக்காளி மற்றும் காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்க ஏற்பாடு செய்தது.
அதன்படி கோவையில் சிந்தாமணி தலைமை அலுவலகம், கோவை மாவட்ட நூலக ஆணைக்குழு கட்டிட வளாகம், பூ மார்க்கெட் ஆவின் பால் விற்பனை அலுவலகம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தக்காளி மற்றும் காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டன. இதனால் கூட்டுறவு அங்காடிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நேற்று கோவை டி.கே.மார்க்கெட்டில் ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.100-க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.120-க்கும் விற்பனையானது. இன்று காலை நாட்டு தக்காளி கிலோவுக்கு ரூ.10 குறைந்து, ரூ.90க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.20 குறைந்து, ரூ.100க்கும் விற்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினத்தை விட இன்று தக்காளி விலை சற்று குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து டி.கே.மார்க்கெட் வியாபாரி ஒருவர் கூறுகையில், பருவமழை காரணமாக தக்காளி வரத்து வெகுவாக குறைந்து விட்டது. இதன் காரணமாக தக்காளி விலையும் மக்கள் யாரும் எதிர் பாராத விலை உச்சத்தை தொட்டு விட்டது. தற்போது நாட்டு தக்காளியை ரூ.90-க்கும், ஆப்பிள் தக்காளியை ரூ.100-க்கும் விற்பனை செய்து வருகிறோம். இன்னும் ஒரு வார காலத்திற்கு இதே விலை தான் நீடிக்கும். தக்காளி வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.
கோவையில் உள்ள உழவர் சந்தைகளில் நேற்று நாடு மற்றும் ஆப்பிள் தக்காளி கிலோ ரூ.70 முதல் ரூ.74 வரைக்கும் விற்பனையானது. இன்று நாடு மற்றும் ஆப்பிள் தக்காளி குறைந்தபட்சமாக ரூ.75க்கும், அதிகபட்சமாக ரூ.80க்கும் விற்பனையாகி வருகிறது. இதற்கிடையே உழவர் சந்தை உள்ளிட்ட காய்கறி அங்காடிகளில் ஒரு நபருக்கு 2 கிலோ தக்காளி மட்டுமே வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து உழவர் சந்தை வியாபாரிகள் கூறுகையில், மழையால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இருப்பினும் தக்காளி தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக உழவர் சந்தை உள்ளிட்ட காய்கறி அங்காடிகளில் ஒரு நபருக்கு 2 கிலோ முதல் 5 கிலோ வரை தக்காளி விற்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதிகாரிகள் அறிவுறுத்தல்படியே நாங்கள் தக்காளியை விற்று வருகிறோம். 5 கிலோவுக்கு மேலோ அல்லது மொத்தமாகவோ விற்பது கிடையாது என்றனர்.
தமிழகத்தில் தக்காளி விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ. 140 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் தக்காளி இல்லாமலேயே இல்லத்தரசிகள் கடந்த சில நாட்களாக சமையல் செய்து வருகிறார்கள்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ஆண்டு மே 5-ந்தேதி கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது. பின்னர் இந்த மார்க்கெட் அதே ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி மீண்டும் திறக்கப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டில் 86 சென்ட் நிலப்பரப்பில் தக்காளி கிரவுண்டு என்ற மைதானம் உள்ளது. இங்கு தான் தக்காளி ஏற்றி வரும் லாரிகள் நிறுத்தப்பட்டு சரக்குகள் இறக்கப்படும்.
கோயம்பேடு மார்க்கெட்டை அரசு திறந்தாலும் இந்த மைதானத்தை திறக்கவில்லை. இந்த மைதானத்திற்குள் தக்காளியுடன் ஏற்றிவரப்பட்ட 11 லாரிகள் முன்பு நிறுத்தப்பட்டபோது அதிகாரிகள் மைதானத்தை நுழைவு வாயிலை பூட்டி விட்டனர்.
இதனால் தக்காளிகள் அழுகிய நிலையில் பல நாட்களுக்குப் பின்னர், ஐகோர்ட்டு உத்தரவின்படி லாரிகள் வெளியில் எடுக்கப்பட்டது.
இதனால் வெளி மாநிலங்களிலிருந்து தக்காளி ஏற்றி வரும் வாகனங்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வருவதில்லை. இதன் காரணமாக தக்காளி விலை தமிழகத்தில் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
தற்போது இந்த மைதானத்தை திறந்தால் ஜெய்பூர், உதய்பூர், நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆந்திரா, கர்நாடகம் வழியாக தக்காளி லாரிகள் இங்கு கொண்டு வந்து, மைதானத்தில் நிறுத்தி சரக்குகளை இறக்க முடியும். இதன் மூலம் தக்காளி விலை அதிரடியாக குறைக்க முடியும்.
கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை பொதுமக்களுக்கு விற்பனை செய்து தமிழக அரசுக்கு உதவ எங்கள் சங்கம் தயாராக உள்ளது. எனவே தக்காளி மைதானத்தை திறக்க கோரிய எங்கள் வழக்கை உடனே விசாரணைக்கு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து கணிசமான அளவு குறைந்துள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ள நிலையில் தக்காளி மற்றும் கத்தரிக்காய் விலை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில் நேற்று மதுரை மார்க்கெட்டுகளில் 120 ரூபாய் வரை விற்கப்பட்ட தக்காளி மற்றும் கத்தரிக்காய் இன்று விலை குறைய தொடங்கியுள்ளன.
மதுரையில் உள்ள பீ.பி.குளம் அண்ணாநகர், பழங்காநத்தம் உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ 85 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
மேலும் கத்தரிக்காய் 60 ரூபாய்க்கும், இஞ்சி 40 ரூபாய்க்கும், பல்லாரி 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 45 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டன.
இதர காய்கறிகளின் விலையும் சற்று குறைந்து காணப்பட்டதால் பொது மக்கள் காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டினர். சமையலுக்கு பயன்படுத்தப்படும் மல்லி இலை கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெளிமார்க்கெட்டில் நேற்று 120 ரூபாய் வரை விற்கப்பட்ட தக்காளி இன்று 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கத்தரிக்காய் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. மார்க்கெட்டுகளில் தக்காளி மற்றும் கத்தரிக்காய் விலை குறையத் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் தயக்கத்தை தவிர்த்து அதிக அளவில் காய்கறிகளை வாங்கினர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வந்ததால் பல்வேறு மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இங்கு மட்டுமல்ல ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் அதிக மழை பெய்து வந்ததால் அங்கும் விளைச்சல் பாதிக்கப்பட்டது.
தொடர்மழையால் தக்காளியை உடனுக்குடன் பறித்து லாரியில் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. தக்காளி செடிகளும் தண்ணீரில் அழுகியது.
இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுகளில் இருந்தும், ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து குறைந்தது.
இதனால் கடந்த வாரம் ரூ.60, ரூ.70-க்கு விற்கப்பட்ட 1 கிலோ தக்காளி ரூ.140 வரை விலை உயர்ந்தது.
கோயம்பேட்டை சுற்றி உள்ள தி.நகர், வில்லிவாக்கம், பெரம்பூர், ஆவடி, அமைந்தகரை, மயிலாப்பூர், அடையார், திருவான்மியூர், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை, எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட மார்க்கெட்டுகளிலும் தக்காளி அதிகமான விலைக்கு விற்கப்பட்டது.
இப்போது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிகமான தக்காளி வரத் தொடங்கியதால் மளமளவென தக்காளி விலை குறைய தொடங்கி உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் 1 கிலோ தக்காளி ரூ.30 வரை விலை குறைந்துள்ளது. இதுபற்றி கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்கத்தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது:-
சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தக்காளி செடிகள் அழுகி பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டது.
வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 80 லாரிகளில் தக்காளி வரும். ஆனால் கடந்த சில நாட்களாக 30 லாரிகள் அளவுக்குத்தான் தக்காளி வந்தது.
இதனால் 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிலோ தக்காளி மொத்த வியாபாரத்தில் ரூ.110 வரை விலை உயர்ந்தது. இவற்றை வாங்கிச் செல்லும் சில்லறை வியாபாரிகள் அதற்கு மேல் விலை வைத்து விற்பார்கள். அந்த வகையில் வெளியில் ரூ.120 முதல் ரூ.140 வரை தக்காளி விற்கப்பட்டுள்ளது.
இப்போது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இன்று 45 லாரிகளில் தக்காளி வந்துள்ளதால் 1 கிலோ தக்காளி ரூ.110-ல் இருந்து ரூ.80 ஆக குறைந்துள்ளது. 2-ம் ரக தக்காளி 1 கிலோ ரூ.70-க்கு விற்கிறோம்.
இதை வாங்கி விற்கும் சில்லறை வியாபாரிகள் அதற்கேற்ப விலையை குறைப்பார்கள் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தக்காளி விலை சற்று குறைய தொடங்கி உள்ள போதிலும் பச்சை காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இனி வரும் நாட்களில் மழை பொழிவை பொறுத்தே காய்கறிகள் விலை குறைய தொடங்கும். இந்த விலை உயர்வு மேலும் 15 நாட்கள் வரை நீடிக்க வாய்ப்புள்ளது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
இன்றைய காய்கறிகளின் மொத்த விற்பனை விலை விபரம் (கிலோவுக்கு) வருமாறு:-
வடகிழக்கு பருவமழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததை அடுத்து தமிழகத்தில் உள்ள மார்க்கெட்டுகளில் தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூரிலும் தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து கூடலூரில் உள்ள மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து இன்று அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக இன்று மார்க்கெட்டில் தக்காளி ரூ.55க்கு விற்பனையானது. விலை குறைந்ததால் பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி மற்றும் கத்தரிக்காய் விலை கடுமையாக உயர்ந்தது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் கத்தரிக்காய், தக்காளி விலை இதுவரை இல்லாத அளவு விலை உயர்ந்தது.
ஒரு கிலோ வெள்ளை கத்தரிக்காய் ரூ.150-க்கும், ஒரு கிலோ தக்காளி விலை ரூ.140-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் நேற்று நெல்லையில் கத்தரிக்காய் மற்றும் தக்காளி விலை சற்று குறைந்தது. வெள்ளை கத்தரிக்காய் கிலோ ரூ.90-க்கும், தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையானது.
இந்த நிலையில் தமிழக அரசு தக்காளி விலையை குறைக்க வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதியை அதிகரித்தது. மேலும் பண்ணை பசுமை கடைகளிலும், நகர்ப்புற ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்க நடவடிக்கை எடுத்தது. இதைத்தொடர்ந்து இன்று கத்தரிக்காய் மற்றும் தக்காளி விலை மேலும் குறைந்தது.
நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள உழவர் சந்தையில் தக்காளி விலை ரூ.90 முதல் ரூ.94 வரை விற்கப்படுகிறது. வெள்ளை கத்தரிக்காய் விலை ரூ.70 முதல் ரூ.85 வரை விற்கப்படுகிறது. கலர் கத்தரிக்காய் ரூ.40-க்கு விற்கப்பட்டது.
நயினார்குளம் மொத்த மார்க்கெட்டில் இன்று தக்காளி விலை கிலோ ரூ.80-க்கு விற்பனையானது. கத்தரிக்காய் விலை ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது. பாளை மார்க்கெட்டிலும் தக்காளி விலை கிலோ ரூ.80 ஆக குறைந்தது. கத்தரிக்காய் ரூ.70 முதல் ரூ.85 வரை விற்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் உள்ள மார்க்கெட்களிலும் தக்காளி விலை இன்று கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. பசுமை பண்ணை கடைகளில் தக்காளி விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டதால் வெளி மார்க்கெட்களிலும் விலை குறைந்துள்ளது.
இதுபோல பாவூர்சத்திரம் மற்றும் தென்காசி மார்க்கெட்களிலும் தக்காளி விலை இன்று கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது.
குடியிருப்பு பகுதியில் உள்ள சில்லறை கடைகளில் தக்காளி விலை இன்று கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது. கத்தரிக்காய் ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது தமிழக அரசு ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனை செய்ய உள்ளதாலும், பெங்களூரு மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து தக்காளி அதிக அளவில் தமிழகம் கொண்டு வரப்படுவதாலும் மேலும் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்