search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபசாரம்"

    கோவையில் விபசாரத்தில் ஈடுபட்ட் 3 இளம்பெண்களை மீட்ட போலீசார் பெண் புரோக்கர்கள் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி பஸ் நிறுத்தம் அருகே நேற்று 2 பெண்கள் நின்று கொண்டு அந்த வழியாக வரும் ஆண்களிடம் எங்களிடம் அழகான இளம்பெண்கள் உள்ளனர். அவர்களிடம் உல்லாசம் அனுபவிக்க விரும்புகிறீர்களா? என விபசாரத்திற்கு அழைப்பு விடுத்து கொண்டிருந்தனர்.

    இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த ஒருவர் இதுகுறித்து போத்தனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பெண்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பெண்களை வைத்து வீட்டில் விபசார நடத்தி வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் விபசார புரோக்கர்களான குறிச்சி கல்லுக்குழியை சேர்ந்த பிரேமா(58), கோவை மாச்சம்பாளையத்தை சேர்ந்த பவித்ரா(43) ஆகிய 2 பேரை கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 38 வயது பெண் ஒருவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    இதேபோன்று கோவை சரவணம்பட்டி அருகே உள்ள பஸ் நிறுத்தம் அருகே காரில் இருந்த பெண் உள்பட 2 பேர் அங்கு வரும் ஆண்களை விபசாரத்திற்கு அழைத்துள்ளனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு இருந்த விபசார புரோக்கர்கள் கோவை ரத்தினபுரியை சேர்ந்த சந்திரசேகர்(38), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ரம்யா(31) ஆகியோரை கைது செய்தனர். விபசாரத்துக்கு ஈடுபடுத்தப்பட்ட பெங்களூரை சேர்ந்த பெண் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த 28 வயது பெண் ஆகியோரை மீட்டு போலீசார் காப்பகத்தில் சேர்த்தனர். அவர்களிடம் இருந்த காரை பறிமுதல் செய்தனர்.

    சென்னையில் 151 ‘மசாஜ் கிளப்’புகளில் போலீசார் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். விபசாரம் நடப்பதாக வந்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    சென்னையில் ஏராளமான மசாஜ் கிளப்புகள் செயல்படுகின்றன. ஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில் இந்த மசாஜ் கிளப்புகள் நடத்தப்படுகின்றன. சென்னை மாநகராட்சியில் இதற்கு அனுமதி பெற வேண்டும். மாநகராட்சியும் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் மசாஜ் கிளப்புகளுக்கு அனுமதி வழங்குகிறது.

    மசாஜ் கிளப்புகளில் ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் மட்டுமே மசாஜ் செய்ய வேண்டும். ஆனால் இந்த விதிமுறையை மீறி ஆண்களுக்கு பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் மசாஜ் செய்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாக போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன.

    அந்தவகையில் சென்னையில் 151 மசாஜ் கிளப்புகள் விதிமுறைகளை மீறியும், உரிய அனுமதி பெறாமலும் செயல்படுவதாக பட்டியலிடப்பட்டது. போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின்படி உதவி கமிஷனர்கள் தலைமையில் போலீசார் 151 மசாஜ் கிளப்புகளில் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது சட்ட விரோதமாக மசாஜ் கிளப் நடத்திய உரிமையாளர்களும், புரோக்கர்களும் பிடிபட்டனர். பல மசாஜ் கிளப்புகளில் ஆயுர்வேத சிகிச்சை என்று கூறிக்கொண்டு வெளிப்படையாக விபசாரத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

    விபசாரத்துக்கு ஆண்களை அழைப்பதில் ஒரு ரகசிய வார்த்தை வைத்து இருந்தனர். மசாஜ் கிளப்புகளுக்கு ஆண்கள் செல்லும்போது பவுடர் மசாஜ் வேண்டுமா? ஆயில் மசாஜ் வேண்டுமா? என்று கேட்பார்கள். பவுடர் மசாஜ் என்றால், அது சாதாரணமாக இருக்கும். அதில் 'செக்ஸ்' கலந்து இருக்காது. ஆயில் மசாஜ் என்றால், அழகிகளோடு உல்லாசமாக இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    போலீஸ் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையால் நேற்று மாலை பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இரவு வரையிலும் சோதனை நீடித்ததால், பிடிபட்ட அழகிகள் எத்தனை பேர்?, புரோக்கர்கள் எத்தனை பேர் பிடிபட்டார்கள்? என்ற விவரங்களை போலீசார் உடனடியாக வெளியிடவில்லை.
    கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ் அறையில் விபசார தொழிலில் ஈடுபட்ட அழகி, புரோக்கர் மற்றும் லாட்ஜ் மேனேஜரை போலீசார் கைது செய்தனர்.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் தற்போது கோடை விடுமுறை சீசன் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது.

    சுற்றுலா பயணிகள் கூட்டத்தை பயன்படுத்தி சமூக விரோதிகளும் கன்னியாகுமரியில் ஊடுருவி சுற்றுலா பயணிகளிடம் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். இதனால் அவர்கள் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க கன்னியாகுமரியல் போலீஸ் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரியின் முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மாறு வேடங்களிலும் போலீசார் கண்காணிப்பு நடக்கிறது.

    அதேப்போல விபசார செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் தற்போது கன்னியாகுமரிக்கு பல மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் படை எடுத்து வருவதால் விபசார கும்பல் நடமாட்டமும் அதிகமாக இருப்பதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றது.

    இந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜ் முன்பு விபசார புரோக்கர் நின்று கொண்டு அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளை அழகியுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி இடையூறு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த லாட்ஜ் முன்பு நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சத்யன் (வயது 52) என்ற விபசார புரோக்கர் நின்றுகொண்டு விபசாரத்திற்காக சுற்றுலா பயணிகளை அழைத்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த லாட்ஜ் அறையில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு ஒரு அறையில் அரை குறை ஆடையுடன் அழகி ஒருவர் இருந்ததும் தெரிய வந்தது.

    போலீசாரை கண்டதும் அந்த அழகி அதிர்ச்சி அடைந்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர். அவரது கைப்பையை சோதனை செய்த போது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. அதையும் போலீசார் கைப்பற்றினார்கள். மேலும் அந்த லாட்ஜின் மானேஜரும் கைது செய்யப்பட்டார்.
    கொடைக்கானல் தங்கும் விடுதியில் வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரம் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் இளம்வயது வாலிபர்களை குறிவைத்து சமூகவிரோத கும்பல் போதை காளான், அழகிகளை வைத்து மயக்கி வருகின்றனர்.

    இதனால் அந்த வாலிபர்கள் மீண்டும், மீண்டும் கொடைக்கானலுக்கு இதற்காகவே வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் வாலிபர்களிடம் பணத்தை கரந்து ஏமாற்றிச்செல்கின்றனர்.

    பாம்பார்புரம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் பாம்பார் புரம் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ், மார்டின் என தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து இளம் பெண்களை அழைத்து வந்து கொடைக்கானல் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கவைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விடுதியில் இருந்த வெளிமாநில பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    வளசரவாக்கம் மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 5 பெண்களை மீட்ட போலீசார் மசாஜ் சென்டர் மேலாளரை கைது செய்தனர்.
    போரூர்:

    வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மசாஜ் சென்டர் மற்றும் அழகு நிலையங்கள் என்கிற பெயரில் வெளி மாநில பெண்களை வைத்து சிலர் விபச்சாரம் நடத்தி வருவதாக தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தனுக்கு புகார்கள் வந்தன.

    அவற்றை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோட்டில் முதல் தளத்தில் இயங்கி வந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் சென்ற தனிப்படை போலீசார் மசாஜ் சென்டரில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு அறையில் பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.

    உடனடியாக மசாஜ் சென்டர் மேலாளர் ஜெயந்தி(42) என்பவரை கைது செய்தனர். இவர் வேளச்சேரி கன்னிகாபுரத்தை சேர்ந்தவர்.

    விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சென்னை, மும்பை, கொல்கத்தாவைச் சேர்ந்த அழகிகள் 5 பேரையும் மீட்டு மயிலாப்பூர் அரசு பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர். தலைமறைவான மசாஜ் சென்டர் உரிமையாளர் தமிழ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பி வாடிக்கையாளர்களை அழைத்து மசாஜ் என்கிற பெயரில் நூதன முறையில் விபசாரம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    சென்னையில் வலைதளங்கள் மூலம் என்ஜினீயர்களுக்கு வலைவிரித்து ‘ஹைடெக்’ விபசார தொழிலில் ஈடுபட்ட புரோக்கர் பூங்கா வெங்கடேசன் கைது செய்யப்பட்டார்.

    சென்னை:

    சென்னையில் விபசார தொழில் ஹைடெக் தொழில் நுட்பத்தை புகுத்தி அசத்தும் கில்லாடி புரோக்கர் பூங்கா வெங்கடேசன் (43).

    தென்சென்னையில் 60-க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்களை நடத்தி வருகிறார். விபசார தொழிலை வெளிப்படையாக தெரியாமல் இருப்பதற்காக இவர் தேர்ந்தெடுத்து இருப்பது சமூக வலைத்தளங்கள். மென் பொறியாளர்களை குறிவைத்து இந்த வலைத் தளங்கள் மூலம் தனது விபசார தொழில் ஹை டெக் ஆக நடத்தி வருகிறார்.

    இந்த தளங்கள் மூலம் பெண்களின் விபரம் உள்ளிட்ட தகவல்களை அறிந்து ஆன்-லைனில் பதிவு செய்துகொள்ள முடியும். ஓட்டல், அறை எண், நேரம் எல்லாவற்றையும் ஆன்லைனில் பதிவு செய்து பணத்தையும் செலுத்திவிட வேண்டியதுதான்.

    பூங்கா வெங்கடேசனின் வங்கி கணக்குக்கு பணம் சென்றுவிடும். சம்பந்தப்பட்ட பெண்களுக்கும் அவர்களது வங்கி கணக்குக்கு வெங்கடேசன் பணத்தை அனுப்பி வைப்பார். விபச்சாரத்திலும் அவர் கையாளும் டிஜிட்டல் தொழில்நுட்பம் அவருக்கு கை கொடுத்தது.

    ஏற்கனவே பலமுறை போலீசில் சிக்கிய வெங்கடேசன் தொழிலை மட்டும் விடாமல் புதுபுது முறையில் விரிவு படுத்தியே வந்தார். இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் திட்ட மிட்டனர். இதை மோப்பம் பிடித்த வெங்கடேசன் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு செய்தார். அந்த மனு கடந்த மாதம் தள்ளுபடி ஆனது.

    இதையடுத்து விபசார பிரிவு போலீஸ் உதவி கமி‌ஷனர் மகேஸ்வரி தலைமையிலான போலீஸ் படையினர் அவரை பிடிக்க தேடினர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் ஆந்திராவில் தலைமறைவாக இருந்தார்.

    அவரது இருப்பிடத்தை கண்காணித்து வந்த போலீசார் பூங்கா வெங்கடேசனையும், அவரது கூட்டாளியான சம்பத்குமார்(22) என்பவரையும் கைது செய்தனர்.

    அவர்கள் இருவரையும் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 

    கோவை சித்தாபுதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்தி வந்த புரோக்கர் உள்பட 5 பெண்கள் போலீசார் கைது செய்தனர்.
    கோவை சித்தாபுதூர் பகுதியில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு புகார் சென்றது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அந்த வீட்டை கண்காணித்து வந்தனர்.

    அங்கு விபசாரம் நடப்பதை உறுதி செய்த போலீசார் நேற்று வீட்டில் இருந்த ஒரு ஆண் மற்றும் 5 பெண்களை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பி.என்.பாளையத்தை கண்ணன்(52), சூலூர் சுமதி (45), சரவணம்பட்டி நாகமணி (37), சோமனூர் ‌ஷப்னா(27), எட்டிமடை ரேகா(29), பல்லடம் மகேஸ்வரி(26) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    கண்ணன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்துள்ளார். அவரையும், 5 பெண்களையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
    போலீசார் என கூறி மிரட்டி பணம் வாங்கிய விபச்சார புரோகர்களை கைது செய்த போலீசார் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
    போரூர்:

    விபசார தடுப்பு பிரிவு போலீஸ் என கூறி சிலர் பணம் பறிப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2பேரை இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் 2 பெண்களை தனியார் விடுதியில் தங்க வைத்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதுதவிர விபசார தொழில் செய்து வரும் சிலரிடம் தாங்கள் விபச்சார தடுப்பு போலீசார் என கூறி மிரட்டி பணம் வாங்கி வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பெயர் வினோத்(32), நரேஷ்(24) என்பது தெரியவந்தது. விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் இருவரையும் மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர். #tamilnews
    துடியலூர் அருகே ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து போலீசார் அந்த வீட்டுக்கு சென்று விபசாரம் நடத்திய கணவன்-மனைவியை கைது செய்தனர்.

    கவுண்டம்பாளையம்:

    துடியலூர் அருகே விஸ்வ நாதபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை மற்றும் போலீசார் விரைந்து சென்று வீட்டில் சோதனை நடத்தினர்.

    அங்கு அரைகுறை ஆடையுடன் சிலர் இருந்தனர். விபசாரம் நடப்பதை உறுதி செய்த போலீசார் அங்கிருந்த 2 பெண்கள், ஒரு வாலிபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த லோகேஷ் (26), இவரது மனைவி சத்யா, தொண்டாமுத்தூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மனைவி நாகரத்தினம்(42) என்பது தெரியவந்தது. லோகேஷ் கடந்த 1 மாதத்துக்கு முன்பு இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்துள்ளார்.

    சத்யா, நாகரத்தினம் இருவரும் புரோக்கர்களாக செயல் பட்டுள்ளனர். 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களுடன் இருந்த ஒரு இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர்.

    மெரினா கடற்கரையில் இரவு நேரத்தில் திறந்தவெளி பாராகவும், விபசார விடுதி போலவும் செயல்படுவதால் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. #chennaimerina

    சென்னை:

    மெரினா கடற்கரை இரவு நேரங்களில் திறந்தவெளி பாராகவும், விபசார விடுதி போலவும் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    பறந்துவிரிந்த மெரினா கடற்கரையில் சனி, ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் அலை மோதும். நேற்று முன்தினமும் சனிக்கிழமை இரவு மெரினாவில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இதுபோன்ற ஒரு சூழலில் தான் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    மெரினாவில் போதுமான போலீஸ் கண்காணிப்பு இல்லாததால் அங்கு சமூக விரோத செயல்கள் அதிகம் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

    குடிமகன்கள் பலர் கடற்கரை மணலில் அமர்ந்து மது குடிப்பதுடன், விபசார அழகிகளை அழைத்துச் சென்று உல்லாசமாக இருப்பதும் தெரியவந்தது. குறிப்பாக இருள் சூழந்த பகுதிகளில், பொதுமக்களின் நடமாட்டம் இருக்கும்போதே ஜோடியாக வரும் பலர் எல்லைமீறும் செயல்களில் நடந்து கொள்கின்றனர்.

    மெரினா கடற்கரையையொட்டிய வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காலியாக உள்ள வீடுகளில் விபசாரம் நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை போலீசார் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

    இதனை கட்டுப்படுத்தி, சமூக விரோத செயல்களை போலீசார் தடுக்க வேண்டும். இதுபோன்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. #chennaimerina 

    ஆந்திர இளம்பெண்ணை விபசார கும்பலிடம் விற்பனை செய்தது தொடர்பாக கணவர் உள்பட 3 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பல்லி அடுத்த பாப்பிரெட்டி காசிபல்லியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண்.

    இவருக்கும மதனப்பல்லி ரெயில் நிலையம் அருகேயுள்ள நல்லகுட்டல பல்லியை சேர்ந்த மல்லிகார்ஜுன் என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

    அவர்களுக்கு வம்சி என மகன் உள்ளார். மல்லாகார்ஜுனாவுக்கும் இளம்பெண்ணுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று இளம்பெண் தன் தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.

    பின்னர் மதனபல்லியை சேர்ந்த நல்லபூரி எல்லம்மா என்பவரின் மகன் ரெட்டியப்பா என்பவருக்கு இளம்பெண்ணை 2-வதாக திருமணம் செய்தனர்.

    அப்போது ரெட்டியப்பாவின் நண்பர் நரசிம்மலு, அவரது மனைவி அருணா ரெட்டியப்பாவிடம் மும்பையில் உனது மனைவிக்கு நல்ல சம்பளத்தில் வேலை உள்ளது. எங்களுடன் அனுப்பிவை என கேட்டுள்ளார்.ரெட்டியப்பா மனைவியை அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளார்.

    கடந்த 2017 ஜூலை 24-ந் தேதி மும்பையில் உள்ள ராணி என்பவரிடம் இளம்பெண்ணை விற்று உள்ளனர். கடந்த 15 மாதங்களாக விபசார விடுதியில் தங்கியிருந்து இளம்பெண் அங்கிருந்து தப்பி வந்து மதனப்பல்லி டி.எஸ்.பி. சிவானந்தரெட்டியிடம் புகார் அளித்தார்.

    அதில் தனது கணவருக்கு தெரிந்தே அவரது நண்பருடன் மும்பைக்கு அனுப்பி உள்ளார். எனவே எனது கணவர் ரெட்டியப்பா, அவரது நண்பர் நரசிம்மலு, அவரது மனைவி அருணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் மும்பைக்கு சென்றனர். #tamilnews
    வேலூரில் விபசாரத்தில் ஈடுபட மறுத்த சிறுமியை நடுரோட்டில் அடித்து உதைத்த வங்காளதேச பெண்ணை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    வங்காளதேசத்தை சேர்ந்தவர் முஸ்கானா (வயது 30). இவர் அங்குள்ள 16 வயது சிறுமியை வேலை வாங்கி தருவதாக கூறி வேலூருக்கு அழைத்து வந்தார்.

    வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்ற போகிறோம் என்ற ஆசையில் வேலூர் வந்த சிறுமிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    சிறுமியை வேலூரில் உள்ள லாட்ஜில் தங்க வைத்த முஸ்கானா சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்த வற்புறுத்தினார்.அதற்கு சிறுமி மறுத்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆற்காடு ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் சிறுமியை விபசாரத்தில் ஈடுபட மிரட்டினார். அங்கிருந்து தப்பிய சிறுமி கிருஷ்ணா தியேட்டர் அருகே ஓடி சென்றார்.

    அவரை பின் தொடர்ந்து சென்ற முஸ்கானா சிறுமியை மடக்கி பிடித்து நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்தார். இதனை கண்ட பொதுமக்கள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி சம்பவ இடத்துக்கு சென்று சிறுமியை மீட்டனர்.

    இதுபற்றி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முஸ்கானாவை கைது செய்தனர்.

    மேலும் அவரது பாஸ்போர்ட் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×