search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94677"

    • அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
    • தமிழக மக்கள் தி.மு.க. அரசு மீது கொண்டுள்ள எதிர்ப்பு உணர்வு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு வருகிறது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம் தலைவர் தி. மு. தனியரசு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டபின் அ.தி.மு.க. மாநகராட்சி மன்றகுழு செயலாளர் டாக்டர் கே. கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:

    கிராம தெரு ரயில்வே சுரங்க பாதை பணிகள் மிக மந்தமாக நடைபெறுகிறது. கடந்த 10 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள வீடுகள் அகற்றப்பட்டன. ஆனால் இதுவரை எந்த பணியும் செய்யவில்லை. வீடுகளை அகற்றியவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படவில்லை. ரெயில்வேயும் தமிழக அரசும், மாநகராட்சியும் ஒருவருக்கொருவர் காரணங்களை கூறி கொண்டிருக்கின்றனர். விரைவாக பணிகளை முடிக்க வேண்டும். குப்பைகள் அகற்றுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதிக ஊழியர்கள் விடுமுறையில் செல்கின்றனர். அவர்களுக்கு மாற்று ஆட்கள் நியமிக்கப்படுவதில்லை. மழைக்காலத்தில் மாநகராட்சிக்காக வேலை பார்த்த அடிமட்ட ஊழியர்களுக்கு மாநகராட்சி ஒரு மாத சம்பளத்தை நிறுத்தி உள்ளனர். அதை உடனே வழங்க வேண்டும். திருவொற்றியூர் சுடுகாட்டில் தனி நபர் ஒருவர் பண வசூல் செய்கிறார். இது குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்பும் பண வசூல் தொடர்கிறது.

    இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். எனது வார்டில் உள்ள கோத்தாரி என்ற நிறுவனம் மழை நீர் கால்வாயை உள்ளடக்கி தனது எல்லையை பென்சிங் கட்டி ஆக்கிரமிப்பு செய்து உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ. தி.மு.க. வேட்பாளர் தென்னரசு வெற்றி பெறுவது உறுதி. தமிழக மக்கள் தி. மு.க. அரசு மீது கொண்டுள்ள எதிர்ப்பு உணர்வு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு வருகிறது. எங்கள் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடியார் தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வருவதற்கு இந்த வெற்றி முதல் படியாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதியில் இளங்கோவனை ஆதரித்து கடைசி 2 நாட்கள், அதாவது 24, 25-ந் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
    • அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் 5 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 31-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை நடைபெற்றது.

    மனுக்கள் பரிசீலனை மற்றும் வாபசுக்கான அவகாசங்கள் முடிந்த நிலையில் தற்போது இடைத்தேர்தல் களத்தில் 77 வேட்பாளர்கள் உள்ளனர்.

    அரசியல் கட்சிகளை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகிய 4 பேர் களம் இறங்கி உள்ளனர். என்றாலும் இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி- அ.தி.மு.க. இடையே தான் நேரடி பலப்பரீட்சை ஏற்பட்டு இருக்கிறது.

    நேற்று வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதியில் இளங்கோவனை ஆதரித்து கடைசி 2 நாட்கள், அதாவது 24, 25-ந் தேதிகளில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். அவரது உத்தரவுக்கேற்ப தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

    இந்தநிலையில் அ.தி.மு.க.வும் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் 5 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளார். இந்த 5 நாட்களில் 19 பொதுக்கூட்டங்களில் அவர் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அவர் எங்கெங்கு சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்கிறார் என்கிற விவரம் வருமாறு:-

    வீரப்பம்பாளையம் (பொதுக்கூட்டம்) வழி: விவேகானந்தா சாலை, கணபதி நகர் சாலை, வெட்டுக்காட்டு வலசு, விவேகானந்தா சாலை, நாராயண வலசு, ஹவுசிங் யூனிட் அடுக்குமாடி அம்பேத்கர் நகர், ஹவுசிங் யூனிட் - ஈ பிளாக் - புறநகர், நியூ டீச்சர்ஸ் காலனி, திருமால் நகர் , டவர் லைன் காலனி, குமலன்குட்டை (மாரியம்மன் கோயில் அருகில்), செல்வம் நகர், முருகேசன் நகர், சரோஜினி நகர், திரு.வி.க. வீதி, டீச்சர்ஸ் காலனி, ஆட்சியர் அலுவலகம் சம்பத் நகர், காசியண்ணன் வீதி, ஆண்டவர் வீதி, காளியப்ப கவுண்டர் தோட்டம், ஹவுசிங் யூனிட்.

    பெரியவலசு நால் ரோடு (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). வள்ளியம்மை வீதி, பிரசாத் வீதி, லால்பகதூர் வீதி, வாய்க்கால்மேடு, இந்திரா நகர், ராதாகிருஷ்ணா வீதி, கொங்குநகர் 1, 2, சுப்பிரமணிய சிவா வீதி, கொத்துக்கார வீதி, ஔவையார் வீதி, சேக்கிழார் வீதி, ஜான்சி நகர், அப்பன் நகர், முனிசிபல் காலனி, மாணிக்கம் வீதி, கல்யாண விநாயகர் கோயில், பவளம் வீதி, சத்யா வீதி, நகராட்சி குடியிருப்பு பாலசுப்பிரமணிய நகர் லே அவுட், அண்ணாமலை லேஅவுட், சின்னமுத்து வீதி 1, 2, வாரணாசி வீதி.

    இடையன்காட்டுவலசு (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). பிரபா தியேட்டர், ராஜகணபதி விநாயகர் கோயில், சின்ன முத்து மெயின் வீதி, அரசு மருத்துவமனை ரவுண்டானா, மீனாட்சி சுந்தரனார் சாலை (பிரப் ரோடு), கலைமகள் பள்ளி வழியாக எஸ்.கே.சி. ரோடு, பவர்ஹ வுஸ் வீதி, படேல் வீதி, சூரம்பட்டி நால்ரோடு, பெரியார் நகர் ஆர்ச், காந்திஜி ரோடு, பன்னீர் செல்வம் பார்க்.

    மணிக்கூண்டு (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). ஈஸ்வரன் கோயில் வீதி, கொங்கலம்மன் வீதி, மஜீத் வீதி, எல்லை மாரியம்மன் கோயில், சக்தி மெயின் ரோடு, பேருந்து நிலையம், சத்தி மெயின் ரோடு, ஏபிடி ரோடு, சாந்தாங்காடு, அபிராமி வீதி, காந்திஜி வீதி, அண்ணாமலை நகர், ஜான்சி நகர், பாரதி வீதி, எம்.ஜி.ஆர். வீதி, குமரன் வீதி, தங்கவேல் வீதி, துரைசாமி வீதி, பாரதிதாசன் வீதி, திரு.வி.க. வீதி, ஐயர் காடு, வீரப்பன்சத்திரம் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்).

    16-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணி அக்ரஹாரம் பகுதி. அசோகபுரம் பகுதி, களிராவுத்தர் குளம் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). தண்ணீர் பந்தல்பாளையம், காமராஜ் நகர், பூம்புகார் நகர், காட்டூர் வீதி, நஞ்சப்பா நகர்.

    வண்டிப்பேட்டை (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). கான்வென்ட் ஸ்கூல், அன்னை சத்யா நகர்.

    நெரிகல் மேடு (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). கலைமகள் வீதி, லட்சுமி நகர், ராஜ வீதி, தீரன் சின்னமலை வீதி, கரிகாலன் வீதி, அதியமான் வீதி, பவானி மெயின் ரோடு, நெரிகல் மேடு, 16 மெயின் ரோடு.

    காவேரி ரோடு சின்ன மாரியம்மன் கோயில் அருகில் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). நேரு வீதி, முருகன் வீதி, காவேரி ரோடு, தெப்பக்குளம், மாசிமலை வீதி, ஏ.பி.டி. ரோடு, சேரன், சோழன், பாண்டியன் வீதி, திருமலை வீதி, பெரியகுட்டை வீதி, பல்லவன் வீதி, காவேரி ரோடு, பவானி மெயின் ரோடு.

    வைராபாளையம் பள்ளிக்கூடம் அருகில் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). மாரியம்மன் கோயில் வீதி, பள்ளிக்கூடம் வீதி, கந்தசாமி வீதி, நேதாஜி வீதி, பட்டேல் வீதி, ராஜ கணபதி நகர்.

    கிருஷ்ணம்பாளையம் ஓங்காளியம்மன் கோயில் அருகில் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). பச்சியம்மன் கோயில் வீதி, சொக்காய் தோட்டம், விநாயகர் கோயில் வீதி 1, அழகரசன் நகர், கணபதிபுரம், வண்டியூரான் கோயில் வீதி, ராஜகோபால் தோட்டம், கிருஷ்ணம்பாளையம் காலனி, சித்தன் நகர், ஜீவா நகர், கமலா நகர், கக்கன் நகர், ராமமூர்த்தி நகர், ராமசாமி நகர், மாதேஸ்வரன் கோயில் வீதி, பம்பிங் ஸ்டேஷன் ரோடு, மாதவ காடு, சாமியார் வீதி, ஓ.எம்.ஆர். காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, ஆர்.கே.வி. நகர், புதுமை காலனி, ஜெயகோ பால் வீதி, காமராஜர் பள்ளி.

    ராஜாஜிபுரம் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). பூங்குன்றனார் வீதி, காந்தி புரம், கந்தசாமி சந்து, கண்ணையன் வீதி, சாம்பகாடு, ரங்க வீதி, வீர வீதி, பிள்ளையார் கோயில் வீதி, சகன் வீதி, வரதப்பா வீதி, ஜானகி அம்மாள் லே அவுட், சுப்பையா வீதி, குரங்கு குட்டை, மில் வீதி.

    17-ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கருங்கல்பாளையம் பகுதி, பெரியார் நகர் பகுதி சுப்பிரமணியம் கோயில், காவேரி ரோடு ராஜகோபால் தோட்டம் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). வண்டியூரான் கோயில், காமாட்சியம்மன் கோயில் வீதி.

    தேர்முட்டி (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). சின்ன மாரியம்மன் கோயில், அரசு இளங்கோ வீதி, பொன்னுசாமி வீதி, மரப்பாலம், மரப்பாலம் மெயின் ரோடு, பெரிய மாரியம்மன் கோயில் வீதி, ரங்கநாதன் வீதி, கற்பகம் லே அவுட்.

    மோசிகீரனார் வீதி- 3 (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). மோசிகீரனார் வீதி 1. மாதவ கிருஷ்ணன் வீதி, மாரிமுத்து வீதி, அகத்தியர் வீதி.

    வி.வி.சி.ஆர். நகர் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). வளையக்கார வீதி, காடிகானா முக்கு, மகாஜனா மேல்நிலைப்பள்ளி, அர்பன் பேங்க், கச்சேரி வீதி, அருள்மொழி வீதி, நடராஜா தியேட்டர் ஹவுசிங் யூனிட், மரப்பாலம்.

    சமாதானம்மாள் சத்திரம் (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்). பெரியார் நகர், காளைமாடு சிலை, டீசல் ஷெட், பெரிய தோட்டம் வழியாக கிரான்மடை பாலம் வீதி 1, 2,3, 4, தேவா வீதி, லட்சுமணன் வீதி, என்.ஜி.ஜி.ஓ. காலனி, மாரப்பன் வீதி 1,2, சூரம்பட்டி நால்ரோடு வழியாக பூசாரி சென்னிமலை வீதி, காந்தி நகர், பழனியப்பா வீதி.

    24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு டீச்சர்ஸ் காலனி வழியாக கிராமடை ஜெகநாதபுரம் காலனி, சூரம்பட்டி நால் ரோடு, பெரியார் நகர் வழியாக ஜவான் பில்டிங், தங்கப்பெருமாள் கோயில் வழியாக கள்ளுக்கடைமேடு.

    பழைய ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, சமாதானம்மாள் சத்திரம், பேபி மருத்துவமனை வழியாக மரப்பாலம், மண்டப வீதி வழியாக காரை வாய்க்கால், வளையக்கார வீதி, இந்திரா நகர், கருங்கல்பாளையம், கோட்டையார் வீதி ரங்கநாதர் வீதி வழியாக, சின்ன மாரியம்மன் கோயில் மைதானம், காந்தி சிலை, மணிக்கூண்டு, சித்திக் திடல், அசோகபுரி, நேதாஜி ரோடு சென்ட்ரல் தியேட்டம், பன்னீர் செல்வம் பார்க். (பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்).

    25.2.2023- சனிக்கிழமை காலை வெட்டுக்காட்டுவலசு (19வது வார்டு), நாச்சாயி டீ கடை, சம்பத் நகர், பெரிய வலசு, குளம் - காந்தி நகர், அக்ரஹாரம் வண்டிப் பேட்டை, சத்யா நகர், நெரி கல்மேடு, வைரா பாளையம், கிருஷ்ணம்பா ளையம், கே.என்.கே.ரோடு, ராஜாஜி புரம், மெட்ராஸ் ஹோட்டல், எல்லை மாரியம்மன் கோயில், முத்துசாமி வீதி, பழனிமலைக் கவுண்டர் வீதி, தெப்பக்குளம், வீரப்பன்சத்திரம் (பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்).

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பணிமனை அமைத்த போது அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி என்றும், திறப்பு விழா நடந்தபோது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்றும் பேனர் வைத்தனர்.
    • அன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி என்று பெயரை மாற்றி பிளக்ஸ் வைத்தனர். அடுத்த நாள் காலை அதையும் அகற்றிவிட்டு அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் என மாற்றினர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் மேற்கொள்ள பெருந்துறை சாலையில் அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே பணிமனை திறக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பணிமனை அமைத்த போது அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி என்றும், திறப்பு விழா நடந்தபோது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்றும் பேனர் வைத்தனர். அன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி என்று பெயரை மாற்றி பிளக்ஸ் வைத்தனர். அடுத்த நாள் காலை அதையும் அகற்றிவிட்டு அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் என மாற்றினர்.

    இந்த 4 பேனர்களிலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பெரிய படங்களும், கூட்டணி கட்சி என்ற முறையில் த.மா.கா. ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆகியோரின் சிறிய படங்களும் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் மீண்டும் 5-வது முறையாக புதிதாக பிளக்ஸ் பேனர் மாற்றி வைத்துள்ளனர். அதில் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சியின் வெற்றி வேட்பாளர் என மாற்றி பிரதமர் மோடி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் படமும், மற்ற கூட்டணி கட்சிகளின் தலைவர் படமும் இடம் பெற்றுள்ளது.

    • திருமங்கலம் பார்முலாவை இந்த இடைத்தேர்தல் மிஞ்சிவிடும்.
    • பண பலம், அதிகார பலத்தின் மூலம் வெற்றி பெற தி.மு.க. முயல்கிறது.

    சென்னை :

    சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று புகார் மனு அளித்தார். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:-

    ஈரோட்டில் அ.தி.முக. வேட்பாளர் அறிமுக கூட்டம் 9-ந் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்துக்கு மக்கள் அதிகமாக சென்றுவிடக்கூடாது என்பதற்காக தி.மு.க.வினர் ஆங்காங்கே சட்டவிரோதமாக பந்தல் போட்டு, பிரியாணி மற்றும் ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏழை எளிய மக்களை கூட்டத்துக்கு வரவிடாமல் தடுத்துவிட்டனர். திருமங்கலம் பார்முலாவை இந்த இடைத்தேர்தல் மிஞ்சிவிடும்.

    ஆனால் அ.தி.முக. வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு 50 ஆயிரம் பேர் வந்தார்கள். எனவே தி.மு.க. எடுத்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டது.

    பண பலம், அதிகார பலத்தின் மூலம் வெற்றி பெற தி.மு.க. முயல்கிறது. அ.தி.முக. கூட்டத்துக்கு மக்களை வர விடாமல் பணம், பிரியாணி கொடுத்து தடுக்கிறது.

    கூட்டணிக் கட்சி தர்மத்தின்படி த.மா.கா.விடம் கேட்டு அ.தி.மு.க. போட்டியிடுகிறது. ஆனால் தி.மு.க. அங்கு ஏன் காங்கிரஸ் கட்சியை நிற்க வைத்துள்ளது? தோல்வி பயம்தான் காரணம். தைரியம் இருந்தால் தி.மு.க. அங்கு போட்டியிட்டிருக்க வேண்டும்.

    வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பா.ஜ.க. கட்சித் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்றாலும், அந்த கட்சியின் சார்பில் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி இருந்ததால், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

    இரட்டை இலைக்கான மவுசு போய்விட்டது என்று டி.டி.வி.தினகரன் கூறியிருப்பதை, நன்றி கெட்டவர்களின் வாக்குமூலமாகத்தான் பார்க்கிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் இல்லை என்றாலும்கூட இரட்டை இலை வெற்றி சின்னம்தான். அதன் மவுசு குறைந்துவிட்டது, இனிமேல் வாய்ப்பு இல்லை என்று அவர் கூறுவதை, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்கிற நிலையாகத்தான் நாங்கள் எடுத்துக்கொள்ள முடியும்.

    தேர்தல் கமிஷனிடம் அளிக்கும் புகார்களுக்கு ஆதாரமாக அனைத்து ஆவணங்களும் அளிக்கப்பட்டுள்ளன. ஜனநாயக அமைப்பில் புகார் அளிப்பது, அடிப்படை உரிமை. அதை நாங்கள் தெளிவாகச் செய்து வருகிறோம். நாங்க சொல்ல வேண்டியதைச் சொல்கிறோம். செய்ய வேண்டியதை அவர்கள் செய்யட்டும். தேர்தல் கமிஷனுக்கு பிறகு கோர்ட்டு உள்ளது. இது மன்னர் ஆட்சி கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று நெல்லை வந்தார்.
    • எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏராளமான பெண்கள் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.

    நெல்லை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று நெல்லை வந்தார்.

    அவருக்கு மாவட்ட எல்லையான கங்கை கொண்டானில் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து பல்வேறு இடங்களில் மேளதாளங்கள், தாரை, தப்பட்டை முழங்க சாலை ஓரங்களில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் திரண்டு எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏராளமான பெண்கள் 'செல்பி' எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி திருத்து கருப்பசாமி பாண்டியன்- கொம்பன்குளம் பி.ஏ. சாமிநாதன் ஆகியோரது இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்கள் அமச்சியார் என்ற அபி-கரண் ஆகியோரது திருமணத்தை நடத்தி வந்தார். தொடர்ந்து அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதில் எம்.எல்.ஏ.க்கள் கடம்பூர் ராஜூ, தளவாய்சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    எடப்பாடி பழனிசாமி இன்று நெல்லை வருகையையொட்டி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்ணார்பேட்டை-புதிய பஸ்நிலைய சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேனர்கள் மற்றும் சாலை இருபுறமும் கட்சிக்கொடிகள் வைக்கப்பட்டிருந்தது.

    • ஈரோட்டில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் விவரங்கள், சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் அதிமுக சார்பில் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    அவருக்கு ஆதரவாக 20 அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் தி.மு.க.வுக்கு எதிராக பலமான வேட்பாளரை நிறுத்தும் வகையில் அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தினார்.

    இதற்காக ஈரோட்டில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் விவரங்கள், சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் அதிமுக சார்பில் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியது.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கருப்பண்ணன், கே.வி.ராமலிங்கம், நத்தம் விஸ்வநாதன் ஆர்.பி உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர் என 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களை கவரும் வகையில் அவர்கள் வித்தியாசமான முறையில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று காலை அதிமுக வேட்பாளர் கே .எஸ். தென்னரசு மணல்மேடு பகுதி முழுவதும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, கே.வி.ராமலிங்கம், தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் விடியல் சேகர் ஆகியோரும் வீடு, வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். பொதுமக்களை கவரும் வகையில் எம்.ஜி.ஆர். வேடத்துடன் நிர்வாகிகள் சிலரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    • ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறது.
    • பா.ஜ.க. எங்களுடன் தான் கூட்டணியில் உள்ளது.

    நெல்லை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று நெல்லை வந்தார்.

    அவருக்கு மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து பல்வேறு இடங்களில் மேள தாளங்கள், தாரை, தப்பட்டை முழங்க சாலை ஓரங்களில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் திரண்டு எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமியுடன் ஏராளமான பெண்கள் 'செல்பி' எடுத்துக்கொண்டனர்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி திருத்து கருப்பசாமி பாண்டியன்- கொம்பன்குளம் பி.ஏ. சாமிநாதன் ஆகியோரது இல்லத் திருமணவிழாவில் கலந்து கொண்டு மணமக்கள் அமச்சியார் என்ற அபி-கரண் ஆகியோரது திருமணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் காவேரியில் இருந்து பாதுகாக்கப்பட்ட தண்ணீர் வழங்க அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.484 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிந்து சோதனை ஓட்டமும் முடிந்துள்ளது. ஆனால் கடந்த 21 மாத தி.மு.க. ஆட்சியில் அது செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் குடிப்பதற்கு கூட தண்ணீர் வழங்காத ஆட்சியாக தி.மு.க. ஆட்சி உள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி-சேலைகள் சரியாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இன்னும் பலருக்கு வேட்டி-சேலைகள் வழங்கப்படாமல் உள்ளது.

    டெல்டா மாவட்டங்கள் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் போது நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது.

    ஆனால் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தற்போது அவர்களுக்கு குறைந்தபட்ச இழப்பீடு தொகை கூட வழங்கவில்லை.

    ஈரோடு இடைத்தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறது. பா.ஜ.க. எங்களுடன் தான் கூட்டணியில் உள்ளது.

    அ.தி.மு.க. யாரையும் நம்பி இல்லை. பல கட்சிகளுக்கு அ.தி.மு.க. உதவிகரமாக இருப்பதோடு தாங்கி பிடித்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும். இந்த வெற்றி பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தற்போது தொடர்கிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதில் தவறில்லை. எழுதாத பேனாவை ரூ.80 கோடி செலவில் கடலில் வைப்பதை தவிர்த்துவிட்டு கருணாநிதி நினைவு மண்டபத்தில் வைக்கலாம்.

    ரூ.1 கோடியில் பேனா நினைவு சின்னம் வைத்துவிட்டு மீதமுள்ள ரூ.79 கோடியில் மாணவர்களுக்கு எழுதக்கூடிய பேனா வழங்கலாம்.

    தி.மு.க. சார்பில் தேர்தல் வாக்குறுதியாக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டது. இதுவரை அதனை அவர்கள் செயல்படுத்தவில்லை.

    முக்கியமாக மகளிருக்கான மாத ரூ.1,000 உரிமைத்தொகை இதுவரை வழங்கவில்லை. இதனால் கடந்த 21 மாத காலத்தில் ஒவ்வொரு பெண்ணிற்கும் ரூ.21 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    மக்களுக்கான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாததால் தி.மு.க. மீது மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் தற்போது கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஈரோடு இடைத்தேர்தலுக்கு பின்னர் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்ணார்பேட்டை-புதிய பஸ்நிலைய சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேனர்கள் மற்றும் சாலை இருபுறமும் கட்சிக்கொடிகள் வைக்கப்பட்டிருந்தது.

    • அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பிரசார தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பா.ஜனதாவினர் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையும் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு நாள் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளார். மேலும் அவர் 5 இடங்களில் பேசவும் சுற்றுப்பயண விபரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. பிரசார தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று பா.ஜனதாவினர் தெரிவித்தனர்.

    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மழையால் சீர்காழி பகுதி பெரும் அளவில் பாதிக்கப்பட்டது.
    • அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இடைத்தேர்தலில் களம் கண்ட கட்சிகள்.

    தூத்துக்குடி:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனது பணியை செய்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க.வின் வெற்றி பிரகாசமாக இருப்பதாகவே கருதுகிறேன்.

    வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த அரசாக தி.மு.க. செயல்பட்டு கொண்டிருப்பதாக வாக்காளர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மழையால் சீர்காழி பகுதி பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. அங்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தேன். அப்போது கூட தமிழக அரசு விவசாயிகளின் எண்ணங்களை அறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய தவறிவிட்டது. தற்போது டெல்டாவில் 5 மாவட்டங்களில் மழை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசு அவர்களுக்கு கைகொடுக்க வேண்டும். ஆபத்தான நேரத்தில் விவசாயிகளை காப்பாற்றக் கூடிய அரசாக, இந்த அரசு செயல்பட தவறுகிறது. குறிப்பாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கு அரசு செவி சாய்க்கவில்லை. பாதிக்கப்பட்ட நிலங்களை சென்று பார்க்க அதிகாரிகளை முறையாக அனுப்புவது கிடையாது. எனவே, விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் அரசு செயல்படுவது மிகுந்த வருத்தத்தை தருகிறது.

    அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இடைத்தேர்தலில் களம் கண்ட கட்சிகள். இதில் பல தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூட்டணியில் கலந்து பேசினோம். உண்மை நிலைக்கு ஏற்றவாறு, வெற்றி நிலைக்கு ஏற்றவாறு முடிவெடுத்து உள்ளோம். அதில் மாற்று கருத்து கிடையாது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த 19 மாதங்களில் எதிர்மறை ஓட்டுக்கள் அதிகரித்து வருகிறது. தி.மு.க.வின் குறைகளை பற்றி பேசுவதற்கு ஒரு பட்டியல் தேவைப்படுகிறது. அதுவே அ.தி.மு.க.வின் வெற்றிக்கு அடித்தளமாக அமையும்.

    கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவு சின்னம் வைப்பது தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கும் நல்ல கருத்துக்களை கேட்டு சரியான முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் 520 வாக்குறுதிகள் கொடுத்தது. ஆனால் பலவற்றை இன்றும் நிறைவேற்றவில்லை.
    • நீட், கல்விக்கடன் ரத்து செய்வோம், கியாஸ் மானியம், பெட்ரோல், டீசல் மானியம் தருவோம் என்றார்கள் ஆனால் இதுவரை செய்யவில்லை.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் இருந்து செல்லும்போது தமிழகத்தில் முதியோர் ஓய்வு ஊதியத்துக்காக ஆண்டுக்கு ரூ.1200 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. சுமார் 12 லட்சம் பேர் ஓய்வூதியம் பெற்றனர்.

    ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 32 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது. பிறகு எடப்பாடி பழனிசாமி மேலும் 5 லட்சம் பேரை சேர்த்து 37 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கினார். இதற்காக ஆண்டுக்கு ரூ.4200 கோடி நிதி செலவிடப்பட்டது. 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் ரூ.500 மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அது ரூ.ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

    தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஓய்வூதியத்தை ரூ.1500 என உயர்த்துவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை நிறைவேற்றவில்லை. மாறாக 15 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் தங்க சுரங்கங்கள் மூடப்பட்டிருந்த போதிலும் எடப்பாடி 1 லட்சம் பேருக்கு திருமணத்திற்காக தங்க காசுகளை வழங்கினார்.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா திருமண உதவித்தொகை திட்டம் தாலிக்கு தங்கம் கொண்டு வந்ததே பெண்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்பதற்காக தான். பிளஸ்-2 வரை படித்தால் ரூ.25000, பட்டம் பயின்றால் ரூ.50,000 என்று அறிவித்தார். தங்கத்தையே பார்க்காத பல ஏழை குடும்பங்கள் திருமணத்திற்கு ஒரு சவரன் தாலிக்கு தங்கம் வழங்கினார்.

    ஆனால் அதையும் தி.மு.க. ஆட்சி நிறுத்திவிட்டது. இன்று ஏதோ உயர்கல்வி பயில ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறுகிறார்கள். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு ஸ்கூட்டி, அம்மா சிமெண்ட், அம்மா குடிநீர், அம்மா உப்பு, லேப்டாப், 2000 மினி கிளினிக்குகள் போன்ற எண்ணற்ற திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன .

    தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் 520 வாக்குறுதிகள் கொடுத்தது. ஆனால் பலவற்றை இன்றும் நிறைவேற்றவில்லை. நீட், கல்விக்கடன் ரத்து செய்வோம், கியாஸ் மானியம், பெட்ரோல், டீசல் மானியம் தருவோம் என்றார்கள் ஆனால் இதுவரை செய்யவில்லை. தி.மு.க. ஆட்சியில் சொல்வார்கள் ஆனால் செய்ய மாட்டார்கள். திட்டங்கள் வரும் ஆனால் வராது என்ற நிலையில் தான் வாக்குறுதிகள் உள்ளன.

    ஆனால் ஜெயலலலிதா கொடுத்த வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றினார். அ.தி.மு.க. ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போன்ற பல வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. முடக்கப்பட இருந்த இரட்டை இலையை பாதுகாத்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் இன்று மாலை ஈரோட்டில் நடக்கும் வேட்பாளர் அறிமுக பிரம்மாண்ட கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது.
    • இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டாலும் தி.மு.க.-அ.தி.மு.க. இடையேதான் நேரடி போட்டி நிலவி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு வருகிற 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 31-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடந்தது. இதில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, ஓ.பி.எஸ். அணி சார்பில் செந்தில்முருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், அ.ம.மு.க. சார்பில் சிவபிரசாந்த் உள்பட 96 பேர் 121 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் தனது அணி வேட்பாளர் வாபஸ் பெறப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதே போல் குக்கர் சின்னம் கிடைக்காததால் அ.ம.மு.க.வும் போட்டியிடாது என்று டி.டி.வி. தினகரன் அறிவித்தார்.

    இதையடுத்து நேற்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இதில் காங்கிரஸ், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட 83 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. இதில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் உள்பட 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

    வாபஸ் பெறுவதற்கு முன்பே ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாந்த் தனது வேட்பு மனுவை நாளை வாபஸ் பெறுகிறார்.

    வேட்பு மனுக்கள் நாளை மாலை 3 மணிவரை திரும்ப பெறலாம். பின்னர் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.

    இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. தி.மு.க., காங்கிரஸ், கூட்டணி கட்சியினர் மற்றும் அ.தி.மு.க., கூட்டணி கட்சியினர், நாம் தமிழர், தே.மு.தி.க.வினரும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

    காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24, 25-ந் தேதிகளில் தீவிர பிரசாரம் செய்கிறார். இதே போல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 19,20-ந் தேதிகளில் பிரசாரம் செய்கிறார். கனிமொழி எம்.பி., 16-ந் தேதி பிரசாரம் செய்கிறார்.

    இதே போல் எடப்பாடி பழனிசாமியும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 கட்ட பிரசாரம் செய்ய முடிவு செய்து உள்ளார். தனது முதல் கட்ட பிரசாரத்தை அடுத்த வாரம் தொடங்க உள்ளார். பின்னர் 2-வது கட்ட பிரசாரத்தை தேர்தலுக்கு முந்தைய கடைசி வாரத்தில் செய்கிறார்.

    பிரசாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி நேற்று அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    அப்போது எடப்பாடி பழனிசாமி பேசும்போது, கட்சி தொண்டர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். தொழில் அதிபர்கள், நெசவாளர்கள், விவசாயிகளின் ஆதரவை பெற வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த 21 மாதங்களில் ஈரோடு மாவட்டம் அல்லது ஈரோடு கிழக்கு தொகுதிக்கு என்ன செய்தது. மேலும் ஓட்டு பெறுவதற்காக தி.மு.க. பல வாக்குறுதிகளை அளிக்கும். ஆனால் அவர்கள் எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றமாட்டார்கள் என்று எடுத்து கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து கூட்டம் முடிந்து வெளியே வந்த அவர் சாலை ஓரம் இருந்த கடையில் டீ குடித்து விட்டு புறப்பட்டு சென்றார்.

    தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே உள்ளதால் பிரசாரம் அனல் பறக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட்டாலும் தி.மு.க.-அ.தி.மு.க. இடையேதான் நேரடி போட்டி நிலவி வருகிறது.

    தி.மு.க.வை பொருத்தவரை அவர்கள் ஆட்சி ஏற்ற பிறகு வரும் முதல் இடைத்தேர்தல் இது. இதனால் இந்த இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். இதற்காக 11 அமைச்சர்கள் உட்பட 31 பேர் அடங்கிய தேர்தல் பணி குழு அமைக்கப்பட்டது.

    தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பே அமைச்சர்கள் முத்துசாமி, நேரு பிரசாரத்தை தொடங்கினர். பின்னர் தி.மு.க. சார்பில் முக்கிய அமைச்சர்கள் பலரும் ஈரோட்டிலேயே முகாம் அமைத்து பிரசாரம் செய்து வருகிறார்கள். 4 அல்லது ஐந்து வார்டுகளுக்கு ஒரு அமைச்சர் என்ற வகையில் குழு அமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கே.என்.நேரு, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், சக்கரபாணி, செந்தில் பாலாஜி, காந்தி, சேகர்பாபு, நாசர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்ய நாதன், சி.வி.கணேசன், ராமச்சந்திரன், கீதா ஜீவன், கயல்விழி செல்வராஜ் உள்பட 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் முகாமிட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுமக்களை கவரும் வகையில் விதவிதமாக திண்ணை பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மாலை கருங்கல்பாளையம் ராஜாஜி புரம் பகுதியில் நடந்த பிரசாரத்தில் அமைச்சர் சி.வி. கணேசன், வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடன் அந்தப் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு வழிபட்டார். இது போல் அமைச்சர் தங்கம் தென்னரசு இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அமைச்சர் செஞ்சி மஸ்தான் பரோட்டா போட்டு கொடுத்து வாக்கு சேகரித்தார்.

    இதேபோல் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் 30 பேர் உட்பட 121 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 10 நாட்களுக்கு முன்பே ஈரோட்டில் முகாமிட்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் தாமதமாக அறிவிக்கப்பட்டாலும் தேர்தல் பணிகளை அவர்களும் ஏற்கனவே தொடங்கி விட்டனர். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கருப்பண்ணன், கே.வி. ராமலிங்கம், செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும் தொகுதியில் முகாமிட்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுமக்களை கவரும் வகையில் விதவிதமாக பிரசாரம் செய்து வருகின்றனர். அ.தி.மு.க.வினர் பிரசாரத்தை தொடங்கும் முன்பு அந்த பகுதியில் உள்ள கோவில்களில் சென்று வழிபட்டு பூஜை செய்து பிரசாரத்தை தொடங்கி வருகின்றனர்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் டீ கடையில் பொதுமக்களுக்கு டீ போட்டு கொடுத்தும், துணிகளுக்கு அயன் செய்தும் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார்.

    இன்று காலை கருங்கல்பாளையம் பகுதியில் வீடு, வீடாக சென்று பூ வழங்கி, கோவில் பிரசாதங்கள் கொடுத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது இன்று மாலை நடைபெறும் வேட்பாளர் அறிமுக கூட்டத்துக்கு குடும்பத்துடன் வந்து பங்கேற்க வேண்டும் அழைப்பு விடுத்தார்.

    தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் ஆனந்த் கடந்த சில நாட்களாக வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பொதுமக்கள் காலை தொட்டு வணங்கி வாக்கு சேகரித்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகா நவநீதனும் வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடாமல் நேர்மையான முறையில் ஓட்டு போட வேண்டும் என்று சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்கு சேகரித்தார்.

    • மண்டபத்தில் கடந்த மாதம் 31-ந் தேதி அ.தி.மு.க.வினர் அனுமதியின்றி கூட்டம் நடத்தினர்.
    • தற்போது 2-வது முறையாக அனுமதியின்றி கூட்டம் கூடியதால் கூட்டம் நடந்த திருமண மண்டபத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ஜீவா நகரில் தனியார் திருமண மண்டபத்தில் இன்று அனுமதியின்றி கூட்டம் நடைபெறுவதாக பறக்கும் படை அலுவலர் மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் அந்த திருமண மண்டபத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அ.தி.மு.க.வினர் ஒன்றாக திரண்டு இருந்து கூட்டம் நடத்துவதற்கான ஆயத்த பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதையடுத்து பறக்கும் படை அதிகாரி மணிகண்டன் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் அனுமதியின்றி இங்கு கூட்டம் நடத்தக்கூடாது உடனடியாக கலைந்து செல்லுங்கள் என்று கூறினார்.

    ஆனால் இதை ஏற்காமல் அ.தி.மு.க.வினர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் மற்றும் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் மண்டபத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களுடன் போலீசாரும் வந்திருந்தனர்.

    இதனையடுத்து அவர்கள் அ.தி.மு.க.வினரை மண்டபத்தை விட்டு வெளியேறும்படி கூறினர். ஆனால் அவர்களுடனும் அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு அ.தி.மு.க.வினர் மண்டபத்தை விட்டு கலைந்து சென்றனர்.

    ஏற்கனவே இதே மண்டபத்தில் கடந்த மாதம் 31-ந் தேதி அ.தி.மு.க.வினர் அனுமதியின்றி கூட்டம் நடத்தினர். அப்போதும் பறக்கும் படை அதிகாரிகள் வந்து அனுமதியின்றி கூட்டம் போடக்கூடாது என்று கூறி கலைந்து போக செய்தனர். தற்போது 2-வது முறையாக அனுமதியின்றி கூட்டம் கூடியதால் கூட்டம் நடந்த திருமண மண்டபத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மண்டபத்தில் இருந்த 2 நுழைவாயிலும் பூட்டி சீல் வைத்தனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    ×