search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94689"

    • உடுமலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்வதற்கு உண்டான சூழல் நிலவி வந்தது.
    • மெல்ல மெல்ல மழை தீவிரமடைந்து 4 மணியளவில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்தது.

     தாராபுரம்:

    தாராபுரம் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது.இந்த நிலையில் நேற்று மதியம் வரை வழக்கம் போல் வெயில் வெளுத்து வாங்கியது. அதைத் தொடர்ந்து வானில் கருமேகங்கள் ஒன்று கூடியதால் சூறாவளி காற்றுடன் 3மணிக்கு இடி, மின்னல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை ஒரு மணிநேரம் கொட்டி தீர்த்தது. இதனால் சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் பாய்ந்து ஓடியது. இதனால் தாராபுரம் வட்டார பகுதியான அலங்கியம், காளி பாளையம், சத்தரம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதியில் குளிர்ச்சி நிலவியது.இதனால் தாராபுரம் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    உடுமலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்வதற்கு உண்டான சூழல் நிலவி வந்தது. இதனால் பல்வேறு தரப்பினரும் மழைப்பொழிவை எதிர்பார்த்து காத்து இருந்தனர். இந்த சூழலில் நேற்று மதியம் 2.45 மணியளவில் வானம் இருள் சூழ்ந்து திடீரென மழை பெய்தது. மெல்ல மெல்ல மழை தீவிரமடைந்து 4 மணியளவில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.திடீரென பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து சில்லென்ற காற்றுடன் கூடிய இதமான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பாலமேடு அருகே பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் மாடு பலியானது.
    • விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.



    பலியான மாடு.

     அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் முழுவதும் சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் நேற்று அலங்காநல்லூர் பகுதிக ளில் மதியம் 2 மணி அளவில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

    பாலமேடு அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளின் மீது மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. கூரை, ஓட்டு வீடுகள் பலத்த காற்றுக்கு தூக்கி வீசப்பட்டன.

    தோட்டங்களில் போடப் பட்டிருந்த தகர செட், மற்றும் கொட்டகைகள் காற்றில் சேதமடைந்தன.

    கொட்டகையில் கட்டப்பட்டிருந்த பசுமாடு பரிதாபமாக இறந்தது. மின் கம்பங்கள் சாய்ந்ததால் அந்தப்பகுதியில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. மின்சார ஊழி யர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.

    சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில் நேற்று பெய்த கனமழையால் அலங்காநல்லூர், பாலமேடு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • கரூர் பகுதியில் தொடர் மழை பெய்தது
    • இதனால், குளிர்ந்த காற்று வீசியதால் கோடை வெயிலில் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.

    கரூர்:

    தமிழகத்தில் வெப்ப சலனம் குறைந்ததால் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்தது. இதையடுத்து நேற்று 2-வது நாளாக கரூர் டவுன், தான்தோன்றிமலை, வெங்கமேடு, பசுபதிபாளையம், திருமா நிலையூர், செல்லாண்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    இதனால், குளிர்ந்த காற்று வீசியதால் கோடை வெயிலில் அவதிப்பட்டு வரும் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு: கரூரில் 2 மி.மீ., க.பரமத்தியில் 1.8 மி.மீ., மாயனுாரில் 3 மி.மீ., பாலவிடுதியில் அதிகபட்சமாக 30.3 மி.மீ., மயிலம்பட்டியில் 3 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 3.38 மி.மீ., மழை பதிவானது.


    • இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
    • பின்னர் குளிர்ந்த காற்று வீசியது.

    சென்னிமலை:

    சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் வானில் கருமேகம் திரண்டன. பின்னர் 7 மணி அளவில் பலத்த காற்று வீசியது.

    சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது. அதன் பின்னர் குளிர்ந்த காற்று வீசியது.

    சென்னிமலை பகுதியில் பலத்த காற்று வீசியதால் சில இடங்களில் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    மேலும் சென்னிமலை-காங்கேயம் ரோட்டில் பல இடங்களில் ரோட்டோர மரங்கள் சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பின்னர் அவை உடனடியாக சரி செய்யப்பட்டது. சென்னிமலை பகுதியில் நேற்று 10 மி.மீ. மழை பெய்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ் நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும் பெய்யக் கூடும்.
    • சென்னை மற்றும் புற நகர் பகுதியில் 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    தமிழக பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் நிலவும் சுழற்சி காரணமாக இன்று தமிழ் நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

    நாளை (23-ந்தேதி) தமிழ் நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும் பெய்யக் கூடும்.

    நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 24 முதல் 26-ந் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.

    சென்னை மற்றும் புற நகர் பகுதியில் 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • மழை காரணமாக காங்கயம் நகர பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
    • காங்கயம் நகர் தவிர சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது.

     காங்கயம்:

    காங்கயத்தில் நேற்று காலை முதல் மாலை வரை கடுமையான வெயில் வாட்டியது. வெப்பத்தின் தாக்கத்தால் காங்கயம் பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பின்னர் மாலை சுமார் 6.30 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து தூறலாக தொடங்கிய மழை படிப்படியாக வேகமெடுத்து பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையானது சுமார் 1 மணி நேரம் பெய்தது.

    காங்கயம் நகரில் சென்னிமலை சாலை, திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, பழைய கோட்டை சாலை, தாராபுரம் சாலை, பஸ் நிலைய ரவுண்டானா, போலீஸ் நிலைய ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் மழைநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் தண்ணீரில் நீந்தியபடி சென்றன. மழை காரணமாக காங்கயம் நகர பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    இதேபோல் காங்கயம் நகர் தவிர சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பகல் முழுவதும் கடும் வெயிலால் அவதிப்பட்ட காங்கயம் பகுதி மக்களுக்கு நேற்று பெய்த மழை குளு குளு சீதோஷ்ண நிலையை உருவாக்கி, சற்றே இதமாக இருந்தது.

    • அயனிமரம் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையில் பலத்த சத்தத்துடன் வேரோடு சாய்ந்தது.
    • மரம் கீழே விழுந்ததால் அப்பகுதி வழியே மக்கள் சென்று வர சிரமப்படுகின்றனர்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள நந்தவனம் உள்பட அருவிக்கரை-சாரூர் சானல் கரையையொட்டி 60 ஆண்டுகள் பழமையான அயனி மரம் ஒன்று நின்றிருந்தது. இந்த அயனிமரம் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையில் பலத்த சத்தத்துடன் வேரோடு சாய்ந்தது.

    அந்த நேரம் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்லாததால் அதிர்ஷ்ட வசமாக விபத்து எதுவும் ஏற்படவில்லை. தற்போது இந்த மரம் கீழே விழுந்ததால் அப்பகுதி வழியே மக்கள் சென்று வர சிரமப்படுகின்றனர்.

    எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மரத்தை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆண்டுக்கு சராசரி மழை அளவு என்பது 90 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் அது மிகவும் குறைவான மழை என்பதை குறிக்கும்.
    • 90 முதல் 95 சதவீதத்திற்குள் மழை பெய்தால் அது இயல்புக்கும் குறைவான மழை பொழிவு ஆகும்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் பருவ மழையை நம்பியே விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிக அளவு மழை பொழிவு இருக்கும்.

    ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழையின் அளவை பொறுத்தும், வான் மண்டலத்தில் உருவாகும் ஈரபதத்தின் அடிப்படையிலும் இந்த ஆண்டு எவ்வளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பதை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும். அதன்படி இந்த ஆண்டு இந்தியாவில் இயல்புக்கும் குறைவான அளவிலேயே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று ஸ்கைமேட் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    அதன்படி 2023-ம் ஆண்டில் 94 சதவீதம் அளவுக்கே மழை பெய்யும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. ஆண்டுக்கு சராசரி மழை அளவு என்பது 90 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் அது மிகவும் குறைவான மழை என்பதை குறிக்கும்.

    இதுபோல 90 முதல் 95 சதவீதத்திற்குள் மழை பெய்தால் அது இயல்புக்கும் குறைவான மழை பொழிவு ஆகும். 96 சதவீதம் முதல் 104 சதவீதத்திற்கு மழை பெய்தால் அது இயல்பான மழை பொழிவு. 105 சதவீதம் முதல் 110 சதவீதம் அளவுக்கு மழை பெய்தால் அது இயல்பைவிட அதிக மழை பொழிவு எனக்குறிப்பிடப்படும்.

    இதன் அடிப்படையில் இந்தியாவில் இந்த ஆண்டு 94 சதவீதம் அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று ஸ்கைமேட் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது இயல்பை காட்டிலும் குறைவாகும்.

    இந்தியாவில் இந்த ஆண்டு இயல்பை காட்டிலும் குறைவான மழை பொழிவு இருக்கும் என்பதற்கு காலநிலை மாற்றத்தில் ஏற்பட்ட தாக்கமே காரணம் என்றும் தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஆசிய நாடுகளில் இந்த ஆண்டு வறண்ட வானிலை காணப்படும். இதற்கு எல்நினோ மாற்றம் அதிகரித்து வருவதே காரணம். ஆசிய நாடுகள் இடையே வறட்சி அதிகரித்து வருவதும் பருவ மழை இயல்பை காட்டிலும் குறைவாக பெய்ய காரணம் என்று கூறியுள்ளது.

    பருவ மழை இயல்பை காட்டிலும் குறைவாக பெய்தால் அது விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் என்பதால் அதற்கேற்ப அவர்கள் சாகுபடி பணிகளில் ஈடுபடவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது திடீரென பெய்த ஆலங்கட்டி மழை காரணமாகவும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திற்பரப்பு அருவி பகுதியிலும் லேசான சாரல் மழை பெய்தது.
    • சாரல் மழை பெய்ததையடுத்து அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது

    நாகர்கோவில் :

    குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று பெருஞ்சாணி அணை பகுதிகளில் மழை பெய்தது. பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 12 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியிலும் லேசான சாரல் மழை பெய்தது. அங்கு 7.8 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    சாரல் மழை பெய்ததையடுத்து அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும். 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை மிதமான மழை பெய்யும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் நேற்று மாலை இடி மின்னல் மற்றும் பலத்த சூறை காற்றுடன் மழை பெய்தது.
    • குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் நேற்று மாலை இடி மின்னல் மற்றும் பலத்த சூறை காற்றுடன் மழை பெய்தது.

    சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் குற்றாலம்-தென்காசி சாலையில் இராமாலயம் அருகே மிகப் பழமையான மரங்கள் சாலைகளின் நடுவே திடீரென சாய்ந்து விழுந்தன.

    இதனால் தென்காசி குற்றாலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் கம்பத்தின் மீது மரம் சாய்ந்ததால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

    இதனால் சில பகுதிகளில் மின் வினியோகம் தடைபட்டது. எனவே மரத்தை அகற்ற போலீசார், தீயணைப்புதுறை, மின் வாரிய பணியாளர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

    இருள் சூழ்ந்த நிலை காணப்பட்டதால் மரத்தை அகற்றுவதில் இரவில் சிரமம் ஏற்பட்டது. இதனால் இன்று காலை ஜே.சி.பி. எந்திரம் மூலம் தீயணைப்பு துறை மற்றும் போலீசார் இணைந்து மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது.

    • திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் வெயில் வாட்டியெடுத்தது.
    • 3 கோடை மழை பெய்ததால், வெப்பம் தணிந்திருந்தது.

    திருப்பூர் :

    கோடை காலம் தொடங்கியதில் இருந்தே திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் வெயில் வாட்டியெடுத்தது. வெப்பதாக்கம் அதிகம் இருந்த போது சில நாட்கள் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் சற்று தணிந்தது. குறிப்பாக 3 கோடை மழை பெய்ததால், வெப்பம் தணிந்திருந்தது. நேற்று பகலில் வெயில் கடுமையாக இருந்த நிலையில் மாலை 5:30 மணி முதல், 6:15 மணி வரை மழை பெய்தது. திடீரென கனமழை பெய்ததால் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் தண்ணீர் ஆறுபோல் ஓடியது. ஊத்துக்குளி ரோடு, டி.எம்.எப்., பாலம், ஒற்றைக்கண் பாலம் பகுதியில் மழைநீர் ஆறு போல் ஓடியதால் போக்குவரத்து பாதித்தது.

    இதேபோல் யூனியன் மில் ரோடு, யுனிவர்சல் ரோடு சந்திப்பில், குழி வெட்டியுள்ள இடங்களில் கழிவுநீர் பாய்ந்தோடியது. ஈஸ்வரன் கோவில் வீதி பாலமும் தண்ணீரில் மூழ்கியது. இதே போல் நகரின் பல பகுதிகளில் மழைநீர் ஓடைபோல் ஓடியது. திடீரென கோடை மழை பெய்தது சற்று இடையூறாக இருந்தாலும், மழை நின்றதும், இயல்பு நிலை திரும்பியது.குளுகுளு மழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ×