search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94689"

    • நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது.
    • வேதாரண்யத்தில் இன்று ஒரே நாளில் 69 மி.மீ மழை பதிவாகியது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    இந்நிலையில் இன்று வேதாரண்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்தது. மழையால் வேதாரண்யம் நகரில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    வேதாரண்யத்தில் இன்று ஒரே நாளில் 69 மி.மீ மழை பதிவாகியது. இந்த கோடை மழையால் நகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கலந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
    • இதனால் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டாலும், இரவில் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஏற்காடு:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிரறது. சில பகுதிகளில் அவ்வப்போது கோடை மழை பெய்து வெப்பத்தை தணித்தாலும் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாகவே உள்ளது.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கலந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டாலும், இரவில் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த நிலையில், நேற்று திடீரென மழை பெய்ய தொடங்கியது. சூறைக்கற்றுடன் சுமார் அரை மணி நேரம் பெய்த இந்த மழையின் காரணமாக, ஏற்காடு - நாகலூர் சாலையில் ராட்சச சவுக்கு மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.

    இதன் காரணமாக ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பள்ளி மட்டும் வேலை முடிந்து பொதுமக்கள் வீட்டுக்கு செல்லும் நேரம் என்பதால், சாலையின் இருபுறமும் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    மின்கம்பி மீது மரம் விழுந்ததால், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மின்துறை ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வீட்டிற்கு செல்ல முடியாமல், அங்கே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

    • பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
    • திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை பெய்தது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தின் அணை பகுதிகளில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது.நேற்றும் பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 20.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை பெய்தது. அணை பகுதிகளில் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    • மாலை மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் அரை மணி நேரம் கன மழை பெய்தது.
    • ரோட்டில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    அவினாசி :

    அவினாசியில்கடந்த இரண்டு நாட்களாகபகல் வேளையில்சுட்டெரித்த வெயிலால் மக்கள் அவதி ப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் அரை மணி நேரம் கன மழை பெய்தது. ரோட்டில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை பெய்த போது பலத்த காற்று வீசியதால் அவினாசி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பி ருந்த மரம் முறிந்து விழுந்த து. அதில் அங்கு நிறு த்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களின் மீது மரக்கி ளைகள் விழுந்து வாகனங்கள் சேதம் அடைந்தன. மேலும் மின் கம்ப வயர்க ளில் மரக்கிளை கள் உரசி யபடி இருந்ததால் அப்பகு தியில் மின் இணைப்பு துண்டிக்க ப்பட்டது. அவினாசி முத்து செட்டிபா ளையத்தில் உள்ள அங்க ன்வாடி மையத்திற்குள் மழைநீர் புகுந்தது.

    முறிந்து விழுந்த மரத்தை பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் அப்புறப்ப டுத்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. அவினாசி பகுதியில் நேற்று மாலை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி யானதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை நீடிக்கிறது.
    • அடவிநயினார் அணையில் 10.75 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இடி மின்னலுடன் மழை

    சங்கரன்கோவில், பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை நீடிக்கிறது. நேற்று சிவகிரியில் 1 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    பகலில் வெயில் சுட்டெரித்துவரும் நிலையில் மதியத்திற்கு பின்னர் குளிர்ந்த காற்று வீசுகிறது. தொடர்ந்து வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டு மழை பெய்கிறது.

    செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து 3 நாட்களாக இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்த நிலையில், நேற்று மாலை ஆலங்குளம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. ஒருசில இடங்களில் பயங்கர சத்தத்துடன் இடி இடித்தது.

    மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையில் 10.75 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. குண்டாறு அணையில் 17 அடியும், கருப்பாநதியில் 24.61 அடியும், ராமநதி மற்றும் கடனா அணைகளில் 35 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் திடீர் மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 11.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. கன்னடியன் பகுதியில் 6.8 மில்லிமீட்டரும், அம்பையில் 5 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லையில் லேசான கோடைமழை பெய்தாலும், பெரும்பாலான அணைகள் வறண்டு போகும் நிலையில் இருக்கிறது. இதனால் விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர். அதேநேரத்தில் அவ்வப்போது பெய்யும் சாரல் மழையால் வெப்பம் தணிவதால் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    இன்றைய நிலவரப்படி பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 21.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதில் 15 அடி வரை சகதி மட்டுமே இருக்கும் என்பதால் அணையில் நீர்இருப்பு 9 அடி வரை மட்டுமே உள்ளது.

    118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 78.90 அடியும், சேர்வலாறு அணையில் 42.88 அடியும் நீர் இருப்பு உள்ளது. வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு அணைகளில் 10 அடிக்கு கீழாக நீர் வறண்டு போய்விட்டது.

    • 40 வயதான அரசமரம் - வேப்பமரம் ஆகிய 2 மரங்களும் அருகருகே வளர்ந்து உள்ளன.
    • மக்கள் கடவுளாக பாவித்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் ஜே.கே.ஜே. காலனி பகுதியில், சுமார் 40 வயதான அரசமரம்- வேப்பமரம் ஆகிய 2 மரங்க ளும் அருகருகே வளர்ந்து உள்ளன. இதனை அங்குள்ள மக்கள் கடவு ளாக பாவித்து செவ்வாய், வெள்ளிக்கி ழமை களில் வழிபாடு நடத்தி வரு கின்றனர். இந்த நிலையில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் அரசு -வேம்பு மரங்களுக்கு திருமணம் செய்ய அந்தப் பகுதி மக்கள் முடிவெ டுத்தனர். இதை யடுத்து அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் திருமணம் நடத்தப்பட்டது. முன்னதாக அரச மரத்துக்கு வேட்டியும், வேப்ப மரத்துக்கு சேலையும் கட்டப்பட்டது. பின்னர் திருமண சடங்கு கள் நடந்தன. மேலும் 2 மரங்களுக்கும் மாலைகள் அணிவிக்கப்பட்டது.

    அதை த்தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு, மந்திரங்கள் ஓதி, பொது மக்கள் புடை சூழ வேப்ப மரத்துக்கு தாலி கட்டி ,அரசமரத்துக்கும், வேப்பமரத்துக்கும் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தை தண்டபாணி கோவில் அர்ச்சகர் நாகராஜ குருக்க ள் நடத்தி வைத்தார். அப்பகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
    • இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 31-ம் தேதி நடைபெறுகிறது.

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், டாஸ் போடுவதற்கு முன்னரே அங்கு மழை பெய்ததால் டாஸ் போடாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.


    இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 31-ம் தேதி ஹாமில்டன் நகரில் நடைபெறுகிறது. தொடரை இழக்காமல் இருக்க அந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் இலங்கை அணி உள்ளது.

    • மன்னார்குடி பகுதியில் இடியுடன் பலத்த மழை பெய்தது.
    • அறுந்து கிடந்த மின்கம்பியை மாதவன் மதித்துள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த மேலவாசல் கிராமம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாதவன் (வயது 27).

    நேற்று மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    இந்த நிலையில் மழை பெய்த போது வீட்டில் இருந்த மாதவன், மழை விட்ட பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    அப்போது மேலே சென்ற மின் கம்பி அறுந்து கீழே கிடந்துள்ளது.

    இதை கவனிக்காத மாதவன் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார்.

    அப்போது மாதவன் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாதவன் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • கருப்பாநதி அணைப்பகுதியில் 18 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
    • மலைப்பகுதிகளில் மலை இல்லாததால் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வருகிறது. இதற்கிடையே வளி மண்டல சுழற்சி காரமாக அவ்வப்போது மழை பெய்கிறது.

    நேற்று தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி அணைப்பகுதியில் அதிகப்பட்சமாக 18 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று இரவு தென்காசி, பாவூர்சத்திரம், ஆவுடையானூர், கடையம் உள்ளிட்ட மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது.

    கடும் வெயிலால் அவதி அடைந்த நிலையில், நேற்று இரவு பெய்த மழையால் அப்பகுதியில் குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    எனினும் அணைப்பகுதிகள், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மலை இல்லாததால் அணை களுக்கு நீர் வரத்து இல்லை. இதேபோல் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட குற்றால அருவி களுக்கும் தண்ணீர் வரத்து இன்றி மிக குறைந்த அளவே தண்ணீர் விழுந்து வருகிறது.

    விடுமுறை தினத்தை யொட்டி குறைந்த அளவு தண்ணீர் இருந்தபோதிலும், வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நேற்று குற்றாலம் மற்றும் நெல்லை மாவட்டத்தில் அகஸ்தியர் அருவி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

    அணைகளில் நீர் மட்டம்

    கடும் வெப்பம், போதிய மழை இல்லாததால் அணைகளின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பிரதான அணையான பாபநாசத்தின் இன்றைய நீர்மட்டம் 22.95 அடியாக உள்ளது.

    இதில் 15 அடிக்கு மேல் சகதி காணப்படுவதால் தண்ணீரின் அளவு வெறும்7 அடி மட்டுமே உள்ளது. இதேபோல் 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 42.03 அடியாகவும், 188 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 79.45 அடியாகவும் உள்ளது. இதேபோல் தென்காசி மாவட்டத்தில் 85 அடி உயரம் கொண்ட கடனா நதி நீர்மட்டம் 36.60 அடியாகவும், 84 அடி உயரம் கொண்ட ராமநதி நீர்மட்டம் 35.50 அடியாகவும், கருப்பாநதி நீர்மட்டம் 24.61 அடியாகவும், குண்டாறு நீர்மட்டம் 15.12 அடியாகவும், அடவிநயினார் நீர்மட்டம் 10.75 அடியாகவும் உள்ளது.

    • விவசாய சாகு படிக்கு வடகிழக்கு மற்றும் தென்மே ற்கு பருவமழைகள் ஆதார மாக உள்ளன.
    • சோளம் மற்றும் சில பகுதிகளில் கம்பு விதைக்கின்றனர்.

    மடத்துக்குளம் :

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்க ளுக்குட்பட்ட பகுதியில் விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதிகளில் விவ சாயிகள் பயிர்கள், காய்கறி கள் சாகுபடி மேற்கொள்கி ன்ற னர்.உடுமலை சுற்றுப்ப குதிகளில் விவசாய சாகு படிக்கு வடகிழக்கு மற்றும் தென்மே ற்கு பருவமழைகள் ஆதார மாக உள்ளன. இந்த இரு சீசனிலும், பல ஆயிரம் ஏக்கரில் மானாவாரியாக மக்காச்சோ ளம், சோளம், தட்டைப்பயறு, கொத்த மல்லி, கொண்டை க்கடலை உள்ளிட்ட சாகு படிகள் மேற்கொள்ளப்படு கிறது. குறிப்பிட்ட சில பகுதி களில் கோடை கால மானா வாரி சாகுபடியும் மேற்கொ ள்கின்றனர். குறிப்பாக தீவன தேவை க்காக சோளம் மற்றும் சில பகுதிகளில் கம்பு விதைக்கி ன்றனர்.அவ்வகையில் சோளம் விதைப்பு செய்து ள்ள விவசாயிகள் கோடை மழை கைகொடுக்கும் என்ற எதிர்பா ர்ப்பில் உள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- வடகிழக்கு பருவ மழைக்குப்பிறகு கோடை உழவு செய்து மழை நீரை சேகரிப்பது வழக்கம். அதே போல் மானாவாரி விதைப்பும் மேற்கொள்ள ப்படுகிறது.

    கடந்த வாரம் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது.உடுமலை பகுதியில் விரை வில் இம்மழை பெய்து மானா வாரி சாகுபடி பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என்றனர்.

    தற்போது மழை இல்லாத தால் வறட்சி நிலவி வருகிறது. பருவமழை அதிக அளவில் தொடர்ந்து பெய்ய வேண்டும் என உடுமலை பகுதி விவ சாயிகள் எதிர்பார்க்கின்ற னர்.

    • அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி பாரன்ஹீட் வரை இருந்தது.
    • மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    திருப்பூர் :

    திருப்பூர் நகரப்பகுதி மட்டுமின்றி ஊரக பகுதிகளிலும், கோடை வெயில் வெளுத்து வாங்கியது. அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி பாரன்ஹீட் வரை இருந்தது. இந்நிலையில் மாநிலத்தின் பல இடங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில் நேற்று மாலை திருப்பூர் நகரப்பகுதி மட்டுமின்றி அவிநாசி, பல்லடம், மங்கலம் என மாவட்டத்தின் பல இடங்களில் கோடை மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    • மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து மழை பெய்ததால் மழை நீர் சாலையில் ஓடியது.
    • இரவு 8 மணி முதல் நடுஇரவு 1 மணி வரை மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இதை குளிர்விக்கும் வகையில் நேற்று இரவு 3 மணி நேரம் தொடர்ந்து இடி மின்னலுடன் கனமழை பெய்தது.நேற்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து மழை பெய்ததால் மழை நீர் சாலையில் ஓடியது. இத னால் கல்லாங்காட்டுவலசு, குமா ரவலசு, உப்புபா ளையம் ரோடு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.உப்புப்பா ளையம் ரோட்டில் வீட்டிற்குள் மழை நீர் புகுந்தது.வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் பாதுகாப்பிற்காக ஒரு சில குடும்பத்தினர் இரவோடு இரவாக மேடான பகுதியில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர்.மழைநீர் வீட்டிற்குள் சென்றதால் வீட்டிற்குள் இருந்த கழிவறையில் நீர் புகுந்து சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.கனமழையின் காரணமாக சேனாபதிபாளையம் கிராமம் சக்திபாளையத்தில் உள்ள நல்லசாமி என்பவருக்கு சொந்தமான பசு மாடு ஒன்று இடி தாக்கி இறந்தது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும். தீத்தாம்பாளையத்தில் வேப்ப மரம் விழுந்தன. இதனால் அப்பகுதியில் இருந்த 4 மின்கம்பங்கள் சாய்ந்தன.

    சேரன் நகரில் இடி தாக்கி டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தன. இதனால் நேற்று இரவு 8 மணி முதல் நடுஇரவு 1 மணி வரை மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. மின் வாரிய ஊழியர்களால் டிரான்ஸ்பார்மர் சரி செய்யப்பட்டு மீண்டும் வினியோகம் செய்யப்பட்டது.நேற்று வெள்ளகோவில் பகுதியில் 76 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.

    ×