search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94803"

    • செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான கைப்பந்து, கிரிக்கெட் போட்டிகள் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலை வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டும், கல்லூரியின் நிறுவனர் டாக்டர் இ.எம். அப்துல்லா பிறந்த நாளை முன்னிட்டும் மாநில அளவிலான கைப்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகள் கல்லூரி மைதானத்தில் நடந்தது.

    தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா முன்னிலை வகித்து போட்டியை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், மாணவ-மாணவிகளும் கல்வி மட்டுமல்லாது விளையாட்டு துறைகளிலும் இணைத்துக் கொண்டு முன்னேற்றம் அடைந்து வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. மாணவ-மாணவிகள் தனக்கென்று தனித்துவம் வாய்ந்த விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றார்.

    செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி முதல்வர் பெரியசாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் ரியாஸ் முகம்மது நபி கலந்து கொண்டார். கைப்பந்துப் போட்டிகளில் 18 அணிகளை சேர்ந்த வீரர்களும், கிரிக்கெட் போட்டிகளில் 17 அணிகளை சேர்ந்த வீரர்களும், மாவட்ட அளவிலான பெண்கள் பிரிவு கைப்பந்து போட்டிகளில் 7 அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.

    கைப்பந்து போட்டி ஆண்கள் பிரிவில் சென்னை செயின்ட்ஜோசப் பொறியியல் கல்லூரியும், பெண்கள் பிரிவில் ராமநா தபுரம் வேலுமனோகரன் கலைக்கல்லூரியும் கோப்பையை கைப்பற்றியது. கிரிக்கெட் போட்டியில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி கோப்பையை வென்றது.

    போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்க ளுக்கு சிறப்பு விருந்தினர் ரியாஸ் முகம்மது நபி சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சத்தியேந்திரன் நன்றி கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலை வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியா ளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.

    • தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணிக்கு காரைக்குடி மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
    • இந்த மாதம் இறுதியில் சென்னையில் நடைபெறும் ரவுண்ட் ராபின் போட்டிகளில் பிரியதர்ஷினி விளையாட உள்ளார்.

    காரைக்குடி

    காரைக்குடி சுப்பிரமணியபுரம் 5-வது வீதியில் வசித்து வரும் பாலமுருகன் மகள் பிரியதர்ஷினி. இவர் அழகப்பா மெட்ரிகுலேசன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள இவர் சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பயிற்சியாளர் வரதராஜனிடம் பயிற்சி பெற்று வருகிறார். வலது கை லெக்ஸ்பின்னர், ஆல்ரவுண்டரான இவர் கடந்த ஆகஸ்டு 18-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தமிழ்நாடு பெண்கள் 16 வயதுக்குட்பட்டோர் அணிக்கான தேர்வில் கலந்து கொண்டார்.

    நேற்று வெளியான அணித்தேர்வு முடிவில் மாணவி பிரியதர்ஷினி 15 வயதுக்குட்பட்டோருக்கான ரவுண்ட் ராபின் போட்டிகளுக்காக தமிழ்நாடு பெண்கள் அணிக்கு தேர்வாகி உள்ளார்.சிவகங்கை மாவட்டம் சார்பில் தமிழ்நாடு பெண்கள் அணிக்கு தேர்வான முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இந்த மாதம் இறுதியில் சென்னையில் நடைபெறும் ரவுண்ட் ராபின் போட்டிகளில் பிரியதர்ஷினி விளையாட உள்ளார். சாதனை படைத்த மாணவி பிரியதர்ஷினியை சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர் வரதராஜன், கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்தினர்.

    • ஒரு ஆண்டில் அதிக வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
    • பாகிஸ்தான் அணி 2021-ம் ஆண்டில் 20 வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்தது.

    ஐதராபாத்தில் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி சாதனை படைத்தது. இந்த ஆண்டில் 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா பெற்ற 21-வது வெற்றி இதுவாகும். இதனால் ஒரு ஆண்டில் அதிக வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.

    இதற்கு முன்பு பாகிஸ்தான் அணி 2021-ம் ஆண்டில் 20 ஓவர் கிரிக்கெட்டில் 20 வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்தது. அதை இந்தியா முறியடித்தது. இந்தியா இந்த ஆண்டில் இதுவரை 20 ஓவர் கிரிக்கெட்டில் 29 ஆட்டத்தில் விளையாடி 21-ல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

    • நேற்று பெய்த பலத்த மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
    • 8 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளதால் இரு அணிகளும் முதல் பந்து முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

    மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்தநிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் சொந்த மண்ணில் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

    இந்த போட்டியில் ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. வழக்கமாக 6.30 மணிக்கு டாஸ் போடப்படும். மைதானத்தில் பெரிய அளவில் மழை இல்லை என்றாலும் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

    இதனால் போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இறுதியாக போட்டி 8 ஓவர்களாக (ஒரு அணிக்கு ) குறைக்கப்பட்டு தற்போது டாஸ் போடப்பட்டது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளதால் இரு அணிகளும் முதல் பந்து முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடக்கிறது.
    • ஆடுகளத்தை சரிசெய்யும் பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

    மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடக்கிறது.

    இன்றைய போட்டியில் தோல்வி அடைந்தால் சொந்த மண்ணில் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

    இந்த நிலையில் ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக 6.30 மணிக்கு டாஸ் போடப்படும். மைதானத்தில் தற்போது பெரிய அளவில் மழை இல்லை என்றாலும் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக உள்ளது.

    இதை சரிசெய்யும் பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி முடிந்த பிறகு டாஸ் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வானிலை மையத்தின் அறிவிப்பின்படி, நாக்பூரில் இன்று 64 சதவீதம் மேக மூட்டம் கானப்படும் என்றும், வெப்பநிலையானது 29 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கும் என்றும் மழையால், ஆட்டம் பெரிதும் பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஷகீன் ஷா அப்ரிடியை விட பும்ரா ஆஸ்திரேலியாவில் அதிகமாக விளையாடியிருக்கிறார்
    • பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

    மெல்போர்ன்:

    20 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டி அடுத்த மாதம் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு நாடும் தங்களது அணியை அறிவித்து விட்டன. இந்திய அணிக்கு முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா திரும்பி உள்ளார்.

    அதே போல் காயத்தில் இருந்து குணம் அடைந்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அளித்த பேட்டியின்போது, உலக கோப்பையில் பும்ரா, ஷகீன் ஷா அப்ரிடி இருவரில் யார் சிறப்பாக செயல்படுவார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் பதிலளித்து கூறும் போது, ஷகீன் ஷா அப்ரிடியை விட பும்ரா முன்னிலையில் உள்ளார் என்று கருதுகிறேன். இதில் அனுபவத்தை வைத்து நான் பதில் கூறுகிறேன். பும்ரா ஆஸ்திரேலியாவில் ஓரளவு கிரிக்கெட் விளையாடி உள்ளார்.

    ஷகீன் ஷா அப்ரிடியை விட பும்ரா ஆஸ்திரேலியாவில் அதிகமாகவும், பெரிய போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இதனால் உலக கோப்பையில் அப்ரிடியை விட பும்ரா சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.

    20 ஓவர் போட்டியில் பும்ரா 58 போட்டியில் 69 விக்கெட்டும், ஷகீன் ஷா அப்ரிடி 40 போட்டியில் 47 விக்கெட்டும் எடுத்து உள்ளனர்.

    இதற்கிடையே இன்று நாக்பூரில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது 20 ஓவர் போட்டியில் பும்ரா களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் கூறும்போது, போட்டிக்கு பும்ரா தயாராக இருக்கிறார் என்றார்.

    ஒரு நாள் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டங்களில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றி விட்டது.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டங்களில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றி விட்டது. 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

    இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கு கிறது. கடைசி போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கடந்த போட்டியில் சதம் அடித்து அசத்தினார். மந்தனா, யாஸ்திகா, ஹர்லீன் தியோல் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ரேணுகா சிங், தீப்தி சர்மா ஆகியோர் உள்ளனர். அதேசமயம், தொடரை இழந்துள்ள இங்கிலாந்து ஆறுதல் வெற்றி பெற போராடும்.

    • பந்து வீச்சாளர்கள் சொதப்பியதால் மிகப்பெரிய ரன்களை எடுத்தும் பலன் இல்லாமல் போனது.
    • அணியின் முதுகெலும்பான பும்ரா முழு உடல் தகுதியுடன் இல்லாமல் இருப்பது பந்து வீச்சில் பலவீனத்தை காட்டுகிறது.

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் மொகாலியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இருக்கிறது. ஏனெனில் தோல்வி அடைந்தால் தொடரை இழந்து விடும்.

    எனவே முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

    மொகாலியில் 208 ரன் குவித்தும் தோற்றது மிகுந்த ஏமாற்றமே. பந்து வீச்சாளர்கள் சொதப்பியதால் மிகப்பெரிய ரன்களை எடுத்தும் பலன் இல்லாமல் போனது.

    நாளைய ஆட்டத்துக்கான இந்திய அணியில் பந்து வீச்சில் மாற்றம் செய்யப்படும். கடந்த ஆட்டத்தில் வேகப்பந்தில் உமேஷ் யாதவும், சுழற்பந்தில் அக்‌ஷர் படேலும் சிறப்பாக செயல்பட்டனர். புவனேஷ்குமார், ஹர்சல் படேல், யுசுவேந்திர சாஹல் ஆகியோர் ரன்களை அள்ளிக் கொடுத்து மோசமாக வீசினார்கள். தீபக் சாஹர், அஸ்வின் ஆகியோர் வாய்ப்பு நிலைக்காக காத்திருக்கிறார்கள்.

    அணியின் முதுகெலும்பான பும்ரா முழு உடல் தகுதியுடன் இல்லாமல் இருப்பது பந்து வீச்சில் பலவீனத்தை காட்டுகிறது.

    ஹர்திக் பாண்ட்யா, சூர்ய குமார் யாதவ், லோகேஷ் ராகுல் ஆகியோர் கடந்த ஆட்டத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    தினேஷ் கார்த்திக் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. மேலும் டி.ஆர்.எஸ். விஷயத்தில் அவரது செயல்பாடு அதிருப்தியை அளித்தது. கேப்டன் ரோகித்சர்மா அவருக்கு மற்றொரு வாய்ப்பு கொடுப்பாரா? என்று உறுதியாக தெரியவில்லை. தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டால் ரிஷப் பண்ட் அணிக்கு திரும்புவார்.

    ஆஸ்திரேலிய அணி 2-வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. மொகாலியில் கேமரூன் கிரீன், மேத்யூ வேட் ஆகியோர் இந்திய பந்து வீச்சை விளாசி தள்ளி அணியை வெற்றி பெற வைத்தனர்.

    ஸ்டீவ் சுமித், கம்மின்ஸ், கேப்டன் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல் போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் உள்ளனர். நாளைய போட்டியிலும் அந்த அணி 2-வது பேட்டிங் செய்யவே விரும்பும்.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • ஹர்லின் தியோல் 58 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 40 ரன்களும் அடித்தனர்.
    • இங்கிலாந்து அணி, 47 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது.

    இந்தியா-இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் குவித்தது. கடைசி 3 ஓவர்களில் மட்டும் 62 ரன்கள் அடிக்கப்பட்டது.

    அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஆட்டமிழக்காமல் 111 பந்துகளில் 18 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 143 ரன்கள் விளாசினார். ஹர்லின் தியோல் 58 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 40 ரன்களும் அடித்தனர்.

    இதையடுத்து 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 47 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது. அதன்பின்னர் நிதானமாக ஆடியது.

    • அதிகபட்சமாக டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் அரை சதம் அடித்து களத்தில் இருந்தார்.
    • இந்தியா சார்பில் தீப்தி சர்மா 2 விக்கெட்களை சாய்த்தார்.

    ஹோவ்:

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது.

    ஹோவ் நகரில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது.

    அந்த அணி வீராங்கனை அலிஸ் டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் அரை சதம் அடித்து களத்தில் இருந்தார்.டேனி வியாட் 43 ரன் அடித்தார். சோபியா டங்க்லே 29 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2 விக்கெட்களை சாய்த்தார். இதைத் தொடர்ந்து 228 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது.

    • பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் வரிசை சரியாக இல்லை என சோயிப் அக்தர் விமர்சனம்
    • பாகிஸ்தான் அணி கேப்டனாக பாபர் ஆசமும், துணை கேப்டனாக ஷதாப்கானும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    கராச்சி:

    8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது என்று முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் விமர்சனம் செய்து உள்ளார். அணி தேர்வு தொடர்பாக தேர்வு குழு தலைவரை அவர் கடுமையாக சாடியுள்ளார். சோயிப் அக்தர் கூறியதாவது:-

    பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் வரிசை சரியாக இல்லை. இந்த மிடில் ஆர்டர் மூலம் பாகிஸ்தான் முதல் சுற்றிலேயே வெளியேறி விடுமோ என்ற அஞ்சுகிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது கடினமான காலம். இதைவிட சிறந்த பாகிஸ்தான் அணியை தேர்வு செய்து இருக்க வேண்டும். இந்த பாகிஸ்தான் அணி முன்னேற்றம் அடைந்தால் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் முகமது அமீரும் உலக கோப்பைக்கான அணி தேர்வு தொடர்பாக தேர்வு குழு தலைவரை விமர்சித்து உள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறும் போது, 'தேர்வு குழு தலைவரின் மிகவும் கீழ்த்தரமான தேர்வு' என்று குறிப்பிட்டு உள்ளார்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி கேப்டனாக பாபர் ஆசமும், துணை கேப்டனாக ஷதாப்கானும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த அணி சமீபத்தில் நடந்த ஆசிய இறுதி போட்டியில் இலங்கையிடம் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

    • போட்டியில் பங்கேற்கும் 16 அணிகள் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
    • முதல்முறையாக உலகக் கோப்பையில் இந்தோனேசியா, ருவாண்டா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

    19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான, முதல் டி20 உலகக்கோப்பை தொடரின் அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 29 ஆம் தேதி வரை, தென் ஆப்பிரிக்காவில் போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்தியா உட்பட 16 அணிகள் பங்கேற்கும் தொடரில், 41 போட்டிகள் நடைபெற உள்ளன. முதல்முறையாக உலகக் கோப்பையில் இந்தோனேசியா, ருவாண்டா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.

    போட்டியில் பங்கேற்கும் அணிகள் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் சுற்று, சூப்பர் 6, அரையிறுதி என மூன்று சுற்றுகளாக உலகக்கோப்பை நடைபெறுகிறது. போட்செஃப்ஸ்ட்ரூம், பெனோனி ஆகிய இரு மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடைபெற உள்ளன.

    குரூப் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்கா, ஸ்காட்லாந்து மற்றும் யூ.ஏ.இ. ஆகிய அணிகளுடன் குரூப் சுற்றில் மோதுகின்றன.

    ×