என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94876"
- மதுரை மாவட்டத்தில் அண்மை காலமாக பள்ளி மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தனிப்படை போலீசார் மதுரையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் அண்மை காலமாக பள்ளி மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். வழிப்பறி, நகை பறிப்பில் ஈடுபடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்துக் கொண்டு உல்லாசமாக பொழுதை கழிக்கும் சிறுவர்கள் குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.
இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரகாஷ் ஆலோசனை பேரில், எஸ்.எஸ்.காலனி குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சங்கீதா அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மதுரையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவத்தன்று இரவு தனிப்படையினர் காளவாசல் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டடனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் போலீசார் மறித்தும் அங்கிருந்து வேகமாக சென்றனர். இதனால் சந்தேகமடைந்த தனிப்படை போலீசார் அவர்களை விரட்டிச்சென்று பிடித்தனர். சிக்கிய அனைவரும் 17 வயதுக்குட்பட்ட பிளஸ்-2 மாணவர்கள் ஆவார்கள்.
5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு சென்று உரிய முறையில் விசாரணை நடத்தியதில் மதுரை, அலங்காநல்லூர், சமயநல்லூர், நாகமலைபுதுக்கோட்டை மற்றும் சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு, செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
காலையில் பள்ளிக்கு செல்லும் இவர்கள் மாலையில் இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மோட்டார் சைக்கிளை திருடும் இந்த கும்பல் அதனை திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வேலம்மாள் நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் அஜித்குமார் (23) என்பவரிடம் கொடுத்து கள்ளச்சந்தையில் விற்று பணம் பெற்று வந்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் பிளஸ்-2 மாணவர்கள் 5 பேர் மற்றும் அஜித்குமாரை கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில், சிறு வயதிலேயே எங்களுக்கு மது பழக்கம் ஏற்பட்டது. இதனால் பணம் தேவைப்பட்டது.
எனவே காலையில் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் சிறு, சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டோம். ஆனால் எங்களுக்கு பணம் போதவில்லை. எனவே மோட்டார் சைக்கிள் திருட்டு, செல்போன் பறிப்பில் ஈடுபட்டோம். இதனால் எங்களுக்கு கணிசமாக பணம் கிடைத்தது. அதனை வைத்துக் கொண்டு மதுபானம், ஆடம்பர வாழ்க்கை என உல்லாசமாக இருந்தோம். மேலும் காதலிகளுடன் கொடைக்கானல், ஊட்டி ஆகிய இடங்களுக்கு சென்று திருடிய பணத்தை செலவழித்தோம் என தெரிவித்தனர்.
மதுரை நகரில் கடந்த வாரத்தில் மட்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 17 வயதுக்குட்பட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த திருட்டு கலாச்சாரம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ஊத்துக்கோட்டை அருகே உள்ள திம்மபூபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி.
- ஒரே நாளில் 3 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள திம்மபூபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவுபூட்டு உடைந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரிய வந்தது. இதேபோல் அதே கிராமத்தை சேர்ந்த ராஜன் என்பவரது வீட்டில் பணம் மற்றும் செல்போன் கொள்ளை போனது. அருகில் உள்ள சேகர் என்பவரது வீட்டில் ரூ. 10 ஆயிரம் ரொக்கம், அரை சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் சுருட்டி சென்று இருந்தனர்.
இந்த 3 கொள்ளை சம்பவங்கள் குறித்து பென்னலூர் பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஒரே நாளில் 3 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆத்தூர் நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று வெங்கடேசன் வழக்கம்போல் நீதிமன்றத்திற்கு சென்று விட்டார்.
- ஆத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் வெங்கடேசன் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பனமரத்துப்பட்டி சாலை பகுதியை சேர்ந்தவர் வக்கீல் வெங்கடேசன்.
இவர் ஆத்தூர் நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று வெங்கடேசன் வழக்கம்போல் நீதிமன்றத்திற்கு சென்று விட்டார். அவரது மனைவி பிருந்தா விவசாய தோட்டத்திற்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில் அவரது மகன் வெளியே சென்று வீடு திரும்பிய போது வீட்டின் அருகே முகமூடி அணிந்த ஒருவர் நின்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் வாலிபர் நீங்கள் யார் என்று கேட்டபோது மர்ம நபர் ஆயுதங்களால் தாக்க முயன்றார்.
இதனால் அங்கிருந்து தப்பி ஓடிய வாலிபர் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மேலும்உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 5 பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரமும், ரூ.1 லட்சம் மதிப்பிலான உயர் ரக பட்டுப் புடவைகள் உள்ளிட்ட பொருட்களும் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீஸ் நிலையத்தில் வெங்கடேசன் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் நித்தியா. இவர் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்றுவிட்டார்.
திரும்பி வந்து பார்க்கும்போது முன்புற கதவு மற்றும் உள்ளிருந்த பீரோ அனைத்தும் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பீரோவில் வைத்திருந்த ஒரு கிலோ வெள்ளி, தங்க நகைகள் மற்றும் ரூ.4 லட்சத்து 28 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் தலைவாசல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தலைவாசல் டோல்கேட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களையும் தலைவாசல் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆத்தூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 15 நாட்களாக தொடர் கொள்ளையில் முகமூடி ஆசாமிகள் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் மெத்தன போக்கில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலூரில் நீதிமன்றம் முன்பாக உள்ள ஒரு வணிக வளாகத்தில் நள்ளிரவில் புகுந்த ஆசாமிகள் அங்குள்ள அடுத்தடுத்த கடைகளில் பூட்டுக்களை உடைத்து உள்ளனர். அங்குள்ள ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அலுவகத்தில் பூட்டை உடைத்த திருடர்கள் பணம் வைத்திருந்த இரும்பு பெட்டகத்தின் பூட்டை உடைக்க முயன்று உள்ளனர். ஆனால் இரும்பு பெட்டகத்தின் பூட்டை உடைக்க முடியாததால் அதில் வைத்திருந்த பணம் தப்பியது.
பின்னர் அருகிலுள்ள செல்போன் ரீசார்ஜ் கடை, டீ கடை, பலசரக்கு கடை ஆகியவற்றின் பூட்டுக்களை உடைத்து உள்ளனர். செல்போன், உதிரிபாகங்கள், பீடி, சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் குறைந்தளவு பணம் திருடு போய் உள்ளது.
இந்த திருட்டு சம்பவம் ஒரே நாளில் நடந்து உள்ளது. சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மேலூர் போலீசில் புகார் செய்து உள்ளனர். போலீசார் வழக்குபதிவு செய்து சம்பந்தப்பட்ட ஆசாமிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்