என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அபராதம்"
- சட்டம் 1997-ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- இந்திய தண்டனைச் சட்டம் 289-ன்படியும் பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் 11 (எச்)-ன்படியும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆவடி:
பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் கால்நடைகளை வளர்த்து வரும் பொது மக்கள் தங்களது மாடுகளை மாட்டு கொட்டகையில் கட்டி வளர்த்து முறையாகப் பராமரித்து கொள்ள வேண்டும்.
தவறும் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்யவும், மீறுபவர்கள் மீது விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை விதிகள்) சட்டம் 1997-ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டத்தை மீறும் நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 289-ன்படியும் பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் 11 (எச்)-ன்படியும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பூந்த மல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் கால்நடை வளர்ப்பு கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நகரசபை தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் ஸ்ரீதர், ஆணையர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கால்நடை உரிமையாளர்களுக்கு மேற்கண்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அறிவுரைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் குழு உறுப்பினர்களான போலீஸ் அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டு கால்நடை உரிமையாளர்களுக்கு கால்நடைகளை சாலையில் திரியவிடாமல் முறையாக வளர்ப்பது குறித்தும், கால் நடைகளால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினர்.
- இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.
- ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவில் அருகே இன்று ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது :-
இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.
காரில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும்.
இதன் மூலம் உயிரிழப்பை தடுக்கலாம்.
மாவட்டத்தில் தற்போது ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அபராதம் விதிப்பது எங்களுக்கு நோக்கமல்ல.
ஹெல்மெட் , சீட் பெல்ட் அணிந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பை தடுக்கலாம். ஒரு உயிரின் மதிப்பு விலை மதிப்பற்றது.
இதற்காகத்தான் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் அவர்களுக்கு உடனுக்குடன் இரட்டிப்பு அபராதம் விதிக்க உத்தரவிட்டு உள்ளேன் .
அவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்தாலும் விதிமுறை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். பாரபட்சம் இன்றி அபராதம் விதிக்கப்படுகிறது.
தற்போது தஞ்சை மாவட்டத்தில் விபத்தால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இனி அனைவரும் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டுங்கள். உயிரிழப்பை தடுக்க ஒத்துழைப்பு கொடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து போக்கு வரத்து காவலர்கள் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பேரணியாக சென்றனர். செல்லும் வழியில் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மும்பை:
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி நேற்று மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் நகருக்கு வந்தார். அங்கு சதார் பஜார் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு ஓய்வெடுக்க சென்றார். அப்போது வெளியே நிறுத்தப்பட்ட எம்.பி.யின் காரின் முன்பகுதியில் நம்பர் பிளேட் இல்லாமல் இருப்பதை, அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் ரமேஷ் சிந்தான்கிதி என்பவர் கவனித்தார். இதையடுத்து அதிரடி நடவடிக்கையாக எம்.பி.யின் கார் டிரைவரிடம் ரூ.200 அபராதம் செலுத்தும்படி கூறினார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த அசாதுதீன் ஒவைசி எம்.பி.யின் ஆதரவாளர்கள் அங்கு வந்தனர். இதனால் பரபரப்பு சூழல் உருவானதால் அங்கு போலீஸ் அதிகாரிகளும் விரைந்து வந்தனர். ஆனால் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.பி.யின் காருக்கு அபராதம் விதிப்பதில் உறுதியாக இருந்தார். இதனால் வேறு வழியின்றி எம்.பி.யின் கார் டிரைவர் ரூ.200 அபராதம் செலுத்தினார்.
இந்தநிலையில் எம்.பி.யின் காருக்கு துணிச்சலுடன் அபராதம் விதித்த உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் சிந்தான்கிதியை சோலாப்பூர் நகர போலீஸ் கமிஷனர் ஹரிஷ் பைஜால் நேரில் அழைத்து ரூ.5 ஆயிரம் வெகுமதி அளித்து பாராட்டினார்.
தமிழ்நாட்டைப் போலவே குஜராத் மாநிலத்திலும் வறட்சி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அங்குள்ள டகோத் நகரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. அணை நீர்மட்டம் குறைந்து விட்டது. தண்ணீர் வழங்கும் ஏரி வறண்டு விட்டது. இதனால், நகர மக்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தட்டுப்பாடு காரணமாக, தண்ணீரை வீணடிப்பவர்களுக்கு ரூ.250 முதல் ரூ.500வரை அபராதம் விதிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக 9 வார்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் சோதனை நடத்துவார்கள். தண்ணீரை வீணடிப்பவர்களிடம் அபராதம் வசூலிப்பார்கள். மேலும், இரண்டாவது, மூன்றாவது தடவையாக தண்ணீரை வீணடித்து பிடிபட்டால், வீட்டு தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டின் பெர்த் நகரின் தெற்கு வீதியில் ‘தி கரி கிளப் இந்தியன் ரெஸ்டாரண்ட்’ என்ற பெயரில் இந்திய உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நிலிஷ் டோக்கே என்பவர் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார்.
இந்த உணவகம் உணவுப்பொருட்களை பாதுகாப்பதிலும், தூய்மையான தரத்தில் உணவக வளாகத்தை பராமரிப்பதிலும் தவறியது உள்ளிட்ட 7 விதிமுறைகளை மீறி இருக்கிறது. சுகாதார ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த உணவகத்துக்கு 25 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் (சுமார் ரூ.12½ லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து உணவகத்தின் அதிபர் நிலிஷ் டோக்கே கூறுகையில், “ உணவகத்தில் சோதனை நடந்தபோது நான் இல்லை. இருப்பினும் மறுநாளே உணவகம் தூய்மைப்படுத்தப்பட்டு முழுமையான தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டார்.
வேலூர் மாவட்ட போலீசார் ரோந்து செல்ல வாகனங்கள் டார்ச்லைட், ரேடார்கள், கேன், உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. இவற்றின் பராமரிப்பு குறித்து மாதந்தோறும் ஆய்வு செய்யப்படுகிறது.
அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ஆய்வு நடைபெற்றது. ஆய்வு செய்த பின்னர் எஸ்.பி. பிரவேஷ் குமார் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் கேதாண்டப்பட்டி, மோட்டூர், வன்னிவேடு, நாட்டறம் பள்ளி, ஆகிய 4 இடங்களில் இலவச வாகன நிறுத்துமிடம் உள்ளது.
அந்த இடத்தில் மட்டும் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம். விதிகளை மீறி நெடுஞ்சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை கண்காணிக்க 4 போலீஸ் ரோந்து குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது.
அதேசமயம், பாண்டியா, ராகுல் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயினை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அதன்படி விசாரணை நடத்திய அதிகாரி டி.கே.ஜெயின், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இரண்டு வீரர்களுக்கும் தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த 10 துணை ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், மீதி ரூ.10 லட்சத்தை பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க வளர்ச்சிக்காக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த அபராத தொகையை 4 வாரங்களுக்குள் செலுத்தாவிட்டால், அவர்களின் சம்பளத் தொகையில் இருந்து பிசிசிஐ பிடித்தம் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். #KLRahul #HardikPandya #BCCI #KoffeeWithKaran
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஆடுகளத்தில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக டோனிக்கு, போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடைசி பந்தில் வெற்றி பெற நான்கு ரன்கள் தேவை என்ற நிலையில், பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாசி சென்னை அணிக்கு சாண்ட்னர் வெற்றி தேடி தந்தார். இதன் மூலம் சென்னை அணி 6 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்தப் போட்டியில் டோனி 43 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. #IPL2019 #RRvCSK #MSDhoni
அமெரிக்காவை சேர்ந்த இணையதள ஜாம்பவானான ‘கூகுள்’ நிறுவனத்துக்கு நேற்று போட்டிகளுக்கான ஐரோப்பிய யூனியன் கமிஷனர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.11,648 கோடி அபராதம் விதிப்பதாக அறிவித்தார். ஒப்பந்த விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
கூகுள் நிறுவனம் ஆன்-லைன் வர்த்தக சந்தையில் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தி தனது போட்டியாளர்கள் தேடு விளம்பரங்கள் வெளியிடுவதை தடுத்துள்ளது. கூகுள் வர்த்தகரீதியாக மிகவும் முக்கிய விளம்பரதாரர்களுக்கு மட்டுமே தேடு விளம்பரங்கள் வெளியிட தனிப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் அனுமதி வழங்கியுள்ளது.கூகுள் முதலில் தனது போட்டியாளர்களின் இணையதளங்களில் தேடு விளம்பரங்கள் வெளியிடுவதை தடுத்துள்ளது.
பின்னர் அவர்களிடம் கூகுளில் குறைந்த எண்ணிக்கையில் விளம்பரங்கள் வெளியிட மிகவும் லாபகரமான இடம் ஒதுக்குவதற்கு முன்பதிவு செய்யும்படி வலியுறுத்தியுள்ளது.அதோடு தனது போட்டி இணையதளங்களில் ஏதாவது தேடு விளம்பரங்கள் வெளியானால், மாற்றம் செய்வதற்கு முன்பு கூகுளிடம் எழுத்து மூலம் அனுமதி பெறவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது என்று போட்டிகளுக்கான ஐரோப்பிய யூனியன் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்