search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95115"

    • நள்ளிரவில் மர்ம நபர்களால் மோட்டர் சைக்கிள் திருடப்பட்டது.
    • ஒரே நாளில் 2 புதிய மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்(24) இவர் தனியார் நிறுவன ஊழியர். வழக்கம் போல் தனது இவரது வீட்டு முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். சம்பவத்தன்று நள்ளிரவில் மர்ம நபர்களால் மோட்டர் சைக்கிள் திருடப்பட்டது. அதன் மதிப்பு சுமார் 1 லட்சம் எனக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அதே வீதியில் உள்ள திவாகர்(26) என்பவரின் மோட்டார் சைக்கிளும் திருடப்பட்டது. ஒரே நாளில் அதே வீதியில் 2 புதிய மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக நடைபெறாமல் இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் மீண்டும் பல்லடம் பகுதியில் தலை தூக்கி உள்ளது. எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி மோட்டார் சைக்கிள்களை திருடும் மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கும்மிடிப்பூண்டி அருகே விவசாயி வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் அங்கு இருந்து செல்போன் மற்றும் ரொக்கப்பணத்தை திருடிச்சென்றனர்.
    • கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கவரைப்பேட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பரணம்பேடு கிராமத்தில் வசித்து வருபவர் பழனி (வயது 47), விவசாயி. கடந்த 5-ந் தேதி இவரது வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் சிலர் செல்போன் மற்றும் ரொக்கப்பணத்தை திருடிச்சென்றனர்.

    இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட திருட்டு வழக்கு தொடர்பாக செல்போன் பயன்பாட்டை கண்காணித்து வீடு புகுந்து திருடிய வழக்கில் கொசவம்பேட்டையை சேர்ந்த சின்னதம்பி (27), ராஜகோபால் (42) மற்றும் சரவணன் (21) ஆகிய 3 பேரை கவரைப்பேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    • பெண்ணை அறையில் அடைத்து துணிகரம்
    • ேபாலீசுார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி இவரது மனைவி உமா மகேஸ்வரி வயது 50 நேற்று முன்தினம் இரவு வீட்டில் உமாமகேஸ்வரி தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது வீட்டின் பின்பக்கமாக உள்ளே நுழைந்த மர்மநபர்கள் உமாமகேஸ்வரி தூங்கிக் கொண்டிருந்த அறையை தாழிட்டு உள்ளனர்.மற்றொரு அறையில் இருந்த பெட்டியை திறந்து அதில் இருந்த ஒன்றரை சவரன் நகை 5 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடியுள்ளனர்.

    அப்போது சத்தம் கேட்டு உமாமகேஸ்வரி வந்தபோது அறை கதவின் வெளியே தாழிட்டு இருப்பதை கண்டு கண்டு சத்தமிட்டுள்ளார் இதனையடுத்து மர்மநபர்கள் தாளை திறந்து விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

    இந்த திருட்டு சம்பவம் நடைபெற்ற வீட்டுக்கு அருகே வசிப்பவர் முதியவர் நக்கீரன் வயது 74 இவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்னைக்கு சென்றுள்ளார் நேற்று காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் அலங்கோலமாக இருந்துள்ளது பீரோவில் இருந்து 15 ஆயிரம் பணம் திருடி சென்றிருப்பது தெரியவந்தது

    இந்த இரண்டு திருட்டு சம்பவங்கள் குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்டோர் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    திருட்டு நடைபெற்ற வீட்டில் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

    ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து வீடுகளில் திருட்டு நடைபெற்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வீச்சரிவாளுடன் வந்து பைக் திருடிய வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    • தலைமறைவான அவர்களை தேடி வருகிறார்கள்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள தினையத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் ரமேஷ்.

    இவர் வழக்கம் போல் தனது இரு சக்கர வாகனத்தை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுவிட்டார். காலை எழுத்து பார்த்தபோது பைக் காணவில்லை.

    பக்கத்து வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு காமிராவை ரமேஷ் ஆய்வு செய்தபோது 2 வாலிபர்கள் வீச்சரிவாளு டன் நள்ளிரவில் பைக்கை திருடிச் சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து தொண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த வாலிபர்கள் திருட்டை தடுக்கச் சென்றால் வீச்சரி வாளால் கொலை செய்ய வும் தயங்க மாட்டார்கள் என்ற நிலை உள்ளதாக இந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்த திருடர்கள் யார்? வேறு திருட்டு அல்லது கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்களா? என தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறை வான அவர்களை தேடி வருகிறார்கள்.

    • பக்கத்து வீட்டு பெண்மணி மீது சந்தேகம்
    • சமயபுரம் அருகே துணிகரம்

    மண்ணச்சநல்லூர்,

    திருச்சி மாவட்டம் லால்குடி நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராகவன். இவரது மனைவி ஷாலினி (வயது 23). இவரது மாமியார் ஜெயலட்சுமி லால்குடி அருகே உள்ள நெய் குப்பை பகுதியில் தனியாக வசித்து வந்தார். சமீப காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவரை பக்கத்து வீட்டைச் சேர்ந்த சூரியகலா ( 53) என்பவர் கவனித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி சூரியகலா, ஷாலினியை தொடர்பு கொண்டு உங்களது மாமியாரின் உடல்நிலை மோசமாகிவிட்டது என தெரிவித்தார். பின்னர் அடுத்த சில மணி நேரங்களில் ஜெயலட்சுமி இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது.

    பின்னர் ஷாலினி மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று அவருக்கு இறுதி காரியங்களை செய்தனர்.

    பின்னர் ஜெயலட்சுமி அணிந்திருந்த ஆறரை பவுன் நகைகள் மாயமானது தெரியவந்தது.

    தற்போது ஷாலினி சமயபுரம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மாமியாரின் நகைகளை சூரிய கலா திருடி இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். துக்க வீட்டில் நகை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பின்னர் மாலை பாக்கியவதி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • பாக்கியவதி மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தார்.

    மணவாளநகர்:

    திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் சாரதாம்பாள் நகரில் வசிப்பவர் பாக்கியவதி. இவர் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரியாக வேலை செய்கிறார். இவரது கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் காலை கணவன் மனைவி இருவரும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வேலைக்கு சென்றனர். பின்னர் மாலை பாக்கியவதி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடியது தெரிய வந்தது.

    இதுகுறித்து பாக்கியவதி மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தபட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • செயினை கழற்றி ஆடையுடன் வைத்து விட்டு ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தார்.
    • 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

    கோவை,

    கோவை நல்லாம்பா ளையம் அருகே உள்ள சீனிவாசா நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் லோகேஸ்வரன் (வயது 19). கல்லூரி மாணவர். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களுடன் கல்லாறு தூரிபாலம் ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது லோகேஸ்வரன் தனது கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்க செயினை கழற்றி ஆடையுடன் வைத்து விட்டு ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக சென்ற 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் லோ கேஸ்வரனின் செயினை திருடி தப்பி ஓடினர். இதனை பார்த்த கல்லூரி மாணவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 3 பேரையும் மடக்கி பிடித்தார். பின்னர் 3 பேரையும் மேட்டுப்பாளையம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் காரமடையை சேர்ந்த லோடுமேன் பழனிசாமி (29). மேலும் 17,15 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்ட 2 சிறுவர்களையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். லோடுமேன் பழனிசாமியை போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.

    • வி.எம். சுந்தர் (30). இவர் பூச்சி மருந்துகடை நடத்தி வருகிறார். வழக்கம் போல இரவு 9.30 மணிக்கு கடையை பூட்டிவிட்டு, மறுநாள் காலைவந்தபோது ,அதிர்ச்சியடைந்தார்
    • உள்ளே டிராயரில் வைக்கப்பட்டு இருந்த பணம் ரூ.5 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி எல்.என். புரத்தை சேர்ந்தவர் வி.எம். சுந்தர் (30). இவர் பண்ருட்டி 4முனை சந்திப்பில் நகராட்சிக்கு சொந்தமான காந்தி பூங்கா காம்ப்ளக்சில் பூச்சி மருந்துகடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 9ம் தேதி வழக்கம் போல இரவு 9.30 மணிக்கு கடையை பூட்டி சென்று விட்டு மறுநாள் காலை 8.30 மணி அளவில் மருந்து கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டை உடைத்து கடையில்கொள்ளை போனது தெரிய வந்தது.உள்ளே டிராயரில் வைக்கப்பட்டு இருந்த பணம் ரூ.5 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தர் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு, மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்

    . துணை போலிஸ் சூப்பிரண்டு சபியுல்லா நேரில் விரைந்து சென்று கொள்ளை யர்களை பிடிக்க சப்.இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டார். பண்ருட்டியில்இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனிப்படை போலீசார் தொடர் நடவடிக்கை மூலம்கொள்ளையன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் நேமம் பகுதியை சேர்ந்த ஷாகுல் ஹமீத்(60) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து கேரளாவுக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார்அவனை சுற்றி வளைத்து கைது செய்து பண்ருட்டி அழைத்து வந்தனர். விசாரணையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டி கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பூச்சி மருந்து கடையில் கொள்ளையடித்த கொள்ளையனை ஒரு வாரத்தில் துப்பு துலக்கியபண்ருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் ஆனந்த் அன்பு ராஜி ஆகியோரை கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினார்.

    • விசைத்தறி பட்டறை உரிமையாளரின் வீட்டு கதவை உடைத்து, தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    • 10 பவுன் நகைகளை திருடிச்சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை

    கரூர்,

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே சீத்தப்பட்டி காலனி, நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 53) விசைத்தறி பட்டறை நடத்தி வருகிறார்.இவர்  வீட்டை பூட்டிவிட்டு பட்டறைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்ற பார்த்த போது 10 பவுன் நகைகளை மர்ம மனிதர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, பழனிசாமி கொடுத்த புகாரின்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓடும் பஸ்சில் பெண்ணிடம் துணிகரம்
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    திருச்சி, 

    மணப்பாறை பி பெரியபட்டி வளர்ந்த நகர் பகுதியில் வசிப்பவர் முத்துசாமி இவரது மனைவி முத்துலட்சுமி (வயது55).இவர் ஒரு அரசு டவுன் பேருந்தில் மணப்பாறை அரசு மருத்துவமனை பகுதிக்கு சென்றார். பின்னர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி தனது கழுத்தில் கை வைத்து பார்த்த போது அவர் அணிந்திருந்த மூன்று பவுன் சங்கிலி காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து முத்துலட்சுமி மணப்பாறை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேரையூர் அருகே ஆசிரியை வீட்டில் பொருட்கள் திருடு போயிருந்தது.
    • இந்த திருட்டு சம்பவம் குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    பேரையூர் கே.ஆர்.கே.நகரை சேர்ந்தவர் ஜெயக்கொடி. இவர் உத்தப்புரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டை விட்டு மகனுடன் ஆவுடையார் கோவிலுக்கு சென்றார். மறுநாள் காலை அவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது.

    இதனை அக்கம்பக்கத்தினர் பார்த்து வெளியூர் சென்றிருந்த ஜெயக்கொடிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். அதுபற்றி அவர் தனது வீட்டின் அருகே வசித்துவரும் உறவினர் நிரஞ்சனிடம் கூறினார்.

    இதையடுத்து அவர் ஜெயக்கொடி வீட்டிற்கு சென்று பார்த்தார்.

    அப்போது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டில் இருந்த சில பொருட்கள் திருட்டு போயிருந்தது. யாரோ மர்ம நபர்கள் ஜெயக்கொடி வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர்.

    பீரோவில் நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரை திருட்டில் ஈடுபட்டவர்களால் உடைக்க முடியவில்லை. இதனால் அதிலிருந்த நகைகள் தப்பின. இந்த திருட்டு சம்பவம் குறித்து பேரையூர் போலீசில் நிரஞ்சன் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டியிருந்த வீட்டில் புகுந்து மர்மநபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பேரையூர் பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பட்டப்பகலில் ரூ.2 லட்சம் திருடப்பட்டது அந்த பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மணிமங்கலம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த நாட்டரசன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48). சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ் டிரைவராக உள்ளார். இந்த நிலையில் வெங்கடேசன் படப்பை பஜாரில் உள்ள இந்தியன் வங்கியில் தனது குடும்ப செலவுக்காக வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்து தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டினார்.

    பின்னர் அதே பகுதியில் உள்ள பேட்டரி கடைக்குச் சென்று ஏற்கனவே பேட்டரி சார்ஜ் செய்ய கொடுத்திருந்த பேட்டரியை வாங்க சென்றார். பின்னர் பேட்டரி கடையில் இருந்து வெளியே வந்து பார்க்கும் போது மோட்டார் சைக்கிள் பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.2 லட்சம் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து வெங்கடேசன் மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ரூ.2 லட்சம் திருடப்பட்டது அந்த பகுதியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×