search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95115"

    • புதிய வீட்டில் பொருட்கள் திருடிய 6 பேரை கைது செய்தனர்.
    • கே.கே. நகரில் புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டார்.

    மதுரை

    எஸ்.ஆலங்குளம், குமரன் நகரை சேர்ந்தவர் பால் பெஞ்சமின் (30). இவர் கட்டுமான மேற்பார்வையாளராக உள்ளார். கே.கே. நகரில் புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டார். சம்பவத்தன்று காலை ஊழியர்கள் வெளியே சென்றிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த இரும்பு வெட்டும் எந்திரம், டைல்ஸ் வெட்டும் எந்திரம் ஆகிவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் டைல்ஸ் வெட்டும் மிஷின், இரும்பு வெட்டும் எந்திரம் பறிமுதல் செய்யப்ப ட்டது. இதுதொ டர்பாக ஆழ்வார்புரம் ஆசைதம்பி (27), ஜெய்ஹிந்த்பு ரம் மணிகண்டன் (29), நாராய ணசெட்டி தெரு விஜய் (37), காக்கா தோப்பு கண்ணன் (40), ராஜகம்பீரம் பாலமுருகன் (8), ஒத்தக்கடை செல்வராஜ் (58) ஆகியோரை கைது செய்தனர்.

    • மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது.
    • தொழிலாளர்கள் பள்ளி வளாகத்தில் தங்கி இருந்து பணி செய்து வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது இதில் பீகாரை சேர்ந்த தொழிலாளர்க ள் பள்ளி வளாகத்தில் தங்கி இருந்து பணி செய்து வருகின்றனர். நள்ளிரவில் பள்ளி வளாகத்தில் புகுந்த மர்ம நபர்கள் பீகார் தொழிலாளர்கள் பேக்கில் வைத்திருந்த ரூ.18ஆயிரம் மற்றும் செல்போன்களையும் திருடிச் சென்று விட்டனர் காலையில் எழுந்த தொழிலாளர்கள் பணம் மற்றும் செல்போன் காணாததால் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமாக கூலியை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்து வதுவழக்கம். ஆனால் ரம்ஜான் பண்டிகை வருவதால் பணத்தை ரொக்கமாக வாங்கி வைத்துள்ளனர் .இது குறித்து மடத்துக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அத ன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இதே பள்ளி வளாகத்தில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

    • ஓட்டுநர் சாமுவேல் டேவிட், மற்றும் உதவியாளர் இந்திரஜித் ஆகியோர் பால் பாக்கெட்டுகள் ஏற்றி வந்த வாகனத்தை வெளி கேட்டில் உள்ள காவலாளிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.
    • போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணையில் பால் வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர் ஒருவர் உள்ளே இருந்து கூடுதலாக பால் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு வெளியே அவற்றை விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. நேற்று காலை ஓட்டுநர் சாமுவேல் டேவிட், மற்றும் உதவியாளர் இந்திரஜித் ஆகியோர் பால் பாக்கெட்டுகள் ஏற்றி வந்த வாகனத்தை வெளி கேட்டில் உள்ள காவலாளிகள் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 576 பால் பாக்கெட்டுகள் கூடுதலாக இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து இருவர் மீதும் ஆவின் பால் நிறுவன பொது மேலாளர் சுஜாதா செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்ததாக தெரிகிறது. புகாரின் அடிப்படையில் செம்மஞ்சேரி போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஓடக்கரை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வளாகத்தில் 34 ஆடுகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
    • மீட்கப்பட்ட ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ. 3.50 லட்சம் என்று தெரிகிறது.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் மற்றும் ஆறுமுகநேரி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஆடுகளை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் காயல்பட்டினத்தின் உச்சினிமாகாளி யம்மன் கோவில் தெரு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 5 வீடுகளில் வளர்க்கப்பட்ட 34 ஆடுகள் நேற்று முன்தினம் இரவு ஒரே நாளில் திருட்டு போன தால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

    ஆடுகளை பறிகொடுத்த நபர்கள் தங்களின் ஆடுகளை யார் திருடி னார்கள்? என்று ஊர் முழுவதும் தேடத் தொடங்கினர். அப்போது ஓடக்கரை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வளாகத்தில் 34 ஆடுகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    உடனே இதுபற்றி ஆறுமுகநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில், சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்று ஆடுகளை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட ஆடுகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 3.50 லட்சம் என்று தெரிகிறது.

    விசாரணையில் ஆடு களை திருடி வைத்தி ருந்தது ஓடக்கரை முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த சின்னத்து ரை (வயது45) என்பதும், இவருக்கு உடந்தையாக உச்சினி மாகாளி அம்மன் கோவில் தெரு பூஜை மணி இருந்து ள்ளார் என்பதும் தெரியவந்தது. ஆனால் இந்த இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

    ஆடுகளை திருடி கடத்தும் போது அவை கத்தும் சத்தம் கேட்டு விடக் கூடாது என்பதற்காக இருக்கைகள் அகற்றப்பட்ட சொகுசு காரில் ஆடுகளை ஏற்றி காரின் கண்ணாடிகளை அடைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பண்டிகை காலத்தில் விற்பதற்காக ஒரே நாளில் 34 ஆடுகளை திருடி உள்ளதும் தெரியவந்தது.

    ஆடுகளை திருடிய சின்னத்துரை, பூஜைமணி ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆடுகளை பறிகொடுத்த உச்சினி மாகாளி அம்மன் கோவில் தெரு வைரவன் மனைவி பத்மாவதி, நாராயணன் மனைவி பெரிய பிராட்டி, காட்டுப்பள்ளி தெரு சிராஜுதீன் மனைவி செய்யது அலி பாத்திமா, மங்கள விநாயகர் கோவில் தெரு சம்சுதீன் மனைவி ரகமது பீவி, முகமதுசுபின் ஆகிய 5 பேர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்ய ப்பட்டுள்ளது.

    ஆனாலும் இதே பகுதியைச் சேர்ந்த மேலும் பலரும் தங்களின் ஆடுகள் திருட்டு போய் உள்ளதாக புகார் கொடுத்துள்ளனர்.

    • சோலார் பேனல் திருடிய 3 பேரை கைது செய்தனர்.
    • பாக்கியம் மகன் பூபதி (20), தினேஷ்குமார் (26), முருகேசன் மகன் கார்த்திக் (18) என்பது தெரியவந்தது.

    மதுரை

    மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள எரவார்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் மாடியில் சோலார் பேனல் அமைக்கப்பட்டிருந்தது. இதனை சம்பவத்தன்று மர்ம நபர்கள் திருடினர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் திருடர்களை விரட்டி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், மைக்கேல் பாளையம், பாக்கியம் மகன் பூபதி (20), தினேஷ்குமார் (26), முருகேசன் மகன் கார்த்திக் (18) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பஞ்சாயத்து அலுவலகத்தில் சோலார் பேனல் திருடியதாக, மேற்கண்ட 3 பேரையும் விக்கிரமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் மதுரை வளையப்பட்டி யாதவர் தெருவை சேர்ந்த சேகர் என்பவரின் தோட்டத்தில் மின்மோட்டாரை திருடியதாக சத்திர வெள்ளாளபட்டியை சேர்ந்த சுமலி என்பவரை பாலமேடு போலீசார் கைது செய்தனர்.

    • பீரோவில் இருந்த 19 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது
    • மர்ம கும்பல் நோட்டமிட்டு சம்பவத்தன்று வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகைகளை திருடி சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி அருகே உள்ள மகாராஜா கடை மாட்டுண்ணி பகுதியில் சின்னதம்பி (வயது 67) என்பவர் வசித்து வருகிறார்.

    இவர் ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் ஆவார். இவரது மனைவியின் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக கடந்த 17-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

    சிகிச்சையை முடித்து கொண்டு இருவரும் நேற்று முன்தினம் இரவு மீண்டும் வீடு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 19 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.

    இதுகுறித்து சின்னதம்பி மகாராஜா கடை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சின்னதம்பி வெளியூருக்கு சென்றிருப்பதை மர்ம கும்பல் நோட்டமிட்டு சம்பவத்தன்று வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 19 பவுன் நகைகளை திருடி சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

    பின்னர் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா–வில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.20 ஆயிரத்தை திருடி சென்ற மர்ம நபர்கள்
    • மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு

    திருச்சி,

    திருச்சி காஜாமலை முகமது நகரை சேர்ந்தவர் முகமது யாசர்அரபத் (வயது 40). இவர் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் பழச்சாறு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடிக் கொண்டு ஓடிவிட்டனர். இதுகுறித்து முகமது யாசர் அரபத் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரூ 20 ஆயிரம் பணத்தை திருடிய மர்ம ஆசாமியை தேடி. வருகின்றனர்.

    ஸ்டூடியோவில் கேமரா திருட்டு போனது

    பெரம்பலூர:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் சுந்தரம் (வயது 40). இவர் பாடாலூர் மெயின் ரோட்டில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு திறக்கப்பட்டு கடையில் இருந்த ஒரு கேமரா, கம்ப்யூட்டர் மானிட்டர் 2, ஹார்ட் டிஸ்க் ஆகியவை திருட்டு போயிருந்தது.

    இதுகுறித்து சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் செல்போனை திருடிச் சென்றது தெரிய வந்தது.
    • உடுமலை போலீசில் புகார் செய்தார்.

    உடுமலை :

    உடுமலையைச் சேர்ந்தவர் பொன்கார்த்திகேயன் (வயது 38). இவர் கோழி தீவனம் விநியோகம் செய்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கு உண்டான கணக்குகளை பார்ப்பதற்கு ஏதுவாக வக்கீல் நாகராஜன் வீதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் அலுவலகம் வைத்து உள்ளார். இந்த சூழலில் நேற்று அவர் அலுவலகத்தை திறந்து வைத்து விட்டு வெளியில் சென்றதாக தெரிகிறது. பின்னர் அவர் அலுவலகத்திற்கு திரும்பி வந்தார். அப்போது அங்கு வைத்திருந்த செல்போனை காணவில்லை.

    அதைத்தொடர்ந்து அலுவலகத்தில் மாட்டியிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் செல்போனை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பொன் கார்த்திகேயன் உடுமலை போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் அலுவலகத்தில் நுழைந்து செல்போனை திருடிச் சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • மணல் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் தப்பி ஓடி விட்டார்
    • மணல் திருடப்பட்டு வருவதாக காட்டுப்புத்தூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மேல காரைக்காடு பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார்.

    தொட்டியம்:

    தொட்டியம் அருகே மேலக்காரைக்காடு பகுதியில் காவிரி ஆற்றும் மணல் திருடப்பட்டு வருவதாக காட்டுப்புத்தூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மேல காரைக்காடு பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக பதிவு எண் இல்லாத ஒரு இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகளை ஏற்றி வந்தவர், போலீசாரை கண்டதும், இருசக்கர வாகனம் மற்றும் மணல் மூட்டைகளை விட்டு விட்டு தப்பியோடியுள்ளார்.

    இதனையடுத்து இரு சக்கர வாகனம் மற்றும் மணல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில் எம்.புத்துரை சேர்ந்த ராசுபிள்ளை மகன் வினோத்குமார்(20) என்பது தெரிய வந்தது. காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய வினோத்குமாரை தேடி வருகின்றனர்.


    • பஸ் ஏற முயன்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலி திருட்டு போனது
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விஸ்வாம்பாள் சமுத்திரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்க பொண்ணு (வயது 60). இவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் பஸ்சில் துறையூர் வந்தார். பின்னர் அவர் பி.மேட்டூர் செல்ல அரசு டவுன் பஸ்சில் ஏற முயன்றார். பஸ்சில் ஏறிய பின்னர் தற்செயலாக தனது கழுத்தை பார்த்தபோது, 7 பவுன் தங்க சங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சக பயணிகளிடம் விசாரித்தும் தங்க சங்கிலி கிடைக்கவில்லை.

    இதனையடுத்து பஸ்சை துறையூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரிக்க பயணிகள் வலியுறுத்தினர்.பின்னர் பஸ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஒவ்வொரு பயணியிடம் விசாரித்தும் நகை கிடைக்கவில்லை. இது தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.


    • வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் திருட்டு போனது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மண்ணச்சநல்லூர்:

    மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் சமீப காலமாக வீடுகள், கோயில்கள் உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. பி கே அகரம் வடக்கு தெருவை சேர்ந்த ஆத்தி நாட்டார் மனைவி காமாட்சி( 65) இவர் வீடு பைபாஸில் இருந்து பிகே அகரம் செல்லும் வழியில் செல்லாண்டியம்மன் கோவில் அருகே காட்டில் உள்ள தனி வீட்டில் குடியிருந்து வருகிறார். அவரது கணவர் (காது கேட்காதவர்) மற்றும் அவரது தந்தை வீட்டிற்கு வெளியே உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.இன்று அதிகாலை 03.00 மணி அளவில் கதவு திறந்து கிடந்த வீட்டில் உள்ளே அடையாளம் தெரியாத ஒரு நபர் சென்று காமாட்சி கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு சென்றுள்ளார் .இது குறித்து சிறுகனூர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர் . இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ×