search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95993"

    • கே.எஸ்.அழகிரி மகள் திருமணம் நாளை காலை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
    • மல்லிகார்ஜூன கார்கே இன்று மாலை தனி விமானத்தில் புறப்பட்டு இரவு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மகள் காஞ்சனா அழகிரி-ரங்கநாத் திருமணம் நாளை காலை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

    இதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு அதே மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வரவேற்பு நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

    இதற்காக மல்லிகார்ஜூன கார்கே மங்களூருவில் இருந்து இன்று மாலை தனி விமானத்தில் புறப்பட்டு இரவு 7 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து காரில் திருவான்மியூர் செல்கிறார். திருமண வரவேற்பில் கலந்துவிட்டு இரவே மங்களூரு புறப்பட்டு செல்கிறார்.

    • கூட்டணி கட்சிக்குள்ளேயே ஒரு கட்சியிலிருந்து, மற்றொரு கட்சிக்கு இழுக்கும் யுக்தி புதுவை அரசியலில் உருவாகியுள்ளது.
    • அரசியல்கட்சிகள் தங்கள் நிர்வாகிகளை தக்க வைப்பதிலும் பெரும் முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. புதுவையில் அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பணிகளை தொடங்கியுள்ளன.

    புதுவை மக்களிடம் செல்வாக்கை பெற மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம், ஆர்ப்பாட்டம், சத்தியாகிரகம் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு நிர்வாகிகளை இழுக்கும் வேலையும் நடந்து வருகிறது.

    கூட்டணி கட்சிக்குள்ளேயே ஒரு கட்சியிலிருந்து, மற்றொரு கட்சிக்கு இழுக்கும் யுக்தி புதுவை அரசியலில் உருவாகியுள்ளது.

    காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்று சட்டசபையில் எதிர்கட்சி அந்தஸ்து பெற்ற தி.மு.க. காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், பிரமுகர்கள், அனுதாபிகளை தங்கள் பக்கம் இழுத்துள்ளனர்.

    • மணப்பெண்களுக்கு குறிப்பிட்ட நோய் பாதிப்பு தொடர்பான மருத்துவ பரிசோதனை மட்டுமே நடத்தப்பட்டது.
    • கர்ப்ப பரிசோதனை நடத்துவதற்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என திண்டோரி மாவட்ட கலெக்டர் விகாஸ் மிஸ்ரா மறுத்துள்ளார்.

    போபால்:

    மத்திய பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் மாநில அரசு சார்பில் 219 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. கடாசரை நகரில் நேற்று முன்தினம் நடந்த இந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு தலா ரூ.56 ஆயிரம் நிதியுதவியும் அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    இது ஏழைகளை அவமதிக்கும் செயல் எனக்கூறியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஓம்கார் சிங், எந்த விதிமுறைகளின் கீழ் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது? என்பதை அரசு விளக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    ஆனால் கர்ப்ப பரிசோதனை நடத்துவதற்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என திண்டோரி மாவட்ட கலெக்டர் விகாஸ் மிஸ்ரா மறுத்துள்ளார். அந்த மணப்பெண்களுக்கு குறிப்பிட்ட நோய் பாதிப்பு தொடர்பான மருத்துவ பரிசோதனை மட்டுமே நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

    அப்போது சில பெண்கள் மாதவிலக்கு பிரச்சினை இருப்பதாக கூறியதால், மருத்துவக்குழுவினரே அந்த பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்தியதாகவும், இதில் 4 பெண்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததால், அவர்களை திருமணத்துக்கு அனுமதிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

    • காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனின் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறவில்லை.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளரான பி.விஜயகுமாரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசு ஆகியோருக்காக பிரசாரம் செய்யப்பட்ட போது பல்வேறு விதிமீறல்கள் நடந்தது.

    காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனின் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறவில்லை.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை செல்லாது என அறிவிக்க வேண்டும். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றதையும் செல்லாது என அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • காங்கிரஸ் சார்பில் இப்தார் நோன்பு நடந்தது.
    • அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செந்தாமரை கண்ணன் முன்னிலை வகித்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள சிக்கல் கிராமத்தில் காங்கிரஸ் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. முதுகுளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் தெய்வேந்திரன், மாநில பொதுச் செயலாளர் ரமேஷ்பாபு மாவட்ட பொருளாளர் ராஜாராம் பாண்டியன், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் கோட்டை முத்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் செந்தாமரை கண்ணன் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறுபான்மை மாவட்ட தலைவர் வாணி இப்ராகிம், மாவட்ட அமைப்பு சாரா தலைவர் முத்துவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சிக்கல் நகர் செயலாளர் அம்ஜத் கான், சிக்கல் ஊராட்சி தலைவர் பரக்கத் ஆயிஷா சைபுதீன், முன்னாள் ஊராட்சி தலைவர் ஆர்தர், பச்சமால், நிர்வாகிகள் செய்யது இப்ராகிம், கனி, முனியசாமி, குமைதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • வருமான வரித்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் டபிள்யூ.ஜி.சி. சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, மண்டல தலைவர்கள் சேகர் ஐசன்சில்வா, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி தனலட்சுமி, மாவட்ட அமைப்புசாரா தொழிற்சங்க தலைவர் நிர்மல் கிறிஸ்தோபர், மகிளா காங்கிரஸ் மாநில துணைத்தலைவி கனியம்மாள், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆரோக்கியம், மாவட்ட நிர்வாகிகள் பிரபாகரன், டேவிட் வசந்தகுமார், விஜயராஜ், கோபால், நாராயணசாமி, ஜெயராஜ், சின்ன காளை, வெங்கட சுப்பிரமணியம், கனகராஜ், மணி, ராஜா, மெர்லின் ஜெபசிங், குமாரமுருகேசன், தாமஸ், தனுஷ், சுப்பிரமணி, அம்மாகிட்ட, மீனாட்சி, சுகுணா, சரஸ்வதி, சுடலைமாடி, மல்லிகா உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

    போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலகம் உள்ளே செல்ல முயன்ற காங்கிரசாரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    • அலங்காநல்லூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் ஸ்டேட் வங்கி முன்பு மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பொருளாளர் நூர் முகமது, மகளிரணி தலைவி செல்லப்பா சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயமணி, திலகராஜ், வட்டார தலைவர்கள் சுப்பாராயலு, காந்தி, குருநாதன், பழனிவேல், நகர் தலைவர்கள் சசி, முருகானந்தம், முத்து பாண்டி, அமைப்பு சாரா மாவட்ட தலைவர் சோனைமுத்து, இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் வருசை முகமது, பாலமேடு சந்திரசேகர், மனித உரிமை வட்டாரத் தலைவர் சரந்தாங்கி முத்து, முன்னாள் தலைவர் மலைகணி, திரவியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • எம்.பி. பதவி பறிபோனதால் ராகுல் காந்திக்கு டெல்லியில் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீட்டையும் காலி செய்யும் படி அறிவிக்கப்பட்டது.
    • டெல்லி அரசு வீட்டை காலி செய்யும் ராகுல் காந்தி தாயார் சோனியா தங்கி இருக்கும் வீட்டிற்கு செல்கிறார்.

    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

    கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தி, கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக குஜராத் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த கோர்ட்டு ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

    எம்.பி. ஒருவர் 2 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றால் அவரது எம்.பி. பதவியை இழக்கும் நிலை ஏற்படும். அந்த சட்டப்படி ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பாராளுமன்ற செயலகம் பறித்தது.

    எம்.பி. பதவி பறிபோனதால் ராகுல் காந்திக்கு டெல்லியில் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீட்டையும் காலி செய்யும் படி அறிவிக்கப்பட்டது.

    அரசு அறிவிப்பின்படி வீட்டை காலி செய்யப்போவதாக ராகுல் காந்தி கூறியிருந்தார்.

    இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்ககோரிய ராகுல் காந்தியின் மனுவை நேற்று சூரத் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதனால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு நீடித்தது. இதையடுத்து அவர் டெல்லி அரசு வீட்டை காலி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி நாளை இந்தவீட்டை காலி செய்ய உள்ளதாக கூறப்பட்டது.

    டெல்லி அரசு வீட்டை காலி செய்யும் ராகுல் காந்தி டெல்லியில் தாயார் சோனியா தங்கி இருக்கும் வீட்டிற்கு செல்கிறார்.

    இதற்காக அரசு வீட்டில் இருந்த பொருட்களை மாற்றும் பணி தொடங்கி உள்ளது. நாளை அவர் சோனியா வீட்டிற்கு குடிபோகிறார்.

    • அரசு பங்களவை விட்டு ஏப்ரல் 22-ந்தேதிக்குள் காலி செய்ய ராகுல் காந்திக்கு மார்ச் 27-ந்தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
    • அரசு பங்களாவில் உள்ள வீட்டை ராகுல் காந்தி ஏப்ரல் 14-ந்தேதி காலி செய்தார்.

    மார்ச்.23: மோடி குடும்ப பெயர் குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

    மார்ச்.24: ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

    மார்ச். 27: அரசு பங்களவை விட்டு ஏப்ரல் 22-ந்தேதிக்குள் காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    ஏப்ரல்.3: இரண்டு ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நேரில் ஆஜராகி மேல்முறையீடு செய்தார். 2 மனுக்களை அவர் தாக்கல் செய்தார்.

    ஏப்ரல்.13: இருதரப்பு வக்கீல்கள் வாதம் நடந்தது. இந்த வாதத்துக்கு பிறகு ராகுல் காந்தி மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு இன்று (ஏப்ரல் 20) ஒத்திவைக்கப்பட்டது.

    ஏப்ரல்.14: அரசு பங்களாவில் உள்ள வீட்டை ராகுல் காந்தி காலி செய்தார்.

    ஏப்ரல்.20: ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அவரது 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க மறுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    • காங்கிரஸ் கட்சி 141 முதல் 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
    • எடியூரப்பாவின் கண்ணீரை துடைக்க பா.ஜனதாவால் முடியவில்லை.

    பெங்களூரு :

    கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் எங்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகிறார்கள். காங்கிரசின் ஒற்றுமை யாத்திரைக்கு நீங்கள் (தொழில் அதிபர்கள்) கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக என்னை அந்த அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதனால் பா.ஜனதா வருமான வரித்துறையை தவறாக பயன்படுத்தி காங்கிரசாரை மிரட்ட முயற்சி செய்கிறது. வருமான வரித்துறையினர் எவ்வளவு மிரட்டினாலும் நாங்கள் மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி நல்லாட்சி நிர்வாகத்தை நடத்துவோம்.

    பா.ஜனதாவின் மோசமான ஆட்சி நிர்வாகத்தால் வெறுப்பில் உள்ள கர்நாடக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மே 10-ந் தேதி தேர்தல் நாள் மட்டுமல்ல, மாற்றத்தை ஏற்படுத்த கூடிய நாள். ஊழலை விரட்டியடிக்கும் நாள். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் நாள், வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நாள், படித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை கிடைக்கும் நாள் ஆகும்.

    காங்கிரஸ் கட்சி 141 முதல் 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே இந்த திட்டங்கள் குறித்து முடிவு எடுத்து அமல்படுத்துவோம். எங்கள் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பட்டீலை இழுக்க பா.ஜனதா கடந்த 3 மாதங்களாக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அவரிடம் நான் பேசியுள்ளேன்.

    எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கினர். அவரை பா.ஜனதா சரியான முறையில் நடத்தவில்லை. நாங்கள் லிங்காயத் சமூகத்திற்கு உரிய முக்கியத்துவத்தை கொடுக்கிறோம். லிங்காயத் சமூகங்களின் மடாதிபதிளை பா.ஜனதா தவறாக பயன்படுத்த முடியாது. எடியூரப்பாவின் கண்ணீரை துடைக்க பா.ஜனதாவால் முடியவில்லை. எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் அனைவரும் பா.ஜனதாவை விட்டு விலகியுள்ளனர். பசவண்ணரின் கொள்கையே காங்கிரசின் கொள்கை.

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

    • ஜி20 நாடுகளின் சபைக்கு அனைவரையும் இந்தியா வரவேற்கிறது.
    • கர்நாடக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் நிற்கவில்லை.

    உப்பள்ளி :

    பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று முன்தினம் கர்நாடகம் வந்தார். அன்று இரவு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் தங்கிய அவர் நேற்று கட்சி நிா்வாகிகள், கல்வியாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது ஜே.பி.நட்டா பேசியதாவது:-

    கர்நாடக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் நிற்கவில்லை. நாட்டில் 60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் பிரிவினை அரசியலை தான் செய்தது. சமுதாயத்தை இரண்டாக உடைத்த அக்கட்சி இன்று பலவீனம் அடைந்துள்ளது. பா.ஜனதா மண்டல ரீதியிலான அடையாளங்களை கவுரவிக்கிறது. பிரதமர் மோடியின் துடிப்பான தலைமையின் கீழ் நாடு வலுவாக உள்ளது. இந்திய அரசியல் கலாசாரத்தை மோடி மாற்றியுள்ளார். மத்திய பணிக்கான தேர்வை ஆங்கிலம், இந்தி மட்டுமின்றி நாட்டின் 13 மொழிகளில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மோடி பிரதமரான பிறகு பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன. அண்டை நாடுகளில் அவசர நேரங்களில் தேவையான உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது. முன்பு இந்தியா, பாகிஸ்தான் பெயர்கள் குறித்து விவாதம் நடந்தது. தற்போது இந்தியாவின் பெயர் பேசப்படும்போது, பாகிஸ்தான் பெயர் வருவது இல்லை. இதை எல்லாம் மோடி மாற்றி அமைத்துள்ளார்.

    ஜி20 நாடுகளின் சபைக்கு அனைவரையும் இந்தியா வரவேற்கிறது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தபோது, அங்கிருந்த 23 ஆயிரம் இந்தியர்களை பாதுகாப்பாக தாய் நாட்டிற்கு அழைத்து வந்தோம். இதற்கு பிரதமர் மோடி காரணம்.

    இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

    அதைத்தொடர்ந்து மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி பேசுகையில், 'பா.ஜனதா கட்சி வலுவாக வளர்ந்துள்ளது. உலகின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. ஜே.பி.நட்டா, கட்சியை சிறப்பான முறையில் வழிநடத்தி வருகிறார். சில மாநிலங்களில் பா.ஜனதா தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறோம். அதனால் நீங்கள் கட்சிக்கு பலம் கொடுக்கும் பணியை செய்ய வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகங்கள் உள்பட பிற சமூகங்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம். நாங்கள் இட ஒதுக்கீடு என்ற தேன்கூட்டில் கை வைத்தோம். ஆனால் எங்களை தேனீக்கள் கடிக்கவில்லை' என்றார்.

    • காங்கிரஸ் கட்சி இன்று 5-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
    • மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி இதுவரை மொத்தம் 220 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவடைய உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று ஐந்தாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 4 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    பா.ஜ.க. முதல் மந்திரி பசவராஜ் பொம்மை போட்டியிடும் ஷிகோன் தொகுதியில் போட்டியிட யாசிர் அகமது கான் பதானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி இதுவரை மொத்தம் 220 வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அசோக் கெலாட் உள்பட 40 நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. சச்சின் பைலட் பெயர் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

    ×