என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96042"
- ஸ்ரீதரை சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- மதனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து மம்தாவை கைது செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், பூஜாரி வாரி பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 36). ராணுவ வீரர். இவரது மனைவி மம்தா. இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து வந்தனர்.
கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு ஸ்ரீதர் ராணுவ பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தினமும் மது குடித்து விட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார்.
இதுகுறித்து மம்தா போலீசில் புகார் செய்தார்.போலீசார் கணவன் மனைவி இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
கணவரின் தொல்லை தாங்க முடியாததால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மம்தா தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று ஸ்ரீதர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். கோடை வெப்பம் அதிகமாக இருந்ததால் அறையின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினார்.
நள்ளிரவில் மம்தா கணவர் வீட்டிற்கு வந்தார். வீட்டின் மாடிக்கு சென்று அங்கு அறையில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு சென்று விட்டார்.
உடல் முழுவதும் தீ பற்றி எரிந்ததால் ஸ்ரீதர் வலியால் அலறி துடித்தார். ஸ்ரீதரின் அலறல் சத்தம் கேட்ட அவரது பெற்றோர் மாடிக்கு ஓடிவந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஸ்ரீதரை சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஸ்ரீதர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மதனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து மம்தாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகள் மீதான பாசத்தில் நாயை சற்று அதிகமாகவே தாக்கினார்.
- வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், குமாரை விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
வாழப்பாடி:
இன்றைய நவீன உலகில் மொபைல் போன் பயன்படுத்துகிற பெரும்பாலானோர் வாட்ஸ்-அப், முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர், யூ-டியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அன்றாட நிகழ்வுகளை யதார்த்தமாக பதிவு செய்து வருகிறார்கள். அதுபோன்று 7 மாதங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலான வீடியோவால் தொழிலாளி கைதாகி கம்பி எண்ணும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அத்தனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி குமார் (வயது 46). இவர் செல்லப்பிராணியாக நாய் வளர்த்து வந்தார். குமாரின் மகள் அந்த நாயை கொஞ்சி விளையாடுவது வழக்கம்.
7 மாதங்களுக்கு முன்பு தெருவோர வெறிநாய் ஒன்று கடித்ததில் அந்த வளர்ப்பு நாய்க்கு வெறி பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது குமாரின் மகளை நாய் கடித்தது. இதனால் ஆத்திரமடைந்த குமார் அந்த நாயை கோபத்தில் அடித்தார். மகள் மீதான பாசத்தில் நாயை சற்று அதிகமாகவே தாக்கினார். இதில் அந்த நாய் இறந்தது.
இந்த சம்பவத்தை அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். சென்னை திருவள்ளூர் பகுதியை சேர்ந்த பிராணிகள் நல அமைப்பின் தலைவர் விக்னேஷ், இதுபற்றி வாழப்பாடி போலீசில் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாழப்பாடி போலீசார், குமாரை விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்பு அவர் ஆத்தூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு அருண்குமார் முன்பாக ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டுவிடம் குமார் மகளை நாய் கடித்ததால் ஏற்பட்ட காயத்திற்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஆவணங்களை பார்த்தார். இதையடுத்து கூலித்தொழிலாளி குமாரை மாஜிஸ்திரேட்டு அருண்குமார் ஜாமீனில் விடுதலை செய்தார்.
- சாமிதுரை குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
- அப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 23).
இவருக்கு சமீபத்தில் தான் வீரவநல்லூரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் பேசி நிச்சயித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு கும்பல் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
சாமிதுரையின் சகோதரர் சுப்பையா என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சாமிதுரை கொலை செய்யப்பட்டது. அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலை தொடர்பாக கோதைசேரியை சேர்ந்த முருகேசன், திசையன்விளையை சேர்ந்த விக்டர் ஆகிய 2 பேர் ராதாபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும்போதுதான் கொலைக்கான முழுக்காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதற்காக அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே சாமிதுரை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் தாசில்தார் இசக்கிபாண்டி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சாமிதுரை குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவரது உறவினர்கள் வலியுறுத்தினர்.இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதைத்தொடர்ந்து சாமிதுரையின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ரிசாப், கூடுதல் டி.எஸ்.பி. மாரிஸ்வரன் ஆகியோர் சாமிதுரையின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த ஆர்எஸ்எஸ் தொண்டர் சஞ்சித் (26). இவர் பாலக்காடு மாவட்டம் எல்லப்புள்ளியில் கடந்த 15-ம் தேதி அன்று காலை 9 மணியளவில் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல், சஞ்சித்தை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பியது.
இதில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய சஞ்சித் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சஞ்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காரில் வந்து தனது கணவரை கொன்றவர்களை தன்னால் அடையாளம் காண முடியும் என்று சஞ்சித்தின் மனைவி கூறியிருந்தார்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியா என்கிற பயங்கரவாத இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் கன்னியம்மா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (51). கூலித்தொழிலாளி.
இவரது மனைவி மகேஸ்வரி. மகன் பாண்டியன் (28). பாண்டியன் மனநிலை பாதிக்கப்பட்டவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
மனநலம் பாதிக்கப்பட்ட தன் மகனை பெற்றோர்கள் பல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றும் அவர் குணமாக வில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டியன் தாய் மகேஸ்வரியை தாக்கி உள்ளார். இதனால் திருநின்றவூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் மகேஸ்வரி வசித்து வருகிறார்.
மேலும் பாலகிருஷ்ணன் தனது மகனை சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் பாலகிருஷ்ணன் அவரது மகன் பாண்டியன் ஆகியோர் இருந்தனர். நள்ளிரவு நேரத்தில் மின்சாரம் தடைபட்டது. அப்போது பாண்டியன் தனது தந்தை பாலகிருஷ்ணன் இடம் மெழுகுவர்த்தியை கொண்டு வருமாறு கூறியுள்ளார். பாலகிருஷ்ணன் மெழுகுவர்த்தியை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது தந்தை மகனுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாண்டியன் வீட்டில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து தந்தை பாலகிருஷ்ணனை தலையில் சரமாரியாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து மணவாளநகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், மணவாள நகர் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் அருகே தந்தையை மகன் உருட்டு கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் புகழ் பெற்றவர் ராப் இசைக்கலைஞர் யெங் டால்ப் (வயது 36). இவரது இயற்பெயர் அடால்ப் ராபர்ட் தார்ன்டன் ஜுனியர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்ட முதல் ஆல்பமே பெரும் புகழைத் தந்தது. இந்த ஆல்பத்தை யூ டியூப்பில் பல லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
இவர் நேற்று முன்தினம் மதியம் தனது சொந்த ஊரான டென்னிசி மாகாணத்தின் மெம்பிஸ் நகர விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு கடையில் தின்பண்டம் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என தகவல்கள் கூறுகின்றன. அவருடைய மறைவுக்கு சக இசைக்கலைஞர்கள் மேகன் தீ ஸ்டாலியன், சான்ஸ் தி ராப்பர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
யெங் டால்ப் உடல்நலமில்லாமல் இருக்கிற தனது உறவினரை பார்ப்பதற்காக அந்த நகருக்கு கடந்த திங்கட்கிழமையன்று வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.யெங் டால்ப் சுட்டுக்கொல்லப்பட்டதை அந்த நகர மேயர் ஜிம் ஸ்ட்ரிக்லேண்ட் உறுதி செய்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘ராப் கலைஞரான யெங் டால்ப் சுட்டுக்கொல்லப்பட்ட துயரம், வன்முறைக்குற்றம் ஆகும். இது மிகுந்த வலியை ஏற்படுத்தி உள்ளது’’ என குறிப்பிட்டார்.
கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவரை சார்லட் நகரில் வைத்து சுட்டுக்கொல்ல முயற்சி நடந்தது. அதில் அவருடைய கார் சேதம் அடைந்தது. அதே ஆண்டின் செப்டம்பர் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சுட்டுக்கொல்ல நடந்த முயற்சியில் காயங்களுடன் தப்பினார்.யெங் டால்ப் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது, அமெரிக்காவில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. பெருகி வரும் துப்பாக்கி வன்முறைக் கலாசாரம் மக்கள் மனங்களில் அச்சத்தையும், கவலையையும் ஒரு சேர விதைத்துள்ளது.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது40). டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வின் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். இவர் பேரூராட்சி ஒப்பந்த பணிகளையும் செய்து வந்தார்.
மானாமதுரை பாண்டியன் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த சரவணன் தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்று காலையும் அவர் வழக்கம் போல் நடை பயிற்சிக்காக மோட்டார் சைக்கிளில் வைகை ஆற்றுக்கு வந்தார். அங்கு ஆற்றங்கரையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது அங்கு ஒரு கும்பல் வந்தது. அந்த கும்பல் சரவணனை சுற்றி வளைத்தது. அவர்களை கண்டதும் சரவணன் தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
பலரும் நடைபயிற்சி செய்யும் காலை நேரத்தில் கொலை நடந்திருப்பது மானாமதுரையில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் மானாமதுரை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த மானாமதுரை இடைத்தேர்தலில் அ.ம.மு.க.விற்காக சரவணன் தீவிர பணியாற்றினார். இது பிடிக்காததால் யாராவது கொலை செய்தார்களா? அல்லது பேரூராட்சி ஒப்பந்தப்பணி விவகாரத்தில் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
கொலையாளிகளை பிடிக்க மாவட்டம்முழுவதும் போலீசார் உஷார்படுத்தப் பட்டுள்ளனர். சோதனை சாவடிகளிலும் தீவிரமாக கண்காணிப்பு பணி நடக்கிறது. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடை பெற்று வருகிறது.
கொலை செய்யப்பட்ட சரவணனுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
வாணியம்பாடி:
ஆம்பூர் அடுத்த சோளூரை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுமித்ரா இவர்களுக்கு 1 மகள் உள்ளார்.
பாஸ்கர் நேற்று தனது குடும்பத்தினருடன் வாணியம்பாடி அருகே உள்ள சின்ன கொள்ளகுப்பம் பகுதியை சேர்ந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது ஆட்டோவில் சென்றார்.
சின்ன கொள்ளகுப்பம் பகுதியில் ஆட்டோ சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த 7 பேர் கும்பல் மீது மோதுவதுபோல் சென்றுள்ளது.
இதனை அந்த 7 பேர் கும்பல் தட்டி கேட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த 7 பேர் கும்பல் பாஸ்கரை ஆட்டோவில் இருந்து கீழே இறக்கி சரமாரியாக தாக்கினர்.இதில் பாஸ்கர் படுகாயமடைந்தார்.
அவரை மீட்ட உறவினர்கள் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பாஸ்கர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து பாஸ்கர் தரப்பில் வாணியம்பாடி தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார், சூர்யா, வெள்ளையன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகி உள்ள 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் நாகநாதன் (வயது 32). பெயிண்டரான இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
ராமநாதபுரம் பழைய பஸ் நிலையப்பகுதியில் இன்று பிற்பகல் 11 மணியளவில் நாகநாதன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த 3 மர்ம நபர்கள் நாகநாதனை கொலை செய்ய முற்பட்டனர். இதைப்பார்த்த நாகநாதன் அவர்களிடம் தப்பிப்பதற்காக ஓடினார்.
ஆனாலும் அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்று பிடித்து கத்தியால் சரமாரியாக குத்தியது. இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த நாகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அவர் இறந்ததை உறுதி செய்தபின் அந்த கும்பல் சர்வ சாதாரணமாக அங்கிருந்து சென்றது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலையால் அந்தப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகநாதன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்