search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • குமாரபாளையம் மேற்குகாலனியில் வசிப்பவர் நேற்று இவர் ஆனங்கூர் சாலை, காளியண்ணன் நகர் பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, வழியில் இருந்த மின் கம்பத்தில் மோதி, நிலை தடுமாறி விழுந்தார்.
    • இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜூ பரிதாபமாக உயிரிழந்தார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் மேற்குகாலனியில் வசிப்பவர் ராஜூ(வயது 33), தனியார் நிறுவன தொழிலாளி.

    நேற்று இவர் ஆனங்கூர் சாலை, காளியண்ணன் நகர் பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, வழியில் இருந்த மின் கம்பத்தில் மோதி, நிலை தடுமாறி விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராஜூ பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்தார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஆலங்குடி.

    புதுக்கோட்டை அருகே உள்ள பெருங்களூரைச் சேர்ந்த காட்டுப்பட்டி விகாஷ் (வயது 20) அதே பகுதியைச்சேர்ந்த கிருபாநிதி (வயது 20) ஆகிய இருவரும் ஆலங்குடி வழியாக அறந்தாங்கியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.அப்போது ஆலங்குடி அருகில் உள்ள தெற்கு பார்த்தம்பட்டியை சேர்ந் ந்த விக்னேஷ் (வயது 19)அதே பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 27) ஆகிய இருவரும் அறந்தாங்கி சாலையில் தெற்கு பாத்தம்பட்டி யை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.இந்நிலையில் இருவரும் ஓட்டி வந்த இரு மோட்டார் சைக்கிளும் அ ண்ணாநகர் பாலம் அருகில் சென்ற போது நேருக்கு நேர் மோதி வி பத்துக்குள்ளானது .இதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு இரத்த காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவம னையில் சேர்த்தனர்.இதைத் தொடர்ந்து நான்கு பேரில் ஆலங்குடி அருகே உள்ள வடக்கு பார்த்தம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் சரவணன் (வயது 27) இவ ர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தார்.இவரது உடல் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை க்கு வைக்கப்பட்டது.பின்னர் இறந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் நதியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தார்
    • பொன்னமராவதி 4வது வார்டு செயலாளராக இருந்தவர்

    பொன்னமராவதி,

    புதுவளவு பகுதியை சார்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தியாகராஜன் மகன் கார்த்திகேயன்(49).செல்போன் பழுது நீக்கும் கடை வைத்திருப்பவர் இவர் பொன்னமராவதி 4வது வார்டு திமுக செயலாளராகவும் இருந்துவந்துள்ளார். நேற்று இரவு வலையபட்டி மலையாண்டி கோயில் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார். உடனடியாக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த கார்த்திகேயனுக்கு காயத்ரி என்ற மனைவியும், ஜீவா, சூர்யா என்ற மகன்களும் உள்ளனர். இச்சம்பவம் அவரது குடும்பத்தார் மற்றும் சுற்றுவட்டார அப்பகுதி மக்கள் மற்றும் திமுகவினர் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சுல்தான்பூர் மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோமதி நதியில் ஏராளமானோர் புனித நீராடி குளித்து மகிழ்ந்தனர்.
    • கோமதி நதியில் மூழ்கி 4 பேர் பலியானார்கள்.

    உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோமதி நதியில் ஏராளமானோர் புனித நீராடி குளித்து மகிழ்ந்தனர்.

    அப்போது 4 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். அவர்களில் 3 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது. ஒருவர் உடலை தேடி வருகிறார்கள்.

    • 3 பேரும் ஒரே மோட்டர் சைக்கிளில் குமரகிரி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கல்லூரி பஸ்சை முந்தி செல்லும்போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற சரக்கு ஆட்டோவின் பின் பகுதியில் மோதினர்.
    • இதில் கீழே விழுந்த 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி பொன்னுசாமி தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவர் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது 20). இவர் உடையாப்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். ரஞ்சித்குமாருக்கு நேற்று பிறந்த நாள் ஆகும். அவர் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டார்.

    ரஞ்சித்குமாரின் நண்பர்கள் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சுந்தர் (22), ஓமலூர் பாகல்பட்டியை சேர்ந்த கவுதம் (19). இவர்கள் இருவரும் ரஞ்சித்குமாரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று அவரை அழைத்து வந்தனர்.

    3 பேரும் ஒரே மோட்டர் சைக்கிளில் குமரகிரி அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கல்லூரி பஸ்சை முந்தி செல்லும்போது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற சரக்கு ஆட்டோவின் பின் பகுதியில் மோதினர்.

    இதில் கீழே விழுந்த 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தார். கவுதம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார். சுந்தர் அரியனூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட சென்றபோது விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 4 - வது மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் உயிரிழந்தார்
    • ஸ்ரீரங்கத்தில் பரிதாபம்

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோடு மாம்பழச்சாலை பகுதியில் உள்ள இடத்தில் 4 மாடி கட்டிடப்பணி நடந்து வருகிறது. இதில் தொழிலாளர்கள் கட்டிட வேலை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் அந்த கட்டிடத்தில் 4வது மாடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை சேர்ந்த சம்பத் (வயது 48)என்ற கொத்தனார் திடீரென்று தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.

    இதையடுத்து அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்துக்கொண்டு சபரிநாத் பொள்ளாச்சிக்கு வந்திருந்தார்.
    • நேற்று காலை சபரிநாத் தங்கியிருந்த மாடி வீட்டில் டமார் என பயங்கர சத்தம் கேட்டது. திடீரென அங்கிருந்து புகையும் கிளம்பி வந்தது.

    கோவை:

    சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சபரிநாத். இவரது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தளி ஆகும்.

    சபரிநாத் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூரில் சொந்தமாக 2 தளங்களை கொண்ட வீடு கட்டி வசித்தார். சபரிநாத்தின் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் அவரது 15 வயது மகன் உறவினர் வீட்டில் வசிக்கிறார்.

    சபரிநாத்தின் கீழ் வீட்டை கணவரை பிரிந்து வாழும் சாந்தி (37) என்ற பெண்ணுக்கு வாடகைக்கு விட்டு இருந்தார். விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்தால் சபரிநாத் மேல் தளத்தில் தங்கிக் கொள்வார்.

    அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்துக்கொண்டு சபரிநாத் பொள்ளாச்சிக்கு வந்திருந்தார். நேற்று காலை அவர் தங்கியிருந்த மாடி வீட்டில் டமார் என பயங்கர சத்தம் கேட்டது. திடீரென அங்கிருந்து புகையும் கிளம்பி வந்தது.

    அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அப்போது மாடி வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதனை உடைத்துக் கொண்டு தீயணைப்பு வீரர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அங்கு பரவியிருந்த தீயை போராடி அணைத்தனர்.

    புகை வெளியேறிய பின் பார்த்தபோது வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து சிதறி கருகிக் கிடந்தது. சமையல் அறையில் இன்ஸ்பெக்டர் சபரிநாத்தும், கீழ் வீட்டில் வசிக்கும் சாந்தியும் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர்.

    சாந்தி, சபரிநாத்துக்கு சமையல் செய்து கொடுக்கச் சென்றதாகவும், அப்போது குளிர்சாதன பெட்டி வெடித்து சிதறி அவர்கள் இறந்திருக்கலாம் என்றும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டு உள்ளது. சபரிநாத்தும், சாந்திக்கும் என்ன மாதிரியான பழக்கம் இருந்தது, அந்த பழக்கத்தில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு தற்கொலை முடிவு எதுவும் எடுத்தார்களா? என்பது பற்றி போலீசார் விசாரிக்கிறார்கள்.

    தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் நுழைந்தபோது வீடு முழுக்க சமையல் கியாஸ் பரவி இருந்துள்ளது, இதனால் 2 பேரில் யாராவது ஒருவர் கியாசை திறந்து விட்டு தற்கொலை முயற்சி எடுத்து குளிர்சாதன பெட்டி வெடித்ததா அல்லது மின் பிரச்சினை காரணமாக குளிர்சாதன பெட்டி வெடித்ததா? என்பது பற்றியும் விசாரிக்கப்படுகிறது.

    சபரிநாத்துக்கு கடன் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் எதாவது விபரீத முடிவை எடுத்தாரா? என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே பலியான சபரிநாத் மற்றும் சாந்தியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    • மாவட்ட ஆட்சியர் ஜஸ்ஜித் கவுர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை பார்வையிட்டனர்.
    • பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

    உத்தரபிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்திற்குப் பிறகு கோமதி ஆற்றில் குளித்தபோது 4 பேர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர் ஜஸ்ஜித் கவுர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை பார்வையிட்டனர்.

    இதுகுறித்து சுல்தான்பூர் மாவட்டட நீதிபதி ஜஸ்ஜித் கவுர் கூறியதாவது:-

    கோமதி ஆற்றின் சீதாகுந்த் காட் பகுதியில் குளித்தபோது 4 பேர் நீரில் மூழ்கினர். ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்றபோது அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினர். இதுவரை மூன்று உடல்கள் மீட்கப்பட்டன. நான்காவது உடல் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டது.

    நீரில் மூழ்கிய நான்கு இளைஞர்களின் வயது 18-32 வயதுக்கு இடைப்பட்டவர்கள். அவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பின்னர், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மாவட்ட நிர்வாகம் அவர்களின் தகனத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவை, கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இவர் சேலம், கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே 4 சாலை சந்திப்பு பகுதியில் சாலையை நடந்து கடந்தார்.
    • அப்போது, கோவையி லிருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் வைகுந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    குமாரபாளையம்:

    கோவை, கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வைகுந்தகுமார்(வயது 46), சமையல் தொழிலாளி. இவர் சேலம், கோவை புறவழிச்சாலை, எக்ஸல் கல்லூரி அருகே 4 சாலை சந்திப்பு பகுதியில் சாலையை நடந்து கடந்தார். அப்போது, கோவையி லிருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் வைகுந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டிவந்த செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த, தனியார் நிறுவன மேலாளர் ஸ்ரீதர்(41) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கரூர் மாவட்டம், புகளூர், பகுதியை சேர்ந்தவர் முருகன்(24.) மில் ஊழியர். இவர் தற்போது ஆனங்கூர் சாலை, ரங்கனூர் நால் ரோடு, பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் அப்பகுதி ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சேலம், கோவை புறவழிச் சாலையில் இடது புறமாக தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது, மோட்டார்சைக்கிள் பஞ்சர் ஆகி, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இவர் ஈரோடு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் இரவில் உயிரிழந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீ விபத்தில் சபரிநாத், சாந்தி ஆகியோர் மாட்டிக்கொண்டு வெளியில் வர முடியாமல் தவித்தார்.
    • இன்ஸ்பெக்டர் வீட்டில் தீ பற்றி எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சென்னை:

    சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சபரிநாத்.

    இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான பொள்ளாச்சி நல்லூருக்கு சென்றார். இங்கு தனது உறவினர்களை சந்தித்து விட்டு தனது வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை இவரது கீழ் வீட்டில் வசித்து வரும் சாந்தி(37) என்பவர் சமையல் செய்வதற்காக சபரிநாத்தின் வீட்டிற்கு சென்றார்.

    அங்கு அவர் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி திடீரென வெடித்து சிதறி தீ விபத்து ஏற்பட்டது. அறைக்குள் மட்டும் பற்றி எரிந்த தீ சில நிமிடங்களில் வீடு முழுவதும் பரவி எரிந்து கொண்டிருந்தது.

    இந்த தீ விபத்தில் சபரிநாத், சாந்தி ஆகியோர் மாட்டிக்கொண்டு வெளியில் வர முடியாமல் தவித்தார்.

    அப்போது அவர்களது உடலிலும் தீ பிடித்து எரிந்தது. வலி தாங்க முடியாமல் 2 பேரும் அலறி துடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர்.

    இதற்கிடையே இன்ஸ்பெக்டர் வீட்டில் தீ பற்றி எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் வீட்டிற்குள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டிற்குள் சபரிநாத்தும், சாந்தியும் உடல் கருகி பிணமாக கிடந்தனர்.

    இதையடுத்து போலீசார் 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தீ விபத்து எப்படி ஏற்பட்டது, குளிர்சாதன பெட்டி வெடித்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பொள்ளாச்சியில் குளிர்சாதன பெட்டி வெடித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • டிராக்டரில் பயணம் செய்த டிரைவர் உள்பட 2 பேர் சாலையில் குதித்து தப்பிவிட்டனர்.
    • வேலுமணி வெளியே குதிப்பதற்குள் டிராக்டர் முழுவதுமாக கவிழ்ந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்நிலையில் இன்று காலை கடம்பூரில் இருந்து கே.என். பாளையத்தை நோக்கி டிராக்டர் ஒன்று ஹலோ பிளாக் கற்களை ஏற்றுவதற்காக சென்று கொண்டு இருந்தது. டிரைவரின் முன் பகுதியில் கடம்பூர் பகுதியைச் சேர்ந்த வேலுமணி (21) உள்பட 3 பேர் அமர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

    கடம்பூர் சாலையில் டிராக்டர் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிராக்டரின் மெயின் ஆக்சில் முறிந்ததால் டிராக்டர் நிலை குலைந்து கவிழ முயன்றது. அப்போது டிராக்டரில் பயணம் செய்த டிரைவர் உள்பட 2 பேர் சாலையில் குதித்து தப்பிவிட்டனர். ஆனால் வேலுமணி வெளியே குதிப்பதற்குள் டிராக்டர் முழுவதுமாக கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே வேலுமணி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கடம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேலுமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மீது மோதியது.
    • வரும் வழியிலேயே ராஜா, ஸ்ரீஜா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்துள்ள ஓட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் ஸ்ரீஜா (வயது9). இவர்கள் இருவரும் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் நாகனம்பட்டி ஏரிக்கரையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மீது மோதியது. இதில் சாலையில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே ராஜா, ஸ்ரீஜா ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் அவரது உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி ைவத்தனர்.

    இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×