search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • கரூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் ஒருவர் பலியானார்
    • போலீசார் லாரி டிரைவர் ராமசாமி மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், க.பரமத்தி என். நல்ல ப்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மனைவி சுதா (வயது 42) இவர் டி.வி.எஸ்., மொபட்டில் க.பரமத்தி - என்.நல்லப் பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தென்னிலை பகுதியை சேர்ந்த ராமசாமி (40) ஓட்டி சென்ற டாரஸ் லாரி, மொபட் மீது மோதியது. அதில், கீழே விழுந்த சுதா, தலையில் அடிப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார்.இதையடுத்து, சுதாவின் கணவர் சுப்பிரமணி கொடுத்த புகா ரின் பேரில், க.பரமத்தி போலீசார், டாரஸ் லாரி டிரைவர் ராமசாமி மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


    • மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் பலியானார்.
    • இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்

    திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கண்டராதித்தம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 29), டிரைவர். இவர் சம்பவத்தன்று தனது நண்பனின் திருமணத்திற்காக அருகே உள்ள கீழக்காவட்டாங்குறிச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது க.மேட்டுதெரு சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், படுகாயம் அடைந்த வெங்கடேசனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • ஜெயங்கொண்டம் அருகே நீரில் மூழ்கி முதியவர் பலியானார்
    • சின்னவளையம் அரங்கநேரி படித்துறையில் கால் கழுவுவதற்காக சென்றவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடிபள்ளத்தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் மகன் பரகத்துல்லா (வயது47). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கை, கால் வராமல் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் சின்னவளையம் அரங்கநேரி படித்துறையில் கால் கழுவுவதற்காக சென்றவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து ஏரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகன்நாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பரகத்துல்லாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது உறவினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. முதியவர் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    • தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • பலியான அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    வீயன்னூர் அருகே மஞ்சாடிவிளை பகுதியை சேர்ந்தவர் யூஜின் (வயது36).

    இவர் திங்கள் நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை வழக்கம் போல பணியை முடித்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.தக்கலை அருகே சாரோடு பகுதியில் வரும் போது யூஜின் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி நடுரோட்டில் விழுந்தார்.

    தலையில் பலத்த காயம் அடைந்த இவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் இவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக் காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி யூஜின் பரிதாபமாக இறந்தார். இது சம்பந்தமாக இவரது மனைவி பிச்சி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    • மினி டெம்போ மோதியது
    • விபத்து குறித்து போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி கட்டையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் எட்வர்ட் (வயது 38).

    இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியே சென்று இருந்தார். இரவு அவர் வடசேரியில் இருந்து வெட்டூர்ணிமடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    பள்ளிவிளை பகுதியில் வந்து கொண்டிருந்த போது வெட்டூர்ணிமடத்திலிருந்து வடசேரி நோக்கி வந்த மினி டெம்போ மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் எட்வர்ட் தூக்கி வீசப்பட்டார்.

    தலை உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த எட்வர்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மினி டெம்போ டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்து குறித்து போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.பலியான எட்வர்ட் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    • சேலம் அப்–சரா இறக்–கம் பகு–தி–யில் வந்த போது சாலையை கடக்க முயன்ற 37 வய–து–டைய நபர் மீது எதிர்–பா–ரா–த–வி–த–மாக போலீஸ் வாக–னம் மோதி–யது.
    • தலை–யில் பலத்த காயம் அடைந்த அவரை அக்–கம்–பக்–கத்–தி–னர் மீட்டு சிகிச்–சைக்–காக சேலம் அரசு ஆஸ்–பத்–தி–ரி–யில் சேர்த்–த–னர். அவர் வரும் வழி–யி–லேயே அவர் இறந்து விட்–ட–தாக தெரி–வித்–த–னர்

    சேலம்:

    சேலம் மாவட்ட ஆயு–தப்–ப–டை–யில் போலீஸ்–கா–ர–ராக அன்–பு–தா–சன் (வயது 35) என்–ப–வர் பணி–யாற்றி வரு–கி–றார். டிரை–வ–ரான அவர் நேற்று போலீஸ் வாக–னத்–தில் 2-ம் நிலை காவ–லர் தேர்–வுக்கு பயன்–ப–டுத்–தப்–பட்ட பொருட்–களை ஏற்–றிக்–கொண்டு மாவட்ட போலீஸ் சூப்–பி–ரண்டு அலு–வ–ல–கத்–துக்கு சென்–றார். பின்–னர் பொருட்–களை அங்கு இறக்கி வைத்–து–விட்டு மீண்–டும் ஆயு–தப்–ப–டைக்கு வாக–னத்தை ஓட்டி வந்து கொண்–டி–ருந்–தார்.

    அப்–சரா இறக்–கம் பகு–தி–யில் வந்த போது சாலையை கடக்க முயன்ற 37 வய–து–டைய நபர் மீது எதிர்–பா–ரா–த–வி–த–மாக போலீஸ் வாக–னம் மோதி–யது. இதில் தலை–யில் பலத்த காயம் அடைந்த அவரை அக்–கம்–பக்–கத்–தி–னர் மீட்டு சிகிச்–சைக்–காக சேலம் அரசு ஆஸ்–பத்–தி–ரி–யில் சேர்த்–த–னர். அங்கு டாக்–டர்–கள் பரி–சோ–தனை செய்த போது, அவர் வரும் வழி–யி–லேயே அவர் இறந்து விட்–ட–தாக தெரி–வித்–த–னர்.

    இது–கு–றித்து தக–வல் கிடைத்–த–தும் செவ்–வாய்–பேட்டை போலீ–சார் அங்கு விரைந்து சென்று விசா–ரணை நடத்–தி–னர். இதில் இறந்–த–வ–ரின் சட்–டைப்–பை–யில் அரசு ஆஸ்–பத்–தி–ரி–யில் பொதுப்–பி–ரி–வில் புற–நோ–யா–ளி–யாக சிகிச்சை பெற்–ற–தற்–கான சீட்டு இருந்–தது. அதில் ரவிக்–கு–மார் (37) 

    • கார் மோதி கல்லூரி மாணவி பலியானார்
    • அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    திருச்சி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள நாகுடி பகுதியைச் சேர்ந்தவர் சண்முக–சுந்தரம். இவரது மகள் ஹரி–நிஷா (வயது 17). இவர் திருச்சி அருகே பூலாங்குளத்துப் பட்டியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் தனது கல்லூரி விடுதி தோழி வினோதினியுடன் பூலாங்குளத்துப்பட்டி பிரிவு ரோடு பகுதியில் அமைந்துள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றனர். பின்னர் வினோதினி ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று பணம் எடுத்துக் கொண்டி–ருந்தார்.

    ஹரி–நிஷா வெளியே சாலை–யோரம் நின்று கொண்டி–ருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக மின்னல் வேகத்தில் சென்ற கார் ஹரி–நிஷா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஹரி–நிஷா ஏற்க–னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து வினோதினி இனாம்குளத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சாலையோரம் நின்ற மாணவி கார் மோதி பலி–யான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரப–ரப்பை ஏற்படுத்தியது.


    • திருவெறும்பூர் அருகே ஓய்வு பெற்ற துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் விபத்தில் பலியானார்
    • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 68). ஓய்வு பெற்ற துப்பாக்கி தொழிற்சாலை ஊழியரான இவர் அண்ணா நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை–யில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணிக்கத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனி–யார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் முருகன் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • சாலை விபத்தில் ஜவுளி நிறுவன மேற்பார்வையாளர் பலியானார்
    • நொய்யல் ஆற்றுப் பாலம் அருகே வந்தபோது, இருவரும் நிலை தடுமாறி விழுந்ததில், இருவரும் படுகாயமடைந்தனர்.

    கரூர்:

    ஈரோடு மாவட்டம், கொடுமுடி, தழுவம்பாளையத்தை சேர்ந்தவர் பிரசாத் (வயது 24). இவர், திருப்பூர் பகுதியில் தனியார் ஜவுளி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவர், திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஆலம்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் (35) என்பவருடன், கொடுமுடி- முத்தூர் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பைக்கை பிரசாத் ஓட்டினார். நொய்யல் ஆற்றுப் பாலம் அருகே வந்தபோது, இருவரும் நிலை தடுமாறி விழுந்ததில், இருவரும் படுகாயமடைந்தனர். இதில், பிரசாத், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார்த்திகேயன் ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்க ப்பட்டார். தென்னிலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.





    • தாத்தா வீட்டுக்கு சென்று மாயமான சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டான்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூரை அடுத்த வடக்கு மாதவி ஏரிக்கரை வீதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சத்யா. இந்த தம்ப–தியினரின் மகன் சுதர்சன் (வயது 5). கோவிந்தராஜ் சென்னை–யில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் சத்யா தனது மகன் சுதர்சனுடன் தனியாக வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அனுக் கூர்குடிக்காடு காட்டுக் கொட்டகையில் வசித்து வரும் தனது தந்தை வீட்டுக்கு மகனுடன் சென்றிருநதார். இதற்கிடையே நேற்று காலை 10 மணியளவில் வீட்டு முன்பு விளையா–டிக்கொண்டு இருந்த சுதர்சனை திடீரென்று காண–வில்லை.

    இதனால் பதட்டம் அடைந்த அவரது தாய் உள்ளிட்ட உறவினர்கள் அனைவரும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் அனுக் கூர்குடிக்காடு காட்டுப் பகுதியில் உள்ள பாசன கிணற்றின் அருகே சுதர்ச–னின் செருப்பு மற்றும் பொம்மைகள் கிடந்தன. இதனைக் கண்ட அப்பகு–தியினர் உடனடியாக அவ–னது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சிறுவனின் தாய் மகன் கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீயணைப்புத் துறையி–னருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடினார்கள். அப்போது நீண்ட போராட்டத்திற்கு பிறகு இறந்த நிலையில் சுதர்சனின் உடல் மீட்கப்பட்டது. இதை பார்த்ததும் அவர் தாய் உள்ளிட்டோர் கதறி அழுதனர். இதனையடுத்து சுதர்சனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்ப–லூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. சம்பவம் குறித்து மங்கள–மேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுவன் இறந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப–டுத்தி உள்ளது.


    • மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கபடி விளையாடிக் கொண்டிருந்தபோது, 10ம் வகுப்பு மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மாணவிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆட்டோ மில்லர்புரம் பகுதியில் வந்தபோது பின்னால் வந்த லோடு ஆட்டோ மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • விபத்து குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி டூவிபுரம் வி.வி.டி. மெயின்ரோட்டை சேர்ந்தவர் விஜயகுமார். தொழிலாளி.

    இவரது மனைவி சுப்புலெட்சுமி (வயது 37). இவர்களுக்கு மஞ்சு (16), ஹரிஷா (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். ஹரிஷா அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் கோரம்பள்ளத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜயகுமார், சுப்புலெட்சுமி, மஞ்சு, ஹரிஷா மற்றும் ராமகிருஷ்ணன் என்பவரது மகள் சுதா பிரியா( 21) ஆகியோர் ஒரு ஆட்டோவில் நேற்று சென்றனர்.

    பின்னர் அவர்கள் மீண்டும் வீடு திரும்பினர். ஆட்டோ மில்லர்புரம் பகுதியில் வந்தபோது பின்னால் வந்த லோடு ஆட்டோ மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் பயணிகள் சென்ற ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக ஹரிஷா மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×