search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96178"

    • மொபட் மீது லாரி மோதி தொழிலாளி பலியானார்
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    கரூர்,

    கரூர் மாவட்டம், கோவிந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வைரவன் (வயது 49) கிரஷர் தொழிலாளி. இவர், டி.வி. எஸ்., மொபட்டில், மத்திபாளையம் அருகே க.பரமத்தி கந்தம்பாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அந்த வழியாக திருவாரூரை சேர்ந்த முத்து குமரேசன் (39) என்பவர் ஓட்டி சென்ற லாரி, மொபட் மீது மோதியது. அதில், சம்பவ இடத்தில் வைரவன் உயிரிழந்தார்.இதையடுத்து, வைரவனின் மனைவி தமிழரசி கொடுத்த புகார்படி, க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • திருச்சி கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியானவர்
    • மற்றொருவரின் உடலை தேடும் பணி தொடர்கிறது

    திருச்சி,

    திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் பட்டர் குலம் என்ற பெயரில் வேதப ாடசாலை இயங்கி வருகிறது. இதனை ஆடிட்டர் பத்ரிநாராயணன் என்பவர்நி ர்வகித்து வருகிறார்.இங்கு 50-க்கும் மேற்பட்டோர் வேதம் பயின்றனர். நேற்று முன்தினத்துடன் இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் நிறைவடைந்தன. இதையடுத்து பெரும்பா–லான பெற்றோர் ஸ்ரீரங்கம் வந்து தங்களது மகன்களை சொந்த ஊருக்கு அழைத்து சென்றனர்.அவர்கள் தவிர திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் (வயது 13), ஹரி பிரசாத் (13), ஈரோட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (12) மற்றும் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த அபிராம் (13) ஆகிய 4 பேர் மட்டும் தங்கியிருந்தனர்.அவர்கள் இன்று (திங் கட்கிழமை) ஊருக்கு செல்ல முடிவெடுத்து இருந்தனர். இதற்கிடையே நேற்று காலை 6 மணியளவில் யாத்ரி நிவாஸ் அருகிலுள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக வேத பாடசாலையில் அனுமதி பெற்று 4 பேரும் சென்றனர்.

    சுமார் 30 அடி ஆளம் வரை உள்ள அந்த பகு–திக்கு சென்றபோது 4 பேரும் திடீரென்று தண்ணீரில் மூழ்கினர். இதில் கோபாலகிருஷ்ணன் மட் டும் ஒருவழியாக தப்பி கரையேறினார். மற்ற 3 பேரையும் காப்பாற்றுமாறு கூச்சல் போட்டார்.

    ஆனால் அங்கு யாரும் இல்லாததால் ஓடிச்சென்று வேதபாடசாலையில் தெரிவித்தார். அதன்பேரில் பாடசாலை நிர்வாகிகள் உடனடியாக ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    ஆனால் அதற்குள் தண்ணீரில் மூழ்கிய 3 பேரும் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் போனது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 25 பேர் ஆற்றுக்குள் இறங்கியும், பைபர் படகு–கள் மூலம் அந்த பகுதி முழுவதும் தேடினர். அப் போது விஷ்ணு பிரசாத் என்ற மாணவர் மட்டும் பிணமாக மீட்கப்பட்டார். மற்ற 2 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. மாலை வரை தேடியும் பலனின்றி போனது.அதே சமயம் இரவு நேரம் வந்ததால் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று காலை 2-வது நாளாக ஆற்றில் மூழ்கி மாயமான 2 மாணவர்களை தேடும் பணிகள் தொடங்கின.மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி 30 மணி நேரத்தை கடந்து–விட்டதால் அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.இருப்பினும் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ெதாடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தொடர் தேடுதல் பணியில் ஹரிபிரசாத் என்பவரது உடல் இன்று மதியம் மீட்கப் பட்டுள்ளது.கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் நாணல் புற்கள் வளர்ந்துள்ளதால் அதற்கிடையே மேலும் ஒரு மாணவரின் உடல்கள் சிக்கியிருக்க–லாம் என்ற சந்தேகத்தின் அடிப்படை–யில் தீயணைப்பு வீரர் கள் தொடர்ந்து தேடி வருகிறார்கள். இந்த சம்ப–வம் திருச்சியில் பெரும் பரபரப்பையும், சோகத் தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
    • விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தமவுலிபாஸ்:

    வடக்கு மெக்சிகோ நாட்டில் தமவுலிபாஸ் என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வேனும், டிரய்லர் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தது.

    விபத்தில் சிக்கிய வேனில் குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். வேன் தீப்பிடித்து எரிந்தததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. இதனால் 26 பேர் வேனுக்குள் கருகி இறந்தனர். லாரி டிரைவரும் பலியானார். இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மெக்சிகோ நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    • கள்ளச்சாராயம் குடித்ததில் வேறு யாருக்காவது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • கள்ளச்சாராயம் விற்றதாக கரியன் தாங்கல் பகுதியை சேர்ந்த அமாவாசை என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்து உள்ள எக்கியார் குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அந்த பகுதியில் கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் சாராயம் வாங்கி குடித்தனர்.

    இதில் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். அவர்களை அந்த பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுவை ஜிப்மர், பிம்ஸ், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எக்கியார் குப்பம் சங்கர் (வயது 55), தரணிவேல் (55), பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் (55) ஆகியோர் நேற்று அதிகாலை உயிரிழந்தனர்.

    முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜ மூர்த்தி (60), ராமு மனைவி மலர்விழி (70) ஆகியோர் நேற்று மதியம் உயிரிழந்தனர்.

    மரக்காணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மண்ணாங்கட்டி (59) தீவிர கிசிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உடல் நிலை மோசமடைந்தது. இதனால் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடிவெடுத்து புறப்பட்ட போது அவர் உயிரிழந்தார்.

    மேலும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த எக்கியார் குப்பத்தை சேர்ந்த விஜயன் (58), மரக்காணத்தை சேர்ந்த சங்கர், சரத்குமார் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.

    கள்ளச்சாராயம் குடித்து பலியான 4 பேர் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் எக்கியார் குப்பம் கொண்டு வரப்பட்டது. பலியானவர்கள் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் எக்கியார் குப்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் கள்ளச்சாராயம் விற்றதாக மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அமரனை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். தற்போது முத்து (30), ஆறுமுகம் (50), ரவி (46), மண்ணாங்கட்டி (52) ஆகிய 4 பேரை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

    கள்ளச்சாராய வியாபாரிகளை பிடிக்க 10 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் பலியான நிலையில் மேலும் 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூர் அடுத்த பெருங்கரணை, இருளர் பகுதியை சேர்ந்தவர் சின்ன தம்பி (வயது 30 ). இவருடைய மனைவி அஞ்சலி (22). இவர்களுடன் அஞ்சலியின் தாய் வசந்தாவும் (42) வசித்து வந்தார்.

    நேற்று முன்தினம் 3 பேரும் சேர்ந்து மது குடித்தபோது சின்னத்தம்பி, அவரது மாமியார் வசந்தா ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு போராடிய அஞ்சலியை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சித்தாமூர் அடுத்த பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த வென்னியப்பன் (65), அவரது மனைவி சந்திரா (55) ஆகியோர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்தனர். இதில் கணவன்-மனைவி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

    இதில் பலியான வென்னியப்பன் மற்றும் சந்திரா ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்த சின்ன தம்பி மற்றும் வசந்தா ஆகியோருக்கு உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் இன்று காலை விஷ சாராயம் குடித்ததில் பெருங்கரணை பகுதியை சேர்ந்த முத்து (55) என்பவர் மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார்.

    இதனால் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே கள்ளச்சாராயம் குடித்த செய்யூர் தாலுகா, புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த செம்பு (60), ராஜி (32), பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் (65), சங்கர் (48) ஆகிய 4 பேருக்கும் நேற்று இரவு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    அவர்களை உறவினர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே இதே ஆஸ்பத்திரியில் அஞ்சலி சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 5 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

    மேலும் கள்ளச்சாராயம் குடித்ததில் வேறு யாருக்காவது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கள்ளச்சாராயம் விற்றதாக கரியன் தாங்கல் பகுதியை சேர்ந்த அமாவாசை என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    மேலும் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், சித்தாமூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம், மதுராந்தகம் மதுவிலக்கு அமல்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகிய 3 பேரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தாயார் சிறுவன் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரியை அடுத்த பழைய தருமபுரி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் சச்சின் (வயது13). இவரது தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் சிறுவன் தாயுடன் தனியாக வசித்து வந்தனர். சச்சின் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சச்சின் நேற்று காலை தனது நண்பர்களுடன் அதேபகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றார். அங்கு கிணற்றில் படிக்கட்டில் நின்று குளித்து கொண்டிருந்தபோது திடீரென்று சிறுவன் ஆழத்திற்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து அவருடன் நண்பர்கள் உடனே சச்சினின் தாயாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து தாயார் சிறுவன் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதார்.

    இதுகுறித்து அவர் தருமபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று கட்டிடத்தின் மேல் நின்று கொண்டு வேலை செய்து கொண்டு இருந்தார்.
    • ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நாகமரை ஏமனூர் பகுதியைச் சேர்ந்த கமலேஷ் (வயது 48). கூலிதொழிலாளியான இவர் ஓசூர் சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் மேற்கூரை போடும் பணிக்காக சென்றார். அங்கு சம்பவத்தன்று கட்டிடத்தின் மேல் நின்று கொண்டு வேலை செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த கமலேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கள்ளச்சாராய விற்பனை தலைதூக்கியிருப்பது தி.மு.க. அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது.
    • தமிழக அரசு தூக்கத்தில் இருந்து விழித்து, கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் உட்கொண்டதால், சுரேஷ், சங்கர், தரணிவேல் எனும் மூன்று பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், கவலைக்கிடமான நிலையில் 16 பேர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தெரிகிறது. அவர்கள் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். டாஸ்மாக் மூலம் கட்டுப்பாடற்ற சாராய விற்பனை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, தற்போது கள்ளச்சாராய விற்பனையும் தலைதூக்கியிருப்பது தி.மு.க. அரசின் செயலற்ற தன்மையைக் காட்டுகிறது.

    உடனடியாக தமிழக அரசு தூக்கத்தில் இருந்து விழித்து, கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இன்று அதிகாலை 4 மணிக்கு செல்வமணி கடலுக்கு மீன் பிடிக்க தனது பைபர் படகில் சென்றுள்ளார்.
    • அவரது உடலை மீட்க சக மீனவர்கள் அக்கரைப்பேட்டை மீன் பிடித்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தை அடுத்த அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி (வயது 56).

    இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், சீதா மற்றும் லட்சுமி என்ற இரு மகள்களும் உள்ளனர்.

    செல்வமணி இன்று அதிகாலை 4 மணிக்கு அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க தனது பைபர் படகில் சென்றுள்ளார்.

    துறைமுகத்தில் 2 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகிலிருந்து நிலைதடுமாறு கடலில் விழுந்துள்ளார்.

    இதில் அவர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த நிலையில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய சக மீனவர்கள் செல்லும் வழியில் படகு மட்டும் தனியாக நிற்பதை பார்த்து அருகில் தேடி உள்ளனர்.

    அப்போது உயிரிழந்த நிலையில் செல்வமணி கடலில் மிதந்துள்ளது தெரிய வந்தது.

    இதனை எடுத்து அவரது உடலை மீட்க சக மீனவர்கள் அக்கரைப்பேட்டை மீன் பிடித்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக செல்வமணி உடல் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    மீனவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒருவர் தப்பினார்-மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரம்
    • ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச்சென்ற போது பரிதாபம்

    திருச்சி,

    திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் உள்ள ஆசிரமத்தில் வேத பாடசாலை அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அர்ச்சகருக்கு படிக்கும் மாணவர்கள் தங்கியிருந்து வேதம் பயின்று வருகின்றனர்.இந்த நிலையில் மேற்கண்ட பாடசாலையில் படிக்கும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் (வயது 13), ஆந்திராவை சேர்ந்த அபிராம் (13), மன்னார்குடியை சேர்ந்த ஹரி பிரசாத் (14), கோபாலகிருஷ்ணன் (12) ஆகிய 4 மாணவர்கள் சுற்றுலா பயணிகள் தங்கும் இடமான யாத்திரி நிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடம் ஆற்றில் இன்று காலை 6 மணி அளவில் குளிக்கச் சென்றனர்.பின்னர் அவர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். அதைத்தொடர்ந்து சுழலில் சிக்கிய அவர்களை ஆற்று தண்ணீர் இழுத்துச் சென்றது. இதில் கோபாலகிருஷ்ணன் என்ற மாணவன் அதிர்ஷ்டவசமாக தடுமாறி தப்பி கரைக்கு ஓடி வந்தான்.பின்னர் தன்னுடன் குளிக்க வந்த சக மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கிய தகவலை தெரிவித்துள்ளான். உடனடியாக வேத பாடசாலையில் இருந்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் 25 பேர் விரைந்து வந்து வெள்ளத்தில் மூழ்கிய அந்த 3 மாணவர்களையும் தேடினர்.அப்போது மன்னார்குடியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் சிறிது தூரத்தில் பிணமாக மீட்கப்பட்டார். மற்ற இரு மாணவர்களையும் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். நீரில் மூழ்கிய நான்கு மாணவர்களுக்கும் நீச்சல் தெரியாது என தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்தனர்.தற்போது கம்பரசம்பேட்டை அருகே கூட்டு குடிநீர் திட்டத்துக்காக கிணறு தோண்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக காவிரி ஆற்றில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இதனால் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் குளிக்க சென்ற 4 பேரும் நிலைகொள்ள முடியாமல் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • க.பரமத்தி அருகே மொபட் மீது லாரி மோதி தொழிலாளி பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே செட்டியபட்டியை சேர்ந்தவர் வைரவன் (வயது 49). இவர் தற்போது க. பரமத்தி அருகே உள்ள தனியார் கல் குவாரியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதனால் அவர் கரூர் அருகே உள்ள கோவிந்தம் பாளையத்தில் குடியிருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று தனது வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக மொபட்டில் கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் மேற்கு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பவுத்திரம் மேடு அருகே எதிரே அந்த வழியாக வந்த ஒரு லாரி வைரவன் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த வைரவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வைரவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வைரவன் மனைவி தமிழரசி கொடுத்த புகாரின் பேரில் க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூர் அருகே மரத்தில் கார் மோதி நிறைமாத கர்ப்பிணியும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது.
    • இந்தநிலையில் நேற்று முன்தினம் நிகிதாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

    கரூர்:

    திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா, வெள்ளைப்பாறை கிராமத்தை ேசர்ந்தவர் சந்திரசேகர் (வயது 21). இவரது மனைவி நிகிதா (19). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நிகிதாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.இதையடுத்து உறவினர்கள் நிகிதாவை சிகிச்சைக்காக கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர்.ஆனால் அவர்கள் அங்கு செல்ல விரும்பவில்லை. இதையடுத்து சந்திரசேகர் தனது மனைவி நிகிதா மற்றும் மாமியார் சித்ரா ஆகியோரை தனது காரில் அழைத்து கொண்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.காரை சந்திரசேகர் ஓட்டினார். நிகிதாவும், சித்ராவும் காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தனர்.

    தோகைமலை அருகே உள்ள வெள்ளைகுளம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைேயாரத்தில் உள்ள வேப்பமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் சந்திரசேகர், நிகிதா, சித்ரா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் 3 பேரும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், நிகிதாவும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து நிகிதா உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சித்ரா, சந்திரசேகர் ஆகியோர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து குறித்து நிகிதாவின் தந்தை காளீஸ்வரன் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விபத்தை ஏற்படுத்தியதாக சந்திரசேகர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரத்தில் கார் மோதி நிறைமாத கர்ப்பிணியும், வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நீரிழ் மூழ்கி உயிரிழந்த 5 சிறுவர்களின் சடலங்களையும் மீட்டனர்.

    குஜராத் மாநிலம் பொடாட் நகரில் உள்ள கிருஷ்ணா சாகர் ஏரியில் குளிப்பதற்காக சிறுவர்கள் 5 பேர் நேற்று மதியம் சென்றுள்ளனர். முதலில் 2 சிறுவர்கள் ஏரியில் இறங்கி நீந்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இருவரும் நீருக்குள் திடீரென மூழ்கத் தொடங்கினர்.

    இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கரையில் இருந்த மூன்று சிறுவர்களும் ஏரியில் மூழ்கிய நண்பர்களை காப்பாற்ற முயன்று ஏரியில் குதித்தனர். ஆனால், அவர்களும் நீரில் மூழ்கினர். இதில், 5 சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நீரிழ் மூழ்கி உயிரிழந்த 5 சிறுவர்களின் சடலங்களையும் மீட்டனர்.

    மேலும், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×