search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அயோத்தி"

    • ஐதராபாத்தில் இருந்து ஏப்ரல் 2-ம் தேதியில் இருந்து அயோத்திக்கு நேரடி விமானங்களை இயக்கியது.
    • இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து வேறு ஒரு விமானத்தில் அயோத்தி செல்ல வேண்டும்.

    அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு, அயோத்திக்கு முக்கிய நகரங்களில் இருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விமானங்களை இயக்கத் தொடங்கியது. ஐதராபாத்தில் இருந்து ஏப்ரல் 2-ம் தேதியில் இருந்து அயோத்திக்கு நேரடி விமானங்களை இயக்கியது. இந்த இடைநில்லா விமானங்கள், வாரத்தில் மூன்று முறை இயக்கப்பட்டன.

    இந்நிலையில், ஐதராபாத்- அயோத்தி நேரடி விமான சேவையை கடந்த 1-ம் தேதியில் இருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுத்தி வைத்துள்ளது. இதன்மூலம் தொடங்கப்பட்ட இரண்டு மாதங்களில் நேரடி விமான சேவை முடிவுக்கு வந்துள்ளது. டிக்கெட் விற்பனை குறைந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

    தென்னிந்தியாவின் பரபரப்பான தொழில்நுட்ப மையமான ஹைதராபாத்தை வடக்கு மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள மத மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நகரமான அயோத்தியுடன் இணைக்கும் விமான சேவையை நிறுவனம் தொடங்கிய இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த பாதையில் செயல்பாடுகளை நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இப்போது, ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஐதராபாத்தில் இருந்து அயோத்தி செல்ல வேண்டுமானால், ஐதராபாத்தில் இருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து வேறு ஒரு விமானத்தில் அயோத்தி செல்ல வேண்டும்.

    இதற்கு முன்பு, சென்னை, பெங்களூரு, ஜெய்ப்பூர் மற்றும் பாட்னா ஆகிய இடங்களில் இருந்து அயோத்திக்கான நேரடி விமான சேவைகளையும் ஸ்பைஸ்ஜெட் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போதைக்கு, அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இருந்து மட்டும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நேரடி விமானங்கள் செல்கின்றன.

    • உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    • அயோத்தி ராமர் கோயிலை உள்ளடக்கிய ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லு சிங் தோல்வி அடைந்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

    மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 292 தொகுதிகளில் பாஜக கூட்டணியும் 234 தொகுதிகளில் இந்தியா கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது.

    ஆட்சியமைக்க 273 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்புள்ளதால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் இழுபறி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    உத்தரப்பிரதேசத்தின் ஷ்ரவஸ்தி தொகுதியில் பாஜக வேட்பாளர் சாகேத் மிஸ்ரா தோல்வியை தழுவியுள்ளார். சமாஜ்வாதி வேட்பாளர் ராம் சிரோமணி வர்மாவிடம் 76,673 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்துள்ளார்.

    பாஜக வேட்பாளர் சாகேத் மிஸ்ரா ராமர் கோவில் கட்டுமானக் குழு தலைவருமான நிருபேந்திர மிஸ்ராவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    அயோத்தி ராமர் கோயிலை உள்ளடக்கிய ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லு சிங்கை 54,56,7 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றுள்ளார்.

    அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டதால் உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அயோத்தியில் உள்ள பல தொகுதிகளை பாஜக இழந்துள்ளது.

    • உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
    • இந்தியா கூட்டணி 235 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

    மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 290 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி 235 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    ஆட்சியமைக்க 273 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்புள்ளதால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் இழுபறி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    அயோத்தி ராமர் கோயிலை உள்ளடக்கிய ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லு சிங் தோல்வி அடைந்துள்ளார். சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 54,56,7 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

    அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டதால் உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அயோத்தி ராமர் கோவில் உள்ள தொகுதியையே பாஜக இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பசுவதை தொடர்பான வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • பாஜக ஆட்சிக்கு வந்தால் பசுவதை மற்றும் பசு கடத்தலை அனுமதிக்காது.

    பீகார் மாநிலத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். மதுபானி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "அயோத்தியில் ராமர் கோவில் காட்டியது போல பீகார் மாநிலத்தில் சீதா கோவில் கட்டப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

    மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வர வேண்டும் என்று இந்திய மக்கள் முடிவு செய்துள்ளனர். இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? மு.க.ஸ்டாலினா மம்தா பேனர்ஜியா லாலு பிரசாத் யாதவா? என்று கேள்வி எழுப்பினார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விடுமுறையை பேங்காக்கில் செலவிடுகிறார். பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவத்தினருடன் கொண்டாடுகிறார். மஹாபாரதத்தை போலவே இங்கும் 2 முகாம்கள் உள்ளன. ஒன்று பாண்டவர்கள் முகாம், இன்னொன்று கௌரவர்கள் முகாம்.

    இப்பகுதியில் பசுவதை தொடர்பான வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாஜக ஆட்சிக்கு வந்தால் பசுவதை மற்றும் பசு கடத்தலை அனுமதிக்காது.

    சீதையின் தேசமான இங்கு, பசுவதையை ஏற்க முடியாது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வந்தால், பசுவதை செய்வோரை தலை கீழாக தொங்க விடுவோம் என உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் பசுக்களை கடத்தியதாக பல பேரை பசு பாதுகாப்பு கும்பல் அடித்து கொலை செய்துள்ளது. இந்நிலையில், பசு பாதுகாப்பு கும்பலின் கொலைகளை ஆதரிக்கும் விதமாக, பீகாரில் தேர்தல் பரப்புரையில் அமித்ஷா பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    • காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் இதை மீண்டும் கொண்டுவர விரும்புகிறீர்களா?
    • பொது சிவில் சட்டம் வேண்டுமா இல்லையா? முஸ்லிம் தனிநபர் சட்டம் கொண்டுவரப்படுமா?

    காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் இதை மீண்டும் கொண்டுவர விரும்புகிறீர்களா?உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். அப்போது, ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியிடம் அவர் 5 கேள்விகளை கேட்டுள்ளார்.

    1) ராகுல் காந்தி அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லாதது ஏன்?

    2) மோடிஜியால் ஒழிக்கப்பட்ட முத்தலாக் திட்டம் நல்லதா? கெட்டதா? நீங்கள் முத்தலாக்கை திரும்ப கொண்டு வர விரும்புகிறீர்களா?

    3) மோடி ஜி சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினார், அது நல்லதா? கெட்டதா? சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இல்லையா?

    4) முஸ்லிம் தனிநபர் சட்டத்திற்குப் பதிலாக, ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் வேண்டுமா இல்லையா? முஸ்லிம் தனிநபர் சட்டம் கொண்டுவரப்படுமா?

    5) காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம் இதை மீண்டும் கொண்டுவர விரும்புகிறீர்களா?

    இந்த ஐந்து கேள்விகளுக்கும் ராகுல்காந்தி பதில் அளிக்க வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    ரேபரேலி தொகுதியில் ஐந்தாவது கட்டமாக மே 20ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 

    • ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஆம்மாநில ஆளுநர் ஸ்ரீமதி ஆனந்திபென் படேல் வரவேற்றார்.
    • ஜனாதிபதி திரவுபதி முர்மு முதன்முதலாக வருகை தந்துள்ளார்.

    குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்வார் என கூறப்பட்டது.

    அதன்படி, ராஷ்டிரபதி பவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "குடியரசுத் தலைவர் ஸ்ரீ ஹனுமான் கர்ஹி கோயில், பிரபு ஸ்ரீ ராம் கோயில் மற்றும் குபேர் டீலாவில் சாமி தரிசனம் செய்வார்" என குறிப்பிடப்பட்டது.

    இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

    இதற்காக, உத்தரப் பிரதேசத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ஆம்மாநில ஆளுநர் ஸ்ரீமதி ஆனந்திபென் படேல், மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார்.

    இதுதொடர்பாக, ஜனாதிபதி அலுவலகம், திரவுபதி முர்மு, கவர்னர் இருக்கும் படத்துடன் எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    உ.பியில் புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு முதன்முதலாக வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குழந்தைகளை கடத்தி சென்று பணத்திற்கு விற்பனை செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.
    • குழந்தைகளை அழைத்து வந்தவர்களிடம் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் இல்லை.

    அயோத்தி:

    பீகாரில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு குழந்தைகள் கடத்தப்படுவதாக குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர். குழந்தைகளை கடத்தி சென்று பணத்திற்கு விற்பனை செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அயோத்தி குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் சர்வேஷ் அவஸ்தி கூறியதாவது:

    அயோத்தியில் நாங்கள் குழந்தைகளை மீட்டோம். அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்கப்பட்டது. மீட்கப்பட்ட குழந்தைகள் 4-12 வயதுக்குட்பட்டவர்கள்.

    குழந்தைகளை அழைத்து வந்தவர்களிடம் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் இல்லை. பெற்றோரை தொடர்பு கொண்டு குழந்தைகள் ஒப்படைக்கப்படும். பெற்றோரின் ஒப்புதலின்றி 95 குழந்தைகள் எதற்காக பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    உத்தரப்பிரதேச குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் சுசித்ரா சதுர்வேதியிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில், குழந்தைகள் கொண்டு செல்லப்படுவதை அறிந்துகொண்டதாக கூறினார்.

    • இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்தாண்டு மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'.
    • படத்தை பார்த்து ரஜினி உள்பட நிறைய திரைப்பிரபலங்கள் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    அறிமுக இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்தாண்டு மார்ச் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'அயோத்தி'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், ப்ரீத்தி அஸ்ராணி, யாஷ்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பற்றி பேசிய இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

    படத்தை பார்த்து ரஜினி உள்பட நிறைய திரைப்பிரபலங்கள் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அயோத்தி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சசிகுமாருக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் நடித்த படம் வெற்றியடைந்தது.

    அயோத்தி படம் வெளியாகி 1 வருடம் கடந்த நிலையில் அப்படத்தின் இயக்குனரான மந்திர மூர்த்தி இயக்கும் படத்தை கோபுரம் பிலிம்ஸ் சார்பாக சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிக்கவுள்ளார். இதற்கு முன் ஆண்டவன் கட்டளை, மருது, தங்க மகன் போன்ற வெற்றி படங்களை கோபுரம் பிலிம்ஸ் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தில் யார் நடிக்க போகிறார்கள் எம்மாதிரியான கதைக்களம் கொண்ட திரைப்படம் போன்ற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
    • ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் பிரபலங்கள் உள்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் பாலராமரை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா பொதுசெயலாளர் சம்பத் ராய் கூறியதாவது:-

    அயோத்தி ராமர் கோவிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள்முதல் இதுவரை 1½ கோடி பேர் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து ராமபிரானை தரிசித்துள்ளனர். கோவிலுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    கோவில் கீழ்தளம் கட்டுமான பணி முழு அளவில் முடிந்துள்ளது. முதல் தளத்தில் விடுபட்ட கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது.

    கோவிலை சுற்றி 14 அடி உயரத்தில் காம்பவுண்டு சுவர் விரைவில் கட்டி முடிக்கப்படும். கோவில் வளாகத்தில் 600 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதனை உள்ளூர் மக்களே அவரவர் அக்கறை எடுத்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தங்கும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிரீத்தி அஸ்ரானி அப்பாவி முகத்துடன் தன் அம்மாவை இழந்த துக்கத்தை மிகத் திறம்பட அயோத்தி படத்தில் நடித்திருப்பார்.
    • பிரீத்தி அஸ்ரானி அடுத்ததாக கவினின் 5 வது படத்தில் நடித்து வருகிறார்.

    சசிகுமார் நடிப்பில் அறிமுக இயக்குனரான மந்திர மூர்த்தி இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு அயோத்தி திரைப்படம் வெளியாகியது. யாஷ்பால் ஷர்மா, பிரீத்தி அஸ்ரானி, புகழ், போஸ் வெங்கட் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பர்.

    பிரீத்தி அஸ்ரானி அப்பாவி முகத்துடன் தன் அம்மாவை இழந்த துக்கத்தை மிகத் திறம்பட அயோத்தி படத்தில் நடித்திருப்பார். அயோத்தி திரைப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

    இதைத் தொடர்ந்து பிரீத்தி அஸ்ரானி அடுத்ததாக கவினின் 5 வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நடன இயக்குனரான சதீஷ் இயக்கி வருகிறார். இது ஒரு ஜாலியான நகைச்சுவை கதைக்கள பிண்ணனியில் உருவாகவுள்ளது. அயோத்தியில் நான் நடித்த கதாப்பாத்திரத்தை விட இது முற்றிலும் மாறுப்பட்டது என்று சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

    இதற்கடுத்து ரியோ நடிக்கும் அடுத்த படத்திலும் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக கூறியுள்ளார் பிரீத்தி அஸ்ரானி.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விழாவின் 9-வது நாளான இன்று ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
    • சூரிய கதிர்கள் ராமர் சிலையின் நெற்றியில் விழும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ராமர் கோவிலில் தற்போது ராமநவமி விழா நடந்து வருகிறது. விழாவின் 9-வது நாளான இன்று (17-ந்தேதி) ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

    இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று பகல் 12.16 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் 51 இஞ்ச் உயரம் கொண்ட பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.

    சூரிய கதிர்கள் ராமர் சிலையின் நெற்றியில் விழும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.

    இந்த அபூர்வ நிகழ்வை பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர். அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பால ராமரின் நெற்றியில் 75 மில்லி மீட்டர் அளவுக்கு திலகம் போல இந்த சூரிய கதிர்கள் தென்படும்.
    • சிலையில் சூரிய ஒளி நேரடியாக விழும் வகையில் கண்ணாடிகள், லென்சுகள் கொண்ட வடிவமைப்பு கோவில் கட்டிடம் அறிவியல் மற்றும் விஞ்ஞான உருவாக்கப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ராமர் கோவிலில் தற்போது ராமநவமி விழா நடந்து வருகிறது. விழாவின் 9- வது நாளான நாளை (17-ந்தேதி) ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடக்கிறது.

    இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (புதன்கிழமை) பகல் 12.16 மணிக்கு கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் 51 இஞ்ச் உயரம் கொண்ட பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற உள்ளது என கோவில் கட்டுமான குழு தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். சிலையில் சூரிய ஒளி நேரடியாக விழும் வகையில் கண்ணாடிகள், லென்சுகள் கொண்ட வடிவமைப்பு கோவில் கட்டிடம் அறிவியல் மற்றும் விஞ்ஞான உருவாக்கப்பட்டுள்ளது.

    பால ராமரின் நெற்றியில் 75 மில்லி மீட்டர் அளவுக்கு திலகம் போல இந்த சூரிய கதிர்கள் தென்படும்.

    இந்த அபூர்வ நிகழ்வு சுமார் 5 நிமிடம் நீடிக்கும். இதனை காண ஏராளமான பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் காணும் வகையில் 100-க்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராம நவமி விழாவையொட்டி கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

    ×