என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 96558
நீங்கள் தேடியது "சிஎஸ்கே"
அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனில் மேலும் புதிய அணிகள் இணைவதால் போட்டி மிகவும் உற்சாகமாக இருக்கும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்தார்.
சென்னை:
14வது ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேசியதாவது:-
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் விளையாடுவதைப் பார்க்க நீங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். அதற்கான தருணம் வெகு தொலைவில் இல்லை. ஐபிஎல் 15வது சீசன் இந்தியாவில் நடைபெறவுள்ளது. மேலும் புதிய அணிகள் இணைவதால் போட்டி மிகவும் உற்சாகமாக இருக்கும். புதிய அணிகள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ஒரு மெகா ஏலம் நடைபெறவிருக்கிறது.
பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கான பெருமை அணியின் உரிமையாளர் சீனிவாசனையே சேரும். இக்கட்டான காலங்களில் அணிக்கு ஆதரவாக நின்றார். இதேபோல் காசி விஸ்வநாதன் அணியை ஒன்றிணைக்கும் பசை போன்றவர். ஒவ்வொரு சீசனிலும் அவர் அணியை வழிநடத்தினார்.
டோனி போன்ற கேப்டன் இருக்கும்போது, சென்னை சூப்பர் கிங்சை எப்படி எளிதாக எடுத்துக்கொள்ள முடியும்? அணியின் இதயத்துடிப்பு மற்றும் முதுகெலும்பு டோனி. இந்தியா இதுவரையில் உருவாக்கிய மிக வெற்றிகரமான கேப்டன். அவர் ஏற்படுத்திய பிணைப்பு, அவர் உருவாக்கிய மரபு நிலைத்து நிற்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு நீடித்த நிலையான செயல்பாடுதான் காரணம் என சீனிவாசன் தெரிவித்தார்.
சென்னை:
ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் அணியின் உரிமையாளர் சீனிவாசன் பேசியதாவது:-
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு நீடித்த நிலையான செயல்பாடுதான் காரணம். டோனி தலைமையிலான சென்னை அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
தற்போதுள்ள எந்த வீரரையும் இழக்க சென்னை அணி விரும்பவில்லை. சென்னை அணியில் டோனி தொடர்ந்து நீடிப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, டோனி சி.எஸ்.கே. அணியின் கேப்டனாக நீடிக்க வேண்டும் என்றும், இன்னும் பல போட்டிகளுக்கு அணியை வழிநடத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகம் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருப்பதாகவும், தனது முதல் டெஸ்ட் போட்டி சென்னையில்தான் தொடங்கியது என்றும் டோனி குறிப்பிட்டார்.
சென்னை:
ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அணியின் உரிமையாளர் சீனிவாசன், கேப்டன் டோனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சென்னை அணியின் கேப்டன் டோனி, வெற்றிக் கோப்பையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கி வாழ்த்து பெற்றார்.
விழாவில் டோனி பேசுகையில், தமிழகம் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருப்பதாகவும், தனது முதல் டெஸ்ட் போட்டி சென்னையில்தான் தொடங்கியது என்றும் குறிப்பிட்டார்.
சென்னையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியின்போதும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு அளப்பரியது என்று கூறிய டோனி, சென்னை அணியின் ரசிகர்கள் பலம் தமிழ்நாட்டைக் கடந்தது என்றார். 5 ஆணடுகள் கடந்தாலும்கூட நான் விளையாடும் கடைசி போட்டி சென்னையில்தான் என்றும் டோனி தெரிவித்தார்.
தமிழ்நாட்டினர் பச்சை தமிழர்கள் என்றால், டோனி மஞ்சள் தமிழர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.
சென்னை:
ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கி முதல்-அமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
சென்னை அணிக்கான பாராட்டு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை என்றாலே சூப்பர்தான். முதல்வராக அல்ல, டோனியின் ரசிகராக பாராட்டு விழாவிற்கு வந்திருக்கிறேன். எனது குடும்பமே டோனியின் ரசிகர்தான். எனது தந்தை, மகன்,பேரன் என அனைவருமே டோனியின் ரசிகர்கள்தான். கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவன் நான்.
டோனி சென்னை ரசிகர்களின் செல்லப்பிள்ளை. தமிழ்நாட்டினர் பச்சை தமிழர்கள் என்றால், டோனி மஞ்சள் தமிழர். தங்களில் ஒருவராக டோனியை தமிழர்கள் கருதுகிறார்கள். எந்த நெருக்கடியிலும் ‘கூல்’ ஆக இருப்பவர்கள் கருணாநிதியும், டோனியும். டோனியைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கலைவாணர் அரங்கத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
சென்னை:
ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூறியிருந்தார். அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன், கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், திமுக எம்பி கலாநிதி வீராசாமி மற்றும் அணி வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பாராட்டு விழாவில் அணியின் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்களின் குடும்பங்கள் கலந்து கொள்கின்றன.
சென்னை:
ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து சென்னை அணி வீரர்களுக்கு பாராட்டுவிழா விரைவில் நடத்தப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூறியிருந்தார்.
முதல்-அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பாராட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இவ்விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்களின் குடும்பங்கள் கலந்து கொள்கின்றன.
இந்த விழாவிற்கு ராஞ்சியில் இருந்து தனி விமானத்தில் டோனி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ், 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைக்குமா?
சென்னை:
ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் அணிகளில் முதன்மை வாய்ந்ததாக திகழ்வது சென்னை சூப்பர் கிங்ஸ். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், தான் விளையாடிய அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் ‘பிளே-ஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. வேறு எந்த அணியும் இந்த முத்திரையை பதிக்கவில்லை. அந்த அளவுக்கு சூப்பர் கிங்ஸ் வலிமை பெற்ற அணியாக திகழ்கிறது.
இதில் 3 முறை ஐபிஎல் கோப்பையை (2010, 2011, 2018) வென்று இருக்கிறது. 4 தடவை 2-வது இடத்தை பிடித்து இருக்கிறது. அதாவது இறுதிப்போட்டிக்கு 7 முறை நுழைந்த ஒரே அணி என்ற சாதனையை சூப்பர் கிங்ஸ் பெற்று முத்திரை பதித்துள்ளது.
2008-ம் ஆண்டு நடந்த அறிமுக ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று கோப்பையை இழந்தது. 2009-ம் ஆண்டு நடந்த 2-வது ஐபிஎல் போட்டியில் அரை இறுதியில் பெங்களூரிடம் தோற்றது. 2010-ம் ஆண்டு நடந்த போட்டியில் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 22 ரன்னில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.
2011-ம் ஆண்டு நடந்த போட்டியிலும் சென்னையின் ஆதிக்கம் நீடித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை இறுதிப்போட்டியில் 58 ரன்னில் வீழ்த்தி சென்னை அணி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. 2-வது தடவையாக ஐபிஎல் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை பெற்றது.
5-வது ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக விளையாடியது. இறுதிப்போட்டியில் கொல்கத்தாவிடம் 5 விக்கெட்டில் தோற்று ‘ஹாட்ரிக்’ கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. 2013-ம் ஆண்டு நடந்த 6-வது ஐபிஎல் போட்டியிலும் சூப்பர் கிங்ஸின் ஆதிக்கம் நீடித்தது. ‘லீக்’ சுற்றில் முதல் இடத்தை பிடித்த அந்த அணி ‘குவாலிபையர் 1’-ல் மும்பையை 48 ரன்னில் வீழ்த்தி தொடர்ந்து 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. ஆனால் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸிடம் 23 ரன்னில் தோற்று 3-வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை 2-வது முறையாக தவறவிட்டது.
2014 மற்றும் 2015-ம் ஐபிஎல் தொடர்களிலும் சூப்பர் கிங்ஸ் அபாரமாகவே ஆடியது. பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு தொடர்ந்து முன்னேறி முத்திரை பதித்தது. 2014-ல் ‘குவாலிபையர்-2’ ஆட்டத்தில் பஞ்சாப்பிடம் 24 ரன்னில் தோற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.
2015 போட்டியில் ‘லீக்’ சுற்றில் முதல் இடத்தை பிடித்தது. ‘குவாலிபையர்-1’-ல் மும்பையிடம் 25 ரன்னில் தோற்று, ‘குவாலிபையர்-2’-ல் பெங்களூரை வீழ்த்தி 6-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் மும்பையிடம் மீண்டும் 41 ரன்னில் தோற்று பட்டத்தை இழந்தது. ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் காரணமாக 2016 மற்றும் 2017 போட்டிகளில் அந்த அணி விளையாட முடியாமல் போனது.
11-வது ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் 3 வீரர்களை ரூ.33 கோடிக்கு தக்க வைத்தது. அதாவது கடைசியாக விளையாடிய அணியில் இருந்த வீரர்களை தக்க வைத்தது. கேப்டன் டோனியை ரூ.15 கோடிக்கும், ரெய்னாவை ரூ.11 கோடிக்கும், ரவிந்திர ஜடேஜாவை ரூ.7 கோடிக்கும் தக்க வைத்தது. மீதியுள்ள வீரர்களை ஏலத்தில் எடுத்தது.
பிராவோ, டு பிளிசிஸ் ஆகியோரை ஏலத்தில் தக்க வைத்தது. வாட்சன், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங், சாம் பில்லிங்ஸ், மார்க் வுட் புதிய வரவாக இருந்தது.
தடைக்கு பிறகு விளையாடிய சென்னை சூப்பர் கிங்சின் ஆட்டம் அதிரடியாகவே இருந்தது. ‘லீக்’ சுற்றில் 2-வது இடத்தை பிடித்து ‘பிளேஆப்ஸ்’ சுற்றுக்கு முன்னேறியது.
‘குவாலிபையர்1’ ஆட்டத்திலும் (25 ரன்), இறுதிப்போட்டியிலும் (8 விக்கெட்) ஐதராபாத்தை வீழ்த்தி 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் மும்பையுடன் தன்னை இணைத்து கொண்டது.
12-வது ஐபிஎல் போட்டியில் முத்திரை பதிக்கும் ஆர்வத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. ஐபிஎல் கோப்பையை 4-வது முறையாக வென்று புதிய சாதனை படைக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
ஐபிஎல்-லில் அதிக ரன் எடுத்த வீரர்களில் ரெய்னா முதல் இடத்தில் உள்ளார். அவர் 176 ஆட்டத்தில் 4985 ரன் எடுத்துள்ளார். சராசரி 34.37 ஆகும். 1 சதமும், 35 அரை சதமும் அடங்கும். டோனி 4016 ரன்னுடன் 7-வது இடத்தில் உள்ளார். அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், டு பிளிசிஸ், முரளி விஜய் ஆகியோரும் போட்டியில் சிறப்பாக இருப்பார்கள்.
ஆல்ரவுண்டர் வரிசையில் பிராவோ, ஜடேஜா, வாட்சன் ஜொலிக்க கூடியவர்கள். பிராவோ 136 விக்கெட் வீழ்த்தி ஒட்டு மொத்த ஐபிஎல்-லில் 4-வது இடத்தில் உள்ளார். இதேபோல அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங் 134 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலமே கேப்டன் டோனிதான். தனது ஆட்டத்திலும், கேப்டன் பதவியிலும் சிறப்பாக செயல்பட்டு அணியின் முதுகெலும்பாக உள்ளார். கடந்த முறை சேப்பாக்கத்தில் ஒரு ஆட்டம் மட்டுமே நடந்தது. தற்போது முழுமையாக போட்டிகள் நடக்கிறது.
இதனால் ரசிகர்களின் ஆதரவு கூடுதல் பலம் சேர்க்கும். இதன்மூலம் சிஎஸ்கே புதிய வரலாறு படைக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்தை பார்க்க 12 ஆயிரம் ரசிகர்கள் குவிந்தனர். #IPL2019 #CSK
சென்னை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
12-வது ஐ.பி.எல். போட்டி வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது.
டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. இதனால் தொடக்க ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.
23-ந்தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஏப்ரல் 5-ந்தேதிவரை இரண்டு வார காலத்துக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டது. ஐ.பி.எல். போட்டிக்கான முழு அட்டவணை விவரம் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்துக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ரெய்னா, முரளி விஜய், அம்பதிராயுடு, தீபக் சாஹர், ஹர்சல் தாகூர், ஹர்பஜன்சிங், கரண் சர்மா உள்ளிட்ட வீரர்கள் விளையாடினார்கள்.
டோனி நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்டதால் காட்சிப் போட்டியில் ஆடவில்லை.
இந்த காட்சியை பார்க்க ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். சி.டி. மற்றும் இ ஸ்டாண்டின் கேலரிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். காட்சி போட்டியை காண ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. 12 ஆயிரம் ரசிகர்கள் இந்தப் போட்டியை ரசித்து உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் முதல் ஆட்டத்துக்காக டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. #IPL2019 #CSK

பயிற்சியில் ஈடுபட்டு வந்த வீரர்கள் நேற்று இரவு காட்சிப் போட்டியில் ஆடினார்கள். சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தங்களுக்குள் இரண்டு அணியாக பிரிந்து 20 ஓவர் ஆட்டம் விளையாடினார்கள்.
ரெய்னா
ரெய்னா, முரளி விஜய், அம்பதிராயுடு, தீபக் சாஹர், ஹர்சல் தாகூர், ஹர்பஜன்சிங், கரண் சர்மா உள்ளிட்ட வீரர்கள் விளையாடினார்கள்.
டோனி நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்டதால் காட்சிப் போட்டியில் ஆடவில்லை.
இந்த காட்சியை பார்க்க ரசிகர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். சி.டி. மற்றும் இ ஸ்டாண்டின் கேலரிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். காட்சி போட்டியை காண ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. 12 ஆயிரம் ரசிகர்கள் இந்தப் போட்டியை ரசித்து உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் முதல் ஆட்டத்துக்காக டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. #IPL2019 #CSK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா மூன்று சாதனைகள் படைக்க இருக்கிறார் #IPL2019 #CSK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மன் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அதிரடியாக விளையாடக் கூடியவர். இவர் இந்த ஐபிஎல் தொடரில் மூன்று சாதனைகள் படைக்க இருக்கிறார்.
இன்னும் 15 ரன்கள் அடித்தால் ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைப்பார். அத்துடன் 15 சிக்சர்கள் அடித்தால் 200 சிக்ஸ் அடித்த வீரர் என்ற பெருமை கிடைக்கும். இன்னும் 5 கேட்ச் பிடித்தால் 100 கேட்ச் பிடித்த வீரர் என்ற சாதனையும் படைப்பார்.

×

X