search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 96812"

    திருப்பூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
    திருப்பூர்:

    திருப்பூர் அங்கேரிப்பாளையம் ரோட்டில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே, பாரத ஸ்டேட் வங்கி கொங்குநகர் கிளைக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தில் நள்ளிரவு 12.15 மணி அளவில் மர்ம ஆசாமி ஒருவர் புகுந்து பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் எந்திரத்தை திறக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    ஏ.டி.எம். எந்திரத்தில் அந்த ஆசாமி பட்டன்களை தொடர்ந்து அமுக்கியபடி செயல்பட்டதால் மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள அந்த வங்கியின் தலைமை பாதுகாப்பு மையத்துக்கு எச்சரிக்கை மணி ஒலித்தது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்துக்குள் பொருத்தப்பட்டு இருந்த ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை வங்கி பாதுகாப்பு அதிகாரிகள் மும்பையில் இருந்து கண்காணித்தனர்.

    அதில் 30 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி கால்சட்டை, டி–சர்ட் அணிந்தும், டி–சர்ட்டால் தனது தலையை போர்த்தியபடியும் ஏ.டி.எம். மையத்துக்குள் வந்துள்ளார். அவர் ஏ.டி.எம். எந்திரத்தின் பட்டன்களை அமுக்கியபடியும், கீழே குனிந்து எந்திரத்தை திறப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்ட காட்சிகள் பதிவாகி இருந்தன. சுமார் 45 நிமிட நேரமாக அந்த ஆசாமி ஏ.டி.எம். மையத்துக்குள் வருவதும், போவதுமாக சந்தேகத்துக்கு இடமாக காணப்பட்டுள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

    இந்த காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த வங்கி பாதுகாப்பு அதிகாரிகள், திருப்பூரில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். முதலில் ஏ.டி.எம். மையத்தை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை அங்கேரிப்பாளையம் ரோட்டில் உள்ள சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்தை கண்டறிந்து போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஏ.டி.எம். எந்திரம் எதுவும் சேதப்படுத்தப்படவில்லை. மேலும் எந்திரம் வேலை செய்யாமல் இருந்தது. எந்திரத்தை திறந்து பணத்தை கொள்ளையடிப்பதற்கான வேலைகளை மர்ம ஆசாமி ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனால் அந்த ஆசாமி தொழில்நுட்ப அறிவு பெற்றவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்தில் காவலர் இல்லை. இதை தெரிந்து கொண்டு அந்த ஆசாமி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    #tamilnews
    பழனியில் கொள்ளை கும்பல் அட்டூழியத்தால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    பழனி:

    பழனி தேவாங்கர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். பழனி காந்தி மார்க்கெட் பகுதியில் கடை வைத்துள்ளார். இவர், தனது குடும்பத்தினருடன் ஆடிப்பெருக்கையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு சென்றார். அதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவில் இருந்த தாழ்ப்பாளை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் வீட்டுக்குள் சோதனை நடத்தியவர்களுக்கு பீரோவின் சாவி கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்தி பீரோவை திறந்த மர்ம நபர்கள், அதில் இருந்த நகை, பணத்தை திருடிக்கொண்டு பீரோவை மீண்டும் பூட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

    இதற்கிடையே வீட்டுக்கு வந்த ராஜேந்திரன் குடும்பத்தினர் பின்பக்க கதவு திறந்த நிலையில் இருப்பதை பார்த்தனர். உடனே உள்ளே சென்று பீரோ உடைக்கப் பட்டுள்ளதா? என்று பார்த்தனர்.

    ஆனால் பீரோ பூட்டிய நிலையில் இருந்துள்ளது. இருந்த போதிலும் பீரோவுக்குள் இருக்கும் நகை, பணம் பத்திரமாக உள்ளதா? என பார்ப்பதற்காக அவர்கள் பீரோவை திறந்து பார்த்தனர். அப்போது அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ.3 ஆயிரம் ஆகியவை திருடு போனதையறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பழனி நகரில் இதுபோன்ற கொள்ளை சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் நகர மக்கள் பீதியில் உள்ளனர்.

    திருச்சியில் பள்ளி நிர்வாகி - ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

    திருச்சி:

    திருச்சி வயலூர் ரோடு சீனிவாசநகர் 17-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் திரு முருகன். இவர் சொந்தமாக பள்ளி நடத்தி வருகிறார் .

    சம்பவதன்று திருமுருகன் வீட்டை பூட்டி விட்டு, வீட்டின் மாடியில் குடும்பத்துடன் தூங்கினார். பின்னர் காலையில் எழுந்து வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப் பட்டு கதவு திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு ரூ. 1.20 லட்சம் ரொக்க பணம், 46 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்க பட்டு இருந்தது. இது குறித்து திருமுருகன் திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திருச்சி எடமலைபட்டி புதூர் சாரதிநகரை சேர்ந்தவர் கணேசன். தபால் துறையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மரக்கடையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 25 பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது.

    இது குறித்து கணேசன் எடமலைப் பட்டிபுதூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். கைரேகை நிபுணர்களும் வந்து ரேகையை பதிவு சென்றனர்.

    இந்த 2 கொள்ளை சம்பவங்களில் மொத்தம் ரூ.18 லட்சம் நகை-பணம் கொள்ளை போய் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மின்வாரிய அதிகாரி வீட்டில் கொள்ளைபோன நகைகள்-பணம் முழுவதும் கிடைத்து, உறவினர் வீட்டின் முன்பு இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

    பெரம்பூர்:

    வியாசர்பாடி பக்தவச் சலம் காலனியை சேர்ந்தவர் பார்த்திபன். மின்வாரிய அதிகாரி. இவருடைய மனைவி மணிமேகலை.

    நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றார். திரும்பி வந்தபோது, வீட்டில் இருந்த 38 பவுன் தங்கநகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப் பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து மகாகவி பாரதிநகர் போலீஸ் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். வீட்டுக்குள் புகுந்து கைவரிசை காட்டியவர்களின் கைரேகைகளை பதிவு செய்தார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை அருகில் உள்ள மணிமேகலையின் தந்தை வீட்டின் வாசலில் 25 பவுன் நகை கிடந்தது. அது கொள்ளைபோன நகை என்பதும் தெரியவந்தது. மணிமேகலை குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் நகை, பணத்தை திருடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர்.

    எனவே மணிமேகலை வீட்டின் அருகில் குடி இருப்பவர்கள் உறவினர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டன. நாளை மோப்ப நாய் வரும். அப்போது மீதி நகை, பணம் வைத்திருக்கும் குற்றவாளிகள் சிக்குவார்கள் என்று இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் எச்சரித்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 2-வது முறையாக மணிமேகலையின் தந்தை வீட்டின் முன்பு ஒரு துணி பொட்டலம் கிடந்தது. அதில் ஏற்கனவே திருட்டுபோனவற்றில் மீதமுள்ள ரூ.2 லட்சம் ரொக்கம், 13 பவுன் நகை ஆகியவை இருந்தன.

    இதன்மூலம் மின்வாரிய அதிகாரி பார்த்திபன் வீட்டில் கொள்ளைபோன பணம், நகைகள் முழுவதும் திரும்ப கிடைத்துள்ளது. பணம்-நகை திருடியவர்கள் போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து அவற்றை வீட்டின் முன்பு வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஒட்டன்சத்திரம் அருகே விவசாயியை தாக்கி ரூ.4 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள நாரப்பநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது60) விவசாயி. இவரது மனைவி சரோஜா. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனது மகனை பார்ப்பதற்கு சென்று விட்டார்.

    பழனிச்சாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் திடீரென வீட்டிற்குள் புகுந்து பழனிச்சாமியை கடுமையாக தாக்கினர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த பழனிச்சாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து இடைய கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில் வீட்டில் தனியாக இருந்த பழனிச்சாமியை 3 பேர் கொண்ட கும்பல் தாக்கி ரூ.4 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். அவரது உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். #tamilnews
    ஈரோட்டில் மாற்றுத்திறனாளியின் வீட்டுக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே காலனி பள்ளிவாசல் பின்புறத்தில் வசிப்பவர் சிவசங்கரன் (வயது 34). மாற்றுத்திறனாளி வாலிபர். இன்னும் திருமணமாகவில்லை.

    இவர் ரெயில்வேயில் பேரேஜ் மெக்கானிக் ஆக பணி புரிந்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை 1.30 மணி அளவில் அடையாளம் தெரியாத 2 மர்ம ஆசாமிகள் அங்கு வந்தனர். சிவசங்கரன் வீட்டு கதவை பலமாக தள்ளினர். இதில் கதவு திறந்தது. சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த சிவசங்கரனுக்கு வீட்டுக்குள் 2 ஆசாமிகள் நுழைந்ததை கண்ட திடுக்கிட்டார்.

    பிறகு 2 ஆசாமிகளும் அவரை தாக்கினர். பிறகு அவரிடமிருந்து செல்போன் மற்றும் வீட்டில் இருந்த 8 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து ஓடி விட்டனர்.

    கொள்ளையர்களின் தாக்குதலில் நிலை குலைந்த சிவசங்கரன் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது பற்றிய புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். #tamilnews
    ஒட்டன்சத்திரம் அருகே பஞ்சாயத்து அலுவலகத்தில் பொருட்கள் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். #Robberycase

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே பாலப்பன்பட்டி ஊராட்சியில் ஊராட்சி சேவை மைய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பல்வேறு வேலைகளுக்காக வந்து செல்கின்றனர்.

    சம்பவத்தன்று வேலை நேரம் முடிந்ததும் அலுவலகத்தை பூட்டிச் சென்றனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து அலுவலகத்தின் உள்ளே புகுந்தனர்.

    அங்கிருந்த 2 கணினி, உதிரி பாகங்கள் மின் மோட்டார் கம்பிகள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.25 ஆயிரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பஞ்சாயத்து செயல் அலுவலர் செல்வம் அளித்த புகாரின் பேரில் கள்ளிமந்தையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    திருமங்கலத்தில் தே.மு.தி.க. முன்னாள் கவுன்சிலர் பலசரக்கு கடையில் கதவை உடைத்து ரூ.47 ஆயிரத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் காமாட்சி நகரைச் சேர்ந்தவர் வெங் கடேஸ்வரன் (வயது 40). தே.மு.தி.க.வைச் சேர்ந்த இவர் முன்னாள் நகர் மன்ற கவுன்சிலர் ஆவார். திருமங்கலம் ரெயில்வே பீடர் ரோட்டில் வெங்க டேஸ்வரன் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.

    நேற்று வியாபாரம் முடிந் ததும் கடையை பூட்டிச் சென்று விட்டார். இன்று காலை அவர் மீண்டும் கடையை திறக்க வந்தார்.

    அப்போது கடையின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு வெங்க டேஸ்வரன் அதிர்ச்சி யடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த கண்ணாடி கதவும் திறந்து கிடந்தது. கடைக்குள் இருந்த ரூ.47 ஆயிரம் கொள்ளைய டிக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீ சார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங் கள் சேகரிக்கப்பட் டன. துப்பறியும் நாயும் கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    நகரின் முக்கிய பகுதியில் உள்ள கடையை உடைத்து கொள்ளை சம்பவம் நடந் திருப்பது அந்தப்பகுதி மக்க ளிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.6 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களை கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.
    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் பி.என்.ரோடு காட்டன்மில் ரோட்டை அடுத்த ஜீவா நகரில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. கடந்த 25-ந்தேதி இரவு கோவில் பூசாரி வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கோவில் உண்டியலில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அங்கு சில்லரை காசுகள் சிதறி கிடந்தன. இந்த நிலையில் ராதாநகர் பகுதியில் உள்ள மறைவிடத்தில் 2 சிறுவர்கள் பணத்தை எண்ணி கொண்டிருந்தனர். இதை பார்த்து சந்தேகமடைந்த அப் பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து 2 பேரையும் பிடித்து அனுப்பர்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருப்பூர் தொட்டி மண்ணரையை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், மற்றொருவன் ஊத்துக்குளியை அடுத்த மொரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. மேலும் இருவரும் சேர்ந்து கோவிலில் உண்டியலை உடைத்து ரூ.6 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கமுதி, மண்டலமாணிக்கம், வீரசோழன், கீழராமநதி பகுதிகளில் வழிப்பறி தொல்லைகளால் பெண்கள் உள்பட பொது மக்கள் அச்சத்தில் நடமாட முடியாத நிலை உருவாகியுள்ளது. #Robberycase

    கமுதி:

    கமுதியில் இருந்து கீழராமநதி வழியாக ராமசாமி பட்டி கிராமத்திற்கும், மண்டலமாணிக்கம் வழியாக திருச்சுழிக்கும் எழுவனூர் வழியாக வீரசோழனுக்கும் செல்லும் ரோட்டில் மாலை 4 மணிக்கு மேல் இரு சக்கர வாகனங்களிலும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமலும், மாணவ-மாணவிகள், செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    திடீர், திடீரென மோட்டார் சைக்கிளில் 2 அல்லது 3 நபர்கள் வந்து வழி மறித்து நகை, பணத்தை பறித்துக் கொண்டு தப்பி விடுகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் ரோடுகளில் நடப்பதற்கு அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள் வயலுக்கு சென்று விவ சாயப்பணிகள செய்ய முடியவில்லை.

    கமுதி, மண்டலமாணிக்கம், வீரசோழன் பகுதிகளில் வழிப்பறி செய்யும் மர்ம நபர்கள், இந்தப்பகுதி 3 மாவட்டங்களின் எல்லையாக இருப்பதால் இரு சக்கர வாகனத்தில் எளிதாக தப்பிச்சென்று விடுகின்றனர்.

    பொதுமக்கள் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றால் கூட வழிப்பறி செய்பவர்கள் பறித்துச் சென்று விடுகின்றனர்.

    எனவே வழிப்பறி செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க காவல் துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.#Robberycase

    ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம் வாடிப்பட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். அவரது மனைவி ஜெயா. இவர் ஏ.டி.எம். மையத்தில் ரூ. 6 ஆயிரம் எடுத்துள்ளார். அதனை தனது பையில் வைத்துக் கொண்டு மீண்டும் ஊருக்கு செல்ல ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்கு காத்து நின்றார்.

    அப்போது பஸ் வந்ததும் ஏறினார். அந்த சமயம் பின் தொடர்ந்து வந்த மற்றொரு பெண், ஜெயா வைத்திருந்த பையை திருடி சென்று விட்டார் அதில் ஏடிஎம் மையத்தில் இருந்து எடுக்கப்பட்ட ரூ. 6 ஆயிரம் மற்றும் செல்போன் இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த ஜெயா இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் ஆராய்ந்து வருகின்றனர்.

    மதுரையில் ஷேர் ஆட்டோவில் சென்ற பள்ளி ஆசிரியையிடம் 55 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

    மதுரை:

    தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பாஸ்டர் விசுவாசராஜா. இவரது மனைவி ராணி (வயது 45). இவர் தேனியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவரது மகள் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மகளை பார்ப்பதற்காக ராணி விடுமுறை நாட்களில் மதுரைக்கு வந்து செல்வார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்து 55 பவுன் நகையை ஒரு பேக்கில் எடுத்துக் கொண்டு ராணி மதுரைக்கு வந்தார். மகளை பார்ப்பதற்காக சிம்மக்கல்லில் இருந்து ஷேர் ஆட்டோவில் அண்ணா நகருக்கு சென்றார்.

    ஷேர் ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததை பயன்படுத்திக்கொண்ட 2 பெண்கள், ராணி வைத்திருந்த பேக்கை நைசாக திருடிக் கொண்டு தப்பினான்.

    சிறிது நேரம் கழித்து நகை இருந்த பை திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராணி அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை புதுவிளாங்குடி, அண்ணாதெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சித்திரைச்செல்வி (47). இவர் நேற்று முனிச்சாலையில் இருந்து கீழவாசலுக்கு ஷேர் ஆட்டோவில் வந்தார்.

    அப்போது ஷேர் ஆட்டோவில் அருகில் அமர்ந்திருந்த மர்ம நபர் சித்திரைச்செல்வியின் பர்சை திருடிக் கொண்டு நைசாக தப்பினார். அதில் ரூ.1,500 ரொக்கம், ஏ.டி.எம். கார்டு, வீட்டு சாவி இருந்தது.

    இது குறித்து விளக்குத் தூண் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை முத்துப்பட்டி, பாரதியார் நகர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ஈஸ்வர்லால் (வயது 67). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த வைர மூக்குத்தி, 150 கிராம் வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர்.

    கடந்த 22-ந் தேதி வீடு திரும்பிய ஈஸ்வர்லால் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×