என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பி.வி.சிந்து"
- லக்ஷயா சென் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் தாய்லாந்தின் பூசனன் ஒங்பாம்ருங்பானை சந்திக்கிறார்.
- புதிய பயிற்சியாளர்கள் வழிகாட்டுதலில் அவர் நல்ல நிலைக்கு வரும் ஆவலுடன் இந்த போட்டியில் களம் இறங்குகிறார்.
குமாமோட்டோ:
குமாமோட்டோ மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜப்பானில் இன்று தொடங்கி 17-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை தவறவிட்ட இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
சமீபகாலமாக தனது சிறந்த நிலைக்கு திரும்பும் முயற்சியில் தொடர்ச்சியாக சறுக்கலை சந்தித்த சிந்து அண்மையில் தனது பயிற்சியாளர் குழுவை மாற்றினார். புதிய பயிற்சியாளர்கள் வழிகாட்டுதலில் அவர் நல்ல நிலைக்கு வரும் ஆவலுடன் இந்த போட்டியில் களம் இறங்குகிறார்.
அவர் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் தாய்லாந்தின் பூசனன் ஒங்பாம்ருங்பானை சந்திக்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென், மலேசியாவின் லியோங் ஜன் ஹாவுடன் சவாலை தொடங்குகிறார். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் இணை, சீன தைபேயின் ஹூ யின் ஹூய்-லின் ஜிக் யுன் ஜோடியுடன் மோதுகிறது.
ஒலிம்பிக் சாம்பியன் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்), உலக சாம்பியன் குன்லாவுத் விதித்சரண் (தாய்லாந்து), கோடாய் நராவ்கா (ஜப்பான்), பெண்களில் ஆசிய சாம்பியன் வாங் ஷி யி (சீனா), அகானே யமாகுச்சி (ஜப்பான்) போன்ற முன்னணி நட்சத்திரங்களும் இந்த போட்டியில் களம் காணுகிறார்கள்.
- ஒலிம்பிக் போட்டியை நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா நேரில் கண்டுகளித்தனர்.
- பாரீஸ் 2024 ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் ராம் சரண், சிரஞ்சீவி கலந்து கொண்டனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் லீக் சுற்றுப் போட்டியில் மாலத்தீவை சேர்ந்த பாத்திமா நபாஹாவை வீழ்த்தினார்.
இப்போட்டியில் 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பாத்திமா நபாஹாவை வீழ்த்தி பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார்.
இப்போட்டியை நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா நேரில் கண்டுகளித்தனர். போட்டி முடிந்ததும் பி.வி.சிந்து உடன் ராம் சரண், உபாசனா புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த படத்தை ராம் சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு முன்னதாக பாரீஸ் 2024 ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் ராம் சரண், அவரது மனைவி உபாசனா மற்றும் சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
- பி.வி.சிந்து ஏற்கனவே 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து இன்று நண்பகல் 12.50 மணிக்கு நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் லீக் சுற்று போட்டியில் மாலத்தீவை சேர்ந்த பாத்திமா நபாஹா உடன் மோதினார்.
இப்போட்டியில் 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பாத்திமா நபாஹாவை வீழ்த்தி பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார்.
ஜூலை 31 ஆம் தேதி பி.வி.சிந்து தனது இரண்டாவது ஆட்டத்தில் எஸ்தோனியாவின் கிறிஸ்டின் குபாவை எதிர்கொள்கிறார்.
பி.வி.சிந்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கமும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பக்கமும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் கொடியை ஏந்திச் சென்றனர்.
- பிரான்ஸ் தடகள வீராங்கனை மேரி ஜோஸ் பியர்ஸ் மற்றும் ஜூடோ வீரர் டெடி ரைனர் ஆகியோர் கைகளுக்கு வந்தது
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் நேற்று ஜூலை 26 ஆம் தேதி பிரம்மாண்டமாகத் தொடங்கியது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. முதலாவதாக சீன் நதியில் படகுகளில் விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பு நடந்தது.
இந்த அணிவகுப்பில் மொத்தம் 205 நாடுகளைச் சேர்ந்த 6,800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இன்றைய ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு அச்சாரமாக 1896 ஆம் ஆண்டு முதல் மாடர்ன் கேம்ஸ் தொடங்கப்பட்ட கிரீஸ் நாட்டை கவுரவிக்கும் விதமாக அந்நாட்டு வீரர்கள் அணிவகுப்பில் முதன்மை வகித்தனர்.
இரவு சுமார் 12.30 அளவில் இந்திய வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் கொடியை ஏந்திச் சென்றனர். அணிவகுப்பில் இவர்கள் இருவரும் ஒலிம்பிக்கில் தேசியக் கொடியை ஏந்திச் செல்வது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் இல்லாத வகையில் இந்த முறை பிரதான மைதானத்துக்கு வெளியில் தொடக்க விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளது. வாணவேடிக்கைகள் விழாவிற்கு மேலும் ஒளியைக் கூடியது.
நதியில் அமைக்கப்பட்ட சிறப்பு மேடைகளிலிருந்து 3 லட்சம் பேர் இந்த அணிவகுப்பைக் கண்டுகளித்தனர்.மேலும் அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் வீடுகளின் பால்கனிகளில் இருந்து 2 லட்சம் பேர் விழாவை கண்டுகளித்தனர். விழாவின் போது கடும் மழை பெய்த நிலையிலும் விழா தொடர்ந்து நடைபெற்றது. லேடி காகாவின் இசை நிகழ்ச்சியையும் பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.
இதனைத்தொடர்ந்து தொடர்க்கவிழாவின் முக்கிய நிகழ்வான ஒலிம்பிக் ஜோதியை ஏற்றும் சடங்கு தொடங்கியது. பிரஞ்சு கால்பந்து ஜாம்பவான் ஜினாதினே ஜின்டேன் முதலில் ஜோதியை ஏந்திய நிலையில் ஜோதியானது ரபேல் நடால், செரினா வில்லாமஸ், நாடியா கோமானேசி என பலர் கைகளுக்கு மாறி இறுதியாகப் பிரான்ஸ் தடகள வீராங்கனை மேரி ஜோஸ் பியர்ஸ் மற்றும் ஜூடோ வீரர் டெடி ரைனர் ஆகியோர் கைகளுக்கு வந்தது. அவர்கள் இருவரும் கூட்டாக இணைந்து பாரிஸ் ஐபில் கோபுரம் அருகே ராட்சத பலூனில் அமைக்கப்பட்ட கால்ட்ரனில் [cauldron] ஜோதியை ஏற்றினர்.
- இந்திய அணித்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ககன் நரங் 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்.
- ஒலிம்பிக் தொடரில் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ம்தேதி முதல் ஆகஸ்டு 11-ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.
கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலம் அடங்கிய ஏழு பதக்கங்களை இந்தியா வென்ற நிலையில், இம்முறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா பெண்கள் சார்பில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்திச்செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தேசிய கொடியை ஏந்திச்செல்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒலிம்பிக் தொடரில் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணித்தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ககன் நரங் 5 முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவர். ஒலிம்பிக் அணித்தலைவராக மேரி கோம் பெயர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ககன் நரங் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
- இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 14-வது இடம் பிடித்துள்ளார்.
புதுடெல்லி:
உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவருடைய சிறந்த தரநிலையாகும். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் அவர் தரவரிசையில் முன்னேறியுள்ளார்.
மற்ற இந்திய வீரர்கள் லக்ஷயா சென் 12-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 20-வது இடத்திலும் உள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 14-வது இடம் பிடித்துள்ளார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 2 இடம் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
- இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் முன்னேறி 11-வது இடத்தை தனதாக்கினார்.
உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. உலக பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 2 இடம் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
இது அவருடைய சிறந்த தரநிலையாகும். மற்ற இந்திய வீரர்கள் லக்ஷயா சென் 22-வது இடத்திலும், ஸ்ரீகாந்த் 23-வது இடத்திலும் உள்ளனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் முன்னேறி 11-வது இடத்தை தனதாக்கினார்.
- ஜப்பான் நாட்டு டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா முதல் இடம் பிடித்து உள்ளார்.
- 2வது இடத்தில், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் உள்ளார்.
உலக அளவில் அதிக சம்பளம் பெறும் வீராங்கனைகளின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற, இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்துவுக்கு இந்த பட்டியலில் 12வது இடம் கிடைத்து உள்ளது.
இந்த பட்டியலில், ஜப்பான் நாட்டு டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா முதல் இடம் பிடித்து உள்ளார்.
அவரது மொத்த வருவாய் ரூ.420 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. 2வது இடத்தில், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் உள்ளார். அவரது வருவாய் ரூ.339 கோடியாக உள்ளது.
இந்த பட்டியலில், பனிச்சறுக்கு விளையாட்டுகளில் ஒன்றான பிரீஸ்டைல் ஸ்கையர் பிரிவில் விளையாடி வரும் அமெரிக்கா நாட்டில் பிறந்தவரான எய்லீன் கூ என்ற வீராங்கனை 3வது இடம் பிடித்து உள்ளார்.
இந்நிலையில், 12வது இடம் பிடித்துள்ள பி.வி.சிந்து கடந்த 2022ம் ஆண்டில் அவருடைய மொத்த வருவாய் ரூ.58 கோடியாக இருந்து உள்ளது.
அவற்றில், களத்தில் விளையாடி கிடைத்த தொகை ரூ.82 லட்சம் என்றும் மற்றும் களத்தில் அல்லாமல் வெளியில் இருந்து கிடைத்த தொகையானது ரூ.57.5 கோடி என்றும் கூறப்படுகிறது.
- காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் இன்று இந்தியா 2 பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
- பி.வி.சிந்து மற்றும் லக்ஷயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
பர்மிங்காம்:
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது.
இன்று நடைபெற்ற பேட்மிண்டன் பெண்களுக்கான அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சிங்கப்பூர் வீராங்கனையை 21-19, 21-17 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப்போடிக்கு முன்னேறினார்.
இதேபோல், ஆண்களுக்கான அரையிறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென், சிங்கப்பூர் வீரரை 21-10, 18-21, 21-16 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதையடுத்து, பேட்மிண்டன் பிரிவில் இரு பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
- முதல் செட்டை இழந்த பிவி சிந்து இரண்டாவது செட்டை கைப்பற்றினார்.
- காலிறுதியில் சீன தைபே வீராங்கனையிடம் பிவி சிந்து தோல்வி அடைந்தார்.
கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதியில் சீன தைபே வீராங்கனை டாய் சூ யீங்கை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 13-21 என்ற கணக்கில் இழந்த பிவி சிந்து, இரண்டாவது செட்டை 21-12 என வென்றார். சுதாரித்துக் கொண்ட டாய் சூ யீங் 3வது சுற்றை 21-12 என கைப்பற்றினார்.
சுமார் 55 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் பிவி சிந்து 13-21, 21-12, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- காலிறுதிக்கு முந்தைய சுற்றில், சீன வீராங்கனையை எளிதாக வீழ்த்தினார் பி.வி.சிந்து
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பிரணாயிடம், சீன தைபே வீரர் தோல்வி அடைந்தார்.
கோலாலம்பூர்:
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய போட்டியில் சீன வீராங்கனை ஜாங் யீ மன்னை எதிர்கொண்டார்.
28 நிமிடங்களே நடந்த இந்த போட்டியில், தரவரிசையில் 32 வது இடத்தில் இருக்கும் சீனாவின் ஜாங் யி மன்னை 21-12, 21-10 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பிரணாய் 21-19 21-16 என்ற கணக்கில் சீன தைபேயின் வாங் சூ வெய்யை வீழ்த்தினார். காலிறுதியில் அவர் ஜப்பானின் காண்டா சுனேயாமாவை எதிர்கொள்கிறார்.
- மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் சீன வீராங்கனையிடம் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.
- இதன்மூலம் மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியிலிருந்து அவர் வெளியேறினார்.
கோலாலம்பூர்:
மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீன தைபே வீராங்கனை டாய் சூ யிங் ஆகியோர் மோதினர்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை 21-13 என்ற கணக்கில் பி.வி.சிந்து வென்றார். அடுத்து சுதாரித்துக் கொண்ட
சூ யிங் அடுத்த இரு செட்களை 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வென்றார். இந்த தோல்வியின் மூலம் மலேசிய ஓபன் போட்டியிலிருந்து பி.வி.சிந்து வெளியேறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்