search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • தல விருட்சமாக சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அதிசய மரம் உள்ளது.
    • உத்திர நட்சத்திரம் தொடங்கும்போது பூக்க ஆரம்பித்து, அந்த நட்சத்திரம் முடியும்போது பூக்கள் வாடி விழுகிறது.

    பங்குனி உத்திரத்தன்று குலதெய்வ கோவிலில் வழிபடுவது சிறப்புக்குரியது. பல்வேறு ஊர்களில் வசிப்பவர்களும் குலதெய்வ கோவிலில் ஒன்றுகூடி வழிபடுவதை கடமையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே தெற்கு கருங்குளம் பூ சாஸ்தா கோவிலும் குலதெய்வ வழிபாட்டுக்கு புகழ் பெற்றது. காவல்கிணற்றில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு கருங்குளம் பைபாஸ் சாலையோரம், இந்த பூ சாஸ்தா கோவில் அமைந்துள்ளது.

    பெயரில் பூவின் மென்மை இருந்தாலும், கோவிலின் வரலாறு, சிறு அச்சத்துடன் பயபக்தியை மேலிடச் செய்வதாகவே இருக்கிறது. பழங்காலத்தில் தெற்கு கருங்குளத்தில் செல்வாக்குமிக்க பக்தர் ஒருவர் வசித்தார். அவர், பூ சாஸ்தா கோவில் அருகில் இருந்த பாறாங்கல்லில் ஒரு செக்கை செய்து வீட்டிற்கு எடுத்து வர முயன்றார். ஆனால் எவ்வளவோ முயன்றும் அந்த கல் செக்கு நகராததால், அவர் குழப்பமடைந்தார்.

    அப்போது அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்த ஒருவர் மீது சாமி அருள் வந்தது. அப்போது அவர், 'பங்குனி உத்திரத்தில் நான் கேட்கும் படையலிட்டால் செக்கு நகரும்' என அந்த பக்தரிடம் கூறினார். அதனை ஏற்றுக் கொண்ட அவரும் கோவிலில் சத்தியம் செய்து கொடுக்க செக்கு நகர்ந்தது.

    நரபலி கேட்ட சாஸ்தா

    அதன்பிறகு பங்குனி உத்திரம் அன்று கோவிலுக்கு சென்ற பக்தர், சாஸ்தாவிடம் 'என்ன படையல் வேண்டும்?' என்று கேட்க, அப்போது அருள் வந்து சாமியாடியவர் கூறியதைக் கேட்டு அவர் அதிர்ந்து போனார்.

    'எனக்கு படையலாக நரபலி தர வேண்டும்' என பூ சாஸ்தா கேட்க, சத்தியம் செய்து கொடுத்த பக்தர் செய்வதறியாது திகைத்தார். வேறு வழியின்றி தனது வீட்டில் வேலை செய்த ஒரு பெண்ணை, அவர் நரபலி கொடுத்தார்.

    இனி ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்தரத்தன்று அந்த பக்தர் நரபலி கொடுப்பார் என அஞ்சிய ஊர் மக்கள் அங்கிருந்து காலி செய்து விட்டு வேறு ஊர்களுக்கு குடிபெயர்ந்தனர். இதனால் பூ சாஸ்தா கோவில் நாளடைவில் பூஜையின்றி களையிழந்தது. இதற்கிடையே வேறு ஊர்களுக்கு சென்ற மக்களும் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டனர்.

    இதற்கு தீர்வு காண நினைத்த அந்த ஊர் மக்கள் அனைவரும், மீண்டும் பூ சாஸ்தா கோவிலில் கூடி நின்று கண்ணீர்மல்க வணங்கி வழிபட்டனர். அப்போது 'நரபலிக்கு பதிலாக ஒரு கோட்டை நெல் குத்தி கொழுக்கட்டையாக செய்து பங்குனி உத்திரத்தில் படையலிட்டால் உங்கள் கஷ்டம் தீரும்' என அருள்வாக்கு தந்தார் பூ சாஸ்தா.

    அன்று தொடங்கி இன்று வரை பங்குனி உத்திரத்தன்று பூ சாஸ்தா கோவிலில் மெகா கொழுக்கட்டை படையல் தொடர்கிறது. இதற்கான நெல்லையும் அந்த பக்தர் வீட்டில் இருந்தே பரம்பரை பரம்பரையாக கொடுக்கின்றனர்.

    பங்குனி உத்திரத்தன்று பூ சாஸ்தா கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். அன்றைய தினம் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    கோவிலில் உள்ள பூ சாஸ்தா, சங்கிலிபூதத்தார், ஆலிபப்பம்பரத்தி, வன்னியராஜா, பொற்கலை புஷ்கலா, முருகன் ஆகிய தெய்வங்களுக்கு பூஜைகள் நடக்கிறது. 15 நாட்கள் விரதம் இருந்த 50 ஆண்கள் ஒன்று சேர்ந்து, அந்த பக்தர் வீட்டில் இருந்து ஒரு கோட்டை நெல் வாங்கி வந்து, அதனை அன்றே குத்தி அந்த அரிசியை இடித்து மாவாக்குகின்றனர்.

    பின்னர் மாவில் நீர்விட்டு பிசைந்து உருட்டி தட்டுகின்றனர். தொடர்ந்து காட்டுச் செடிகளின் இலைதழை கொடிகளை ஒன்றாக கட்டி பரப்பி, அதன் மீது இலைகளை பரப்பி, அதில் உருட்டி தட்டிய மாவை அடுக்குகின்றனர். அந்த மாவின் மீது சிறுபயறு, தேங்காய் துருவல் கலந்து பூரணத்தை வைக்கின்றனர். இவ்வாறு மாவையும், பூரணத்தையும் மாறி மாறி அடுக்கிய பின்னர் அவற்றை இலைகளால் மூடி மெகா கொழுக்கட்டை தயாரிக்கின்றனர்.

    தொடர்ந்து பூஜை முடித்து வரும் சாமியாடி மெகா கொழுக்கட்டையை தூக்கிச் சென்று, அன்று வெட்டிய உடைமர விறகினால் ஏற்படுத்தப்பட்ட தணலில் போடுகிறார். சுமார் 7 மணி நேரம் தணலில் கொழுக்கட்டை வெந்தவுடன், அதனை பூ சாஸ்தாவுக்கு படைத்து வழிபட்ட பின்னர் பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்குகின்றனர்.

    அதிசய மரம்

    பூ சாஸ்தா கோவிலில் தல விருட்சமாக சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அதிசய மரம் உள்ளது. அந்த மரத்தின் பெயர்கூட யாருக்கும் தெரியவில்லை. அந்த அதிசய மரமானது ஆண்டில் பங்குனி உத்திரத்தன்று மட்டும் ஒரே ஒரு பூக்களை தோற்றுவிக்கிறது. அந்தப் பூக்களும் அன்றைய தினமே உதிர்ந்து விடுகிறது.

    சில ஆண்டுகளில் இருமுறை பங்குனி உத்திரம் வரும்போது, இரவில் உத்திர நட்சத்திரம் வரும்போது மட்டுமே அதிசய மரம் பூக்கின்றது. உத்திர நட்சத்திரம் தொடங்கும்போது பூக்க ஆரம்பித்து, அந்த நட்சத்திரம் முடியும்போது பூக்கள் வாடி விழுகிறது.

    -புலவனூரான்

    • பேளுக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் நுழையும் போராட்டம் அறிவித்திருந்தனர்.
    • பேளுக்குறிச்சி போலீசில் கோவிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி புகார் கொடுத்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பேளுக்குறிச்சியில் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில்களில் வழிபாடு நடத்துவது சம்பந்தமாக இரு பிரிவினர் இடையே சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டது.

    அதைத்தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அந்தக் கோவிலுக்கு வழிபாடு செய்ய வரவில்லை.

    இந்நிலையில் அப்பகுதியில் மீண்டும் பிரச்சினை ஆரம்பித்துள்ளது. நேற்று ஒரு பிரிவினர், பேளுக்குறிச்சி மாரியம்மன் கோவிலில் நுழையும் போராட்டம் அறிவித்திருந்தனர். இதை அறிந்த மற்றொரு பிரிவினர், பேளுக்குறிச்சி போலீசில் கோவிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி புகார் கொடுத்தனர்.

    அதைதொடர்ந்து நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையில், போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சமீபத்தில் அந்த இரு சமூகத்தினரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த கோவிலில் ஏற்கனவே என்ன நடைமுறையோ அதுவே பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். இதை ஒரு பிரிவினர் ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.

    மேலும் நாமக்கல் உதவி கலெக்டர் பிரபாகரன் நேற்று, சேந்தமங்கலம் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பினை கருதி, பேளுக்குறிச்சி மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவிலுக்குள் வருகிற 17-ந் தேதி வரை பொதுமக்கள் உள்பட யாரும் நுழையக்கூடாது என்றும், கோவிலில் பூஜைகள் செய்ய பூசாரிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், கோவில் பிரச்சினையால், பேளுக்குறிச்சி பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில், கோவில் உட்பட முக்கிய இடங்களில், 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சாத்தூர் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் பெண்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் பங்குனி பொங்கல் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

    மேலும் அம்பாள் தினமும் சப்பரங்களில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    திருநங்கைகள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காளியம்மன் கோவிலுக்கு முன்பாக அமைக்கப்பட்ட பூக்குழியில் தீ மிதித்தும், அலகு குத்தியும், அம்மன் வேடமிட்டும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இதில் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாத்தூர் டி.எஸ்.பி வினோஜி தலைமையில், இன்ஸ் பெக்டர் செல்லப்பாண்டின், சப் இன்ஸ்பெக்டர் பாண்டி யன் மற்றும் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 21 கூட்டு பரிவார தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகளும் கட்டப்பட்டுள்ள்ன.
    • 1 மணிக்கு சமபந்தி விருந்து நடந்தது.இரவு 7 மணிக்கு வாழ்த்துரங்கம்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால்விளையில் இந்து நாடார் சமுதாய வகைக்கு பாத்தியப்பட்ட அன்னை முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது. இந்தகோவிலில் 108அடி உயர ராஜகோபுரம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இது தவிர இந்த கோவிலில் ராஜகோபுர வெற்றி விநாயகர், ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ சாஸ்தா, ஸ்ரீசயனபெரு மாள், ஸ்ரீமுத்தீஸ்வரர்-முத்தாரம்மன் பலிபீடம், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீபத்ரகாளி அம்மன், வேதாளம், ஸ்ரீஉச்சினி மாகாளி அம்மன், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ செங்கிடா காரசாமி, ஸ்ரீ பொற் கபால காரிஅம்மன், ஸ்ரீகருங்கிடாகாரசாமி, ஸ்ரீ உச்சிப்புலிமாயவர், ஸ்ரீ பாலமுருகன், பகடை, எட்டு கூட்டு பிள்ளை, ஸ்ரீ பெரிய பலவேசம், ஸ்ரீ சின்னபலவேசம், ஸ்ரீ முத்தாயி, ஸ்ரீசிவ சுடலைமாடசாமி, ஸ்ரீமன்ன ராஜாசுவாமிமற்றும் 21 கூட்டு பரிவார தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகளும் கட்டப்பட்டுள்ள்ன.

    இந்த கோவிலில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக விழா கட ந்த31-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் அதிகாலையில் மங்கள இசையும் அதைத்தொடர்ந்து திருமுறைபாராயணமும் விசேஷ பூஜைகளும், யாக சாலை பூஜை, தீபாராதனை போன்றவை நடந்தது.மதியம் சமபந்தி விருந்து நடந்தது. பின்னர் பூர்ணாஹூதி, தபிரம்மச்சாரிய பூஜையும் யானையை வைத்து கஜ பூஜையும் குதிரையை வைத்து பூஜையும் நடந்தது.முதல் நாள்அன்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் யானை மீது திருக்குடம் ஏந்தி புனித நீர் எடுத்து வந்த நிகழ்ச்சி நடந்தது.4- வது நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு மங்கள இசையும் 5 மணிக்கு திருமுறை பாராயணமும் 5-௩௦ மணிக்கு 4-வது காலயாக சாலை பூஜை, வேதிகாஅர்ச்சனை, ஜெபம், அக்னிகாரியம், மூலமந்திரஹோமம், போன் றவைகளும்நடந்தது.7மணி க்குசாந்திகலச பூஜை, நாடி சந்தானம், ஸ்பரிசாஹூதி, வஸ்திராஹூதி, மகாபூரா ணாஹூதி, உபசாரகாலம், யாத்ராதானம், கடம்புறப்பா டு போன்றவைநடந்தது.9-30 மணி முதல்10-30மணிக்குள் அன்னைஸ்ரீமுத்தாரம்மன் கோவில்ராஜ கோபுரம்மற்றும் அதன்பரிவாரமூர்த்தி களுக்குஅஷ்டபந்தனஏக காலமகாகும்பாபிஷேகம் நடந்தது.இதில்கோவை மாநகரபோலீஸ்ஆணையர் பாலகிருஷ்ணன், ஒற்றை யால்விளை ஊர் தலைவர் பாலசுந்தரம், ஆகியோர் முன்னிலையில்திருக்கை லாய பரம்பரைசெங்கோல் ஆதினம்103-வதுகுருமகா சன்னிதானம்ஸ்ரீலஸ்ரீசிவப் பிரகாசதேசியஞானபரமாச் சாரியசுவாமிகள் மற்றும் வெள்ளிமலைசுவாமிசைத ன்யானந்தஜிமகராஜ்ஆகி யோர்அருளாசி வழங்கி னார்கள்.

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ரெமோன் மனோதங்கராஜ், தாமரை பாரதி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கொட்டாரம் பேரூர் கழகச் செயலாளர் வைகுண்ட பெருமாள், அக ஈஸ்வரன்ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர்ஜெஸீம், ஒன்றிய கழக அவைத்தலைவர் தம்பித் தங்கம், மாதவபுரம் ஸ்ரீமன் நாராயணசாமி கோவில் நிர்வாக குழு தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய பிரதிநிதி ஆர்.டி. ராஜா, பேரூர் கழக துணை செயலாளர் நாகராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் குமரி சுயம்புலிங்கம், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிவார்டு கவுன்சிலர்கள் நித்யா விக்னேஸ்வரி மாவட்ட தி.மு.க. பிரதிநிதி மணிராஜா, கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி சுற்றுலா வாகன நுழைவு கட்டண குத்தகைதாரர் மணிவண்ணன், ஸ்ரீ சக்தி கன்ஸ்ட்ரக்சன் அதிபர் மணிகண்டன், ஸ்ரீ ஐயப்பன் மலரகம் அதிபர்கள் ராஜா, ஜெயா உள்பட பலர் கலந்து கொண்டனர்

    பகல் 12மணிக்கு தீபாராதனை நடந்தது.1 மணிக்கு சமபந்தி விருந்து நடந்தது.இரவு 7 மணிக்கு வாழ்த்துரங்கம் நடக்கிறது விழாவுக்கான ஏற்பாடுகளை ஒற்றையால் விளை ஊர் தலைவர் பாலசுந்தரம், செயலாளர் அன்பழகன், பொருளாளர் டாக்டர்ராஜேந்திரன்,

    துணைத் தலைவர்கள் செல்வகுமார், செல்வசிவ லிங்கம், இணைச்செயலா ளர் பிரதீஸ்ராஜா, திருப்ப ணி குழு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • இந்த ஆலயம் புராணத்தோடு தொடர்புடையது என்று சொல்லப்படுகிறது.
    • இந்த ஆலயத்திற்கு என்று தனிப்பெரும் சிறப்பு ஒன்று இருக்கிறது.

    கிராமப்புறங்களில் இருக்கும் கோவில்களில் சிறப்பம்சங்கள் நிறைய இருக்கும். அதிலும் சின்னஞ்சிறு கோவில்களில் இருக்கும் சிறப்பம்சங்களை பார்க்கும் போது, அவற்றில் சில வியப்பை அளிக்கலாம். கிராம தெய்வங்கள், கிராம காவல் தெய்வங்கள் என்று மக்கள் பல்வேறு விதமாக சிறு தெய்வங்களை கொண்டாடி வருகிறார்கள். அப்படியொரு சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் ஒன்றுதான், கடலூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிலம்பிமங்கலத்தில் வீற்றிருக்கும் சிலம்பியம்மன் திருக்கோவில்.

    சிலம்பிமங்கலம் கிராமத்தில் அடர்ந்த முந்திரிக்காடு மத்தியில் பயணித்தால், ஒரு பெரிய மணல் மேடு வரும். இந்த மணல் திட்டு 10 அடி உயரம் உள்ளது. கால்கள் மணலுக்குள் புதைய நடந்து சென்றால், பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய ஆலமரம் ஒன்று இருக்கிறது. அதன் கீழ் தான், சிலம்பியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. முன்னதாக நம்மை வரவேற்கும் வகையில் ஆலயத்தின் முகப்பு வளைவு ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வளைவிலும் சிலம்பியம்மன் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

    கோவிலுக்குள் சென்றால் மகா மண்டபம், அதன் மேற்கூரையின் நடுவில் சிலம்பியம்மன் உள்பட 7 அம்மன்களை நாம் தரிசிக்கலாம். அதைக் கடந்து சென்றால், திரிசூலம், பலிபீடம், அம்மனின் வாகனமான சிம்மம் ஆகியவை உள்ளன. கருவறையில் சிலம்பியம்மன் நடுநாயகமாக வீற்றிருக்க, அவருக்கு வலதுபுறம் 3 அம்மன்களும், இடதுபுறம் 3 அம்மன்களும் அருள்பாலிக்கிறார்கள்.

    தல வரலாறு

    இந்த ஆலயம் புராணத்தோடு தொடர்புடையது என்று சொல்லப்படுகிறது. அதனால் இது மிகவும் தொன்மையான ஆலயம் என்பது புலனாகிறது. ஒரு முறை தில்லை எனப்படும் சிதம்பரத்தில் உள்ள நடராஜருக்கும், தில்லை காளிக்கும் நடனத்தில் போட்டி உண்டானது. அப்போது ஈசனுடன், ஆக்ரோஷமாக நடனம் ஆடினாள், 16 கரங்களைக் கொண்ட தில்லைக்காளி அம்மன். அவளின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல், அவளது காலில் இருந்து சிலம்பு ஒன்று கழன்று சீறிப்பாய்ந்து ஓரிடத்தில் போய் விழுந்தது. அந்த இடம்தான் சிலம்பிமங்கலம் என்று தல புராணம் சொல்கிறது. சிலம்பிமங்கலத்தில் விழுந்த அந்த சிலம்பு உடைந்து அதில் இருந்த 7 முத்துக்களும் சிதறி விழுந்தன. அவற்றில் இருந்து 7 அம்மன்கள் தோன்றினர்.

    நடுநாயகமாக கையில் சிலம்போடு சிலம்பியம்மனும், அவளுக்கு வலது புறத்தில் பிரம்ஹி, வைஷ்ணவி, ருத்ராணி ஆகியோரும், இடதுபுறத்தில் கவுமாரி, வாராகி, இந்திராணி ஆகியோரும் வீற்றிருக்கின்றனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த அம்பாள் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய 7 சக்திகளும், நாங்கள் மணல் திட்டின் மேல் வீற்றிருக்கிறோம் என்று தெரிவித்தனர். அவர் ஊர் மக்களிடம் இது பற்றி சொல்லி, ஊர்மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்த்தனர். அங்கு மணல் திட்டின் மேல் பகுதியில் அமர்ந்த கோலத்தில் 7 அம்மன் சிலைகள் காணப்பட்டன.

    மேலும் சிலம்பியம்மனுக்கு கோவில் அமைக்க அந்தப் பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதற்காக அம்மன் சிலைகள் கிடைத்த இடத்திலேயே, ஆலயத்தை நிறுவலாம் என்று நினைத்தனர். அதற்காக பள்ளம் தோண்டியபோது, விநாயகர், நந்தி, ஆஞ்சநேயர், அங்காளம்மன், எருமை வாகனத்தில் துர்க்கை, தட்சிணாமூர்த்தி, மணிமேகலை, பாவாடைராயன், நாககாளி, கருமாரியம்மன், வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் ஆகியோரது திருவுருவச் சிலைகளும் பூமிக்கு அடியில் இருந்து வெளிப்பட்டதை கண்டு மக்கள் அனைவரும் மெய்சிலிர்த்துப் போனார்கள். அதன்பின்னர் இங்கு அம்மனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டது.

    இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிலம்பியம்மனை குலதெய்வமாகவும், ஊரின் காவல் தெய்வமாகவும் இங்குள்ள மக்கள் பலரும் வணங்கி வருகின்றனர். இந்தப் பகுதியில் முந்திரிதான் பிரதான விவசாயமாக இருக்கிறது. இதனால் முந்திரி விளைச்சல் அமோகமாக இருக்க வேண்டி, இப்பகுதி மக்கள் அனைவரும் இத்தல அன்னையிடம் வேண்டிக்கொள்வது வழக்கம். அம்மனும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இன்றளவும் அமோகமான விளைச்சலை தந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், இப்பகுதி விவசாயிகள் முந்திரியால் ஆன மாலையை அம்மனுக்கு அணிவித்து தங்களின் நன்றிக்கடனை செலுத்துகிறார்கள்.

    இந்த ஆலயத்தை குடைபோல் இருந்து காத்து வரும் பழமையான ஆலமரம் இத்தலத்தின் சிறப்புக்குரியதாகும். திருமணம் தடைபடும் பெண்கள், 'ஓம் சக்தி.. பராசக்தி..' என்று உச்சரித்தபடியே இந்த ஆலமரத்தை 7 முறை சுற்றி வந்து வணங்கினால், மனதுக்குப் பிடித்த வரன் விரைவில் அமையும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

    இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிலம்பியம்மன், தில்லை காளியின் மறு வடிவமாகவே இந்தப் பகுதி மக்களால் பார்க்கப் படுகிறார். இந்த ஆலயத்திற்கு என்று தனிப்பெரும் சிறப்பு ஒன்று இருக்கிறது. அதாவது இந்த ஆலய சன்னிதிகளில் அருள்பாலிக்கும், தெய்வ சிலைகள் அனைத்தும், இந்த ஆலயம் இருக்கும் பூமியின் அடியில் இருந்தே கண்டெடுக்கப்பட்டவை. இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக எந்த தெய்வச் சிலைகளும், வெளியில் இருந்து கொண்டுவரப்படவில்லை என்பதே இந்த புண்ணிய பூமியின் சிறப்பை எடுத்துக்கூறுவதாக அமைந்திருக்கிறது.

    ஊர் கட்டுப்பாடு

    வைகாசி மாதம் 1-ந் தேதி முதல் பத்து நாள் உற்சவம் இக்கோவிலில் நடைபெறுகிறது. முதல் நாள் காப்பு கட்டும் நிகழ்வு தொடங்கி 10-ம் நாள் காப்பு களையும் வரை, இந்த ஊரில் வசிக்கும் யாரும் வெளியூர் செல்லக்கூடாது. வெளியூரில் வசிக்கும் இந்த ஊரைச் சேர்ந்தவர்களும், காப்பு கட்டும் நிகழ்வுக்கு முன்பாக ஊருக்குள் வந்துவிட வேண்டும் என்பது நடைமுறை வழக்கமாக இருக்கிறது. இதை யாரும் மீறுவதில்லை என்கிறார்கள். இந்த பத்து நாள் உற்சவத்தின் போதும், சிலம்பியம்மன் மட்டுமே உற்சவராக ஊருக்குள் வீதி உலா வருவார். இந்த பத்து நாள் உற்சவத்தின் போதும் பக்தர்கள் தாங்கள் வேண்டிக்கொண்ட பிரார்த்தனை நிறைவேறியதற்காக இங்கு பலவிதமான நேர்த்திக் கடனை செய்கிறார்கள்.

    இது தவிர ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையில் விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குடும்ப நலனுக்காக பிரார்த்தனை செய்கின்றனர்.

    அமைவிடம்

    கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் இருக்கிறது, சிலம்பிமங்கலம். அங்கிருந்து கோவில் இருக்கும் மணல் திட்டுக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்துதான் செல்ல வேண்டும்.

    -பொ.பாலாஜிகணேஷ்,

    சிதம்பரம்.

    • வெள்ளிக்கிழமை தோறும் கண்ணபுரத்தாயார் புறப்பாடும் நடக்கும்.
    • புரட்டாசி மாத சனிக்கிழமையன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருக்கண்ணபுரம் பகுதியில் அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தா்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து அங்கிருந்து நாகூரை அடைந்து நாகூரில் இருந்து திட்டச்சேரி, திருமருகல் வழியாக 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள திருக்கண்ணபுரம் செல்லலாம்.

    தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் ரெயிலில் ஏறி நாகப்பட்டினத்துக்கு சென்று அங்கிருந்து மேற்கூறிய வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் பிரசித்தி பெற்ற சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்யதேசங்களில், 17-வது திவ்ய தேசமாக திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உள்ள சவுரிராஜ பெருமாளை நம்மாழ்வார் 11 பாசுரங்களாலும், திருமங்கை ஆழ்வார் 100 பாசுரங்களாலும், குலசேகர ஆழ்வார் 10 பாசுரங்களாலும், ஆண்டாள் 1 பாசுரத்தாலும், பெரியாழ்வார் 1 பாசுரத்தாலும் பாடி உள்ளனர்.

    கடுமையான பஞ்சம்

    முனையதரையர் என்பவர் சோழ மன்னனின் அபிமானம் பெற்று மன்னனுக்கு கப்பம் வாங்கி கொடுக்கும் பணியில் இருந்தார். அவர் சவுரிராஜ பெருமாளிடம் ஆழ்ந்த பக்தி உடையவர். திருக்கண்ணபுரத்தில் வாழ்ந்து பெருமாளுக்கு சேவைகள் செய்து வந்தார். அவர் மீது ஒரு பெண், பேரன்பு கொண்டு வாழ்ந்து வந்தாள்.

    ஒரு வருடம் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. இதனால் முனையதரையர், தாம் சேகரித்த கப்பம் முழுவதையும் கோவிலில் திருவாராதனத்துக்கும், அடியாருக்கு அன்னம் வழங்குவதிலும் செலவிட்டார்.

    பெண்ணை காப்பாற்றினாா்

    இதனால் சினம் கொண்ட சோழ மன்னன், முனையதரையரை சிறையில் அடைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த முனையதரையர் மீது பேரன்பு கொண்ட பெண், சவுரிராஜபெருமாளை மனமுருகி வேண்டினாள். அப்போது அவள், 5 நாட்களுக்குள் சிறையில் இருந்து முனையதரையர் விடுவிக்கப்படாவிட்டால் நெருப்பில் பாய்ந்து உயிர் துறப்பதாக சபதம் செய்தாள்.

    இதனால் மன்னர் கனவில் தோன்றிய சவுரிராஜபெருமாள், முனையதரையரை சிறையில் இருந்து விடுதலை செய்ய உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட முனையதரையர், திருக்கண்ணபுரத்துக்கு சென்று தீயில் பாய்ந்து உயிர்விட தயாராக இருந்த பெண்ணை காப்பாற்றினார்.

    கருமையான முடி

    சவுரிராஜன் தலையில் சவுரி அணிந்திருப்பார். ஒருநாள் பெருமாளை தரிசனம் செய்ய வந்த சோழ மன்னனுக்கு பிரசாதமாக கொடுக்க பூமாலை இல்லாமல் தவித்த அர்ச்சகர், தான் சற்று முன்பு தேவதாசிக்கு அனுப்பியிருந்த புஷ்பத்தை கொண்டு வரச்செய்து அதை மன்னனுக்கு அளித்தார். அந்த புஷ்பத்தில் கருப்பான முடி இருந்ததை கண்ட மன்னன், அர்ச்சகரை கடிந்தான்.

    அப்போது அர்ச்சகர், பெருமாளுக்கு எப்போதும் தலையில் கருமையான முடி இருக்கும் என கூறினாா். இதனால் கோபம் கொண்ட மன்னன், மறுநாள் காலை வரும்போது பெருமாளுக்கு முடி இருப்பதை காட்ட வேண்டும் என கூறி சென்றார். இதனால் அர்ச்சகரை சோழ மன்னனின் தண்டனையில் இருந்து விடுவிக்க பெருமாள், கருமையான முடியுடன் காட்சியளித்தார்.

    ஆஞ்சநேயர் சன்னதி

    திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலுக்கு எதிரில் உள்ள நித்யபுஷ்கரணியின் பிரதான படிக்கட்டின் மேல்புறம் தீர்த்தக்கரையில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. ஆஞ்சநேயருக்கு தனிக்கோவில் அமைந்திருப்பதால் இவரின் சக்தி அளவிட முடியாது.

    தெற்கு நோக்கி அஞ்சலி ஹஸ்தராக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் இவரை வரப்பிரசாதி என்று பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.

    பிரம்மோற்சவ விழா

    திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படும். மகோற்சவ விழா மாசி மாதம் பவுர்ணமி திதி 9-ம் நாள் சமுத்திரத்தில் தீர்த்த வாரியுடன் நடைபெறுகிறது. தமிழ் மாதப்பிறப்பு, ஏகாதசி, அமாவாசை வழிபாடும் சிறப்பாக நடக்கும். வெள்ளிக்கிழமை தோறும் கண்ணபுரத்தாயார் புறப்பாடும் நடக்கும்.

    108 வைணவ திவ்ய தேசங்களில் ஓன்றாக கருதப்படும் திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலுக்கு எப்போதும் பக்தர்கள் வருகை இருக்கும். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    சனிபகவான்

    பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதம் மிகவும் விசேஷமான மாதமாகும். சனிக்கிழமைகளில் பக்தர்கள் பொதுவாக பெருமாளுக்கு விரதம் இருப்பது வழக்கம். புரட்டாசி மாத சனிக்கிழமையில் ஒரு விசேஷம் உள்ளது. இந்த நாளில் தான் சனிபகவான் அவதரித்தார். எனவே சனிபகவானின் கெடுபலன்கள் குறைய பெருமாளை பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    திருக்கண்ணப்புரத்து சவுரிராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். அன்று முழுவதும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறும். குறிப்பாக திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் விரைவில் திருமணத்தடை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    இந்த கோவிலில் தினமும் காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பகல் 12 மணிக்கு நடை மூடப்படும். மீண்டும் மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை மூடப்படும்.

    திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் மேல் பெருமாளின் பார்வை படுவதால் இந்த கோவிலில் வழிபடுவோரின் சகல கிரக தோஷங்களும் நீ்ங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    கோவிலுக்கு செல்வது எப்படி

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருக்கண்ணபுரம் பகுதியில் அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தா்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து அங்கிருந்து நாகூரை அடைந்து நாகூரில் இருந்து திட்டச்சேரி, திருமருகல் வழியாக 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள திருக்கண்ணபுரம் செல்லலாம்.

    தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் ரெயிலில் ஏறி நாகப்பட்டினத்துக்கு சென்று அங்கிருந்து மேற்கூறிய வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    • காலை 6 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடந்தது.
    • 1 மணிக்கு பக்தர்ளுக்கு அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறைக்கு உட்பட்ட குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டு பழமையானது ஆகும். தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டிஉள்ளார். இங்கு குகன் என்ற முருக கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வரக் காரணமாயிற்று.

    இந்த கோவிலில் உள்ள மூலஸ்தான கருவறையில் குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான 5½ அடி உயர சிவலிங்க சிலை அமைந்துள்ளது. அப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் கோடை வெப்பம் நீங்கி மழை பெய்ய வேண்டி நேற்று ஸ்ரீ குகநாதீஸ்வரர் பெருமானுக்கு 1008 இளநீர் அபிஷேகம் நடந்தது. இதை யொட்டி இன்று அதிகாலை 6 மணிக்கு கோவில் திருநடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும் விஸ்வரூப தரிசனமும் நடந்தது.

    அதைத் தொடர்ந்து 7 மணிக்கு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. பின்னர் காலை 9.30 மணிக்கு குகநாதீஸ்வரருக்கு எண்ணெய், மஞ்சள் பொடி, களபபொடி, பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, நெய், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து 10 மணிக்கு மூலஸ்தான கருவறையில் அமைந்து உள்ளஸ்ரீ குகநாதீஸ்வரர் பெருமானுக்கு 1008 இளநீர் அபிஷேகம் நடந்தது. பின்னர் பகல் 12.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், 1 மணிக்கு பக்தர்ளுக்கு அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கன்னி யாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள்பேரவையினர் செய்துஇருந்தனர்.

    • திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும்.
    • இக்கோவிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னதிகள் உள்ளன.

    பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கான திருத்தலமான திருவாரூர் தியாகராஜர் கோவில் உள்ளது.மேலும் சைவ சமயத்தின் தலைமை இடமாகவும் இந்த கோவில் உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய தேர் திருவாரூர் கோவில் ஆழித்தேர் ஆகும். இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூஜிப்பதாக ஐதீகம்.

    நீதி வழங்கிய இடம்

    கன்றை இழந்த பசுவுக்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம். திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும்.

    இக்கோவிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னதிகள் உள்ளன. சமயக்குறவர்களாலும் இதர நாயன்மார்களாலும் பாடற்பெற்ற தலம் திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆகும்.

    பொதுவாக சிவாலயங்களில் நந்தி முன், பின் கால்களை மடக்கி படுத்த கோலத்தில் இருக்கும். ஆனால் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நந்திதேவர் செப்பு திருமேனியாக தியாகராஜர் எதிரில் நின்று கொண்டிருக்கிறார்.

    கமலாம்பிகை சன்னதி

    இதற்கு காரணம் சுந்தரருக்காக தூது சென்ற பெருமான் அவசரத்தில் நந்தி மேல் அமர்ந்து செல்லாமல் திருவீதிகளில் நடந்து சென்றார். இனி பெருமானை நடக்க விடக்கூடாது அவர் புறப்படும் போது சுமந்து செல்ல தானும் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதால் எழுந்து நின்ற நிலையில் நந்தி தேவர் காட்சி அளிக்கிறார். திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சென்ற உடன் முதலில் இடது பக்கம் உள்ள வீதி விடங்க விநாயகரை வணங்க வேண்டும். பிரம்ம நந்தி வீதி விடங்க விநாயகருக்கு பின்பு உள்ளார்.

    ஆழித்தேரோட்டம்

    இவர் கண் கண்ட தெய்வம். திருவாரூர் தியாகராஜர் கோவில் அசலேஸ்வரர் சன்னதியில் நீர் நிரப்பி வழிபட்டால் மழை பெய்யும் என்பது ஐதீகம். தியாகராஜா் கோவில் வடக்கே கமலாம்பிகை சன்னதி உள்ளது. இதைப்போல சண்முகர், சரஸ்வதி, பிரம்மலிங்கம், வசிட்டலிங்கம், அத்திரிலிங்கம், பரத்வாஜலிங்கம், ரவுத்திர துர்க்கை சன்னதிகள் உள்ளன.

    விமானத்தின் கீழ் மூலஸ்தானம் இருக்க வேண்டும். ஆனால் தியாகேசர் உற்சவரானதால் சற்று தள்ளி உள்மண்டபத்தில் உள்ளார். தீராத நோய், கடன்தொல்லை போன்றவற்றில் இருந்து பக்தர்களை விடுவிக்கும் திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழா இன்று(சனிக்கிழமை) நடக்கிறது.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • இந்த கோவிலில் 30-வதுஆண்டுஸ்ரீராமநவமி விழா 2 நாள் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் ஸ்ரீ ராமர் கோவில் அமைந்து உள்ளது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையஆட்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் 30-வதுஆண்டுஸ்ரீராமநவமி விழா 2 நாள் நடந்தது.

    முதல் நாள் மங்கள இசையும் அதைத்தொடர்ந்து கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் காலை 7 மணிக்கு அபிஷேக மும், 7.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. அதன் பின்னர் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அகண்ட ராம நாம ஜெபமும், மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு பல்சுவை பட்டிமன்றமும், 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்குதலும் நடந்தது.

    2-வதுநாள் மங்கள இசையும் அதைத் தொடர்ந்து கலச பூஜையும், நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு சிறப்பு பஜனையும், கலை 9.30 மணிக்கு அபிஷே கமும், 11.15மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. அதன் பின்னர் 5.15 மணிக்கு ஸ்ரீராமஜெயம் எழுத்து போட்டியும் நடந்தது. 11.30 மணிக்கு மகா அன்னதான மும் நடந்தது. மாலையில் சமயசொற்பொழிவும், தீபா ராதனையும் நடந்தது.அதன் பிறகு ஸ்ரீ ராமநாம சங்கீர்த்த னமும் சாயராட்சை தீபாராதனையும், இரவு ராமபெருமானுக்கு பிச்சி, முல்லை, மல்லிகை, மரிக்கொழுந்து, ரோஜா, துளசி, பச்சை, கொழுந்து, அரளி, தெற்றிபூ போன்ற பல வகையான மலர்களால் புஷ்பாபிஷேகம் நடந்தது.

    அதன் பின்னர் ஸ்ரீராம ருக்கு ஊஞ்சலில்தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து தீபாராதனை மற்றும் பக்தர் களுக்கு அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவுக்கான ஏற்பாடு களை கொட்டாரம் ஸ்ரீராமர் கோவில் பக்தர்கள் சங்கத்தினர் செய்து இருந்தனர்.

    • கோவில் நிர்வாகம் ஏற்பாடு
    • கோவிலுக்கு தினமும்ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும்வெளிநாட்டு சுற்றுலாபயணிகளும், பக்தர்களும்வந்துஅம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும்ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும்வெளிநாட்டு சுற்றுலாபயணிகளும், பக்தர்களும்வந்துஅம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். பக்தர்களின் தரிசனத்துக்காக இந்த கோவில் நடைதினமும் அதிகாலை4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுகிறது.

    அதேபோலமாலை4மணிக்குநடைதிறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்குஅடைக்கப்படுகிறது.தற்போது கோடைகாலம்என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குசாமி கும்பிட வரும் பக்தர்கள் வெயில் வெப்பத்தினால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    இதனைகருத்தில் கொண்டுகன்னியாகுமரி பகவதிஅம்மன்கோவிலுக்கு சாமிகும்பிட வரும் பக்தர்கள் வெயிலின் தாக்கத்தினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காககோடைகாலம்முடியும்வரை தினமும்பக்தர்களுக்குமோர்தானம்வழங்க தமிழகஅரசின்இந்து சமயஅறநிலைய ஆட்சித்துறை உத்தரவிட்டுஉ ள்ளது.

    இதைத்தொடர்ந்துகுமரி மாவட்ட திருக்கோவில்களின்இணைஆணையர்ஞான சேகர்அறிவுரையின்பேரில் கன்னியாகுமரிபகவதி அம்மன் கோவில்மேலாளர் ஆனந்த்ஏற்பாட்டின்பேரில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குபகல் நேரங்களில்சாமிகும்பிட வரும்பக்தர்களுக்குமோர் தானம்வழங்கப்பட்டுவருகிறது.

    இதைத்தொடர்ந்து தினமும்இந்த கோவிலுக்கு சாமிகும்பிடவரும்ஏராளமா ன பக்தர்கள் மோர்வாங்கி அருந்திவிட்டு செல்கி றார்கள்.

    இத ற்காகதினமும்10 லிட்டர்மோர்பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஏப்ரல், மே ஆகிய2மாதகாலங்களும் இந்த மோர்தான ம் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

    • இந்த கோவில் பழமையான தலவரலாற்றை கொண்டுள்ளது.
    • 65அடி உயரத்தில் பவுர்ணமி தேவியின் பஞ்சலோக சிலை உள்ளது.

    தலவரலாறு

    திருவனந்தபுரம் வெங்கானூரில், சாவடிநடை பவுர்ணமிக்காவு தேவி கோவில் உள்ளது. இந்த கோவில் பழமையான தலவரலாற்றை கொண்டுள்ளது. முன்காலத்தில், கேரளாவில் திருவிதாங்கூர் பிரதேசத்தை விழிஞ்ஞத்தை மையமாக கொண்டு ஆய்ராஜவம்சத்தினர் ஆண்டு வந்தனர். இவர்களின் போர் தேவதையாக பவுர்ணமிக்காவு தேவி இருந்து வந்தார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஆய் ராஜவம்சத்தின் வெற்றிக்கு பவுர்ணமிக்காவு தேவிதான் காரணம் என்பதை உணர்ந்த சோழ மன்னர்கள், தேவியின் சிலை மற்றும் ஆபரணங்களை அபகரிக்க திட்டமிட்டனர்.

    இதை அறிந்த ஆய்மன்னர்கள் விழிஞ்ஞம் கோவிலில் இருந்து, தேவியின் சிலையை எடுத்து அருகில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியில் உள்ள ஒரு மரச்சுவட்டில் நிறுவினர். சிலையை வனப்பகுதிக்கு மாற்றியதால், ஆய் மன்னர்கள் வியாபாரம், போர் ஆகியவற்றிற்கு செல்வதற்கு முன்பாக, யாகங்கள், பூஜைகள் செய்ய இந்த புதிய இடத்திற்கு வந்து சென்றனர்.

    பிற்காலத்தில் வந்த ஆய்ராஜவம்ச மன்னர்கள் பவுர்ணமி காவு தேவியை வழிபடவும், முக்கியத்துவம் அளிக்கவும் தவறிவிட்டனர். இவர்களின் செயல் அம்மனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

    அம்மனின் கோபம்

    அம்மனின் கோபத்தால் ஆய் ராஜவம்சத்தில் ஓயாத துன்பங்கள், எதிர்பாராத விபத்துகள், தீராத வறுமை ஏற்பட்டது. ஆய் ராஜவம்சம் நாளடைவில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில் இந்த பகுதியில் புதிய ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய ராஜ வம்சத்தினர் அம்மனை ஆராதிக்க ஏராளமான பூசாரிகளை நியமித்தனர். அவர்களின் ஆராதனை சடங்குகளாலும் அம்மன் திருப்தி அடையவில்லை. நாளடைவில் ஆய் ராஜவம்சத்தினர் பவுர்ணமிகாவு ேதவியை வணங்கி வழிபட்ட இடங்கள் மற்றும் அதை சார்ந்த பகுதிகள் பல்வேறு குடும்பங்கள், தனிமனிதர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆனாலும் அம்மனின் கோபம் தணியாத காரணத்தால் அந்த பகுதிகளிலும், குடும்பங்களிலும் பலவித பிரச்சினைகள் ஏற்பட்டன.

    இந்த நிலையில் அம்மனின் மகத்துவத்தை அறிந்த வேத மகா பண்டிதர்கள், அம்மனை சாந்தமாக்கவும், அவர் திருப்தி அடையவும் வேண்டி பூஜைகள் வழிபாடுகளை நடத்த தொடங்கினர். இதன் பலனாக பவுர்ணமிக்காவு தேவி அவர்களுடன் இணக்கமானார். அதைத்தொடர்ந்து தேவ பிரசன்னம் மூலம் அம்மன் கொடுத்த உத்தரவின் பேரில், கோவில் புனரமைக்கப்பட்டு பிரதிஷ்டை நடைபெற்றது. பிரம்மஸ்ரீ பூஞ்சார் மித்ரன் நம்பூதிரிப்பாடு படை காளியம்மாவை மறு பிரதிஷ்டை செய்தார். கோவிலில் உள்ள பிரதான பிரதிஷ்டையான படை காளியம்மனை அனைவரும் வணங்கி செல்கின்றனர்.

    இங்கு 51 அக்சர தேவதைகளின் சிலைகள், மிகப்பெரிய பஞ்சமுக கணபதி சிலை, 55 அடி உயரத்தில் சிவனின் சிலை, ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய நாகராஜா சிலை, 65அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட பவுர்ணமி தேவியின் பஞ்சலோக சிலை போன்றவை அமைந்துள்ளன.

    கோவிலுக்கு செல்லும் வழிகள்

    இந்த கோவில் திருவனந்தபுரத்தில் இருந்து திருவல்லம், வாழ முட்டம் வழி வெங்கானூர் சாவடி நடை உச்ச கடை செல்லும் வழியில் உள்ளது. அதேபோல் திருவனந்தபுரம், பள்ளிச்சல் வழியாக விழிஞ்ஞம் செல்லும் வழியில் பெரிங்கமலை சாவடிநடை சாலையில் இந்த கோவில் உள்ளது. நெய்யாற்றின்கரை, பாலராமபுரம் வழியாக வரும்போது உச்சகடை - சாவடிநடை சாலையில் இந்த கோவில் உள்ளது. பிரபஞ்சயாகத்துக்கான ஏற்பாடுகளை பவுர்ணமிக்காவு மடாதிபதி சின்கா காயத்ரி தலைமையில், கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • இக்கோவில் சுமார் 800 ஆண்டுகள் பழமையானதாகும்.
    • மூன்று நிலை ராஜகோபுரம் இக்கோவில் அமைந்துள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் பன்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு செளந்தரவல்லி தாயார் உடனுறை பிச்சாலீஸ்வரர் திருக்கோவில். இக்கோவில் சுமார் 800 ஆண்டுகள் பழமையானதாகும். மூன்று நிலை ராஜகோபுரம் இக்கோவில் அமைந்துள்ளது.

    சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்த போது அதனைக் கண்ட பகுதி மக்கள் அந்த பகுதியைக் கடப்பாரையால் தோன்றியபோது, சிவலிங்கத்தின் மீது பட்டு ஏற்பட்ட வடு இன்னும் சுயம்பு லிங்கத்தில் காணப்படுகின்றது. இக்கோவிலில் மூலவராக பிச்சாலீஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார்.

    உற்சவராக சந்திரசேகரும், அம்பாளாக சௌந்தரவல்லி தாயாரும் மேற்கு நோக்கி காற்று தருகின்றனர்.இக்கோவிலைச் சுற்றி உள்ள உட்பிரகாரங்களின் தூண்களில் பல்வேறு கலைநயத்துடன் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

    கோவில் பிரகாரத்தைச் சுற்றி விநாயகர், வலம்புரி விநாயகர், நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, சண்டிகேசுவரர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமாள், துர்க்கை அம்மன், நந்திகேஸ்வரர், வெள்ளிக்கிழமை அம்மன் காட்சி தருகின்றனர்.

    இக்கோவிலில் பிரதோஷ நாட்கள், கிருத்திகை, பௌர்ணமி, ஆருத்ரா தரிசனம், கார்த்திகை தீபம், சிவராத்திரி உள்ளிட்ட நாட்கள் விசேஷ நாட்களாகப் பார்க்கப்படுகின்றது. குழந்தை வரம் வேண்டுபவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும் என்றும், வீடு, நிலம் வாங்குபவர்கள் இங்கு வந்து அம்பாளையும் சிவனையும் தரிசித்தால் உடனடியாக காரியம் நிறைவேறும் எனப் பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

    ×