என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மயக்கம்"
நெல்லை:
ரெட்டியார்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமசுப்பு (வயது59). இவர் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராமசுப்பு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் 60 வயது மதிக்கத்தக்க ஆண் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். உடனடியாக அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தனர். அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த வாலிபர் ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் இறந்த வாலிபரின் பெயர் சுந்தர் (வயது 43) என்பது தெரிய வந்தது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை வடக்கு மாசி வீதி மதுக்கடை முன்பு 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்நதவர் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் விளக்குத் தூண் போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அரசு ஆஸ்பத்திரி சித்தா பிரிவு பார்வையாளர் அறை முன்பு 70 வயது முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்நதவர் என்பது தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ள ஆதிங்கப்பட்டு சத்யா நகரை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 76). இவரது மனைவி ராதா (68).
இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மகன்களின் பராமரிப்பில் தாய், தந்தை இருவரும் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் ஏழுமலை உடல்நலம் இல்லாமல் இருந்து வந்தார். அவரை மனைவி ராதா உடன் இருந்து நன்றாக கவனித்து வந்தார்.
நேற்று மாலையில் இருந்து ராதாவுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. நள்ளிரவு 12 மணி அளவில் அவர் திடீரென இறந்துவிட்டார். தன்னை நன்றாக கவனித்து வந்த மனைவி இறந்ததால் துக்கம் தாங்காமல் ஏழுமலை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார்.
இன்று காலை 11 மணி அளவில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் அவரை பரிசோதித்து விட்டு ஏழுமலை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்தனர். இருவரது உடலும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டது. ஏற்கனவே ராதா இறந்த தகவல் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்திருந்தனர்.
இன்று மாலை உடல் தகனம் நடப்பதாக இருந்தது. திடீரென கணவர் ஏழுமலையும் இறந்து விட்டதால் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இன்று மாலை அவர்களது உடல் ஆதிங்கப்பட்டு சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.
ராயபுரம்:
சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ரெயில் பெட்டி மேற்கூரையில் துளை போட்டு ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தினேஷ், ரோஹன்பார்த்தி ஆகிய 2 பேர் கடந்த 12-ந்தேதி கைது செய்யப்பட்டனர். மேலும் கொள்ளையில் தொடர்புடைய மோஹர்சிங், ருசிபார்த்தி, காலியா என்ற கிருஷ்ணா, மகேஷ்பார்த்தி, பில்தியா என்ற பிரஜ்மோகன் ஆகியோர் வேறொரு வழக்கில் கைதாகி அங்கு சிறையில் இருப்பது தெரிந்தது.
அவர்கள் 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். ரெயில் கொள்ளையில் மோஹர்சிங் தலைவனாக செயல்பட்டு இருந்தார்.
இதையடுத்து மோஹர் சிங், பில்தியா என்ற பிரஜ் மோகன் உள்பட 5 பேரையும் 14 நாள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் அனுமதி பெற்றனர். அவர்களிடம் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு விசாரணையின் போது பில்தியா என்கிற பிரஜ்மோகன் திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அவருக்கு ஆஸ்பத்திரியில் உள்ள 4-வது மாடியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவனது உடலில் சோர்வு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. #SalemChennaiTrainRobbery #ChennaiTrainRobbery #RBIMoney
தாராபுரம்:
தாராபுரம் - உடுலை சாலையில் அனுமதியற்ற வீட்டு மனைகளுக்கு வீட்டு மனை வரையறை படுத்தும் முகாம் நடைபெற்றது.
இதில் சேலம் மண்டல இயக்குனர் தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்டு மனுக்களை பெற்றனர்.
தாராபுரம் நகராட்சி மற்றும் குண்டடம், கொளத்துப்பாளையம், சின்னக்கா பாளையம், ருத்ராபதி, மூலனூர் ஆகிய பேரூராட்சிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 200 பேர் மனு அளித்தனர்.
மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு 1,200 மனுக்களுக்கு மனை அனுமதி வழங்கப்பட்டது.
இந்த முகாமில் கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த நாகராஜன் (49) மனு அளிக்க வந்தார். அவர் தாராபுரத்தில் உள்ள தனது வீட்டு மனைக்கு அனுதிக்காக வந்து இருந்தார்.
மனு அளிக்க வந்தவர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். நாகராஜனும் அவர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை அருகில் நின்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தாராபுரம் விரைந்து வந்தனர். நாகராஜன் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இது தொடர்பாக தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் உள்ள ஒரு துணிக்கடையில் ஒரு புடவை 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டது.
இதனால் கடை திறப்பதற்கு முன்பாகவே அதிகாலை முதல் அந்த கடையில் பெண்கள் குவியத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல பெண்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்துநின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதற்கிடையே காலை 8 மணிக்கு துணிக்கடை திறக்கப்பட்டது. அப்போது வரிசையில் காத்து நின்ற பெண்கள் ஒரே நேரத்தில் கடைக்குள் நுழைய முயன்றனர். இதனால் அவர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் உருவானது.
பெண்கள் ஒருவருக் கொருவர் அடிதடியிலும் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி பல பெண்கள் மயக்கம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து அந்த துணிக்கடையை போலீசார் மூடினர். இது போன்ற ஆபத்தை விளைவிக்கும் விளம்பரங்களை செய்யக்கூடாது என்று கடை உரிமையாளரை போலீசார் எச்சரித்தனர். கடை முன்பு திரண்டிருந்த பெண்களுக்கும் போலீசார் அறிவுரை கூறி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர். #warangal #sarees #shoppingmall
பேரையூர்:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள நல்லதேவன்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. கணவரை இழந்த இவர் அரசு விடுதியில் வார்டனாக பணியாற்றி வருகிறார்.
இவரது மகள் சுபிக்ஷா (வயது 14). இவர் திருமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சுபிக்ஷாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் வகுப்பறையில் அமர்ந்து பாடங்களை கவனித்துக் கொண்டு இருந்தார்.
அப்போது சுபிக்ஷா திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவ- மாணவிகள் உடனே ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் மாணவியை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுபிக்ஷா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தாலுகா போலீசார் மாணவியின் சாவு குறித்து விசாரித்து வருகின்றனர்.
மருத்துவ ஆராய்ச்சியின் படி மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உணர்வுதான் இந்த மயக்கம் வர காரணம் என தெரியவந்துள்ளது.
மயக்கம் வர முக்கிய காரணங்களை பார்ப்போம் என்னவென்று பார்ப்போம்.
* நமது உடம்பில் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக கூட மயக்கம் வரலாம். இது அனேகமாக வயதானவர்களுக்கு தான் அதிகமாக இருக்கும். அதாவது 65 வயது கடந்தவருக்கு தான் குறைந்த இரத்த அழுத்தத்தால் மயக்கம் ஏற்படும்.
* உடலில் உள்ள நீரின் சமநிலை சேதப்படும் போது ரத்தின் வேகம் குறைந்து இரத்த அழுத்தம் வேகமாகும். அப்பொழுது உடம்பில் நடுக்கம் ஏற்பட்டு நரம்புமண்டலம் பாதிக்கப்படும். இந்த சமயத்தில் மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
* இன்சுலின் சமசீர் நிலையை இழப்பதால் ஏற்படும். மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது. இரத்ததில் சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளில் இரத்தம் சரியாக செல்லாது, அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஏற்படும், அதிகமாக தாகமெடுக்கும் போன்ற அறிகுறிகள் உடம்பில் ஏற்படும். அச்சமயங்களில் உடல் சோர்வடைந்து மயக்கம் ஏற்படலாம்.
* இருதயத் தசைகளும், இரத்தக் குழாய்களும் வலுவிழந்து விடுவதாலேயே இந்த நோய் ஏற்படுகிறது. இதனால் மூளைக்கு செல்லும் இரத்தத்தில் தடங்கள் ஏற்பட்டு மயக்கம் வரும். இதை மருத்துவரீதியில் இதய மயக்கநிலை என்பார்கள்.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் ராம்நகரை சேர்ந்தவர் முருகன் (வயது51). இவர் கடற்கரை சாலையில் உள்ள புதுவை சுற்றுலா துறைக்கு சொந்தமான சீகல்ஸ் ஓட்டலில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். முருகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று இவர் தவளக்குப்பத்தில் உள்ள சாராயகடையில் அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்துவிட்டு அருகில் உள்ள மைதானத்தில் மயங்கி போனார். இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் யாரோ முருகன் சட்டை பையில் வைத்திருந்த ரூ.6 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
போதை தெளிந்த பின்னர் முருகன் சட்டை பையை பார்த்த போது பணம் மற்றும் செல்போன் திருடப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து முருகனிடம் பணம் மற்றும் செல்போனை திருடிசென்ற மர்ம நபர்களை தேடிவருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்