search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாஸ்மாக்"

    மதுக்கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருசில பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டதாலும் கடைகள் திறக்கப்படவில்லை. 5 நாட்களாக மழைநீர் வடியாமல் இருப்பதால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டே உள்ளன.

    சென்னை:

    சென்னையில் தொடர்ந்து பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. பெட்டி கடைகள், மளிகை கடைகள் போன்ற சிறு கடைகளும் மழை பாதிப்பால் திறக்கப்படாமல் உள்ளது.

    டாஸ்மாக் மது கடைகளும் 40 இடங்களில் செயல்படவில்லை. கிண்டி, அடையாறு, தி.நகர், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், வேளச்சேரி, தேனாம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதோடு கடைகளுக்குள்ளும் புகுந்தது.

    இதனால் மதுக்கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருசில பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டதாலும் கடைகள் திறக்கப்படவில்லை. 5 நாட்களாக மழைநீர் வடியாமல் இருப்பதால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டே உள்ளன.

     

    மழை நீர்

    மேலும் மது விற்பனையும் பாதியாக குறைந்துள்ளது. மழையால் வருமானம் குறைந்ததால் மது பிரியர்கள் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் மது விற்பனை 50 சதவீதத்துக்கும் குறைவாக நடந்துள்ளது. கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மது விற்பனை மிகவும் மோசமான அளவில் இருந்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 88 டாஸ்மாக் கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இந்த டாஸ்மாக் கடைகளில் ரூ.2.95 கோடிக்கு மது விற்பனையும், தீபாவளி நாளான நேற்று ரூ.2.71 கோடிக்கு மது விற்பனையானது.
    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 115 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகையை ஒட்டி நேற்று முன்தினம் ரூ.4.58 கோடிக்கு மது விற்பனையானது.

    தீபாவளி நாளான நேற்று ரூ.4.80 கோடிக்கு மது விற்பனையானது. இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 88 டாஸ்மாக் கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இந்த டாஸ்மாக் கடைகளில் ரூ.2.95 கோடிக்கு மது விற்பனையும், தீபாவளி நாளான நேற்று ரூ.2.71 கோடிக்கு மது விற்பனையானது.

    மொத்தம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.15.04 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் கடந்த 4 நாட்களில் ரூ15.23 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன.
    நாகர்கோவில்:

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் பல மாதங்களாக பூட்டப்பட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

    தீபாவளி பண்டிகை நேரத்தில் பார்கள் மீண்டும் திறக்கப்பட்டது மதுப்பிரியர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றது. குமரி மாவட்டத்திலும் மதுக்கடை பார்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அரசுக்கு கட்டவேண்டிய தொகையை ஏராளமான பார் உரிமையாளர்கள் செலுத்தவில்லை.

    அவ்வாறு ஏலத்தொகையை செலுத்தா பார்களை திறக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி 9 பார்கள் மட்டுமே செயல்பட்டன. மற்ற கடைகளில் இருந்த பார்கள் அனைத்தும் அடைக்கப்பட்டே இருந்தன. 100-க்கும் மேற்பட்ட பார்கள் திறக்கப்படவில்லை.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் கடந்த 4 நாட்களில் ரூ15.23 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த 1-ந்தேதி ரூ. 3கோடியே 5 லட்சத்து 99 ஆயிரத்து 860-க்கும், 2-ந்தேதி ரூ.2 கோடியே 98 லட்சத்து 81 ஆயிரத்து 250-க்கும் மது பானங்கள் விற்பனையாகி இருக்கிறது.

    தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான நேற்று முன்தினம்(3-ந்தேதி) ரூ.4கோடியே 41 லட்சத்து 35 ஆயிரத்து 660-க்கு மதுபானங்கள் விற்பனையாகின. தீபாவளி பண்டிகையன்று ரூ.4கோடியே 77 லட்சத்து 52 ஆயிரத்து 880-க்கு மதுபானங்கள் விற்றிருக்கிறது.

    கடந்த 4 நாட்களிலும் மொத்தம் ரூ.15 கோடியே 23 லட்சத்து 69 ஆயிரத்து 650-க்கு மதுபானங்கள் விற்பனையாகி இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். அதே வேளையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை விற்பனை குறைவு தான் என்றும் கூறியிருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் மதுபான விற்பனை கடந்த ஆண்டை விட குறைவதற்கு பார்கள் முழுமையாக செயல்படாததும், தொடர் மழையும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
    தீபாவளி பண்டிகையையொட்டி 3-ந் தேதி ரூ.9 கோடியே 97 லட்சத்திற்கும், 4-ந் தேதி 10 கோடியே 96 லட்சத்திற்கும் என மொத்தம் 2 நாட்களில் மட்டும் ரூ.20 கோடியே 93 லட்சத்திற்கு மது பாட்டில்கள் விற்பனையானது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் மது பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தீபாவளியையொட்டி மது பானங்கள் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து கடந்த 2 நாட்களாக நீண்ட வரிசையில் காத்து நின்று மது பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கி சென்றனர். இதனால் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சில மது பிரியர்கள் 5 மது பாட்டில்களை வரை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. இதனால் வழக்கத்தை விட 2 மடங்கு விற்பனை அதிகரித்தது.

    தீபாவளி பண்டிகையையொட்டி 3-ந் தேதி ரூ.9 கோடியே 97 லட்சத்திற்கும், 4-ந் தேதி 10 கோடியே 96 லட்சத்திற்கும் என மொத்தம் 2 நாட்களில் மட்டும் ரூ.20 கோடியே 93 லட்சத்திற்கு மது பாட்டில்கள் விற்பனையானது.

    வழக்கமாக ஒரு நாளைக்கு 5 முதல் 6 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெறும் நிலையில் கடந்த 2 நாட்களும் ஒரு நாளைக்கு ரூ.10 கோடிக்கு மேல் மது விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வழக்கமான விற்பனையை விட இரு மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

    தேனி அருகே டாஸ்மாக் கடையில் புகுந்த கொள்ளையர்ளை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே சின்னமனூர் - சீப்பாலக்கோட்டை சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் சின்னமனூர், ஜக்கம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த அழகுமலை (வயது 44) என்பவர் மேற்பார்வையாளராக உள்ளார். வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச் சென்றுள்ளனர்.

    நள்ளிரவு சமயத்தில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். ஆனால் எந்த பொருட்களையும் எடுத்துச் செல்ல வில்லை.

    மறுநாள் காலை கடைக்கு வந்த அழகுமலை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரபீக் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தினமான மே 23-ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ உத்தரவிட்டு உள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. ஏழு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் 23ம் தேதி எண்ணப்பட உள்ளன.



    இந்நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தினமான மே 23-ம் தேதி அன்று இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ உத்தரவிட்டு உள்ளார்.
    வந்தவாசி அருகே டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி ரூ.79 ஆயிரம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மடம் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது.

    இந்தக் கடை மேற்பார்வையாளராக கோழிப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி (40) விற்பனையாளர்களாக மேலத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்(40) கடம்பை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (36) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு மது விற்பனை செய்த தொகை ரூ.79ஆயிரத்து220 பணத்தை பழனி தனது மொபட்டில் வைத்துக்கொண்டு மூவரும் தனித்தனியே பைக்கில் தங்களது வீடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர். வந்தவாசி சேத்துப்பட்டு நெடுஞ்சாலை இணைப்பு பகுதியான காந்தி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது.

    அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தின் அருகே 4 பேர் கொண்ட கும்பல் தடியுடன் 3 பேரையும் வழிமடக்கினர்.

    மேலும் 4 பேர் பின்னால் வந்து பணம் எங்கே என்று கேட்டு உருட்டுக்கட்டை கத்தியைக் காட்டி மிரட்டினார்கள்.

    பணம் இல்லை என்று மூவரும் கூறியதால் 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக உருட்டுக் கட்டையால் தாக்கி கத்தியால் வெட்டி பழனி மொபெட்டில் வைத்து இருந்த ரூ.79 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றனர்.

    சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த வந்தவாசி டி.எஸ்.பி. தங்கராமன், வட வணக்கம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சசிகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு மேலும் காயமடைந்த 3 பேரையும்சிகிச்சைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பழனி ஏழுமலை, சிவக்குமார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

    சம்பவம் தொடர்பாக வட வணக்கம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு கொலைவெறி தாக்குதல் நடத்திய 8 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    வள்ளியூர் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் டாஸ்மாக் ஊழியரிடம் ரூ.1.64 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    வள்ளியூர்:

    ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜசேகர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன், ஸ்ரீபால், முத்துகுமார் ஜெகதீஷ் ஆகிய போலீசார் வள்ளியூர் ரெயில்வே கேட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது வள்ளியூர் நோக்கி வந்த  ஒரு காரை தடுத்தி நிறுத்தினர். காரில் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளம் டாஸ்மாக் சூப்பர்வைசர் முருகவேல் இருந்தார். காரில் போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது அதில்  ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 200 இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர். இந்த பணத்துக்கு முறையான ஆவணம் இல்லை என டாஸ்மாக் சூப்பர்வைசர் முருகவேல் கூறியதை தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து ராதாபுரம் சட்ட மன்ற தேர்தல் உதவி அலுவலரிடம் ஒப்படைத்தனர். #LSPolls

    டாஸ்மாக் பார்களை ஏன் முழுவதுமாக மூடக்கூடாது? என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். #MaduraiHCBench #Tasmac
    மதுரை:

    மதுரையை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் டாஸ்மாக் கடைகள் குறித்து தாக்கல் செய்த மனு, இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் விபத்துகள், உயிர் பலிகள் ஏற்படுகின்றன என்று கூறிய நீதிபதிகள், டாஸ்மாக் பார்களை ஏன் முழுவதுமாக மூடக்கூடாது? டாஸ்மாக் கடை திறப்பை பிற்பகல் 2 மணி முதல் 10 மணி வரை என ஏன் மாற்றக்கூடாது? என்று கேள்வி எழுப்பினர்.



    மேலும் மது வாங்குவதற்கு ஆதார் கார்டை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? மதுரையில் டாஸ்மாக் பார்களின் உரிமத்தை ஓராண்டில் இருந்து இரண்டாண்டாக நீட்டித்தது ஏன்? என்றும் கேட்டனர்.

    இந்த கேள்விகளுக்கு வருகிற 12-ந்தேதி டாஸ்மாக் நிர்வாக மேலாளர் நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். #MaduraiHCBench #Tasmac

    மயிலம் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு சந்தைமேடு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது.

    இந்த கடையில் மயிலம் அருகே உள்ள ஆலை கிராமத்தை சேர்ந்த சங்கர் (வயது 43) என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த திருவேங்கடம் (47), சக்திவேல், விழுப்புரத்தை சேர்ந்த சோழன் ஆகியோர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று இரவு 10 மணி அளவில் டாஸ்மாக்கடையில் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு அன்று வசூலான பணத்தை டாஸ்மாக் கடையில் வைத்து சங்கர் மற்றும் சோழன் ஆகிய 2 பேரும் எண்ணிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த கடைக்கு 2 மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக்கடைக்குள் சென்று பணத்தை எண்ணிக் கொண்டிருந்த சங்கர், சோழனிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி பணத்தை தருமாறு கேட்டனர். உடனே இதில் பயந்து போன சோழன் தன்கையில் வைத்திருந்த ரூ.47 ஆயிரத்தை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். அந்த பணத்தை மர்ம கும்பல் எடுத்துக் கொண்டது.

    பின்னர் சங்கர் கையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்தை தரும்படி கேட்டு மர்ம கும்பல் மிரட்டியது. ஆனால் சங்கர் பணத்தை கொடுக்காமல் அங்கிருந்து ஓடினார். உடனே அந்த கும்பல் அவரை விரட்டி சென்று மடக்கிபிடித்து சங்கரின் கையில் அரிவாளால் வெட்டினர்.

    அப்போது டாஸ்மாக் கடை முடிந்து பணத்தை எடுத்து செல்லும்போது அவர்களுக்கு பாதுகாப்பாக போலீசார் வருவது வழக்கம். அதேபோல் நேற்று இரவும் போலீசார் சந்தைமேடு பகுதியில் உள்ள டாஸ் மாக்கடைக்கு வந்தனர். அப்போது டாஸ்மாக்கடை சூப்பர்வைசரை தாக்கி பணத்தை பறிக்க முயன்ற மர்ம மனிதர்கள் போலீசார் வருவதை கண்டதும் கொள்ளையடித்த ரூ.43 ஆயிரத்துடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    அரிவாள் வெட்டில் காயமடைந்த சங்கரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மயிலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சங்கருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த கொள்ளை குறித்து திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், இன்ஸ்பெக்டர் பால் சுதர், சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    டாஸ்மாக்கடை சூப்பர்வைசரை வெட்டிவிட்டு மர்ம மனிதர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெரியகுளம் அருகே டாஸ்மாக் கடையில் பணம், மதுபாட்டில்கள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

    தேவதானப்பட்டி:

    பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி கெங்குவார்பட்டி புஷ்பராணி நகரில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி சென்றனர்.

    நள்ளிரவு சமயத்தில் வாலிபர் ஒருவர் கடையின் பின்பக்கம் இருந்த சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்தார். பின்னர் அங்கிருந்த பணம் ரூ.6,800 மற்றும் மதுபாட்டில்களை எடுத்துக் கொண்டு தப்பி சென்றார்.

    மறுநாள் காலை விற்பனையாளர்கள் கடையை திறக்க வந்தபோது பின்னால் சுவரில் துளை போட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்தபோது பணம் மற்றும் மதுபாட்டில்கள் கொள்ளைபோனது தெரிய வந்தது. இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் காமக்காபட்டியை சேர்ந்த ஞானசேகரன் என தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் ஞானசேகரனிடம் இருந்து பணம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பெருங்குடி அருகே டாஸ்மாக் கடைக்குள் புகுந்து மதுபாட்டில்கள், பணத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    பேரையூர்:

    மதுரை, பெருங்குடி போலீஸ் சரகத்திற்குட்பட்ட வலையப்பட்டியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு திருமங்கலம் கொடி மரத்தெருவைச் சேர்ந்த அப்துல் ரகு (வயது 44) என்பவர் மேலாளராகவும், முருகேசன் என்பவர் உதவியாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

    நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துக் கொண்டு இருவரும் கடையை மூடிவிட்டுச் சென்றனர்.

    வலையப்பட்டியைச் சேர்ந்த இப்ராகிம்ஷா (48) என்பவர் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு இவர் டாஸ்மாக் கடைக்கு எதிரே உள்ள கட்டிடத்தில் தூங்கச் சென்றதாக கூறப்படுகிறது.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.11 ஆயிரம் ரொக்கம், 144 மது பாட்டில்களை திருடினர்.

    அப்போது சத்தம் கேட்டு எழுந்த இப்ராகிம்ஷா திருடன்.... திருடன்... என கூச்சலிட்டார். இதையடுத்து உஷாரான கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர்.

    இது குறித்த புகாரின் பேரில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் பணம், மதுபாட்டில்களை திருடியவர்களை தேடி வருகின்றனர்.

    ×