search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98443"

    • அயன் சிங்கம்பட்டி ஊரின் எல்லையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை உடைத்ததாக சூர்யா என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
    • சூர்யா பல் பிடுங்கப்பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களை பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அயன் சிங்கம்பட்டி ஊரின் எல்லையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை உடைத்ததாக அதே ஊரை சேர்ந்த சூர்யா என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான சூர்யா பல் பிடுங்கப்பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, காவலர்கள் ராமலிங்கம், ஜோசப் ஆகியோர் பெயர் சேர்த்து உள்ளனர்.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சூர்யாவை கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போது பணியில் இருந்த 15 போலீசார் நெல்லையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் துருவி, துருவி விசாரணை நடத்தினார்.

    பின்னர் அவர்கள் வாக்குமூலத்தை பதிவு செய்தார். தொடர்ந்து விக்கிரமசிங்கபுரம் போலீசாரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    • மதுரை அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    அவனியாபுரம் வெள்ளைக்கல் கிழக்கு தெருவை சேர்ந்த கணேசன் மகன் இளங்கோவன் (வயது36). இவருக்கு மது பழக்கம் உண்டு. சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவர், சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி பரமேசுவரி கொடுத்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    வில்லாபுரம் சித்தி விநாயகர் கோவில் தெரு துளசிராம் தெருவை சேர்ந்தவர் பாண்டியராஜன் (42). இவர் சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்தார்.இவருக்கும் மது பழக்கம் இருந்தது.

    இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த பாண்டி யராஜன் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழில் அதிபர் காரில் ரூ. 3.75 லட்சம் திருடப்பட்டது.
    • திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    திருநகர் சொக்கநாதர் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது46).இவர் சிலைமான் பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.

    இவர் காரில் மதுரைக்கு வந்தார். அதில் தொழிற்சா லைக்கு தேவை யான உபகரணங்களை வாங்கு வதற்காக ரூ 3 லட்சத்து 75 ஆயிரத்தை வைத்திருந்தார்.

    விரகனூர்-திருப்புவனம் செல்லும் வழியில் காரை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது காரில் இருந்தபணம் திருடு போனது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

    மதுரை கண்ணனேந்தல் ஜி.ஆர்.நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் மதிமாறன் (46). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார்.

    அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் பீரோவில் இருந்த ¾ பவுன் நகை மற்றும் ரூ.99 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மீனாட்சி மயிலாடுதுறையில் உள்ள தனியார் துணிக்க டையில் வேலை செய்து வருகிறார்.
    • ஸ்ரீமதியை பொறுப்பு இல்லாமல் இருக்கிறாயே என சாதாரணமாக மகளை திட்டி உள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நிரவி நாகதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு ஸ்ரீமதி (வயது18), மோனிகா (8) என்ற 2 மகள்கள் இருந்தனர். பாலமுருகன் கோயம்புத்தூரில் தங்கி வேலை செய்து வருகிறார். மீனாட்சி மயிலாடுதுறையில் உள்ள தனியார் துணிக்க டையில் வேலை செய்து வருகிறார். மீனாட்சி தனது மகளிடம் சமையல் செய்யச்சொல்லி விட்டு வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். ஸ்ரீமதி டி.வி. பார்த்துகொண்டே சமையல் செய்ததால், பொறியல் கருகியது.

    இதைத்தொடர்ந்து, ஸ்ரீமதியை பொறுப்பு இல்லாமல் இருக்கிறாயே என சாதாரணமாக மகளை திட்டிவிட்டு, மீனாட்சி வேலைக்கு சென்று விட்டார். வேலைக்கு சென்ற மீனாட்சி வரும் நேரத்தில், ஸ்ரீமதி வீட்டில் புடவையில் தூக்கு போட்டு கொண்டுள்ளார். இதை பார்த்த மீனாட்சி சத்தம் போடவே, அருகில் இருந்த உறவினர்கள் ஓடிச் சென்று ஸ்ரீமதியை தூக்கிலிருந்து இறக்கி, அருகில் இருந்த நிரவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சை க்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசேதித்த டாக்டர், ஸ்ரீமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மீனாட்சி, நிரவி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • டிரைவர்-கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது42). மேலகண்ட மங்கலத்தில் உள்ள மில்லில் டிரைவராக வேலை பார்த்தார். இவரது மனைவி கவிதா (37).

    ராஜேசுக்கு குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவி யுடன் தகராறில் ஈடுபட்டார். இதனை கவிதா கண்டித்தார். இதில் மனமுடைந்த ராஜேஷ் வீட்டில் இருந்த மின்விசிறி யில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கவிதா கொடுத்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கடை உரிமையாளர்

    சிவகாசி தெற்கு ரத வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (30). மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சாந்தினி ரத்தினா (27). இவர்கள் 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குழந்தை இல்லை.

    இந்த நிலையில் கடைக்கு வந்த பெண்ணிடம் மணி கண்டன் பேசிக் கொண்டி ருப்பதை பார்த்து மனைவி கண்டித்தார். இதையடுத்து இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்துள்ளது.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் முதுநகரில் கல்லூரி மாணவி மாயமானார்.
    • பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் முதுநகரை சேர்ந்த கல்லூரியில்3-ம் ஆண்டு படித்து வரும் மாணவி சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மயங்கி விழுந்து இறந்த வாலிபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கடந்த 24-ந் தேதி மாலையில் பரிதாபமாக இறந்தார்.

    மதுரை

    மதுரை வெள்ளக்கல் முனியாண்டி கோவில் அருகில் கடந்த 20-ந் தேதி இரவு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் மயங்கி கிடந்தார். தகவலறிந்த அயன்பாப்பாக்குடி கிராம உதவியாளர் செல்லப்பாண்டி மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 24-ந் தேதி மாலையில் பரிதாபமாக இறந்தார்.

    அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. நெற்றியில் கருப்பு மச்சமும், இடது கால் முட்டியில் பழைய காயத்தழும்பும் காணப்படுகிறது. இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே போலீஸ் சப் -இன்ஸ்பெக்டரை கத்தியால் வெட்ட முயன்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் 2 வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த புதுக்கடை பகுதியில் 2 வாலிபர்கள் கையில் கத்தி வைத்துக் கொண்டு அனைவரையும் மிரட்டிக்கொண்டு இருந்ததாக ரெட்டிச்சாவடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் 2 வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவரை பணி செய்ய விடாமல் தடுத்து அவர்கள் வைத்திருந்த கத்தியால் வெட்ட முயன்றனர்.

    சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் சுதாரித்துக் கொண்டு 2 வாலிபர்களையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டார். இதில் அவர்கள் கடலூர் செல்லஞ்சேரியை சேர்ந்த தேவா ( 26), மரக்காணம் கூனிமேட்டை சேர்ந்த சுமன் (27) என்பது தெரியவந்தது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து தேவா மற்றும் சுமன் ஆகியோரை கைது செய்தனர். சப்- இன்ஸ்பெக்டரை கத்தியால்  வெட்ட முயன்ற சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குளத்தில் குளிக்க சென்றபோது திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு, தண்ணீரில் விழுந்து மயக்க நிலையில் இருந்தார்.
    • இது குறித்து தூக்கணாம்பக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:-

    கடலூர் அருகே திருப்பணாம்பாக்கம் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 32). அதே பகுதியில் உள்ள ஒரு குளத்தில் குளிக்க சென்றபோது திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு, தண்ணீரில் விழுந்து மயக்க நிலையில் இருந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் இவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தூக்கணாம்பக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மதுரை அருகே பெண் திடீரென மாயமானார்.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரடிக்கல் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(வயது46). இவரது மனைவி வசுமதி(36). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தலையில் கட்டி ஏற்பட்டு கடந்த சில வருடங்களாக வசுமதி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்தவர் திடீரென்று மாயமானார். எங்கு சென்றார் என்பது தெரியவில்லை? பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து மனைவியை கண்டுபிடித்து தருமாறு ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் கண்ணன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தகராறு ஏற்பட்டு அங்கு இருந்த மர சட்டத்தினால் பன்னீரை, குமார்கடுமையாக தாக்கி உள்ளார்.
    • பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த கந்தன்பாளையத்தை சேர்ந்தவர் பன்னீர் (வயது 50).மீன் வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர் குமார் என்ற சிவகுமார்(38)ஆட்டோ டிரைவர். கடந்தாண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி குமார் மனைவி வீட்டு தோட்டத்தில் துணி துவைத்துக் கொண்டிருக்கும் போது யாரோ எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது.இதனால்தெருவில் நின்றுகொண்டுகு மார்திட்டிஉள்ளார் அப்போது அங்கு வந்த மீன் வியாரி பன்னீர் இதை தட்டி கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு அங்கு இருந்த மர சட்டத்தினால் பன்னீரை, குமார்கடுமையாக தாக்கி உள்ளார். படுகாயத்துடன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட பன்னீர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் .இது குறித்து பண்ருட்டிபோலீசார் வழக்குப திவுசெய்துத லைம றைவான கொலையாளி குமாரை வலை வீசி தேடி வந்தனர்.

    இதற்கிடையில்நி லுவையில் உள்ள பழையவழக்குகளை துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பண்ருட்டி போலீசாருக்கு உத்தரவிட்டார் இதனை தொடர்ந்துபண்ருட்டி துணை ேபாலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர்தங்கேவல் போலீசார்ஆ னந்த்,ராஜி,கணேச மூர்த்திஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் இந்த வழக்கு விசாரணையை பல்வேறு கோணங்களில்நடத்தி தலைமறைவாக இருந்த கொலையாளி குமார் என்கின்ற சிவகுமாரை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்

    • ஜோதிகாவிற்கு கடந்த ஏப்ரல் மாதம் 24 -ந் தேதி திருமணம் நடைபெற்றது.
    • இளம் பெண்காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    கடலூர்:

    கடலூர் சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 33). இவருக்கும் ஜோதிகா (வயது 23) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 24 -ந் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணமாகி ஒரு மாதம் ஆன நிலையில், சம்பவத்தன்று சபரிநாதன் வேலை காரணமாக சென்னைக்கு சென்றார். பின்னர் தனது வேலையை முடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிலிருந்த ஜோதிகாவை திடீரென்று காணவில்லை. இதனை தொடர்ந்து சபரிநாதன் தனது மனைவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூரில் திருமணமாகி ஒரு மாதத்தில் இளம் பெண்காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    ×