search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரத்குமார்"

    விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை கோலிசோடா பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்குகிறார்.
    திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் கைவசம் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கொலை போன்ற படங்கள் உள்ளன. 

    இதுதவிர, கோலிசோடா பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்கிற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

    சரத்குமார்
    சரத்குமார்

    இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதில் அவர் விஜய் ஆண்டனிக்கு நண்பராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் விஜய் ஆண்டனியும், சரத்குமாரும் முதன்முறையாக இணைந்துள்ளனர். 

    ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பை டையு, டாமனில் வருகிற டிசம்பர் மாதம் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
    கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் தனது முதல் வேலை என்று அறிவித்துள்ள நிதின் கட்காரிக்கு சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ் கோதாவரி, பெண்ணாறு, கிருஷ்ணா, காவிரி ஆகிய நதிகள் இணைக்கப்படும் என்று மத்திய நீர்வளத்துறை மந்திரியாக இருந்த நிதின் கட்காரி கடந்த ஜனவரி மாதம் அறிவித்து இருந்தார். தற்போது பா.ஜனதா தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சி அமைக்க இருப்பதை தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டுவர கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் தனது முதல் வேலை என அவர் டுவிட்டர் மூலம் தெரிவித்து இருப்பது பாராட்டக்கூடியதும், வரவேற்கத்தக்கதும் ஆகும்.

    வீணாக கடலுக்கு செல்லும் 1,100 டி.எம்.சி. அளவிலான கோதாவரி நதிநீரை தென்னக மாநிலங்களுக்கு பயன்படும் வகையில் மத்திய அரசு நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்த இருப்பதும், குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் அமைக்க இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம், மனிதன் வாழ்வதற்கு தேவையான குடிநீர் என அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் பயன்படும் வகையில் நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்த நிதின் கட்காரி அவர்களுக்கு எனது சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஜெயலலிதா வழியில் தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி செய்து வருகிறார் என்று தேர்தல் பிரசாரத்தில் சரத்குமார் பேசியுள்ளார்.

    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று மாலையில் பேரூரணி, கூட்டாம்புளி, குலையன்கரிசல், ஸ்பிக்நகர், மாப்பிள்ளையூரணி, சிலுவைப்பட்டி மற்றும் தாளமுத்துநகர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் திரண்டு இருந்த மக்கள் மத்தியில் கூறியதாவது:-

    ஓட்டப்பிடாரம் வந்ததும் நினைவிற்கு வருவது வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், வ.உ.சி., வாஞ்சிநாதன் ஆகியோர் தான். வீரம் நிறைந்த மண் ஓட்டப்பிடாரம். அந்த மண்ணில் நின்று வேட்பாளர் மோகனுக்கு வாக்கு கேட்கிறேன். கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி சிறப்பாக செயல்பட்டார். அவர் இல்லாத இந்த தேர்தலை சந்திப்பது ஒரு வருத்தம் தான். அவர் வழியில் தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். மக்களுக்கான முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்தி ஜெயலலிதா பாதையில் பயணிக்கிறார். தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடந்து வருகிறது.

    அவர் வழியில் தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதவி மீது மட்டுமே மோகம். மக்களுக்கு சேவை செய்தால் மட்டுமே தலைவர் ஆக முடியும். அ.தி.மு.க.வினருக்கு மக்கள் மீது தான் மோகம். மு.க.ஸ்டாலின் குறுக்கு வழியில் முதல்-அமைச்சர் ஆக நினைக்கிறார். அது நடக்காது. அதற்கு அவர் தகுதியற்றவர். அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. மக்கள் ஆதரவோடு வெற்றி பெறும். அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனும் முதல்வரக முடியும். மாற்றுக்கட்சியில் அதற்கான வாய்ப்பு கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால்தான் நல்ல திட்டங்களை கொண்டுவர முடியும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

    வேலாயுதம்பாளையம்:

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நொய்யல் குறுக்குசாலை, குப்பம், க. பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் தொலைநோக்கு பார்வையுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்தி வருகிறார். அ.தி.மு.க.வை யாராலும் அவ்வளவு சீக்கிரம் அசைத்துவிட முடியாது. ஸ்டாலினாலும் அது முடியாது. அவர்கள் சுயநலவாதிகள் தி.மு.க.வினர் ஊழல் செய்தார்கள்.

    மே 23-ந்தேதிக்கு மேல் ஆட்சிக்கு வந்து விடலாம் என கனவு காண்கிறார்கள். நீங்கள் ஒரு நாற்காலி வாங்கி, அவருடைய வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள். அதில் முதல்-அமைச்சர் பதவி என எழுதி வீட்டிலேயே அமர்ந்து கொள்ளலாம். அவர் முதல்வராவது எந்த காலத்திலும் நடக்காது. ஒரு தலைவன் மக்களை பற்றி சிந்திக்க வேண்டும். ஆட்சியை கலைக்க வேண்டும் என நினைப்பவர் தலைவராக முடியாது.

     


    நீங்கள் ஒருவருக்கு ஓட்டு போடுவீர்கள். அவர் வேறு கட்சிக்கு சென்றுவிடுவார். உங்களிடம் கேட்டுவிட்டா சென்றார். கொள்கை பிடிப்பு இல்லாமல் பல கட்சிகளுக்கு தாவிய செந்தில்பாலாஜி பொய்யான வாக்குறுதிகளை தந்து கொண்டு இருக்கிறார். ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால் தான் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும்.

    ஜெயலலிதா ஆட்சியில் வறட்சியை எதிர்கொள்ளும் வகையில் மழைநீர் சேகரிப்பு தொட்டியை ஒவ்வொரு வீட்டிலும் கட்ட வேண்டும் என கூறி, மழைநீரை பூமிக்கடியில் சேமித்து நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகுத்தார். அவரது வழியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் குடிமராமத்து பணிகள் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாருவது உள்ளிட்டவற்றால் விவசாயிகளுக்க உதவிகரமாக இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 2 ஆண்டுகள் தொடரும். 38 பாராளுமன்ற தேர்தலிலும், 22 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மு.க.ஸ்டாலினுக்கு வேண்டியது எல்லாம் முதல்-அமைச்சர் என்ற பதவிதான் என்றும் மக்களை பற்றி அவர் சிந்திக்கவில்லை என்றும் தேர்தல் பிரசாரத்தில் சரத்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
    சூலூர்:

    சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வி.பி.கந்தசாமியை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சூலூர், நீலாம்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை ஜெயலலிதா வழிநடத்தினார். தற்போது அவர் இல்லையே என்ற ஏக்கத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீர்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாதையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறந்த முறையில் மக்களுக்காக சேவை செய்து வருகிறார் என்றால் அது மிகையாகாது.

    தொலைநோக்கு பார்வையுடன் மக்களுக்காக நான் என்று ஜெயலலிதா பயணித்ததுபோல, மக்களை பற்றி சிந்தித்து சிறந்த முறையில் ஆட்சி செய்து வருகிறார்.

    விவசாயிகளுக்காக அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். அதற்காக ரூ.250 கோடி ஒதுக்கி 2021-ம் ஆண்டுக்குள் முடிக்கவும் நடவடிக்கை எடுத்து உள்ளார். இந்த திட்டம் கனவு திட்டமாக அமைந்து விடும் என்று கூறுகிறார்கள். இப்படிதான் வீராணம் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று கூறினார்கள். எம்.ஜி.ஆர். அந்த திட்டத்தை நிறைவேற்றினார். அதுபோன்றுதான் அத்திக்கடவு-அவினாசி திட்டமும்.

    விவசாயிகளுக்காக உழைக்கும் இயக்கம் அ.தி.மு.க. விவசாயிகளுக்கு ஒன்று என்றால் முதலில் கொதித்து எழும் ஆட்சிதான் இது. ஜெயலலிதா கொண்டு வந்துள்ள திட்டத்தை கூறினால் நேரம் போதாது. பெண்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தார். மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என்று விலையில்லா மடிக்கணினி திட்டத்தை கொண்டு வந்தார். அதுபோன்றுதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பல திட்டங்களை கொண்டு வந்து உள்ளார். பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமும், ஒரு கோடி ஏழை-எளிய தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    அதற்குள் தேர்தலை சந்திக்க கூடிய நிலை வந்து விட்டது. தேர்தல் முடிந்ததும் ரூ.2 ஆயிரம் கொடுக்க இருக்கிறார்.

    மக்களை பற்றி சிந்திக்கிறவர்கள்தான் ஆட்சியில் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆட்சி தொடர வேண்டும் என்றால் தற்போது நடைபெறும் 4 இடைத்தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றி தற்போது உறுதி செய்யப்பட்டு விட்டது. கண்டிப்பாக 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். பதவி சுகம் அனுபவித்தவர்கள்தான் தற்போது தேர்தலை உருவாக்கி இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து இருக்கிறார்கள். ஸ்டாலின் சொன்ன கனவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

    மு.க.ஸ்டாலினுக்கு வேண்டியது எல்லாம் முதல்-அமைச்சர் என்ற பதவிதான். மக்களை பற்றி அவர் சிந்திக்கவில்லை. காற்றாலையையும் காசாக்க முடியும் என்று ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தது அவர்கள்தான். அராஜக ஆட்சியை நடத்தியவர்களும் அவர்கள்தான். இந்த தேர்தல் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஸ்டாலின் கூறுகிறார். 23-ந் தேதி அன்று எங்கள் ஆட்சி வரும் என்று அவர் சொல்கிறார். அவரால் எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாது.

    அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு இல்லை. சிறந்த முறையில் ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சி தொடர வேண்டும் என்றால் நீங்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்த வி.பி.கந்தசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரசாரத்தின்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வேட்பாளர் வி.பி.கந்தசாமி, ஒன்றிய செயலாளர் மாதப்பூர்பாலு, அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் தோப்பு க.அசோகன், நகர செயலாளர் கார்த்திகைவேலன், சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    என்.வி.நிர்மல்குமார் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகும் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சரத்குமார் மற்றும் பாரதிராஜா ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. #Sasikumar #NVNirmalKumar
    சலீம், சதுரங்க வேட்டை 2 படங்களை இயக்கிய என்.வி.நிர்மல்குமார் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

    கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சரத்குமார் மற்றும் பாரதிராஜா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    பாரதிராஜா ஏற்கனவே சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப் படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு மும்பை செல்கிறது. #Sasikumar #NVNirmalKumar #SarathKumar #Bharathiraja

    பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ஒரே பிரதமர் மோடி தான் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்தார். #BJP #Sarathkumar
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து வடசேரியில் தேர்தல் பிரசாரம் செய்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசியதாவது:-

    மத்தியில் வலுவான ஆட்சி, நிலையான ஆட்சி, பெரும்பான்மையான ஆட்சி வரவேண்டும் என்பதற்காக அ.தி.மு.க.-பாரதிய ஜனதா கூட்டணி உருவாகி உள்ளது. ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சியும் இந்த கூட்டணியை பார்த்து சந்தர்ப்பவாத கூட்டணி என கூறுகிறார்கள். வலுவான, நிலையான ஆட்சி வரவேண்டும் என்றால் சேர்ந்து தான் ஆக வேண்டும்.

    ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் மட்டும் சொல்லி வருகிறார். கூட்டணியில் உள்ள வேறு எந்த தலைவரும் ஏற்று கொள்ளவில்லை.

    கேரளாவில் கம்யூனிஸ்டு, ராகுல்காந்தியை தோற்கடித்தே தீருவோம் என சொல்லி வருகின்றனர். இங்கு அப்படி இல்லை என தெரிவிக்கின்றனர். இப்படி மாறி, மாறி கொள்கை கொண்டு இருந்தால் எப்படி நிலையான ஒரு ஆட்சியை தர முடியும்.

    மதவாதம் என்று சொல்லுகின்றனர். தி.மு.க., பா.ஜ.க. ஆட்சியில் சேர்ந்து இருந்த போது மதவாதம் என்பது தெரியவில்லையா? அனைவரும் ஒத்த கருத்துடன் இருந்து செயல்படும் தமிழக அரசும், மத்திய அரசும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கொடுக்கும் அரசாக இருந்து வருகிறது.

    புல்வாமா தாக்குதலுக்கு பிறகு சீனா, பாகிஸ்தான், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருந்தது. அந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ஒரே பிரதமர் மோடி தான்.

    2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அறிவித்தபடி மடி கணினி கொடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இந்த திட்டத்தை தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழகம் முதன்மை மாநிலமாக உருவாக வேண்டும் என்றால் மத்தியில் நிலையான, வலிமையான ஆட்சி அமைய வேண்டும்.

    1999 முதல் 2004-ம் ஆண்டு வரை பாரதிய ஜனதா அரசு இருந்தது. அதன் பிறகு 10 ஆண்டு காலம் காங்., ஊழல் ஆட்சி செய்துள்ளது. நிலக்கரி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், காவிரி பிரச்சினை, கச்ச தீவு என மத்தியில் பிரச்சினைகள் நிறைந்த ஊழல் மிகுந்த ஆட்சியாகவே இருந்தது.

    மத்தியில், மாநிலத்தில் ஆட்சியை பற்றி குறை சொல்ல முடியாமல் தனி நபர் விமர்சனம் செய்து வருகின்றனர். மத்தியில் நிலையான ஆட்சி, வலிமையான ஆட்சி வரவேண்டும் என்றால் பொன்.ராதாகிருஷ்ணனை ஓட்டு போட்டு வெற்றிபெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசினார். #BJP #Sarathkumar
    அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று முதல் 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார். #LokSabhaElections2019 #ADMK #Sarathkumar
    சென்னை:

    அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று முதல் 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

    இன்று மாலை தென்சென்னை தொகுதியில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் பிரசாரத்தை தொடங்கி 6 இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    நாளை (சனி) திருப்போரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

    31-ந்தேதி (ஞாயிறு) பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியிலும் திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியிலும் பிரச்சாரம் செய்கிறார்.
    #LokSabhaElections2019 #ADMK #Sarathkumar
    சென்னையில் இன்று முதலமைச்சரை சந்தித்த சரத்குமார், பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். #LokSabhaElections2019 #Sarathkumar
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது, பாராளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.



    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு அளிப்பதாக கூறினார். அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    ‘முதல்வரை சந்தித்தபோது, சிறுபான்மையினருக்கு பாதுகாவலாக மத்திய அரசு இருக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தேன். மத்தியில் வலிமையான ஒரு அரசு வரவேண்டும், தொங்கு பாராளுமன்றம் அமைந்துவிடக்கூடாது என்பதற்காக அதிமுக கூட்டணியை ஆதரிக்கிறேன்’ என்றார் சரத்குமார். #LokSabhaElections2019  #Sarathkumar
    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து நிர்வாகியை நீக்கம் செய்து அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #Sarathkumar
    சென்னை:

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை காரணமாக மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்ட கிச்சா ரமேஷ், குணசேகரன், கிரிபாபு ஆகியோருடன் சேர்ந்து கட்சிக்கும், கட்சியின் நிர்வாகிகளுக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் எண்ணத்துடன் தவறாக பேசிவரும் முன்னாள் தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் இ.சி.ஆர்.ராஜ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இன்று முதல் நீக்கப்படுகிறார்.
    அவருடன் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கட்சிப் பணிகள் ரீதியாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Sarathkumar
    மணிரத்னமின் உதவி இயக்குநர் தனசேகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ‘வானம் கொட்டட்டும்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. #VaanamKottatum #VikramPrabhu #AishwaryaRajesh
    மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தனசேகரன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘வானம் கொட்டட்டும்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள்.

    இதில் சரத்குமாரும், அவருடைய மனைவி ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தில் இருவரும் கணவன்-மனைவியாகவே நடிக்க இருக்கிறார்கள். விக்ரம் பிரபு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.



    படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்கி சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற இருக்கிறது. இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது. #VaanamKottatum #VikramPrabhu #AishwaryaRajesh

    பாராளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் நாளை விருப்ப மனு வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #sarathkumar #parliamentelection

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இன்றும், நாளையும் விருப்ப மனு வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் விருப்ப மனு வாங்குவது ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சரத்குமார் கூறும்போது, தவிர்க்க முடியாத காரணங்களால் முக்கிய நிர்வாகிகள் சிலர் இன்று வர இயலவில்லை. எனவே, நாளை (ஞாயிறு) முதல் விருப்ப மனுக்கள் வாங்கப்படும். 

    ஏற்கனவே அறிவித்தபடி நாளை விருப்ப மனு வாங்கப்படும் தொகுதிகளுக்கு நாளையே வாங்கப்படும்.

    இன்று வாங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (திங்கள்) மனு வாங்கப்படும்.

    இவ்வாறு சரத்குமார் கூறினார். #sarathkumar #parliamentelection

    ×