search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    • 2 நாட்களில் பட்டாசு வெடித்ததின் மூலம் 500 டன் குப்பைகள் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தேங்கியது.
    • கொரோனா பாதிப்பால் கடந்த 2 வருடமாக தீபாவளி கொண்டாட்டம் உற்சாகமில்லாத நிலையில் இந்த ஆண்டு பட்டாசு மற்றும் ஜவுளி விற்பனை அமோகமாக நடந்துள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தீபாவளி குப்பைகள் 2 நாளில் மலை போல் குவிந்தன. அவற்றை உடனே அகற்றும் பணியில் இரவு-பகலாக தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னையில் தினமும் சராசரியாக 5,300 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. மக்கும் குப்பை, மக்கா குப்பை என 2 வகையாக பிரிக்கப்பட்டு வீடுதோறும் சேகரிக்கப்படுகின்றன.

    15 மண்டலங்களிலும் வீதிகளில் உள்ள குப்பை தொட்டிகள் மற்றும் பொது இடங்களில் குவியும் குப்பைகள் மாநகராட்சி மற்றும் தனியார் தூய்மை பணியாளர்கள் மூலம் அள்ளப்படுகின்றன.

    சென்னையில் தீபாவளி பட்டாசு குப்பைகள் நேற்று முன்தினம் இரவு முதல் குவியத் தொடங்கின. ஒவ்வொரு தெருக்களிலும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினார்கள். நேற்று அதிகாலையில் இருந்தே பட்டாசு அதிகளவில் வெடித்தனர்.

    பகலிலும் அதிக ஒலி பட்டாசுகள், சரவெடிகள் வெடித்ததன் மூலம் குப்பை நகரம் முழுவதும் குவிந்தன. மாலையில் இருந்து குடும்பம் குடும்பமாக வீடுகள் முன்பு வெடித்தனர்.

    இரவு 10 மணி, 11 மணி வரையிலும் குழந்தகளை அருகில் வைத்து பெற்றோர்கள் பட்டாசு வெடித்து குதூகலமாக தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இதன் மூலம் பட்டாசு குப்பை ஒவ்வொரு தெரு வீதியிலும் குவிந்தன. வெடித்து சிதறிய பட்டாசு கழிவுகள், காகிதங்கள் சாலைகளிலும், தெருக்களிலும் குவியத் தொடங்கின. அவற்றை அள்ளும் பணி பகலிலும், நள்ளிரவிலும் தொடங்கியது.

    நகரின் முக்கிய வீதிகளில் விடிய விடிய நடந்த தூய்மை பணிகள் மூலம் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டன.

    2 நாட்களில் பட்டாசு வெடித்ததின் மூலம் 500 டன் குப்பைகள் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தேங்கியது. அதனை உடனடியாக அள்ளும் பணி 20 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் மூலம் நடைபெற்று வருகிறது.

    வழக்கமாக எடுக்கப்படுகின்ற 5,300 மெட்ரி டன் குப்பைகளோடு தீபாவளி குப்பைகள் 500 டன் குப்பைகள் கூடுதலாக சேகரிக்கப்பட்டுள்ளது.

    கடை வீதிகளில் தீபாவளி விற்பனை கழிவுகள் ஆடு இறைச்சி, மாடு, கோழி இறைச்சி கழிவுகள், ஓட்டல், இனிப்பு கடைகள் உள்ளிட்ட தீபாவளி பண்டிகை விற்பனை மூலம் உருவான குப்பை சென்னையில் பல்வேறு இடங்களில் லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டன.

    மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெருக்கம் மிகுந்த பகுதியில் குப்பை வண்டிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத கையில் குப்பை அள்ளும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இன்று காலையில் இருந்து மாநகராட்சி அதி காரிகள், பல்வேறு இடங்களில் முகாமிட்டு தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

    கொரோனா பாதிப்பால் கடந்த 2 வருடமாக தீபாவளி கொண்டாட்டம் உற்சாகமில்லாத நிலையில் இந்த ஆண்டு பட்டாசு மற்றும் ஜவுளி விற்பனை அமோகமாக நடந்துள்ளது.

    மேலும் மழை பாதிப்பு இல்லாமல் இருந்ததால் அனைத்து தீபாவளி வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனால் குப்பைகளும் பெருமளவில் குவிந்தன.

    • தீபாவளி என்றால் உற்றார்-உறவினர்கள்-நண்பர்கள் சூழ புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து கொண்டாடுவதுதான் வழக்கம்.
    • நரிக்குறவர்கள் தீபாவளியன்று வீடு வீடா சென்று இனிப்பு-பட்டாசு வாங்குவது வழக்கம்.

    புதுச்சேரி:

    புதுவை கிருஷ்ணா நகரில் ஜாலி ஹோம்ஸ் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது.

    ஜாலி ஹோம் காப்பகத்தில் நரிக்குறவர்களின் குழந்தைகளும் ஆதரவற்றோரின் குழந்தைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இங்கு தங்க இடம், உடுக்க உடை, உணவு என நின்று விடாமல் கல்வியுடன் பாட்டு, நடனம், விளையாட்டு ஆகியவையும் கற்று கொடுக்கப்படுகிறது. இதனால் இங்குள்ள குழந்தைகள் தீபாவளிக்கு என தனி பாடலை உருவாக்கி உள்ளனர்.

    இவர்களுடன் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தீபாவளி கொண்டாடினார். சிறுவர்கள், குழந்தைகளுக்கு இனிப்பு பட்டாசு வழங்கி உற்சாகப்படுத்தினார்.

    பின்னர் நிருபர்களிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேசியதாவது:-

    தீபாவளி என்றால் உற்றார்-உறவினர்கள்-நண்பர்கள் சூழ புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து கொண்டாடுவதுதான் வழக்கம். ஆனால் நரிக்குறவர்கள் தீபாவளியன்று வீடு வீடா சென்று இனிப்பு-பட்டாசு வாங்குவது வழக்கம்.

    இதுபோன்று வாழ்வின் விளிம்பு நிலையில் உள்ள மக்களும் முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார்.

    பிரதமரின் வழிகாட்டுதலோடு புதுவை அரசும் இந்த சமூக மக்களுக்கு மட்டுமல்லாமல் வறுமை நிலையில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தங்கள் வாழ்வின் நிலையை உயர்த்திக் கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்த தீபாவளி திருநாளை ஜாலி ஹோம் இல்ல குழந்தைகளோடு கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. எப்போதும் தீபாவளி திருநாளை தொகுதி மக்களோடு இணைந்து கொண்டாடுவேன். இந்த முறை இந்த குழந்தைகளோடு கொண்டாடியது மகிழ்ச்சி அளித்தது.

    இவ்வாறு சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.

    • சுற்றுச்சூழலை பாதுகாக்க டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனைக்கும், பதுக்கி வைக்கவும் டெல்லி அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
    • டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் 300 புள்ளிகளை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தீபாவளிக்கு மறுநாளான இன்று காலை நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் 'மிகவும் மோசமான' பிரிவில் பதிவாகியுள்ளது.ஆனால், இது முந்தைய ஆண்டுகளைவிட குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.

    அதன்படி, இன்று காலை 7 மணியளவில் தலைநகரின் காற்றின் தரக் குறியீடு 326 ஆக இருந்தது. தொடர்ந்து, அண்டை நகரங்களான காசியாபாத் (285), நொய்டா (320), கிரேட்டர் நொய்டா (294), குருகிராம் (315) மற்றும் ஃபரிதாபாத் (310) ஆகியவை 'மோசமான' முதல் 'மிகவும் மோசமான' காற்றின் தரத்தைப் பதிவு செய்துள்ளன.

    பூஜ்ஜியத்தில் இருந்து -50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51லிருந்து-100 புள்ளிகள் வரை இருந்தால் மிதமானது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதேப்போல் 101லிருந்து - 150 புள்ளிகள் இருந்தால் உடல்நலத்துக்கு தீங்கானது என்றும் 300க்கு மேல் தாண்டினால் அது மிகவும் அபாயகரமானது எனக் கருதப்படுகிறது.

    காற்று மாசு காரணமாக சுற்றுச்சூழலை பாதுகாக்க டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கும், விற்பனைக்கும், பதுக்கி வைக்கவும் டெல்லி அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி தடையை மீறி பட்டாசு வெடிக்கபட்டதால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் 300 புள்ளிகளை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    முன்பாக, டெல்லியில் கடந்த ஆண்டு தீபாவளியன்று 382 ஆகவும், 2020ல் 414 ஆகவும், 2019ல் 337 ஆகவும், 2017ல் 319 ஆகவும், 2016ல் 431 ஆகவும் பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

    • வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என அனைத்து பகுதிகளிலும் மக்கள் உற்சாகத்தோடு பட்டாசுகளை வெடித்ததில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
    • ராக்கெட் பட்டாசுகள் பறந்து சென்று விழுந்ததிலேயே பெரும்பாலான தீ விபத்துகள் நடந்துள்ளன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை யொட்டி தமிழகம் முழுவதும் பட்டாசுகளை வெடித்து மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவருமே ராக்கெட் பட்டாசுகளையும் வெடிக்க செய்தனர்.

    நேற்று சென்னையில் மட்டும் 180 இடங்களில் தீபாவளி பட்டாசு தீ விபத்துகள் நடந்துள்ளன.

    வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என அனைத்து பகுதிகளிலும் மக்கள் உற்சாகத்தோடு பட்டாசுகளை வெடித்ததில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    ராக்கெட் பட்டாசுகள் பறந்து சென்று விழுந்ததிலேயே பெரும்பாலான தீ விபத்துகள் நடந்துள்ளன.

    இந்த தீவிபத்தில் 14 குழந்தைகள் உள்பட 43 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் 20 பேர் ஆண்கள். 9 பேர் பெண்கள் ஆவர்.

    தீவிபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.

    கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் தீக்காய சிகிச்சை பிரிவு செயல்பட்டது. அங்கு சென்றும் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்றனர். இருப்பினும் தீபாவளி பட்டாசு தீவிபத்தில் பெரிய அளவில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிப்பதாக இருப்பதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • பிராந்தி, ரம் போன்ற மதுவகைகளை காட்டிலும் பீர் வகைகளை மதுபிரியர்கள் அதிகளவில் வாங்கி சென்றனர்.
    • டாஸ்மாக் கடைகளுக்கு பல கோடி ரூபாய்க்கு விற்பனை வருமானம் கிடைத்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மொத்தம் 218 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் தினமும் சராசரியாக ரூ.3 கோடிக்கு மது விற்பனை நடைபெறுவது வழக்கம். ஆனால் தீபாவளி, பொங்கல், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை இருமடங்கு உயரும்.

    அதன்படி தீபாவளியையொட்டி இந்த கடைகளில் மது பிரியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மதுபானங்கள் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    நீண்ட வரிசையில் காத்து நின்று மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இதனால் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சில மது பிரியர்கள் 5 மதுபாட்டில்களை வரை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. இதனால் வழக்கத்தை விட 2 மடங்கு விற்பனை அதிகரித்தது. பிராந்தி, ரம் போன்ற மதுவகைகளை காட்டிலும் பீர் வகைகளை மதுபிரியர்கள் அதிகளவில் வாங்கி சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளுக்கு பல கோடி ரூபாய்க்கு விற்பனை வருமானம் கிடைத்துள்ளது.

    இது குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறும்போது, டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக ஒரு நாளைக்கு 5 முதல் 6 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெறும். தற்போது தீபாவளியையொட்டி கடந்த 23, 24-ந் தேதி ஆகிய 2 நாட்களில் மட்டும் ரூ.22 கோடிக்கு மேல் மது விற்பனை நடந்துள்ளது. குறிப்பாக ஒரு நாளைக்கு ரூ.10 கோடிக்கு மேல் மது விற்பனை நடந்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக இருந்தது என்றனர்.

    • மது விற்பனையில் முதலிடம் பிடித்தது மதுரை.
    • சென்னையில் தீபாவளி அன்று மட்டும் ரூ.51.52 கோடிக்கு மது விற்பனையானது.

    கடந்த 22ம் தேதி சென்னையில் 38 கோடியே 64 லட்ச ரூபாய்க்கும், திருச்சியில் 41 கோடியே 36 லட்ச ரூபாய்க்கும், சேலத்தில் 40 கோடியே 82 லட்ச ரூபாய்க்கும், மதுரையில் 45 கோடியே 26 லட்ச ரூபாய்க்கும், கோவையில் 39 கோடியே 34 லட்ச ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது.

    நேற்று 23ந் தேதி மட்டும் சென்னையில் 51 கோடியே 52 லட்சம் ரூபாய்க்கும், திருச்சியில் 50 கோடியே 66 லட்சம் ரூபாய்க்கும், சேலத்தில் 52 கோடியே 36 லட்சம் ரூபாய்க்கும், மதுரையில் 55 கோடியே 78 லட்சம் ரூபாய்க்கும், கோவையில் 48 கோடியே 47 லட்சம் ரூபாய்க்கும் விற்பனையாகி உள்ளது.

    கடந்தாண்டு தீபாவளியின் போது 2 நாட்களில் ரூ.431 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. இந்த ஆண்டு இதனை மிஞ்சும் வகையில் கடந்த 2 நாட்களில் ரூ.464.21 கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது. 

    • பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதே தீபாவளி பண்டிகையின் அர்த்தம்.
    • ஆயுதப் படைகளில் பெண்களை இணைத்துக்கொள்வது நமது பலத்தை அதிகரிக்கும்.

    கார்கில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். அவர்களுடன் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். வீரர்களுக்கு தன் கையால் இனிப்புகளை வழங்கினார். அதன்பின் ராணுவ வீரர்களீடையே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதே தீபாவளி பண்டிகையின் அர்த்தம். கார்கில் போர், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. கார்கிலில் நடந்த போரில் நமது படை, பயங்கரவாதத்தை முறியடித்தது.

    ராணுவ வீரர்கள் என்னுடைய குடும்பத்தினர். உங்களுக்கு மத்தியில் இருக்கும்போது தீபாவளி பண்டிகை இனிமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது. கார்கில் போரை நான் நினைத்து பார்த்திருக்கிறேன். என்னுடைய கடமைதான் என்னை அப்போது கார்கிலுக்கு அழைத்து வந்தது. வெற்றியின் ஓசைகள் எங்கும் எதிரொலித்த அந்தக் காலத்தின் பல நினைவுகள் உள்ளன. மக்கள் அன்று கொண்டாடப்பட்ட தீபாவளியை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.


    கடந்த எட்டு ஆண்டுகளாக, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி, படைகளில் பெண்களுக்கு பணி அளிப்பது போன்ற சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. ஆயுதப் படைகளில் பெண்களை இணைத்துக்கொள்வது நமது பலத்தை அதிகரிக்கும். ஒரு தேசத்தின் எல்லைகள் பாதுகாப்பாகவும், பொருளாதாரம் வலுவாகவும், நம்பிக்கை நிறைந்த சமூகமாகவும் இருக்கும் போதுதான் ஒரு நாடு பாதுகாப்பாக இருக்கும்.

    நாட்டிற்குள் இருக்கும் எதிரிகள் மற்றும் வெளியே இருக்கும் எதிரிகளை இந்தியா வலிமையுடன் கையாள்கிறது. பயங்கரவாதம், நக்சலிசம் மற்றும் பயங்கரவாதத்தை நாட்டிற்குள் இருந்து வேரோடு பிடுங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட்டு வருகிறது. இந்தியா ஒருபோதும் போரை முதல் விருப்பமாக பார்க்கவில்லை. நாம் எப்போதும் இறுதி முயற்சியாக போரைப் பார்த்திருக்கிறோம். நாம் உலக அமைதிக்கு ஆதரவாக இருக்கிறோம். ஆனால் வலிமை இல்லாமல் அமைதியை அடைய முடியாது.

    எங்கள் ஆயுதப் படைகளுக்கு வியூகங்களும் வலிமையும் உள்ளன. யாரேனும் நம் மீது தீய நோக்கத்தோடு பார்வையை செலுத்தத் துணிந்தால், அதற்குத் தகுந்த பதிலடி கொடுப்பது எப்படி என்பது நமது முப்படைகளுக்கும் நன்றாகத் தெரியும். தேசத்தின் பாதுகாப்பிற்கு ஆத்மநிர்பர் பாரத் மிக முக்கியமானது ஆயுதங்கள் மற்றும் அமைப்புகளில் வெளிநாட்டு சார்பு குறைவாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • தீபாவளி பண்டிகையை எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் பிரதமர் மோடி
    • கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடினார்.

    கார்கில்:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    பிரதமர் மோடி ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 2014-ம் ஆண்டு சியாச்சின் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். 2015-ம் ஆண்டு பஞ்சாப் எல்லையிலும், 2016-ம் ஆண்டு இமாச்சலபிரதேச எல்லையிலும் பணியாற்றிய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். 



    2017-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பணிபுரியும் வீரர்களுடனும், 2018-ம் ஆண்டு உத்தரகாண்டில் பணியாற்றும் வீரர்களுடனும், 2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றும் வீரர்களுடனும் தீபாவளியை கொண்டாடினார். 2020-ம் ஆண்டு ராஜஸ்தான் எல்லையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடினார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை லடாக் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். கார்கில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    • மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
    • தீபாவளி கொண்டாடும் மக்களுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்,

    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளி கொண்டாடும் மக்களுக்கு குடியரசு தலைவர், துணைத்தலைவர், பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்,

    இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி வெளிச்சம் மற்றும் பிரகாசத்துடன் தொடர்புடையது. இந்த மங்களகரமான பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்வாழ்வையும் மேம்படுத்தட்டும். நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சிறபான தீபாவளியை கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.

    • இன்று உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களால் மட்டுமல்ல, சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்களாலும், வெவ்வேறு காரணங்களைக்கூறி தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது.
    • வட மாநிலங்களில் ராமபிரான் வனவாசத்தை முடித்துவிட்டு அயோத்திக்கு திரும்பிவந்த நாளில், மக்கள் புத்தாடை அணிந்து தீபம் ஏற்றி வரவேற்ற நாள்தான் தீபாவளி என்றும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சென்னை:

    மக்களின் உள்ளங்களிலும், அவர்கள் இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடும் நன்னாள் தீபாவளி. இன்று உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்களால் மட்டுமல்ல, சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்களாலும், வெவ்வேறு காரணங்களைக்கூறி தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்துக்களைப் பொருத்தமட்டில் இது தீப ஒளி திருநாள். வாழ்வில் தீமைகள் அகன்று நன்மைகளை கொண்டுவரும் நாள்.

    யாராலும் அழிக்க முடியாத, ஆனால் தாயால் மட்டுமே இவனை அழிக்க முடியும் என்ற சாகாவரம் பெற்ற அசுரன் நரகாசுரனை திருமாலின் அவதாரமான மகாவிஷ்ணு, மிகவும் சமயோஜிதமாக சத்தியபாமாவை அம்பெய்த வைத்து கொன்ற நாள்தான் தீபாவளி. தீமையின் வடிவமான நரகாசுரன், தான் இறக்கும் தருவாயில் தாய் சத்தியபாமாவிடம் இந்த நாளை மக்கள் மகிழ்வுடன் கொண்டாடவேண்டும் என்று வரம் கேட்க, சத்தியபாமாவும் மக்கள் தீபம் ஏற்றி, புத்தாடை அணிந்து, இனிப்பு வழங்கி கொண்டாடுவர் என்று வரம் கொடுத்த நாளென்றும், வட மாநிலங்களில் ராமபிரான் வனவாசத்தை முடித்துவிட்டு அயோத்திக்கு திரும்பிவந்த நாளில், மக்கள் புத்தாடை அணிந்து தீபம் ஏற்றி வரவேற்ற நாள்தான் தீபாவளி என்றும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    சீக்கியர்கள் 1577-ல் பொற்கோவில் கட்டுமான பணிகள் தொடங்கிய நாளை தீபாவளியாக மகிழ்வுடன் கொண்டாடுகிறார்கள். சமணர்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்கும் ஒரு காரணம் கூறப்படுகிறது. சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகர அரண்மனை முன்பு விடிய விடிய மக்களுக்கு நல்வழி காட்டும் போதனைகளைக் கூறிவிட்டு, இறைநிலை அடைந்த நாள் இது. ஒளியான மகாவீரரை மக்கள் தங்கள் மனதில் வைத்து, வழிபடும் பொருட்டு அவர் முக்தி அடைந்த இந்த நாளில் வீடுகளில் விளக்கேற்றி கொண்டாடவேண்டும் என்று அரசர் ஆணையிட்டார். அன்று முதல் சமணர்கள் இந்த நாளை கொண்டாடி வருகிறார்கள்.

    இந்தியாவில் மட்டுமல்ல, நேபாளம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர் ஆகிய நாடுகளிலும் தீபாவளி நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலும் தீபாவளி கொண்டாட்டங்கள் களை கட்டுகிறது. நியூயார்க் நகரிலுள்ள உலக புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் தொடங்கப்பட்ட தீபாவளி கொண்டாட்டத்தில் கூட்டம் அலைமோதியது. வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தன் மனைவியுடன் இன்று தீபாவளியை கொண்டாடுகிறார்.

    இது மகிழ்ச்சி திருநாள், தீமை என்ற இருள் அகன்று நன்மை என்ற ஒளி பிரகாசிக்கும் நாள் என்பதுதான் அனைத்து மதங்களும் இந்த தீபாவளி திருநாளை கொண்டாடுவதன் கருப்பொருள். தீபாவளியை கொண்டாடுபவர்களின் வாழ்வில் மட்டும் மகிழ்ச்சியில்லை, பட்டாசு தயாரிக்கும், விற்கும் வியாபாரிகள், தொழிலாளர்கள், ஆடைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள், கடைக்காரர்கள், பலகாரங்கள் தயாரிக்க தேவைப்படும் பொருட்களை தயாரிக்கும் விவசாயிகள், வியாபாரிகள் என்று எல்லோருக்கும் வருமானம் தரும், வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசுக்கும் இந்த விற்பனையால் வரி வருவாய் கிடைக்கும் என்று எல்லா வகையிலும் வளத்தை அள்ளிக்கொண்டு வரும் நாள் தீபாவளி. இருள் அகலும் இந்த நாளில், வறுமை, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, உற்பத்தி குறைவு, விவசாயிகளின் வருமான இழப்பு என்பது போன்ற இருள் அகன்று அனைத்து நன்மைகளும் அள்ளிக்கொண்டு வரும் ஒளியேற்றும் நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் எடுக்கவேண்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

    • தீபாவளி கொண்டாட முக்கிய காரணம், கிருஷ்ணரின் லீலை தான் என்பது யாவரும் அறிந்ததே.
    • பட்டாசு வெடிக்கும் பழக்கம், சந்தோஷத்தை குறிப்பதற்காக ஆரம்பித்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

    தீபாவளிப் பண்டிகை மிகத் தொன்மையான பண்டிகையாகும். வாத்ஸ்யாயனர் எழுதிய நூலில் 'யட்ஷ ராத்திரி' என்று குறிப்பிட்டிருக்கிறார். அமாவாசையையொட்டி இரவில் கொண்டாடப்படுகிறது. இதை 'சுகராத்திரி' என்றும் சொல்வதுண்டு.

    விஷ்ணு புராணத்தில் தீபாவளியன்று விடியற்காலையில் நீராடி மகாலட்சுமியை பூஜை செய்து தீபங்களை வீட்டில் பல இடங்களில் வைத்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. கி.பி.1117-ல் வாழ்ந்த சாளுக்கிய திருபுவன மன்னன் ஆண்டுதோறும் சாத்யாயர் என்ற அறிஞருக்கு தீபாவளிப் பரிசு வழங்கியதாக கன்னடத்தில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று கூறுகிறது.

    எண்ணெய் தேய்த்து குளியல்

    கி.பி.1250-ல் எழுதப்பட்ட லீலாவதி என்ற மராத்தி நூலில் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

    தீபங்களின் அணிவரிசையாம் தீபாவளி பண்டிகை, பழங்காலம் முதலே கொண்டாடப்பட்டு இருக்கலாம் என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரி்வித்துள்ளனர். தீபாவளி என்றால் பட்டாசு, இனிப்பு வகைகள், சினிமா, லேட்டஸ்டாக இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பார்க்கும் படம் என எண்ணற்ற காரியங்கள் நமக்கு தெரியும். ஆனால், தீபாவளிக்கென ஒரு வரலாறு உள்ளது.

    நரகாசூரன் வதம்

    தீபாவளி கொண்டாட முக்கிய காரணம், கிருஷ்ணரின் லீலை தான் என்பது யாவரும் அறிந்ததே. உலகில் தீய சக்தியாக இருந்த நரகாசூரனை, வீழ்த்தி வெற்றிப் பெறுகிறார் கிருஷ்ணன். அதனால் தோன்றியதுதான் தீபாவளி. இந்த சம்பவத்திற்கு பின் கிருஷ்ணன் வெற்றி வீரனாக தனது சகோதரியின் வீ்ட்டிற்கு செல்கிறார்.

    அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும், இனிப்பும் வழங்கப்படுகிறது. இதனால் தான், தீபாவளியன்று அனைவரும் நண்பர்கள், உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் தோன்றியது என்கிறார்கள். தீபாவளி இந்தியாவில் மட்டுமல்ல, நமது அண்டை நாடுகளான வங்காளதேசம், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. ஆனால், பெயர்களும் கொண்டாடும் முறைகளிலும் மாற்றம் உள்ளது.

    தமிழ் மன்னர்களுக்கு பண்டைய காலத்தில் ரோம், எகிப்து, பாபிலோன், கிரேக்கம், பாரசீகம் என பல உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பு இருந்தது. அந்த வணிக தொடர்பின் போது, இந்தியாவில் இருந்து சென்ற பல வாணிகர்களும் தாங்கள் இருந்த இடத்தில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளை கொண்டாடி உள்ளனர்.

    வீர விளையாட்டுகள்

    இதனால் அங்கும் இந்திய கலாசாரம் பரவ ஆரம்பித்தது. மேலும் இந்தியாவில் பேரரசர்களாக இருந்தவர்களும் மக்களின் விருப்பத்தை ஏற்று, தீபாவளியை சிறப்பாக கொண்டாடி உள்ளனர். சில மன்னர்கள் அதற்காக போட்டிகளையும், வீர விளையாட்டுகளையும் நடத்தி இருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் நம்புகின்றனர்.

    முகாலய மன்னர்களில் சிலர் கூட தமிழர் பண்டிகைகளை ஆதரித்ததாகவும், பசியாக வந்தவர்களுக்கு விருந்து அளித்ததாகவும் குறிப்புகள் உள்ளன. ஆனால் பண்டைய காலங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடியதற்கான ஆதாரங்கள் இல்லை.

    பட்டாசு வெடிப்பு

    பட்டாசு வெடிக்கும் பழக்கம், சந்தோஷத்தை குறிப்பதற்காக ஆரம்பித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பண்டைய நாட்களில் இலை மற்றும் வெடிமருந்து கொண்டு பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். அதன்பின் பட்டாசிலேயே பல வகைகளில் வந்து. இப்போது வெடிச்சது போதுமப்பா, புகை நெடி தாங்க முடியவில்லை, வெடிக்கவே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு வெடிகள் ரொம்பவே நவீனமாகிவிட்டது.

    • தீபாவளிப் பண்டிகை நாளை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.
    • தீபாவளியை முன்னிட்டு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ஜெருசலேம்:

    தீபாவளிப் பண்டிகை நாளை வெகு விமர்சையாக உலகெங்கும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதுதொடர்பாக ஹெர்சாக் வெளியிட்டுள்ள டுவிட்டர் வாழ்த்துச் செய்தி:

    தீபாவளி என்பது தீமையின் மீது நன்மையையும், இருளின் மீது ஒளியையும், அறியாமையின் மீது அறிவையும் வென்றெடுக்கும் பண்டிகையாகும்.

    ஜனாதிபதி முர்மு மற்றும் எங்கள் அன்பான இந்திய நண்பர்களுக்கு, இஸ்ரேல் மக்கள் சார்பாக உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    மேலும், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர் கிலோனும் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவிதுள்ளார்.

    ×