search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீபாவளி"

    • ஆயத்த ஆடைகள்-பட்டாசுகள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம்
    • வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு பலரும் வந்ததால் பஸ்-ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகரிப்பு

    நாகர்கோவில்:

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது தீபாவளி.

    புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து ஆனந்தமாக கொண்டாடும் தீபாவளி பண்டிகை, இந்த ஆண்டு நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக புதிய துணி வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டினர்.

    வீட்டில் இருக்கும் உறவினருக்கு ஆடைகளை எடுத்து தைக்க கொடுப்ப தில் முனைப்பாக செயல்பட்டனர். இதனால் கடந்த சில நாட்களாக ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டத்திலும் தீபாவளி பண்டிகை விற்பனை விறு விறுப்பாக நடந்தது. பண்டிகை காலம் நெருங்க நெருங்க ஆயத்த ஆடைகள் (ரெடிமெட்) வாங்க அனைத்து கடை களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    சாலையோர சிறு வியாபாரிகள் ஆயத்த ஆடைகள், பட்டாசுகள், மற்றும் சிறுவர்-சிறுமிகளை கவரும் பொருட்கள் போன்ற வற்றை விற்பனைக்காக குவித்து வைத்திருந்தனர். அவற்றை வாங்குவதிலும் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். நாகர் கோவில் மீனாட்சிபுரம், செம்மங்குடி ரோடு, கோட்டார் சாலை உள்ளிட்ட முக்கிய சாலை களில் மக்கள் குடும்பத்து டன் வந்ததால், அங்கு போக்குவரத்து நெருக்கடி யும் ஏற்பட்டது. இதற்கிடையில் குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை வியா பாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திடீர்.. திடீரென பெய்யும் மழையால் சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்து வரு கின்றனர்.

    இருப்பினும் அவர்கள் தங்கள் வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி வர அங்கு மக்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இதனை சீரமைக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீ சார் பல்வேறு நடவடிக்கை களை எடுத்துள்ளனர். சாலையில் தடுப்பு வேலிகள் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    இதனால் மக்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கும் சிரமமின்றி சென்று ஜவுளி மற்றும் பல்வேறு பொருட்களை வாங்கிச் சென்றனர்.

    தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால், பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பல்ேவறு ரக புதிய பட்டாசுகளை வாங்குவதில் சிறுவர்-சிறுமிகள், இளைஞர்கள் ஆர்வம் காட்டினர். இதனால் குமரி மாவட்டத்தில் பட்டாசு விற்பனை களை கட்டி காணப்பட்டது. இன்னும் 2 நாட்களில் இந்தக் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் வியாபாரிகளும் போலீசாரும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    இதற்கிடையில் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் குடும்பத்தினருடன் கொண்டாட, வெளியூர்க ளில் வேலை பார்ப்ப வர்கள் இன்று முதல் குமரி மாவட்டம் வரத் தொடங்கி விட்டனர். இதனால் வடசேரி, அண்ணா பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதேபோல் வெளியூர்களில் இருந்து இங்கு வந்து வேலை பார்ப்பவர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பஸ்நிலையம், ரெயில் நிலையம் நோக்கி வருகின்றனர். வெளியூர் செல்வோர் மற்றும் வருவோர் வசதிக்காக சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் மாலை , இரவு நேரங்கள் மட்டுமின்றி, காலை நேரத்திலும் ஏராளமானோர் பயணத்தை தொடர்வதில் ஆர்வம் காட்டினர்.

    • மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் தென் மாவட்டங்களுக்கு அதிக வாகனங்கள் அணிவகுத்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • சுங்கச்சாவடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    தாம்பரம்:

    தீபாவளி பண்டிகைக்காக சென்னை தாம்பரத்தில் சானிடோரியம், தாம்பரம் ரெயில் நிலையம் என 2 பஸ் நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலை, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி செல்லும் பஸ்களும், திண்டிவனம் வழியாக பண்ருட்டி நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும் தாம்பரத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

    சென்னை புறநகர் பகுதியில் இருந்து செல்லக்கூடிய பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ் நிலையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் தாம்பரம் சானிடோரிய பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலைய பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன.

    மேலும் அதிக அளவில் பயணிகள் கூட்டம் சொந்த ஊர்களுக்கு செல்வதால் தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் சீர்செய்து வருகின்றனர்.

    மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை நாட்கள் என்பதால் நாளை முதல் சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் தென் மாவட்டங்களுக்கு அதிக வாகனங்கள் அணிவகுத்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்த சுங்கச்சாவடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்ய சுங்கச்சாவடி நிர்வாகம் மொத்தம் உள்ள 10 கட்டணம் வசூலிக்க மையங்கள் கூடுதலாக திறக்கப்பட்டு உள்ளன. வாகனம் இரு சாலையில் இயக்க தலா 5 கவுண்டர்கள் இயக்குவது வழக்கம்.

    தென்மாவட்ட சாலையில் கூடுதலாக வாகனங்கள் செல்வதால் இந்த சமயத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதலாக இரண்டு சாலை பயன்படுத்துவதால் நெரிசல் என்பது மிக குறைவாகவே காணப்படுகிறது. அப்படி இருந்தும் வாகனங்கள் ஒரு சில சமயத்தில் அதிகபடியாக வருவதால் ஒரு கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

    சென்னையை அடுத்த வண்டலூரில் இருந்து ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலை நகர், சிங்கபெருமாள்கோவில், மகேந்திரா தொழில் பூங்கா மற்றும் பரனூர் டோல்கேட் வரை சென்னை-திருச்சி தேசிய நேடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் சிறப்பு காவல் படை போலீசார் ஆகியோர் வாகனங்களை போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு விபத்துகள் ஏற்படாது சரிசெய்தனர்.

    அப்படியிருந்தும் வாகனங்கள் ஒவ்வொரு பகுதியை கடந்து செல்ல 30-நிமிடம் தாமதமானதாக வாகனங்களில் பயணம் செய்த பொதுமக்கள் கூறினர். காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொண்டதால் பரனூர் சுங்கச்சாவடியில் 2 சக்கர வாகனங்கள் ஆட்டோ போன்ற வாகனங்கள் டோல்கேட் கடந்து மின் விளக்குகள் பொருத்தி தனிபாதைகள் அமைக்கப்பட்டது.

    அந்தபாதையில் நெரிசல் இல்லாமல் பயணம் செய்தனர். பேருந்துகள் மற்றும் கார் போன்ற வாகனங்களில் பயணம் செய்தவர்கள் 30 நிமிடம் தாமதமாக கடந்து சென்றனர்.

    • தீபாவளி அன்று அதிகாலையிலேயே எண்ணெய்க் குளியலை முடிக்க வேண்டும்.
    • ஜெயின் மதத்தில் தீபாவளி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நாளாகக் கருதப்படுகிறது.

    தீபாவளி என்பது வட இந்தியாவில் ராமர் வனவாசத்தை முடித்து விட்டு நாட்டுக்கு திரும்பிய நாளாக கொண்டாடப்படுகிறது. ஆனால் நம் தமிழ்நாட்டில் கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த போது அவர் கிருஷ்ணரிடம் கோரிய வரத்தின் படி தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி அன்று எண்ணெய்க் குளியல் முக்கிய பங்காற்றுகிறது. அன்றைய தினம் அனைத்து நீர்நிலைகளிலும் கங்கையும், நல்லெண்ணையில் லட்சுமி தேவியும் வாசம் செய்வதால் எண்ணெய்க் குளியலை அன்று கங்கா ஸ்நானம் என அழைக்கின்றனர்.

    தீபாவளி அன்று அதிகாலையிலேயே எண்ணெய்க் குளியலை முடிக்க வேண்டும்.அதனால் முதல் நாளே பூஜை இடத்தை சுத்தம் செய்து மாக்கோலமிட வேண்டும். தீபாவளி புதுத்துணிகளை சாமி படத்தின் முன்பு ஒரு தாம்பாளத்தில் வைக்க வேண்டும். அத்துடன் தீபாவளிக்காக செய்துள்ள இனிப்பு, பலகாரம் போன்றவற்றையும் சிறிது சிறிது வைக்க வேண்டும். வீட்டின் தலைவி முதலில் எழுந்து அக்கால முறைப்படி வெந்நீர் அடுப்பை ஏற்றி விட்டு அல்லது இக்கால முறைப்படி ஹீட்டரை ஆன் செய்து விட்டு வாசலில் கோலமிட்டு சாமி விளக்கேற்றிய பின் அனைவரையும் எழுப்ப வேண்டும்.

    பிறகு எண்ணெய்க் குளியல் முடிந்ததும் அவரவர் புத்தாடைகளுக்கு சந்தனம் தடவிய பின் அதை அணிந்துக் கொண்டு கடவுளையும், பெரியவர்களையும் நமஸ்கரித்து ஆசியை பெற்றுக் கொள்ள வேண்டும். உடனே குழந்தைகள் பட்டாசுகள் வெடிக்கத் தொடங்குவார்கள். காலை 6 மணிக்குள் காலை உணவு சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம். அதன்படி பெரும்பாலான வீடுகளில் தீபாவளி அன்று இட்லி செய்வது வழக்கம். மாமிசம் சாப்பிடுபவர்கள் இட்லிக்கு சைட் டிஷ் ஆக காலையிலேயே ஏதாவது அசைவ உணவை சமைப்பது நல்லது. மதியம் அவரவர் வீட்டு வழக்கப்படி விருந்து நடைபெறும்.

    அக்கம், பக்கத்தில் உள்ளவர்களுக்கு நமது வீட்டு இனிப்பு- பலகாரம் அளிப்பதும், அவர்கள் நமக்கு அளிப்பதும் வழக்கமான ஒன்று. குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் மும்முரத்தில் காலை உணவை தவிர்க்கலாம். ஆனால் அவர்களை வற்புறுத்தி உணவு அளிக்க வேண்டும். அருகில் உள்ள கோவிலுக்கு சென்று இறைவனை வணங்குவது மிகவும் நல்லதாகும். மேலே குறிப்பிட்டது நமது பாரம்பரிய தீபாவளி வழக்கம். தற்போது காலத்திற்கேற்ப பல மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் புத்தாடை, எண்ணெய் குளியல், இனிப்பு, பலகாரம் மற்றும் பட்டாசு வெடிப்பது என்றும் மாறாத ஒன்று.

    ஜெயின் மதத்தினரின் தீபாவளி

    ஜெயின் மதத்தில் தீபாவளி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நாளாகக் கருதப்படுகிறது. இது தற்போதைய அண்ட யுகத்தின் இருபத்தி நான்காவது மற்றும் கடைசி சமண தீர்த்தங்கரரான மகாவீரர் மோட்சம் அடைந்ததனைக் குறிக்கிறது. இது இந்துக்களின் தீபாவளி பண்டிகையான அதே தினத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சமணர்களுக்கு அந்த ஆண்டின் முடிவையும், அவர்களின் 24-வது தீர்த்தங்கர மகாவீரரின் நினைவு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

    தலைத்தீபாவளி

    தலைத் தீபாவளி என்பது திருமணமான புதுத் தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளிப் பண்டிகையாகும். இப்பண்டிகையின் பொழுது மணமகன், மணமகள் வீட்டினருடன் இப்பண்டிகையை கொண்டாடுகிறார். இப்பண்டிகையின் பொழுது மணமகள் வீட்டிலிருந்து புத்தாடைகள் மணமகனுக்கு தரப்படுகின்றன.

    சிங்கப்பூரில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை

    தீபாவளி என அழைக்கப்படும் தீப ஒளித்திருநாள் என்பது அனைத்து தரப்பினரால் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இது இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பவுத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா இலங்கை சிங்கப்பூர் உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீச்சு ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை நாளன்று கொண்டாடப்படுகிறது.

    • பிரபல ஜவுளிக் கடைகள், நகைக் கடைகளை திறப்பதற்கு முன்பே மக்கள் கூடி நின்றனர்.
    • சென்னையை சுற்றியுள்ள பகுதி மக்களும் குவிந்ததால் கடை வீதிகள் களை கட்டின. நள்ளிரவு 12 மணிக்கு மேல் இருந்து விற்பனை நடந்தது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டதால் கடைசி நேரத்தில் விற்பனை சூடு பிடித்துள்ளது.

    பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு, பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் புத்தாடைகள் எடுக்க ஜவுளி கடைகளுக்கு மக்கள் படையெடுக்கிறார்கள். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு போனசும் கிடைத்து விட்டதால் குடும்பத்தோடு ஜவுளி கடைகளை மொய்க்கிறார்கள்.

    தீபாவளிக்கு நாளை ஒருநாள் மட்டுமே இருப்பதால் ரெடிமேடு ஆடைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் கூட்டம் சென்னையில் உள்ள கடை வீதிகளில் காலையிலேயே காணப்பட்டது.

    வர்த்தகப் பகுதியான தி.நகர், பழைய வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், அண்ணா நகர், வடபழனி, பெரம்பூர், மைலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், நுங்கம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, போரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள், நகை கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தன.

    பிரபல ஜவுளிக் கடைகள், நகைக் கடைகளை திறப்பதற்கு முன்பே மக்கள் கூடி நின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதி மக்களும் குவிந்ததால் கடை வீதிகள் களை கட்டின. நள்ளிரவு 12 மணிக்கு மேல் இருந்து விற்பனை நடந்தது.

    பெரும்பாலான வீதிகள் தீபாவளி கடைகளால் நிரம்பி இருந்தன. மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்று பொருட்கள் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. திடீர் கடைகள் உதயமானதால் மக்கள் வீதிகளிலேயே பெரும்பாலான தீபாவளி பொருட்களை வாங்கினார்கள். இன்றும் நாளையும் இன்னும் கூட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

    மழை இல்லாததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பண்டிகையை சார்ந்த அனைத்து வியாபாரங்களும் சூடு பிடித்துள்ளன.

    இனிப்பு கடைகளிலும் மக்கள் கூட்டமாக மொய்த்தனர். மொத்தமாக இனிப்புகளை வாங்கி சென்றனர். உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு கொடுப்பதற்காக அன்பளிப்பு பெட்டிகளை வாங்கி சென்றனர்.

    தீபாவளியின் முத்தாய்ப்பாக பட்டாசு இருப்பதால் பசுமை பட்டாசு விற்பனையும் அமோக நடந்து வருகிறது. சென்னையில் பல பகுதிகளில் பெரிய அளவிலான கடைகள் அமைத்து பட்டாசு விற்கப்படுகின்றன.

    குழந்தைகளை மகிழ்விப்பதற்காக பெற்றோர் பட்டாசு வாங்கிச் சென்றனர். இந்த ஆண்டு பட்டாசு விலை உயர்ந்த போதிலும் விற்பனை விறுவிறுப்பாக உள்ளது. தீவுத்திடலில் 35 பட்டாசு கடைகள் ஒரே இடத்தில் செயல்படுவதால் மொத்தமாக வாங்கக் கூடியவர்கள் காரில் சென்று கொள்முதல் செய்து வருகிறார்கள்.

    தீவுத்திடல் மைதானம் திருவிழா போல காட்சி அளிக்கிறது. மக்கள் காலையிலேயே பட்டாசு வாங்க குவிகிறார்கள்.

    தீபாவளி ஜவுளி, பட்டாசு உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் பஸ், ரெயில், கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் செல்வதால் சாலைகளில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் வசதிக்காக பஸ், மெட்ரோ ரெயில் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • ஆட்டுச்சந்தைக்கு வெள்ளாடு, குறும்பாடு, செம்மறியாடு , மலை ஆடு, நாட்டாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்கு வந்தன.
    • தீபாவளியை முன்னிட்டு ஆடுகள் விற்பனை மும்முரமாக நடந்தது.

    அன்னூர்:

    அன்னூரில் ஆட்டுசந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையானது சனிக்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம்.

    இங்கு அன்னூர், திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்கு வருகிறது.

    அன்னூர் ஆட்டு சந்தைக்கு கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிகமான வியாபாரிகள் வாங்க வருவார்கள்.

    இன்று வழக்கம்போல் அன்னூர் ஆட்டுச்சந்தை கூடியது. ஆட்டுச்சந்தைக்கு வெள்ளாடு, குறும்பாடு, செம்மறியாடு , மலை ஆடு, நாட்டாடு உட்பட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. தீபாவளியை முன்னிட்டு ஆடுகள் விற்பனை மும்முரமாக நடந்தது.

    மற்ற வாரத்தை விட இந்த வாரம் அதிகளவிலான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.

    வாரந்தோறும் இந்த ஆட்டுச்சந்தையில் 80 லட்சம் வரை ஆடுகள் விற்பனையாகும். இந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனையாகும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இதுதவிர இந்த சந்தையில் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான (கத்தி, கறி வெட்டும் மரக்கட்டை) போன்றவையும் அதிகமாக வந்துள்ளதால் ஆட்டை வாங்க வரும் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான வியாபார பொருட்களையும் வாங்கி செல்கின்றனர்.

    மேலும் அன்னூரில் கோழி சந்தை ஆனது பிரசித்தி பெற்றது. கோழி சந்தையிலும் கோழியின் வரத்து அதிக அளவு உள்ளது. இங்கு நாட்டுக்கோழி. சேவல், நாட்டுக்கோழி, கறிக்கோழி போன்றவையும் தீபாவளி முன்னிட்டு அதிகமான அளவு சந்தைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    ஆட்டு சந்தை காரணமாக அதை சுற்றியுள்ள தேநீர் கடைகள் மற்றும் உணவகங்களில் வியாபாரம் களை கட்டி உள்ளது.

    • கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் குழப்பம் இல்லாமல் எளிதாக பயணம் செய்ய வசதியாக விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
    • அடுத்து புறப்படும் பஸ் பற்றிய விவரம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணத்தை தொடர்ந்தனர்.

    சென்னை:

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் 1 முதல் 6 வரை நடைமேடைகள் உள்ளன. நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், செங்கோட்டை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோவை, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு இங்கிருந்து பஸ்கள் இயக்கப்பட்டன.

    நீண்ட தூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்கள் முழுவதும் அங்கிருந்து இயக்கப்பட்டன. பொதுமக்கள் வசதிக்காக தற்காலிக நடைமேடை (பிளாட்பாரம்) அமைக்கப்பட்டு உள்ளன. பஸ் டெப்போவில் நடைமேடை 7, 8, 9 என அமைக்கப்பட்டு அங்கிருந்து காரைக்குடி, ராமேஸ்வரம், கோவை, ஊட்டி, வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் குழப்பம் இல்லாமல் எளிதாக பயணம் செய்ய வசதியாக விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அடுத்து புறப்படும் பஸ் பற்றிய விவரம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணத்தை தொடர்ந்தனர்.

    தற்காலிக நடைமேடை அமைக்கப்பட்டதால் நெரிசல் இல்லாமல் மக்கள் பயணம் செய்வதை காண முடிந்தது.

    • கோயம்பேட்டில் இருந்து இன்று அதிகாலை 4 மணியில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
    • பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், செஞ்சி செல்லக்கூடிய பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கியது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட செல்லும் பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டன.

    தமிழகம் முழுவதும் நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து நாளை வரை சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய வசதியாக சென்னையில் 6 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    வழக்கமாக இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையை விட (6,300) கூடுதலாக 4,128 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. முதல் நாளான நேற்றே கூட்டம் அலைமோதியது. வழக்கமாக மாலையில் இருந்துதான் கூட்டம் அதிகரிக்கும்.

    ஆனால் நேற்று காலையில் இருந்தே பொதுமக்கள் கோயம்பேடு உள்ளிட்ட சிறப்பு பஸ் நிலையங்களை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சாரை சாரையாக புறப்பட்டு வந்தனர். இதனால் கோயம்பேடு பஸ் நிலையம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பியது.

    பொதுமக்கள் எளிதாக பஸ்களில் ஏறி பயணம் செய்ய வசதியாக போக்குவரத்து கழகங்கள் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நடைமேடைகளில் உதவி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. ஒலிபெருக்கி மூலம் பயணிகளுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.


    தாங்கள் செல்லும் பகுதிக்கான பஸ்சில் இடம் இருக்கிறதா? இல்லையா? என்பதை பார்த்து சொல்ல கம்ப்யூட்டர் தகவல் மையம் நடைமேடையில் நிறுவப்பட்டு உள்ளது. இருக்கைகள் இருக்கும்பட்சத்தில் முன்பதிவு செய்யவும், நேரடியாக பஸ்சில் அமரவும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    சென்னை, விழுப்புரம், சேலம், மதுரை, கோவை, கும்பகோணம் போக்குவரத்து கழக அதிகாரிகள் கோயம்பேட்டில் முகாமிட்டு பயணிகள் எளிதாக பஸ்களுக்கு செல்ல வழி வகுத்தனர்.

    நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. இரவு 7, 8 மணிக்கு கூட்டம் பல மடங்கு அதிகரித்தது. கூட்டத்தை சமாளிக்க தயாராக நிறுத்தப்பட்டிருந்த சிறப்பு பஸ்கள் மூலம் ஏற்றி அனுப்பி வைத்தனர். நள்ளிரவு வரை மக்கள் வந்து கொண்டே இருந்ததால் அதற்கேற்றவாறு பஸ்களை இயக்கினார்கள்.

    திருச்சி, மதுரைக்கு அதிகளவில் மக்கள் பயணம் செய்தனர். அதிகாலை 2 மணி வரை கூட்டம் இருந்ததால் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். "பஸ் இல்லை" என்று சொல்லாத அளவிற்கு போதுமான பஸ்கள் இயக்கப்பட்டன.

    நேற்று ஒரே நாளில் மட்டும் அரசு பஸ்களில் ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 1,300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் பொது மக்கள் எவ்வித சிரமமுமின்றி சென்றனர். சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்கள் விழுப்புரம் பகுதி மக்கள் செல்ல விடப்பட்டன.

    இது தவிர 500-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களில் 30 ஆயிரம் பேர் வெளியூர் சென்றனர்.

    இதற்கிடையில் கோயம்பேட்டில் இருந்து இன்று அதிகாலை 4 மணியில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், செஞ்சி செல்லக்கூடிய பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கியது.

    இன்று மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் 3,686 பஸ்கள் இயக்கப்படுகிறது. 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் இன்று வெளியூர் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெரும்பாலான கூலி தொழிலாளர்கள் சனிக்கிழமை வேலையை முடித்து விட்டு கூலியை பெற்று செல்வார்கள் என்பதால் தேவையான பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளனர்.

    முன்னதாக தீபாவளி சிறப்பு பஸ் இயக்கத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்றிரவு ஆய்வு செய்தார். கோயம்பேடு பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு வெளியூர் செல்ல வசதியாக செய்யப்பட்டு இருந்த ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

    பஸ் இல்லாததால் பயணம் தடைபட்டது என்ற நிலை வராத வகையில் பொதுமக்களுக்கு தேவையான அளவு பஸ் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அவர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது அமைச்சருடன் போக்குவரத்து செயலாளர் கோபால், கமிஷனர் நிர்மல் ராஜ், மேலாண்மை இயக்குனர்கள் அன்பு ஆபிரகாம், இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளை மாளிகையில் 24-ந்தேதி ஜனாதிபதி ஜோபைடன், தனது மனைவியுடன் தீபாவளி கொண்டாட உள்ளார்.
    • கமலா ஹாரீஸ், டிரம்ப் வீடுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.

    வாஷிங்டன் :

    இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி இந்தியாவில் வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதைப்போல பல நாடுகளிலும் வாழும் இந்தியர்கள் இந்த பண்டிகையை விமரிசையாக கொண்டாட உள்ளனர்.

    அந்தவகையில் அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டது. நாட்டின் பல மாகாணங்களின் தலைநகர், கவர்னர் மாளிகைகளில் தீபாவளி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தலைநகர் வாஷிங்டனில் அரசு சார்பில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இதில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்திய-அமெரிக்க பிரபலங்கள் தலைநகரில் குவிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரீஸ், தனது வீட்டில் நேற்று பண்டிகையை கொண்டாடினார். இதற்காக பிரபலமான இந்திய-அமெரிக்கர்கள், இந்திய தூதரக அதிகாரிகள் என ஏராளமானோருக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

    மேலும் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று தீபாவளி கொண்டாடினார். இதில் பங்கேற்பதற்காக சுமார் 200 இந்திய-அமெரிக்கர்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

    இதில் இந்திய நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும், பங்கேற்றவர்களுக்கு இந்திய உணவுகளும் பரிமாறப்பட்டன.

    இதைப்போல வெள்ளை மாளிகையில் வருகிற 24-ந்தேதி ஜனாதிபதி ஜோபைடன், தனது மனைவி ஜில் பைடனுடன் தீபாவளி கொண்டாட உள்ளார். இதில் ஏராளமான இந்தியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்நது 26-ந்தேதி வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன், தனது அமைச்சகத்தில் தீபாவளி விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் ஏராளமான தூதரக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    முன்னதாக நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த 15-ந்தேதி தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது. இதில் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், செனட்டர் சக் சியூமர், இந்திய துணை தூதர் ரந்திர் ஜெய்ஸ்வால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், அடுத்த ஆண்டு (2023) முதல் தீபாவளி பண்டிகைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என அறிவித்தார். இது தீபங்களின் திருவிழா குறித்து அறிய குழந்தைகளை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பேசிய செனட்டர் சியூமர், 'நாங்கள் எங்கள் சமூகத்தையும், எங்கள் இந்திய சமூகத்தையும் நேசிக்கிறோம், நாங்கள் அனைவரும் இங்கு நியூயார்க்கில் எங்கள் பன்முகத்தன்மையுடன் ஒன்றிணைவதை நாங்கள் விரும்புகிறோம்' என்று தெரிவித்தார்.

    • தீபாவளியை கொண்டாட மக்கள் இன்றிலிருந்தே சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
    • பண்டிகை காலத்தை முன்னிட்டு தாம்பரம், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வரும் 24-ந்தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வந்தவண்ணம் உள்ளனர். இதனால் பேருந்து மற்றும் ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

    தீபாவளிக்கு முந்தைய சனி, ஞாயிறு (22, 23-ந்தேதி) விடுமுறை நாட்களாகும். திங்கட்கிழமை தீபாவளி வருவதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. எனவே, சென்னையில் தங்கியிருந்து வேலை செய்யும் மக்கள் இன்றிலிருந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.


    சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் ஏராளமானோர் எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு வருகின்றனர். பேருந்துகளில் இடம் கிடைக்காதர்வர்களின் தேர்வு ரெயில்தான். இதனால், எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட மிக அதிகமாகவே உள்ளது. பலர் நின்றுகொண்டே பயணிப்பதை பார்க்க முடிகிறது.

    பண்டிகை காலத்தை முன்னிட்டு தாம்பரம், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், எழும்பூரில் வழக்கமாக இயக்கப்படும் ரெயில்களுடன் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டு உள்ளன. பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், ரெயில் நிலையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீசார் சாதாரண உடையில் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் 250க்கு மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன.
    • இங்கு பாத்திரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    அனுப்பர்பாளையம் :

    அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் 250க்கு மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. இங்கு எவர்சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில் பாத்திரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    3ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு பாத்திர தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு விட கூடுதல் போனஸ், ஒரு வாரத்திற்கு முன் வழங்க வேண்டும் என அனைத்து தொழிற்சங்கத்தினர், உற்பத்தியாளர் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.உலோகத்தின் அடிப்படையில் உற்பத்தியை பொறுத்து 16 சதவீதம் முதல், 18 சதவீதம் வரை போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 95 சதவீதத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு விட்டதாக உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த மாதம் புரட்டாசி விரதம் துவங்கியதால் பலர் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டனர்
    • பண்ணைகளில் ஒரு கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான கோழி 350 ரூபாயாக சரிந்தது.

    திருப்பூர் :

    கடந்த மாதம் புரட்டாசி விரதம் துவங்கியதால் பலர் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டனர். எனவே கோழி விற்பனையில் தேக்கம் ஏற்பட்டது. பண்ணைகளில் ஒரு கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையான கோழி 350 ரூபாயாக சரிந்தது.குறைந்த விலைக்கு விற்பனை செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டினர். இதனால், கோழிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்தது. தற்போது புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம் பிறந்துள்ளது. இதனால் பலரும் அசைவம் சாப்பிடுவதில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.தீபாவளி பண்டிகையையொட்டி பலரது வீடுகளில் உறவினர்களை அழைத்து அசைவ விருந்து வைப்பர். இதனால் கோழி விலை உயர வாய்ப்புள்ளது. 

    • உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான செயற்கை நிறமிகளையோ உபயோக்கிக்க கூடாது.
    • இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பாளர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி பெற்றிருக்கவேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி உணவு பொருட்களை தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பாக உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும்.

    அனைத்து இனிப்பு, கார வகைகள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான செயற்கை நிறமிகளையோ உபயோக்கிக்க கூடாது.

    விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முழு உடல் நலத்துடன் தொற்று நோய்கள் இல்லா வண்ணம் பணியில் அமர்த்தப்பட வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் மறுபடியும் பயன்படுத்த கூடாது.

    விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படும் தட்டுகளில் இனிப்பு வகைகளை தயாரித்த தேதி மற்றும் உபயோகிக்கும் காலம் போன்றவை பொதுமக்கள் அறியும் வண்ணம் அச்சடித்து காட்சிப்படுத்தவேண்டும். உணவு பொருட்களை விற்பனை செய்த பின்னர் வழங்கும் ரசீது, பில்களில் உணவு அங்காடியின் உரிமம் எண் அல்லது பதிவு எண்ணை அச்சடித்து இருத்தல் வேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யவேண்டும்.

    பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் http://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்று கொள்ளவேண்டும்.

    மேலும் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பாளர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி பெற்றிருக்கவேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறி்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×