என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sri Lankan refugee"
- முஜிபுர்ரகுமான் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
- குடும்பத்தை பிரிந்துள்ள நாங்கள் எங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ முடியவில்லை.
திருச்சி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனைக்கு பின்னர் விடுதலை ஆன இலங்கைத் தமிழர் சாந்தன் (வயது 55) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
சிறை விடுவிப்புக்குப் பின்னர், அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டதாலும், இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும் அவர் உயிரிழந்தார் என கூறி திருச்சி சிறப்பு முகாமில் உள்ள அகதிகள் முஜிபுர்ரகுமான், சுகந்தன் ஆகியோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் சுகந்தன் போராட்டத்தை திரும்பப் பெற்றார். முஜிபுர்ரகுமான் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று 3-வது நாளாக அவரது உண்ணாவிரதம் நீடிக்கிறது. முஜிபுர்ரகுமான் இலங்கையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடை ராபர்ட் பயஸ் உலகத் தமிழர்களுக்காக எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-
33 ஆண்டுகள் சிறை வாசத்துக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட நாங்கள், விடுவிப்பு என்ற பெயரில் சிறை மாற்றம் செய்யப்பட்டதாகவே கருதுகிறோம். எங்களை குடும்பத்தாருடன் செல்ல அனுமதிக்கவில்லை. சாந்தனை அனுப்பியிருந்தால் அவர் சில காலமாவது பெற்றோருடன் வசித்திருப்பார்.
அதுபோலவே முருகன் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட எங்கள் நிலையும் உள்ளது. குடும்பத்தை பிரிந்துள்ள நாங்கள் எங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ முடியவில்லை. எங்களுக்கு விடுவிப்பு எப்போது என்பது புரியவில்லை.
இனியாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து எங்களை விடுவிக்க வேண்டும்
இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
- மண்டபம் முகாமில் இலங்கை அகதி தற்கொலை செய்து கொண்டார்.
- மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மண்டபம்
திருவண்ணாமலை மாவட்டம் கஸ்தம்பாடி இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் கணேசன். இவ ரது மகன் ரிசாந்தன் (வயது 34). இவர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமை சேர்ந்த பவானி என்பவரை திருமணம் செய்து கொண்டு முல்லை நகரில் வசித்து வந்தார்.
அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்த ரிசாந்தன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவரது தாய் புவனேஸ்வரியிடம் செல்போனில் விரக்தியுடன் பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 23-ந் தேதி வீட்டின் அருகே ரிசாந்தன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மருமகள் செல்போனில் புவனேசுவரிக்கு தகவல் தெரி வித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த புவனேசுவரி மற்றும் குடும்பத்தினர் மண்டபத்திற்கு விரைந்து வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ரிசாந்தனின் சகோதரர் சிவனேசன் கொடுத்த புகாரின் பேரில் மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில்
- போலீஸ்காரரை இலங்கை அகதி இரும்பு கம்பியால் தாக்கினார்
திருச்சி:
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராசா என்கிற லோகேஷ் (வயது 42 ). திருச்சி மத்திய சிறையில் உள்ள வெளிநாட்டுனருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் துரையிடம் சென்று எனக்கு தண்டனை காலம் முடிந்து விட்டது. பிறகு ஏன் என்னை முகாம் சிறையில் வைத்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இலங்கை அகதி அங்கு இருந்த இரும்பு கம்பியால் போலீஸ்காரர் துரையை தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இது குறித்து போலீஸ்காரர் துரை கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் இலங்கை அகதி லோகேஷ் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இலங்கை அகதி லோகேஷ் மீது மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலும் ஒரு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இலங்கை அகதி மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மண்டபம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாா் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் வின்சென்ட் மெரிண்டா (வயது46). இவா் மண்டபத்தைச் சோ்ந்த சோனை முத்துவின் விசைப்படகின் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இந்தநிலையில், வின்சென்ட் மெரிண்டா உள்ளிட்ட சிலா் கடலுக்குள் மீன்பிடித்து விட்டு கரை திரும்பினா்.
இதையடுத்து மீன்பிடிக்க சென்ற வின்சென்ட் மெரிண்டா, மோரிஸ், காா்த்திக், பரமசிவம், பாபு ஆகிய 5 பேருக்கும் படகு உரிமையாளரான சோனைமுத்து பணம் கொடுத்தார். அதை 5 பேர் பிரித்து எடுத்துக்கொண்டனர். ஆனால் கார்்த்திக் கூடுதலாக பணம் கேட்டு தகராறு செய்தார்.
அப்போது கார்த்திக், அவரது நண்பர் சக்திவேல் ஆகியோர் பாட்டிலால் வின்சென்ட் மெரிண்டாவை தாக்கியதாக தெரிகிறது.இதுகுறித்து மண்டபம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாா் வழக்குப்பதிவு செய்து மீனவா்கள் காா்த்திக், சக்திவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தாா்.
- ஒரு வீட்டின் மாடியில் ராமச்சந்திரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
- மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற ராமச்சந்திரனை,அசோக்குமார் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது.
நெல்லை:
நெல்லை அருகே கங்கைகொண்டானில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு இலங்கையில் இருந்து அகதியாக வந்த ராமச்சந்திரன் (வயது 52) என்பவர் வசித்து வந்தார்.
கொலை
இவர் தனியாக தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இவருடைய குடும்பத்தினர் இலங்கையில் உள்ளனர். இந்த நிலையில் முகாம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் ராமச்சந்திரன் மர்மநபர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு ராமச்சந்திரனை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
முன்விரோதம்
இந்நிலையில் முகாமில் உள்ளவர்கள் எண்ணிக்கையை சரிபார்த்தபோது, அங்கு வசித்து வந்த அசாக்குமார்(33), அவரது சகோதரர் கிருஷ்ண ராஜா ஆகியோர் அங்கிருந்து தலைமறை வாகிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு ராமச்சந்திரன் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாகவும், அதனை அசோக்குமார் தட்டிக்கேட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில நாட்களுக்கு முன்பு அசாக்குமாரின் சகோதரர் கிருஷ்ணராஜாவுக்கும், ராமச்சந்திரனுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் தற்போது அவரது கொலைக்கு பின்னர் 2 பேரும் முகாமில் இருந்து தலைமறைவாகி உள்ளனர் என்பதால் அவர்கள் இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாமா? என்ற கோணத்தில் 2 பேரையும் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசித்து வரும் சிவலிங்கம் என்பவரின் மகன் சதீஷ் (வயது 32) இன்று காலை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த போக்குவரத்து போலீசார், வாகனத்திற்கான உரிமங்களை கேட்டபோது அவரிடம் இல்லை. இதையடுத்து வீட்டிற்கு சென்று ஆவணங்களை எடுத்து வந்து காண்பித்தார். ஆனால் போலீசார், உரிமங்கள் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்ததால் அபராதம் விதித்து விட்டோம். எனவே அதனை செலுத்தி விட்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.
ஆனால் சதீஷ், என்னிடம் அபராதம் செலுத்துவதற்கு பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் போலீசாருக்கும், சதீசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் தாக்க முயற்சித்த போது பயந்து போன சதீஷ், போலீசாரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் அவமான மடைந்த சதீஷ், வீட்டிற்கு சென்று மண்எண்ணை கேனை எடுத்துக்கொண்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே வந்தார்.
பின்னர் போலீசார் , பொது மக்கள் முன்பு திடீரென உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைக்க முயன்றார். பொதுமக்கள் சுதாரித்து கொண்டு சதீஷ் தீக்குளிப்பதை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் உள்ள இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36). இவர் அதே பகுதியை சேர்ந்த கலானி (30) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் கர்ப்பம் தரித்த கலானியை விஜயகுமார் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அங்கு கலானிக்கு அழகான 4 குழந்தைகள் பிறந்தன.
இதுகுறித்து கலானியின் உறவினர் ஒருவர் கூறும்போது, “கலானிக்கு 2 ஆண் குழந்தையும், 2 பெண் குழந்தையும் பிறந்துள்ளன. எங்களது உறவினர்களில் சிலருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளன. ஆனால் 4 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது”, என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்